Total Pageviews

Wednesday 17 August 2011

ஃபேஸ்புக் தத்து பித்து கவிஞர்கள் :D ( நகைச்சுவை ) - 03




இது ஃபேஸ்புக் பதிவு...
சமீபத்தில் ஃபேஸ்புக்கில் நான் பார்த்த ரசிக்கத்தக்க நகைச்சுவை ஸ்ரேட்டர்ஸ்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
நீங்களும் ரசித்து பகிரிந்துகொள்ளுங்கள்.
( இந்த வசங்களின் உருமையாளர்கள் நிச்சயமாக ஸ்ரேட்டர்ஸ் போட்டவர்களாக இருக்க மாட்டார்கள். :P Bz அவர்கள் என் நண்பர்கள் நிச்சயம் சுட்டுத்தான் போட்டு இருப்பார்கள் :P ஆகவே, உண்மையான உரிமையாளர்கள் பொறுத்துக்கொள்ளவும். )
-------------------------------------------------------------------------------------------
ஒரு பொண்ணோட life ''ball'' மாதிரி
16-18 வயசு rugger ball மாதிரி 30 பேர் துரத்துவாங்க
18-22 வயசு football மாதிரி 22 பேர் பின்னாலையே போவாங்க
22-25 வயசு basketball மாதிரி 10 பேர் பின்னாலையே போவாங்க
25-28 வயசு snowball மாதிரி 5 பேர் பின்னாலையே போவாங்க
28-31 வயசு golf ball மாதிரி ஒருத்தன் பின்னாலையே போவான்
31 வயசுக்கு மேல் volley ball மாதிரி ஒருத்தன் இன்னொருத்தனிட்ட தள்ளிவிட பாப்பான்.

தண்ணி அடிச்சா பசங்க சொல்லும் எட்டு பஞ்ச் வசனங்கள் ...
1.மச்சி நான் full steady டா..
2.பைக் ஐ நானே ஓட்டுறேன்டா
3.நான் போதையில உளறுரேன்னு மட்டும் நினைக்காதடா
4.எனக்கு எவ்வுளவு அடிச்சாலும் ஏறாது மச்சி .
5.இன்னொரு பெக் அடிச்சா செமையா இருக்கும்..
6.நான் உனக்காக உயிரையும் கொடுப்பேன்டா
7.மச்சி நாளையில இருந்து குடிக்க மாட்டேண்டா


(Last but not least...பசங்க சொல்லும் மெகா தத்துவம்
8.மச்சி இந்த பொண்ணுங்களை நம்பவே கூடாதுடா.. 

ஒருவன் விசத்தை சாப்பிட்டு தற்கொலை பண்ண தயார் ஆகிறான்.
முதலில் அவன் தனது காதலிக்கு phone பண்ணி 'நான் போகிறேன் என்றான்'


உடனே அவள் "எங்க போற? யார் கூட போற? ஏன் போற? எப்ப திரும்பி வருவ? " என்று கேள்விகளை கேட்டு முடிக்க முன் phonai கட் பண்ணி விட்டு தன் நண்பணுக்கு phone பண்ணி.


நான் போறேண்டா என்ற உடனே நண்பன் சொன்னனா.
"இருடா மச்சான் நானும் வாறேண்டா "
நண்பேன்டா....


அழகான பெண் என நாம் 1 செகண்டில் முடிவுக்கு வருவதற்கு, பாவம் அவர்கள் 1 மணி நேரம் மெனக்கெட்டு மேக்கப் போடுகிறார்கள்...

ஒரு பிகரானது சுப்பர் பிகரா இல்லை சுமார் பிகரா எண்டு அதன் பின்னால் சுற்றும் ஆண்களின் எண்ணிக்கையை வைத்து கணக்கிடலாம்..!!!
**அப்பா ரௌடியாக அல்லது நிறைய ஆண் சகோதரங்கள் இருந்தால் இந்த விதி பொருந்தாது..:)


NIGHT தூக்கம் வரலைனு சோபா மேல படுத்தது தப்பா போய்டு..?
ஏன்?
சோபா புருஷன் சண்டைக்கு வந்துடான்.

Fb 'ல pickup ஆகுற பொண்ணும்.... Tea கடைல விக்குற bann'ணும்... நிச்சயமா பல பேரு கை மாறி தான் வந்திருக்கும் ... 
ஜாக்கிரதை மச்சி..

காதலி என்பவள் பாட்டி சுட்ட வடை மாதிரி ஒழுங்கா பாக்கலின்னா காக்கா கொண்டு போயிரும் ...

“பையனுக்கு என்ன சார் பேர் வெச்சிருக்கீங்க?”
“லோராண்டி ன்னு வச்சிருக்கோம்”
“என்னய்யா பேர் இது. கேள்விப்பட்டதே இல்லையே”
“என்ன இப்படி சொல்லிட்டீங்க. சித்தர் பாடல்கள்ளே இடம் பெற்ற பேர் சார் இது”
“அது என்ன பாடல்?”
“நந்தவனத்தி லோராண்டி



பேஸ்புக் வராமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவருக்கும் கொமெண்ட் பண்ணாமல் இருக்க வேண்டாம்
Like பண்ணும் நண்பர்களை மறக்க வேண்டாம்
கொமெண்ட் பண்ணாத நண்பர்களோடு சேர வேண்டாம்.”
காலை எழுந்தவுடன் Facebook-பின்பு
மகிழ்ச்சி கொடுக்கும் நல்ல wall போஸ்ட்
மாலை முழுதும் Chatting -என்று
வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா..


-------------------------------------------------------------------------------------------



Son: அப்பா சின்ன வீடுன்னா என்னப்பா ?
Father: ஏண்டா?
Son: தெரிஞ்சு வச்சிக்கலாம்னு தான் பா
Father: தெரியாம வச்சிக்கிட்டா தாண்டா அது சின்ன வீடு.... !!! :-P



பொண்ணுங்கள எந்த அளவுக்கு லவ் பண்ணனும் தெரியுமா .?
நாம அவல லவ் பண்றத பார்த்து அவ Friend நமளோட ஓடி வரணும்...



மனைவி: நம்ம பையன் என்னவாக வரணும்னு ஆசைப்படுறீங்க?
கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்...ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது... நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்...!
!



சீதனம்.....!!
1960 - 10 சவரன் தங்கம்,
1970- கலர் ரீவி,
1980- பைக்,
1990- காணி அல்லது வீடு,
2000- ஏ.சி கார்,
2011- ஒண்ணுமே வேணாம்.
பொண்ணுக்கு Facebook லே எக்கவுண்ட் இல்லாம இருந்தாலே போதும்.


என் காதலை அவளிடம் சொல்லக் கூட நான் அவ்வளவு பயப்படவில்லை . ஆனால் என் நண்பனிடம் அதை சொல்லப் பயந்தேன்

காரணம்

அவளிடம் 4 ரூபாய்க்கு ROSE வாங்கிக் கொடுத்த விஷயத்தை சொன்னால் இவன் 400 ரூபாய்க்கு TREAT கேட்பான்.

நண்பேன்டா...

-------------------------------------------------------------------------------------------

பிடித்திருந்தாள் வோட் போடவும்... :)

இதே போன்ற முன்னைய ஃபேஸ்புக் பதிவுகள் :
ஃபேஸ்புக் தத்துவ ஞானிகளின் தத்து பித்துவங்கள்... :D

ஃபேஸ் புக் சிரிப்புக்கள் + தத்துபித்துவங்களும் :D

-------------------------------------------------------------------------------------------















Tuesday 16 August 2011

தமிழர். :) ( எந்திரன்+உத்தம புத்திரன்* )

மிகப்பிந்திய பதிவு இது...

எந்திரன் படத்தைப்பார்த்த பின்பு எழுதி இருக்க வேண்டியது...
------------------------------------------------------------------------------------------
எந்திரன் படம் பற்றி எனது விமர்சனம் எதிர் மறையாக இருந்தாலும்..; அதில் வந்த ரோபோ கரக்டரின் பண்புகள் என்னை மிகவும் கவர்ந்திருந்தன.

முக்கியமாக.. தற்போது எம்மிடையே அரிதாகிக்கொண்டு இருக்கும் ஒரு முக்கிய விடையம் "மரியாதை".
பலரும் மரியாதையான பேசத்தகுந்த "தமிழ்" வார்த்தைகளை பாவிப்பதை தவிர்க்கிறார்கள்.
மரியாதையான சொற்களை ஆங்கிலத்தில் பேசிக்கொள்வதை வழமையாக்கிக்கொண்டுள்ளோம்.
( சிலர், தமிழில் பேசுகிறோம் என்றுவிட்டு... ஆங்கிலத்தை நேரடியாக தமிழ் பேசித்தெரிகிறார்கள்... அது வேறுவிடையம். )

எந்திரன் படத்தில் "சிட்டி றோபோ" பேசும் தமிழ் உண்மையிலேயே இனிமையானது.
மிகவும் தரமான தமிழ். ( சில சொற்களை ஆங்கிலத்தில் சொல்வது சரியே... காரணம் அந்த சொற்களுக்கு தமிழ் பதம் பாவணையற்றதாக அல்லது முரணானதாக இருக்கின்றது.)
சிட்டி பேசும் போது " நீங்கள்" என்பதையே அதிகமாக "முன்னிலையை" குறிக்க பயண்படுத்துகிறது.
ஆனால்,
பரவலாக... நாம் நீ என்ற சொல்லையே பயண்படுத்துகிறோம்.
இதில் என்ன தவறு என்றால்... நாம் சிறுவர்களையும் " நீ, வா, போ" என்றே பேசுகின்றோம்.
( இந்திய சினிமாக்கள் / நாடகங்களில் பார்த்தது. இலங்கையில்... வயது குறைந்தவர்களுடன் மரியாதையாக பேசுகையுல் " நீர், வாரும், உமது என்ற சொற்கள் பாவணைப்படுத்துவதுண்டு. )
மொழியை கற்றுக்கொள்ளும் அவர்களும் அதையே வழமையாக்கிகொள்கிறார்கள். பின்னர் வழர்ந்த பின்பு... ஆங்கிலத்தில் கற்பிக்கப்படும் பொழுது, ஆங்கில வழக்கப்படி " நீ" என்பது தான் முன்னிலையை ( எந்த வயதினரானாலும் சரி) குறிக்கப்பயண்படும் சொல் என நினைத்து நடந்துகொள்கிறார்கள்.

இந்த நிலையை மாற்றி... தமிழர்களிடையே அன்பான அழகுத்தமிழை பேசப்பழகிக்கொள்ள வேண்டும்.
பேச்சுத்தமிழில் கூட... மரியாதை இருக்க வெண்டும். அப்போது தான், நாம் சொல்லிக்கொண்டு தெரிவது போன்று "தமிழ் இனிமையான மொழி" என்பதை தக்கவைக்கவும் நிரூபனமாக்கவும் முடியும்.
மரியாதை நிமிர்த்தம் பேசப்படும் சொற்களை ஆங்கிலத்தில் இருந்து எடுத்துப்பேசுவதை தவிர்க்க/ குறைக்க வேண்டும்.

இந்த விடையத்தில், வசனத்திற்கு பொறுப்பான சுயாத்தாவுக்கும் அதை அப்படியே படமாக்க நினைத்த சங்கருக்கும் நன்றி கூறவேண்டும்.
மேலும், பலதரப்பட்ட ரசிகர்களை கொண்ட ரஜனி அதை கச்சிதமாகவும் அழகாகவும் இலகுவான உரை நடையில் பேசியதும் வரவேற்க்கப்படவேண்டிய ஒரு விடையம்.
சில சிறுவர்கள் அதைப்பார்த்து பேசிக்கொள்வது கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது.
எனினும் ரஜனி சிகரட் பிடித்தால் பிடிப்பவர்கள்... அவர் இனிய தமிழில் பேசினால்.. அதை கண்டுக்காம இருந்து... நாம் " அன்னம் - கெட்டதை மட்டும் எடுத்துக்கொள்ளும் அன்னம்" என்பதை நிரூபித்துக்கொள்கிறார்கள்.

பதிவு நீண்டுவிட்டது.. எனினும் இன்னொரு படத்தையும் குறிப்பிடவேண்டும்.

அது தனுஷ் நடித்த... "உத்தம புத்திரன்" 


குடும்பங்களிற்கு இடையில் தற்போது இல்லாமல் போய்க்கொண்டிருக்கும் உறவுகளை பற்றிய படம் என்றே சொல்லலாம் அதை. 
படத்தின் கதை என்னவோ பழசாக இருந்தாலும். உறவுகளுக்குள் மண்டிக்கிடக்கும் அடிப்படை பாச உணர்வுகளையும்..; கூட்டுக்குடும்பத்தின் மகத்துவத்தையும் எனக்கு விளங்கப்படுத்திய படம் அது.


வெளி நாட்டு கலாச்சாரம் என்கிற பெயரில்.. பலர் உறவுகளை மதிப்பதில்லை, பேணுவதில்லை. அதே நேரம், வெளி நாட்டவர்கள் எமது காலாசார முறையை போற்றுவதும் குறிப்பிடத்தக்கது.
நாம் வெளினாட்டு மல்டி கலாச்சாரத்திற்குட்பட்டு குறுகிய வட்டமாக்கிக்கொள்கிறோம் உறவுகளை. ஆனால், அதே மேற்கத்தைய கலாச்சாரத்தில் இருக்கும் நல்ல பண்புகளை விட்டு விடுகின்றோம்.
------------------------------------------------------------------------------------------
மொத்ததில் தனித்துவம் இழந்த கலாசாரத்துடன் இருப்பது எனக்கு வெறுப்பாக இருந்தது. இந்த பதிவை இட்டேன்.
( இதில் கூறி இருக்கும் குறைகள் அனைத்தையும் நானும் செய்துகொண்டுதான் இருக்கிறேன். குறைக்க நினைத்துக்கொண்டே:) )
------------------------------------------------------------------------------------------

Sunday 14 August 2011

பயணுள்ள 3 மென்பொருட்கள் :) ( இலவசமாக தரவிறக்க லிங்களுடன் )

Joboshare iPhone Ringtone Maker 1.2.1 build 0812

iPhone இக்கு றிங்டோன்களை சொந்தமாகவே தயாதித்துக்கொள்ள உதவக்கூடிய மென்பொருள் இது.
இதன் மூலம் இலகுவாக M4R file களை தயாரிக்க முடிகின்றமையால் iTunes Store இல் தேடிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அத்துடன் பல கோப்புக்களை M4R ஆக மாற்ற முடிகின்றமையும், மென்பொருள் சிறியதாக இருப்பதும் இதன் சிறப்பம்சம்.

அளவு : 6.39 Mb

ஏற்புடைய கோப்புக்கள் : AVI, MPEG, WMV, DivX, MP4, H.264/MPEG-4 AVC, MKV, RM, RMVB, FLV, MOV, XviD, 3GP, MP3, WMA, AAC, WAV, RA, M4A, and AC3, etc.

தரவிறக்க :
Download 1
Download 2
------------------------------------------------------------------------------------------
Bigasoft Total Video Converter 3.4.10.4239 ( Multilanguage )



வீடியோக்களை கென்வேர்ட் ( Convert) பண்ணிக்கொள்வதற்கு இலகுவான பயணுள்ள ஒரு மென்பொருள் இது.
சிறப்பம்சமாக Portable file ஆக கிடைப்பதனால் இன்ஸோடல் ( Install ) பண்ண வேண்டிய அவசியமும் இல்லை. அளவும் சிறியது.

வீடியோ ஃபைல்களை பல வகைகளில் Type மாற்றிக்கொள்வதற்கு முக்கியமாக உதவுகிறது.
அத்துடன் புதியவகை டிவைஸ்களுக்கு ஏற்புடையதாக மைந்துள்ளது.

வீடியோக்களில் இருந்து எமக்குப்பிட்த்தமான இசையை மட்டும் வெட்டிப்பெற்றுக்கொள்வதற்கும் காட்சிகளை மட்டும் வெட்டிப்பெற்றுக்கொள்வதற்கும் உதவுகிறது.
காட்சிகளை படங்களாக மாற்றிக்கொள்ளவும் துணை புரிகிறது.

அளவு : 10 MB

ஏற்புடைய வீடியொ கோப்புக்கள் : MP4, 3GP, AVI, Xvid, DivX, H.264, MKV, WMV, RM, FLV, MOV, etc

ஏற்புடைய ஓடியோ கோப்புக்கள் :  MP3, WMA, AAC, WAV, OGG, FLAC, APE, M4A, RA, AC3, MP2, AIFF, AMR

ஏற்புடைய டிவைஸ்கள் : PDA, PSP, iPod, iPhone, BlackBerry, Xbox, Xbox360, PS3, Archos, Creative Zen, iRiver, television, Apple TV & computers

தரவிறக்க :
Download 1
Download 2

------------------------------------------------------------------------------------------
CoolUtils Total Doc Converter 2.2.0.191 Multilingual Portable

பலருக்கு இந்த பிரச்சனை வரக்கூடும்... அதாவது, நாம் வீட்டில் இருந்து ஒரு வகையான கோப்புக்களை தயாரித்துக்கொண்டு போவோம்... போற இடத்தில் அந்த கோப்பை இயக்க கூடிய வகையில் கணனியுல் மென்பொருட்கள் இருப்பதில்லை.
அந்த குறையை நிவர்த்தி செய்ய சிறந்த ஒரு சிறிய portable மென் பொருள் இது.
உங்கள் பென் ட்ரைவ்களிலேயே கொண்டு சென்று இயக்கக்கூடியதாக இருப்பது சிறப்பு.

அளவு :  7.61 MB

ஏற்புடைய  கோப்புக்கள் : Doc, DocX, DocM, RTF or TXT files to HTML, PDF, XLS, JPG, TIFF, or Text. Besides &  Rvf to PDF, Excel, HTML, JPEG, TIFF, RTF, Text.

தரவிறக்க :
------------------------------------------------------------------------------------------
இந்த மென்பொருட் தரவிறக்க லிங்குகள் விரைவில் வெளியீட்டாளர்களால் நீக்கப்படக்கூடும்...
முடிந்த வரை விரைவாக தரவிறக்கிக்கொள்ளவும். :)

இந்த பதிவு உபயோகமானது எனின்... வோட் பண்ணி பலர் பார்வையிட உதவவும். :) ( அப்படியே எனக்கும் ஹிட்ஸ் கிடைக்கும் சந்தோசப்படலாம் :P )
------------------------------------------------------------------------------------------


Saturday 13 August 2011

சுப்பர் படங்கள் : ( ஃபோட்டோஷொப் ) :D


ஒண்டுக்க ஒண்டு என்று இதைத்தான் சொல்வாங்க...


வீட்டுக்க வந்தாத்தான்பா நிம்மபதியா சுய உருவத்தில இருக்கலாம்...


கோலா ஃபான்ஸ்னா இப்படித்தான்... சுத்தி சுத்தி எலாம் குடிப்பம்ல...


நல்ல ஐடியாவா இருக்கே அட்வைஸ் பண்ணிற பெருசுங்கள்கு...:P


கதவு போச்சே...


யூஸ் பண்ண வேண்டிய நேரத்தில யூஸ் பண்ணாட்டி இப்படித்தான் ஆகும் :P


ஒன்லைன சும்மா இருக்காம எல்லா இடத்திலையும் அட்ரஸ் கொடுத்தா இப்படித்தானாகும்...


நார்னியா...


கடுப்புனா இப்படியும் காட்டலாம்...


பெண்ணடிமை :P






நான் இணைய்த்தில் ரசித்த ஃபோட்டோஷொப் படங்கள்.... நீங்களும் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்.. :)

Thursday 11 August 2011

தமிழ் தளங்களை அனைத்து கைத்தொழைபேசிகளிலும் தெளிவாக வாசிக்க!

யுனிக்கோட் சப்போர்ட் பண்ணாத பிரச்சனையால் பலரால் தமது கைத்தொழை பேசிகளில் இணைய வசதிகள் இருந்தும் "தமிழ்" தளங்களை பார்வையிட முடிவதில்லை.
அவர்களின் பிரச்சனைக்கு ஒரு சிறிய தீர்வாக இந்த பதிவை இடுகிறேன்.
-----------------------------------------------------------------------------------
1) முதலில் கைத்தொலை பேசியில் "miniOpera (மினி ஒபேரா" இணைய உலாவியை நிறுவிக்கொள்ள வேண்டும்.
அது சாதாரணமாக இணைய வசதி உள்ள அனைத்து கைத்தொலைபேசியின் அடிப்படை உலாவியின் உதவியுடனேயே.. தேடி நிறுவ முடியும்.
அல்லது...
இந்த லிங்கிற்கு சென்று தரவிறக்கி இன்ஸ்ரோல் பண்ணிக்கொள்ளவும்.

2) இன்ஸ்ரோல் பண்ணிய பின்னர்...
கைத்தொலை பேசியில் ஒபேரா உலாவியை (Opera browser)  இயக்கிக்கொள்ளவும்.

3) பின்னர், சேர்ச் பாரில்...
"about:config" என்ட டைப் செய்து என்டர் / சேர்ச் பண்ணவும்...
அது "Power-User Settings" பக்கத்திற்கு செல்லும்.

4) அங்கே... "Use bitmap fonts for complex scripts" ஐ தெரிவு செய்து "No" இற்கு பதிலாக "Yes" ஐ மாற்றவும்.
பின்னர கீழே இருக்கும் "Save" ஐ அழுத்தி பதிந்து கொள்ளவும்.

இனி உங்களால், தமிழ் எழுத்துக்களை பார்வையிட முடியும். :)
( கச்சிதமானதாக இல்லாவிடினும்... வாசிக்க கூடியவகையுல் அமைந்திருக்கும். :) )

-----------------------------------------------------------------------------------
பதிவு பயணுள்ளது என்றால் வோட் போடவும்.
இது போன்ற வேறு பதிவு எதாவது தேவைப்படின் கொமென்டில் குறிப்பிடவும்.
-----------------------------------------------------------------------------------

தமிழில் அனைத்து அறிவியல், கல்வித்தகவல்களை தருவதற்கான நாம் முயன்றுகொண்டு இருக்கிறோம்...
ஆர்வம் உள்ளவர்கள் எம்முடன் இணைந்து செயலாற்ற முடியும். :)

எமது இணையத்தள திட்டங்கள் பிடித்திருந்து எம்மை உலகறிய செய்ய நினைப்பவர்கள்... உங்கள் தளங்கள்/ புளொக்கில்..; இந்த HTML கோட்களை களை உபயோகிக்க எம்மைத்தொடர்பு கொள்ளவும் :)
-----------------------------------------------------------------------------------

Wednesday 10 August 2011

ஹனுமார் vs ஹியூம் (ESP மனிதர்) (மூளையும் அதிசய சக்திகளும். )

மிக மிக நீண்ட இடைவெளிக்கி பின்பு மீண்டும் பதிவு இடுகிறேன்... இனியாவது மாதாந்தம் 10 பதிவுகள் வரையாவது இட முடியும் என நம்பிக்கையுடன்.. :)
------------------------------------------------------------------------------------------
ESP மற்றிம் மூளையின் அதிசய சக்திகள் பற்றிய இறுதிப்பதிவில் "ஹனுமார்" ஒரு ESP மனிதராகத்தான் இருந்திருபார் என எழுதி இருந்தேன்... அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது, கூடவே சந்தேகங்களும்...
அதில் ஒருவர் கேட்ட சந்தேகத்திற்கான விடைப்பதிவாகவும்... ஆர்வலர்களுக்கான தகவல் பதிவாகவும் இது இருக்கும். :)
------------------------------------------------------------------------------------------
// ஹனுமார் மலையை தூக்கினார் என்றால் அவரால் எப்படி அவ்வள‌வு பெரிய உருவத்தை எப்படி எடுக்க முடிந்தது?
அதுவும் ESP ஆ? //

இந்த கேள்வியிற்கு விடை கொடுப்பதற்கு முன்னர்... விஞ்ஞான உலகினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அமானுட ESP  மனிதரை பற்றி பார்ப்பது பொருத்தமானது...

டானியல் டொங்லஸ் ஹியூம் (daniel douglas hume)
1833 ஆம் ஆண்டில் பிறந்த ஒரு மனிதர், அப்பா இல்லாத இந்த சிறுவனின் தாயும் சிறுவயதில் இறந்து போக அத்தையுடன் வளர ஆரம்பித்தான்.
சிறு வயதிலேயே வித்தியாசமான குணங்களுடன் வளர்ந்த இந்த சிறுவனுக்கு ஒரு சிறந்த நண்பனும் இருந்தான்...  கால ஓட்டத்தில் நண்பன் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்திருந்தான்.

ஒரு நாள் திடீரென 13 வயதேயான ஹியூம் தனது அத்தையிடம் "எனது நண்பன் "எட்வின்" இறந்து விட்டான் என தோன்றுகிறது" எனக்கூறினான்...  இதை நம்ப அத்தை நம்பவில்லை.
அடுத்த நாள் காலையில், எட்வின் ஒரு கார் விபத்தில் இறந்த தகவல் கிடைக்கிறது. அப்போது தான் முதல் முதலாக அபூர்வ ஆற்றல் இருப்பது தெரியவந்தது.

அதன் பின்னர் 4 வருடங்களில் பல ஆற்றல்கள் அவரிடம் வந்து சேர்ந்தன.
( இவரின் முளு விபரத்தை பார்க்கும் போது பல வியப்புக்கள் காத்திருக்கும்... நான் இங்கு அவை அனைத்தையும் குறிப்பிடவில்லை... ஆர்வமுள்ளவர்கள் வாசித்துக்கொள்ளவும். )

ஒரு முறை பல ஆள்மன சக்கிதி ஆராய்ச்சியாளர்களின் முண்ணிலையில் தனது சக்திகளை நிரூபித்துக்கொண்டிருந்தார்.
அவர் மேசையை அந்தரத்தில் பறக்க செய்த போது, உடனே அனைவரும் ஓடிப்போய் ஏதும் கேபிள் இருக்கிறதா என பரிசோதித்தார்கள்... இப்படி அவர் செய்யும் ஒவ்வொரு செயலையும் சந்தேகக் கணோடு பார்வையிட ; கடுப்பாகிப்போன ஹியூம்... ஒரு சுவரின் ஓரமாகப் போய் நின்று கொண்டு... தனது உயரத்தை அளவிடுமாறு கூறினார்.. சையாக 5 அடி 10 அங்குளம் அளவிடப்பட்டது.

பின்னர், கண்ணை மூடி மூச்சை உள்ளெடுத்துக்கொண்ட ஹியூம் சில நிமிடங்களில் வளர ஆரம்பித்தார்!!! பின்னர் அளந்து பார்க்கையில் 6 அடி 6 அங்குளமாக உயர்ந்திருந்தார்!!!
இதை கண்கூடாக கண்ட அனைத்து விஞ்ஞானிகளும் விளக்கம் கூற முடியாமல் திகைப்புக்குள்ளாகி அவரின் சக்தியை  ஒப்புக்கொண்டிருந்தார்கள்.
இது நிவீன உலகில் நேரடியாக நிரூபனமான ஒரு உதாரணம்.

இதே போன்ற ESP சக்தியை பயண்படுத்தி ஹனுமாரும் தனது உடலை பெருப்பித்திருக்க சந்தர்ப்பங்கள் உள்ளன.
ஹியூமை விட அதிகபடியான  ESP தன்மையை கொண்டிருப்பின் உடலை இன்னும் பெருப்பிப்பது சாத்தியமே. :)

பறக்கும் சக்தியையும் ஹியூம் நிரூபித்துக்காட்டி இருந்தமை குறிப்பிட வேண்டிய விடையம்.

மேலும், தனக்கு ESP தவிர்ந்த சில ஆவிகள்(?) உம் தனக்கு துணை புரிவதாக கூறி இருந்தாராம் ஹியூம்.
வாணில் இருந்து சில(9) சக்திகள் தன்னை இயக்குவதாக குறிப்பிட்டு இருந்துள்ளார். ( இப்படியான பல சக்கிதகளைக்கொண்ட மனிதர்கள் குறிப்பிட்ட வாண் சக்திகள் பற்றி சொல்லி இருக்கிறார்கள்... அவற்றை தெளிவாக இனிவரும் பதிவுகளில் பார்க்கலாம் :) )

அதேவேளை, ஹனுமாரும் இவ்வொரு முறை பெளதீக விதி முறைகளை மீறும் போதும் ( ESP ஐ வெளிக்கொணரும் போதும்) வாணத்தை நோக்கி கண் மூடி தியானித்ததாகவே இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே ஹனுமார் ஒரு ESP  மனிதராக இருந்து பின்னர் வரலாற்றாலர்களால் கால ஓட்டத்தில் இறைப்புகள் எய்தி இருக்க கூடும்.
------------------------------------------------------------------------------------------
அடுத்து...
சிவனிற்கு நெற்றிக்கண் இருந்ததாக கூறப்பட்டுள்ளது எந்தளவுக்கு உண்மை... நெற்றிக்கண் என்றால் என்ன... இப்போது மனிதர்களிடம் அந்த 3ம் கண் எங்கே போனது? போன்ற சுவாரஷ்ய தகவல்களை அறிவியல் கண்ணோடு பார்ப்போம்.
மேலும்...
ஏன் இப்போது எம் அனைவரிடமும் புதைந்துள்ள இந்த சக்திகளை மூளையில் இருந்து வெள்ப்படுத்த முடியவில்லை என்பதையும் ஆராய்வோம். :)
------------------------------------------------------------------------------------------
பதிவில் நல்ல தகவல்கள் இருக்கின்றன என கடுதினால் வோட் போடவும்.
அல்லது, குறைகளை கொமென்டில் சுட்டிக்காட்டவும். + உங்கள் கருத்துக்களையும். :)


"daniel douglas hume"தகவல்கள் உறுதிக்கு :
The Encyclopedia of Witches and Witchcraft. , The hanuted museum.
மனிதரும் மர்மங்களும்.
- valaakam*-

------------------------------------------------------------------------------------------
தமிழில் அனைத்து அறிவியல், கல்வித்தகவல்களை தருவதற்கான நாம் முயன்றுகொண்டு இருக்கிறோம்...
ஆர்வம் உள்ளவர்கள் எம்முடன் இணைந்து செயலாற்ற முடியும். :)

எமது இணையத்தள திட்டங்கள் பிடித்திருந்து எம்மை உலகறிய செய்ய நினைப்பவர்கள்... உங்கள் தளங்கள்/ புளொக்கில்..; இந்த HTML கோட்களை களை உபயோகிக்க எம்மைத்தொடர்பு கொள்ளவும் :)
------------------------------------------------------------------------------------------

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected