Total Pageviews

Thursday, 22 July 2010

அப்பாடி... 800!!

தன்னம்பிக்கை சிங்கம் முரளிதரன்
--------------------------------------------------------------------------------------
நேற்று நடை பெற்ற வரலாற்று சிறப்புமிக்க அந்த ரெஸ்ட் மச்சை லைவாக‌ பார்க்கக்கிடைக்கவில்லை. ஆனால், கிறிக்கின்ஃபோவில் லைவ் ஸ்கோர் பார்த்திட்டிருந்தேன்...

--------------------------------------------------------------------------------------

கிறிக்கெட்டின் (துடுப்பாட்ட) பிதாமகனாக கருதப்படும் பிறெட்மன்... இறுதிப்போட்டியில் பூச்சியத்துடன் (0) ஆட்டமிழந்ததன் மூலம்... தனது சராசரி 100 ஆக இருக்க வேண்டுமென்ற அவரது ஆசையும், அவரது ரசிகர்களின் ஆசையும் நிராசையானது...

அதே போன்ற நிலை பந்துவீச்சு பிதாமகனாக கருதக்கூடிய முரலிதரனுக்கும் ஏற்பட்டு விடுமோ என்ற எண்ணம் மனதில் தோன்றியது. காரணம், மறு புறம் மலிங்கவின் ஆக்ரோஷமான பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இந்திய வீரர்கள் தடுமாறியதும்... ஆனால்... முரளிக்கு சவால் கொடுக்கும் வகையில் விளையாடியதும் அப்படி ஒரு பயத்தை தோற்றுவித்தது...
மறுபுறம்... இருக்கும் ஒரு விக்கெட்டை முரளி எடுத்தே ஆக வேண்டும் என்ற நிலை...
மற்ற பந்து வீச்சாளர்கள் தப்பித்தவறி எடுத்துவிட்டால்... முரளியினதும், எங்கள் போன்ற ரசிகர்களதும் ஆசை... கனவாகவே போய்விடுமே... என்ற ஏக்கம்... நல்லவேளையாக அப்படி நடைபெறவில்லை. சாதனை நாயகன் அந்த 1 (ஓஜா) விக்கட்டையும் எடுத்து தான் தன்னம்பிக்கை சிங்கம் என்பதை நிரூபித்துவிட்டார்...

ஆம், பொதுவாக வீரர்கள் சாதனை நிகழ்த்திய பின்னரே... தமது ஓய்வறிவிப்பை வெளியிடுவார்கள்... ஆனால், முரளி இன்னமும் 8 விக்கட்கள் தேவைப்படும் நேரத்தில் இது தனது இறுதிப்போட்டி... இப்போட்டியுடன் தான் சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவேன் என அறிவித்துவிட்டே இந்த அருமையான சாதனையை நிகழ்த்திக்காட்டியுள்ளார்.
அதுவும் ஒரு பலம் பொருந்திய அணிக்கெதிராகவே முரளி இந்த துணிகரமான சவாலை நிகழ்த்தியுள்ளார்... அவுஸ்த்திரேலியா, அவுஸ்ரேலியாவில் வைத்து முரலி சாதனை நிகழ்த்துவதை தமது திறமையான தடுப்பாட்டம் மூலம் நிறுத்தியது போன்று... இந்தியாவும் செய்துவிடுமோ என்ற பயம் இருந்தது... முக்கியமாக இறுதிக்கட்டத்தில்... ஆனால், தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையுடனும்... அணியினரின் ஒத்துளைப்புடனும் அனைவரது கனவையும் நிறைவேற்றி சாதனை நாயகனாகவே... தனது இறுதிப்போட்டியை நிறைவு செய்துள்ளார்.
இந்த அருமையான தருனத்தில் அவரது குடும்பமும் நேரடியாக பங்கேற்றிருந்தமையை விட அவருக்கு வேறொன்றும் தேவையில்லை.

--------------------------------------------------------------------------------------

ஏப்ரல் மாதம் 17ம் திகதி 1972 ம் ஆண்டு கண்டியில்... முத்தையா, லக்ஷிமி தம்பதிவினருக்கு பிறந்தார்...
கண்டி புனித அந்தோனியர் கல்லூரியில் கல்விகற்கும் போது... பாடசாலை மட்ட கிறிக்கெட்டுக்குத்தலைமைதாங்கினார். ஆரம்பத்தில் மித வேகப்பந்து வீச்சாளராக இருந்த முரளி... அவரது, பயிற்றுவிப்பாளரின் ஆலோசனையின் பேரிலேயே சுழல்பந்து வீச்சாளராக உருவெடுத்தார்.

திறமையினால்...  வேகமாக முன்னேறிய முரளிதரன்...
1992ம் ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கெதிரான 2வது டெஸ்ட்போட்டியில் இணைக்கப்படார்...
முதல் போட்டியுல்... மக்தெர்மொட்டை ஆட்டமிளக்க செய்ததன் மூலமாக தனது விக்கெட்கணக்கை ஆரம்பித்தார். ( இந்த போட்டியில் மொத்தமாக 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்)

பின்னைய காலங்களில்... விக்கெட் விழுத்தும் வேகம் அதிகரித்த போது...
நடுவர்களால்... பந்துவீச்சு முறைதொடர்பாக சர்ச்சைகள் கிளப்பப்பட்டன... அவை அனைத்தையும்... தனது பந்துவீச்சில் குறையில்லை என நவீன ஆயுவுகளின் மூலம் நிரூபித்தார்...

பொதுவாக  ஓஃப் ஸ்பின்னேர்ஸ் தமது விரல்களையே பந்தை சுழற்றுவதற்கு பயன்படுத்தி வந்த வேளையில்...
மணிக்கட்டின்மூலமாக... பந்தை சுழற்றும் முறையை அறிமுகம் செய்தார்.
அதே போன்று, தூஷ்ரா பந்துவீச்சையும் திறமையாக கையாண்ட முதல் விரர் இவர்தான். ( அறிமுகப்படுத்தியது பாக்கிஸ்தான் வீரர்...)

--------------------------------------------------------------------------------------

முரளிதரனின்...
பந்துவீச்சு சுருக்கம்...

முரளிதரனின் இந்த விக்கெட் சாதனைகளை இனி எவருமே முறியடிக்க முடியாது... ( குறிப்பாக டெஸ்டில்...)
முரளிதரன் அளவுக்கு, அனைத்து வித ஆடுகளங்களிலும் விக்கெட்டுக்கள் வீழ்த்தும் திறமையான பந்துவீச்சாளர்கள் தற்போது மிகக்குறைவு...
அத்தோடு, இருபது 20 போட்டிகளிளின் வழர்ச்சி... மற்றும் டெஸ்போட்டிகளின் எண்ணிக்கை குறைவடைந்தமை போன்ற காரணங்களையும் குறிப்பிடலாம்.

துடுப்பாட்ட சுருக்கம்...

துடுப்பாட பயப்படும் முரளி அவ்வப்போது... பந்து வீச்சாளர்களை பயங்கொள்ளச்செய்துள்ளார்.
(இந்த பயத்துக்கு காரணம், சிறு வயதில் பந்து பட்டு தனது முன் பல்லு சேதமடைந்ததுதான் காரணம், என்று நகைச்சுவையாக பதில் கூறியிருந்தார்... )

முக்கியமாக... பங்களாதேஸில் நடந்த போட்டியில்... அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களை பெற்று இலங்கைக்கு வெற்றி தேடித்தந்தமையை குறிப்பிடலாம்.
இந்தியாவுக்கெதிராக பெற்ப்பட்ட 67 ஓட்டங்களின் போது... இவருடன் ஆடிய ஃபெர்னான்டோ மறு முனையில் 1 ஓட்டத்தை மட்டுமே பெற்றிருந்ததும் குறிப்படத்தக்கது.

சில சாதனைகள்...

--------------------------------------------------------------------------------------

இனி...

முரளிதரனின் ஓய்வு உண்மையிலேயே... இலங்கை டெஸ்ட் கிறிக்கெட்டிற்கு பாரிய இழப்புத்தான்...
காரணம், இது வரை பொதுவாக டெஸ்ட்போட்டிகளில் முரளிதரனே 40% விக்கெட்டுக்களை வீழ்த்தி இலங்கையின் வெற்றிகளுக்கு காரணமாக இருந்துள்ளார். அவரின் இந்த விலகலுக்கு பின்னர்... இலங்கையனியின் டெஸ்ட்கிறிக்கெட்டுக்கு பாரிய சவாலாக இருக்கும் என்பது உண்மை.
எதிர்வரும் போட்டிகளில் தான் நாம் பார்க்க முடியும்... இலங்கை முரளிதரன் இல்லாமல் எப்படி போட்டிகளை எதிர்கொள்கிறது என்பதை.

--------------------------------------------------------------------------------------

இந்த பதிவை எழுதும் போது... இனி முரளிதரனின் இவ்வாறான தருனங்களை காண முடியாது என நினைக்கும் போதே... ஒரு வித நெருடல் மனதில் எழுகிறது...

--------------------------------------------------------------------------------------

5 comments:

  1. //அவுஸ்ரேலியாவில் வைத்து முரலி சாதனை நிகழ்த்துவதை தமது திறமையான தடுப்பாட்டம் மூலம் நிறுத்தியது போன்று... இந்தியாவும் செய்துவிடுமோ என்ற பயம் இருந்தது...//
    இது பாராட்டா இல்லை இந்திய அணிக்கு எதிரான வஞ்ச புகழ்ச்சியாங்க ?
    நாங்கள் அடுத்தவர்களை சாதனை வீரர்கள் ஆக்குவதில் சாதனை படைத்து வருகிறோம்.

    ReplyDelete
  2. இனி இந்த சாதனையை எவராலும் முறியடிக்க முடியாது..ஏனெனில் அந்தக் காலத்தில் குறிப்பிட்ட ஒரு சிலர் தான் விளையாடுவார்கள்..அவர்கள் இல்லையென்றால் கவுந்துடும் என்ற நிலைமைகள் இருந்தன..ஆனால் இப்போது குப்பனும் சுப்பனும் எல்லோரும் விளையாடுகிறார்கள்..ஒருவர் இல்லையென்றால் இன்னொருவர்..வியாபாரமாகி விட்டது..இதில Match fixing, I.P.L, ஊக்கமருந்துபாவனை எக்ஸ்செட்ரா எக்ஸ்செட்ரா...சச்சின் பற்றிய LATEST செய்தி..(படித்திருப்பீர்களோ தெரியாது)...பத்தொன்பது வருடங்கள் தொடர்ந்து சாதனைகள் மட்டுமல்லாமல் தொடர்ந்த சோதனைகளும் முரளிக்கு வந்தன..எந்தவொரு வீரரும் இவரைப்போல கடுமையாக பந்துவீச்சு பரிசோதனைக்கு உட்படவில்லை..தமிழ் வீரர்-இலங்கை வீரர்-முரளி! நாம் அனைவரும்
    பெருமைப்படவேண்டிய விடயம் ...எனது எதிர்பார்ப்பு என்னவெனில் அவரது எதிர்காலம் அரசியலிலோ..I.P.L லிலோ சென்று நாசமாகி விடாமல் ஒரு வர்ணனையாளராகவோ நடுவராகவோ (ஆஸ்திரேலியாவின் முகத்தில் கரியை பூச வேண்டும்)..பரிணமித்தால்..மகிழ்வேன்...

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி...பிரபு...
    ஆமா ..எங்க உங்களோட முகநூல் பக்கத்த காண முடியல..?

    ReplyDelete
  4. வரலாற்று சிறப்புமிக்க அந்த ரெஸ்ட் மச்சை லைவாக‌ பார்க்கக்கிடைக்கவில்லை என்று கூறியிருக்கிறீர்கள் கவலையை விடுங்கள் http://www.buzzcric.net/ க்குச் சென்று பார்க்கலாமே நான் அங்குதான் கடந்த இரண்டாண்டுகளாகப் பார்க்கிறேன்

    ReplyDelete
  5. நன்றி...Karthick Chidambaram...
    ஆஹா... நான் அப்டிசொல்லவே இல்லையே...
    ஹீ...ஹி... நீங்கள் என்ன செய்திருக்கிறீங்க...
    -----------------------------------------------
    நன்றி கஜன்...
    இன்னமும் வாசிக்க வில்லை ( லப் ல அப்ஸெட்)...
    நிச்சயமாக... நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டியவர்களே...
    ஆம்... உங்களது விருப்பம்தான் எனதும்... ஆனால், அரசியல் கவுத்திடும் போல்த்தான் உள்ளது.
    -----------------------------------------------
    நன்றி... சின்ன பயல்... :)
    அது சதி செய்து என்னை றிப்போட் பண்ணிட்டாங்க... ( அது ஏன் என்டு பதிவு எழுதனும்... :D )
    இப்ப ம்றுபடியும் அதே எக்கவுன்ட் கிடைச்சாச்சு...)
    -----------------------------------------------
    நன்றி...Spottamil Entertainment...
    ஆ... இந்த தளம் சிறிது காலமாக இடை நிறுத்தப்பட்டிருந்ததே...
    மறந்தே போனேன்... இனி பார்க்கலாம்... நன்றி...:)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected