Total Pageviews

Thursday, 30 December 2010

2011 சிரித்துக்கொண்டே தொடங்கட்டும்... :D ( நகைச்சுவை + படங்கள் )

-------------------------------------------------------------------------------------------
நான் வாசித்து நினைவில் நின்ற சிலதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

-------------------------------------------------------------------------------------------
வீடு...

அதிகாலை 8 மணிக்கு தாத்தா எழும்பினார்... பக்கத்தில் பாட்டி டீ போடாமல் இருப்பதைக்கண்டு கடுப்பாகி போனார் தாத்தா...
தாத்தா : என்னடி... இன்னும் டீ போடாமல் என்ன பண்ணிக்கிட்டு இருக்க நீ?
பாட்டி : பால் முடின்சு போச்சு... வாங்க மறந்திட்டன் அதுதான்...
தாத்தா : ம்ம்ம்... நேற்றே சொல்லி இருக்கலாம்ல... காலைல அலைய விடுறாள்... இரு போய் வாங்கிட்டு வாறன்...

காரையும் எடுத்துக்கொண்டு சுப்பர் மார்கெட்டுக்கு கிளம்புகிறார்.

வாடா மாப்பிள... ( மொபைல் ட்றிங்கிங்... )
தாத்தா : என்னடி... ஏன் இப்போ கோல் பண்ணுற... வேற என்ன வேனும்?
பாட்டி : இல்லடா... இப்போதான் அலேர்ட் நியூஸ் பார்த்தன்... நீ போற றோட்ல... ஒருத்தன் றோங் ஸைட்டா ஸ்பீட்டா ட்ரைவ் பண்ணுறானாம்... பார்த்துப்போ...
தாத்தா : ஹீ...ஹீ... பொய்க்குடி.. நம்பாத... ஒருத்தன் இல்லை... எல்லாருமே அப்படி றோங் ஸைட்டாத்தான் வந்துகிட்டு இருக்காங்க....
-------------------------------------------------------------------------------------------
ஆர்ட் மியூஸியம்...

பல கலைப்படைப்புக்களை கணவனும் மனைவியும் ரசித்துப்பார்த்துக்கொண்டு சென்றார்கள்...
ஒரு மூலையில்.. இலைகளால் அலங்கரிக்கப்பட்ட பெண்ணின் ஓவியம் வைக்கப்பட்டிருந்தது....
மனைவி : என்னங்க... ஏன் இவளவு நேரமா இந்த ஓவியத்தையே பார்த்திட்டு இருக்கிங்க?
கணவன் : பாரேன்... எவளவு அழகா இருகு என்டு...
மனைவி : சரி சரி... இலையுதிர்காலம் வர இன்னும் நாளிருக்கு... வாங்க போகலாம்...

-------------------------------------------------------------------------------------------
ஸ்கூல்...

ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...
மாணவர்கள்: புரியல சார்... :P
-------------------------------------------------------------------------------------------

X : 500 பக்கம் உள்ள ஒரு புத்தகத்தை எத்தனை நாளில் படிக்க முடியும்?
எழுத்தாளர்: ஒரு வாரம்.
டாக்டர்: இரண்டு வாரம்.
வக்கீல்: ஒரு மாதம்.
ஸ்டுடன்ட்: தேர்வுக்கு முதல் நாள் இரவு மட்டும் போதும்!! இதுதான் ஸ்டுடன்ட் பவர் என்பது!!...
-------------------------------------------------------------------------------------------

ஸ்கூல் லைஃப் எக்ஷாம்....

1 - 3 ம் வகுப்பு...
மாணவன் : எக்ஷாம்காக எல்லாமே படிச்சாச்சு... :)

4 - 6 ம் வகுப்பு...
மாணவன் : அந்த ஒரு கேள்வி மட்டும் கஷ்டம்... அத நான் படிக்கவே இல்லை... :/

6 - 8 ம் வகுப்பு...
மாணவன் : முக்கியமான கேள்விகளை மட்டும் படிச்சிட்டு வந்தன்... ஹீ ஹீ... :D

8 - 10 ம் வகுப்பு...
மாணவன் : 4 சப்டர்ஸ் மட்டும் போதும்... ^_^ :D

அட்வான்ஸ் லெவல்...
மாணவன் : எக்ஷாம்கு பிட் ரெடி பண்ணியாச்சு... ஹீ ஹீ... :D

யூனிவர்ஷிட்டி...
மாணவன் : என்னாதூதூ.. நாளைக்கு எக்ஷாமாமாமா :O

-------------------------------------------------------------------------------------------
உன்னைப் பார்க்க வேண்டும், 
பேசவேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் டிக்கெட் எடுத்தால்தான் 
மிருகக் காட்சிச் சாலைக்குள் விடுவேன் 
என்று சொல்கிறார் காவல்காரர்!

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Sunday, 26 December 2010

%* $@?!<|"#²*/¤E :D :D :D (கொமிக்ஸ் படங்கள்.. :D)

------------------------------------------------------------------------------------------
வசங்கள் இல்லாமலே... கருத்தையும் சிரிப்பையும் உண்டாக்கும் அருமையான படங்கள் இவை...
எனக்குப்பிடித்திருந்தது.. உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்... :)

(இந்த வருடம் முடிய இன்னும் 5 நாட்கள்தான் இருக்கிறது... ஜோசிக்காமல் சிரித்துக்கொண்டே இருக்கத்தக்கதா 2,3 பதிவு போட்டுடனும்.... :) )
------------------------------------------------------------------------------------------

------------------------------------------------------------------------------------------

------------------------------------------------------------------------------------------

Tuesday, 21 December 2010

2010 ம் எனக்கு பிடித்த 10ம்... ( சினிமா படங்கள். :) )

------------------------------------------------------------------------------------------
2010 ம் ஆண்டில் நான் பார்த்த படங்களுள் எனக்கு பிடித்த படங்களை வரிசைப்படுத்தியுள்ளேன். உங்களுக்கு இதில் பாரிய மாற்றம் இருந்தால்... உங்கள் வரிசையை கீழே கொமென்டில் போடவும். பிடித்திருந்தால் வோட் போடவும். :)
------------------------------------------------------------------------------------------
அங்காடித்தெரு.

அருமையான படம்...
சொந்த ஊரிலிருந்து வெளியூருக்கு (சென்னை) வேலைதேடிவரும் இளவட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.
அவர்களின், ஏழ்மையின் காரணமாக... எப்படியெல்லாம் வேலையிடங்களில் நடத்தப்படுகின்றனர்... என்பதை வெளியாருக்கு வெட்டவெளிச்சம் போட்டுக்காட்டியது..
இப்படியான சூழ் நிலையில்... அவர்களினுள் எழும் காதல், எப்படிப்பட்ட சிக்கல்களை சந்திக்கின்றன என்பதை... ஹீரோயிஸத்தையும் தாண்டி... ஒவ்வொரு பாத்திரத்தினூடும் வெளிப்படுத்தியிருந்தார் இயக்குனர்.
இறுதியில் எது உண்மைக்காதல் என்பதை உணர்த்தும் படம்.

என்னால் மறக்க முடியாத காட்சி...
காதல் கடிதம் பிடிபட்டதும்... காதலன் ஏழ்மை/குடும்பத்தை காக்கவேண்டிய நிலையின் காரணமாக, அதை மறுத்து தனது காதலியை பலர்முன்னிலையில் கேவலமாக திட்டுகிறார்... இருந்த ஒரே சந்தோஷமும் போய்விட்டதே என்ற ஏக்கத்தில்... காதலி தற்கொலை செய்துகொள்கின்றார். மறக்க முடியாத காட்ச்சி இது.

என் விமர்சனம்...
http://alivetorrents.com/torrent/8268676/tamil-dvdrip-angaadi-theru-2010-lotus-x264-1cdrip-mp4-tt
------------------------------------------------------------------------------------------
மதராசபட்டினம்.

கஜினி படத்துக்கு பிறகு கிட்டத்தட்ட ஒரே உணர்வை எனக்குள் ஏற்படுத்திய படம்.
சுதந்திரத்துக்கு முன்னான இந்தியாவில் நடந்ததாக கதை கூறப்படுகிறது. 
சாதாரண சலவைத்தொழிலாளிக்கும்.. பிரிட்டுஸ் பிரபுக்களின் மகளுக்கும் இடையேயான காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள்... பிரிவு என்பவை சிறப்பாக காட்டப்பட்டன. கதை ஃப்லாஸ்பாக்கில் சொல்லப்பட்டதும்... இறுதியில் அந்த மூதாட்டி காதலனின் சமாதியில் இறப்பதும் மிக அருமையாக இயக்கியுள்ளார் இயக்குனர்.

பிடித்த காட்சி : 
சுதந்திர தினமன்று நடக்கும் காட்சிகளும்... கடைசியாக, பலூன் டையரில் போட்டு காதலனை ஆற்றில் தப்பசெய்துவிட்டு... செல்ல எத்தனிக்கும் போது... ஆர்யா... கையால் படகைப்பிடிப்பதும்... துடுப்பால் விரல்களின் அடித்து பிடியை தளர செய்வதும் அருமை. பின்புல இசை மேலும் இந்த காட்சியை பிடித்ததாக்கியது.
http://alivetorrents.com/torrent/8695352/madarsapattinam-2010-tamil-dvdrip-x264-1cdrip
------------------------------------------------------------------------------------------
பொஸ் என்கிற பாஸ்கரன்.

நான் மிக மிக ரசித்துப்பார்த்த திரைப்படம். எந்த ஒரு காட்சியுமே ஸீரியஸ் இல்லாமல் போனாலும்... அனைத்துமே மனதில் படும்படியாக இருந்தது. ஆர்யா சந்தானம் வரும் அனைத்துக்காட்சிகளுமே சுப்பர்.
என் மனதில் வடிவேலுவுக்கு அடுத்த இடம் இப்போ நண்பேன்டா சந்தானத்துகுத்தான்.
படத்தின் கதை என்றால் என்ன சொல்றது... உதவாக்கரையாகத்தெரியும் ஒருவன் காதலித்து பிறகு கரம் பற்றுவதற்காக முன்னேறும்... அதே கதைதான். ஆனால், நகைச்சுவையாக‌ சொல்லப்பட்ட விதம் சுப்பர். 

பிடித்த காட்சி...
எல்லாம்.

------------------------------------------------------------------------------------------
விண்ணைத்தாண்டி வருவாயா.

அருமையான திரைக்கதை. காதலும் அதன் பிரிவுகளும் அருமையாக காட்டப்பட்ட படம். சிப்பு, திரிஷ்யாவின் இயல்பான நடிப்பு... ஏற்கனவே சொல்லப்பட்ட கதைகளை அடிப்படையாக கொண்டாலும் இந்தப்படத்தை ஒரு படி மேல் நிறுத்தியது.
இந்தப்பட உணர்வுகள் எழுத்தில் எழுதமுடியாதவை. படத்தின் முடிவு எடுத்த விதம் தான் என்னை மிக கவர்ந்திருந்தது.

பிடித்த காட்சி...
------------------------------------------------------------------------------------------
ராவணன்.

படம் தோல்விப்படம் என்றாலும்...  எனக்கு பிடித்த படம்.
அனைவருமே அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்கள்.
ஒருத்தன் காதல் வரும்போது... எவ்வளவு மாறுதலுக்கு உட்படுகின்றான் என்பதை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டது. (இராமாயணக்கதைதான்... இராவணன் முன்னிலைப்படுத்தப்பட்டது. )
இறுதிக்கட்டத்தில்... பிருத்விராஜின் சந்தேகமும் அதை தொடர்ந்த காட்சிகளும் இரு முடிவுகளை எடுக்கத்தக்கனவாக இருந்தது.
1) உண்மையிலேயே சந்தேகம் கொள்கிறார். ஐஸ்வர்யாவும்... விக்ரம் அவளவு நாளாக நடந்துகொண்ட முறையிம் ஈர்ப்புக்கொண்டு அவரிடமே சொன்னது போல் போகின்றார்.
2) விக்ரமை வீழ்த்துவதற்காக மனைவி மீது சந்தேக்ப்பட்டது போன்று பிருத்விராஜ் நடிக்கின்றார்.

படத்தின் பெரிய குறை... ஏன், விக்ரம் (வீரய்யா) தீவிரவாதப்போக்குக்கானான் என்பது காட்டப்படவில்லை.
பிடித்த காட்சி...
தங்கை (பிரியாமணி) பொலீஸ் ஸ்ரேஷனில் நடந்தவற்றை கூற... ஒன்றுமே செய்ய முடியாதவனாக அண்ணன் (விக்ரம்) குண்டுபாய்ந்த தொண்டை ஓடு கத்தும் காட்சியும்... அதைக்கூறும் போது ஐஸ்வர்யாவின் கண்களில் இருந்து கண்ணீர் விழும் காட்ச்சியும்... திறமையான நடிப்பு. பிடித்திருந்தது.
http://alivetorrents.com/torrent/8623130/tamravanan-2010-1cd-dvdrip-xvid-ac3
------------------------------------------------------------------------------------------
மைனா.
பிந்தங்கிய கிராமத்தில்... சிறுவயதிலேயே உருவாகும் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். 
இறுதியில்... ஒருவரின் சந்தேகத்தால் ஏற்படும் பின் விளைவுகள் இறுதி 20 நிமிடங்களில் படத்தை புரட்டிப்போட்டுவிடுகின்றது. " நாசமா போவா... நால்லாவே வாழமாட்டாய்..." போன்ற வசனங்களுக்கேற்ப வாழ்க்கை மாறுவதாக காட்டப்பட்டதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

பிடித்த காட்சி :
கடையில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது... "எங்களை நாய்மாதிரி அலைய விட்டுட இல்ல... கஞ்சா கேஸ்ல போட்டு வெளிலயே வராம பண்றன்டா... எப்டி வாழ்றா என்று பார்ப்பம்... " என்று...  ஓடிவந்த ஜோடியை திட்டும் போதுகாட்டப்படும் முகபாவனைகளும்... அதை தொடர்ந்த சில காட்சிகளும் அருமை.
http://alivetorrents.com/torrent/9092215/mynaa-2010-tamil-lotus-dvd-rip-v99
------------------------------------------------------------------------------------------
எந்திரன்.
தமிழ் சினிமாவுக்கு வித்தியாசமான சையன்ஸ் ஃபிக்ஷன் படம். ரஜனியின் நடிப்பு மிகவும் கவர்ந்திருந்தது எனக்கு... தான் ஏன் சுப்பர்ஸ்டார் என்பதை அனைவருக்கும் உணர்த்திய படம்.
மனிதனால் உருவாக்கப்பட்ட ரோபோவுக்கு உணர்வு கொடுத்தால்... ஏற்படத்தக்க சிக்கல்களை ரோபோ மனித காதல் மூலம் காட்டி இருந்தார்கள்.
திரைக்கதையில்... சயன்ஸ்ஃபிக்ஷன் என்று பார்க்கையில் பெரும் குறைபாடுகள் இருந்தன.
பிடித்த காட்சி :

இறுதிக்கட்டத்தில்.. பல ரோபோக்களுக்கு மத்தியில்... அதே உருக்கொண்ட விஞ்ஞானி (ரஜனி) யை கண்டு பிடிக்கும் போது.. ரோபோ (ரஜனி)யின் நடிப்பு சூப்பராக இருந்தது.
http://alivetorrents.com/torrent/9037165/enthiran.2010.dvdrip.tamil
------------------------------------------------------------------------------------------

நான் மஹான் அல்ல...

கார்த்தி நடித்து வெளிவந்த திரைப்படம். வித்தியாசமான கதைக்களத்தைக்கொண்ட படம்.  ஒரு சாதாரண மனிதன் எப்படி கொலைகாரருடன் தொடர்பேற்படுகிறார். காமத்தால், எப்படி கொலை செய்யும் அளவுக்கு துணிகிறார்கள். அதை மறைக்க முழு நேர கொலையாளியாக மாற நேரிடுகிறது என்பதை எல்லாம் காட்டிய படம்.
இதனிடையே... அழகான காதலும் இழையோடுகிறது. 
ஓடிப்போய் திருமணம் செய்ய நினைக்கும் காதலர்களுக்கும் ஒருவகையுல் எச்சரிக்கை மணியடித்த படம்.

பிடித்த காட்சி...
காதல் காட்சிகள்... தந்தை இறந்தவுடன் கார்த்தியின் நடிப்பு.
http://alivetorrents.com/torrent/8831653/naan-mahan-alla-2010-tamil-1cd-xvid-mp3-mastitorrents

------------------------------------------------------------------------------------------
உத்தம புத்திரன்...
வழமையான கதைதான்... சமீப காலமாக தனுஷே இப்படிப்படங்கள்தான் நடித்துக்கொண்டிருக்கிறார்.
எனினும் இந்தப்படத்தில்... குடும்பம் என்றால் எப்படி இருக்கனும்... மரியாதை என்றால் என்ன... கூட்டுக்குடும்பத்தின் மகத்துவம். என்பதை சிறு சிறு விடையங்களினூடாகவும் காட்டியுள்ளார்கள்.

பிடித்த காட்சி...
தான் கற்பனையாக உருவாக்கப்பட்ட கதாப்பாத்திரங்கள் நியமாக வந்துவிட்டதாக எண்ணி... பிரமையடையும் விவேக்கின் காட்சிகளை விரும்பி ரசித்தேன்.
தனது அண்ணன் மீது கைவைத்த மகனை எட்டி உதைக்கும் காட்சியும் ரசித்தேன்.
------------------------------------------------------------------------------------------
குட்டி.
ஏற்கனவே, வேறு ஒருத்தரை காதலித்த பெண்ணை... அன்பால் தன் பக்கம் ஈர்க்கும் படம்தான் குட்டி.
சிறு சிறு அரவணைப்புக்கள் எவளவு பெரிய உள மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதைக்காட்டிய படம்.
சிறப்பாக இயக்கப்பட்டிருந்தது.  

பிடித்த காட்சி...
திருமணத்திற்கு தயாராகவுள்ள... ஸ்ரேயாவிடம் தனது காதலின் நிலையை சொல்லும் தனுஷின் நடிப்பு மிகச்சிறப்பாக இருந்தது.
இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்...
ஹீ..ஹீ... ஒரு நகைச்சுவைப்படத்தை நன்றாக ஜோசித்து கொவ்போய் வரலாற்றுப்படமாக தந்திருந்தார்கள்.
ஏற்கனவே வந்த மொழிமாற்றுப்படமான "குயிக் கன் முருகன்" படத்தை விட மிகவும் நகைச்சுவைமிக்க படம் இது.
------------------------------------------------------------------------------------------
இவை தவிர... சிக்கு புக்கு, பாணா காத்தாடி, பையா, ஆயிரத்தில் ஒருவன், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம். படங்களும் இருந்து பார்க்க கூடியதாக இருந்தது.  
------------------------------------------------------------------------------------------
டொரன்ட்ஸ் ஃபைல் ஒவ்வொன்றினதும் இணைக்கப்பட்டுள்ளது. தரமானவையாக டவுன்லோட்பண்ணலாம் :).
------------------------------------------------------------------------------------------
இந்த படங்களைத்தவிர பல நல்ல படங்களை நான் பார்க்காமல் விட்டிருக்ககூடும்...  நீங்கள் நல்லதென கருதுவதை தந்து உதவவும்.

------------------------------------------------------------------------------------------Sunday, 19 December 2010

3 அருமையான மென்பொருட்களும் + ஒரு அருமையான எழுத்துருவும். :) (இலவச மென்பொருட்கள்)

இலவச மென்பொருட்கள்
-------------------------------------------------------------------------------------------
Portable Particle Illusion Full v3.0.4.1

வீடியோ எடிடிங் செய்பவர்களுக்கு... Particle இன் பயண்பாடு தெரிந்திருக்கும். அழகான மின்மினி, மின்னல், தீ பொறிகளை ஏற்படுத்துவதற்கு இது உதவும். Adobe After effets இல் இந்த இஃபக்ட்களை செய்வது சற்றுக்கடினம். அதற்குத்தீர்வாக இந்த மென்பொருள் மைந்திருக்கிறது. மிக இலகுவாக எவரும் பயண்படுத்ததக்க மென்பொருள் இது.
போர்ட்டபிள்தான்... இன்ஸ்ரோல் பண்ணத்தேவையில்லை. பயண்படுத்திப்பார்க்கவும்.

அளவு...  : 145.02 MB
லிங்ஸ்...
http://hotfile.com/dl/74198388/86e7138/Portable.Particle.Illusion.Full.v3.0.4.1.rar.html 
http://www.fileserve.com/file/PVp3fms/Portable.Particle.Illusion.Full.v3.0.4.1.rar-------------------------------------------------------------------------------------------
Portable All Office Converter Platinum v6.4

பல நேரங்களில்... வேறு கணனிகளை நான் பயண்படுத்தும் போது... நான் ஒரு ஃபோர்மேட்டில் ஃபலை வைத்திருப்போம்... அதை ஓபின் பண்ணிக்காட்டுவதற்கு கணனியில் மென்பொருட்கள் இருப்பதில்லை. அந்த நேரத்தில்... இருக்கும் மென்பொருளுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக்கொள்ள உதவும் மென்பொருள் இது. போர்ட்டபிள்தான்... யூ.எஸ்.பி யில் கொண்டு சென்று பயண்படுத்தலாம்.

மாற்றத்தக்க ஃபோர்மேட்கள்...
Word (doc, docm, docx), Excel (xls .xlsx.xlsm) ,PowerPoint (ppt, pptc, pptm), PDF, XLS, RTF, TXT, HTM/HTML, Website, JPG, BMP, GIF, TIF, WMF, EMF, TGA, RLE, PNG etc.
அளவு... :10,41 Mb
லிங்ஸ்...
-------------------------------------------------------------------------------------------
Burn4Free CD & DVD 5.2.0.0 ML Portable

சில கணனிகளில்... CD Burners இருப்பதில்லை அல்லது Nero போன்றவற்றை பதியாமல் பாவித்து காலவதியாகி இருக்கும். அந்த நேரங்களுல்... இன்ஸ்ரோல் பண்ணாமலே இலகுவாக பயண்படுத்தக்கூடிய மென்பொருள்தான் இது.

அளவு... : 5.5 Mb
லிங்ஸ்...

-------------------------------------------------------------------------------------------
Christmas Alphabet

இது டிஸைனர்ஸ்களுக்கான டெம்லேட் எழுத்துருக்கள்...  கிறிஸ்மஸை முன்னிட்டு கார்ட்கள் டிசைன்பண்ணுபவர்களுக்கு உதவக்கூடும். 26 PNG ஃபைல்கள் உள்ளன.

அளவு.. : 62.58 MB
லிங்ஸ்...

-------------------------------------------------------------------------------------------
எனது நண்பர்களின் (RHn Crew) முதலாவது வீடியோ பாடல்...

பதிவைப்பார்வையிடும் நண்பர்களே... இதை, பார்த்து உங்கள் கருத்துக்களை தெருவியுங்கள்.
நேரடியாக அவர்களை தொடர்பு கொள்வதென்றால்... புளொக்கின் மேல் மூளையில் உள்ள "எந்தன் காதலே..." விளம்பரத்தை பார்வையிடவும்.

-------------------------------------------------------------------------------------------

Saturday, 18 December 2010

பறக்கும் தட்டுக்களின் சுவடுகள்... (படங்கள் * ஏலியன்ஸ்)

பரிமாணங்கள் 13
-------------------------------------------------------------------------------------------

இன்றைய பதிவு சம்பவங்களுக்குப்பதிலாக... படங்களுடன் போடப்பட்டுள்ளது.
உலகயுத்ததின் போது... ரஸ்ய அமெரிக்கப்படைகளால் யுத்த தந்திரமாக மேற்கொள்ளப்பட்டதே இந்த பறக்கும் தட்டு என்ற ஒன்று... எனும் கருத்து சிலரிடம் உண்டு. அவர்களது கருத்து பொய்... அதற்கும் முதலே... பறக்கும்தட்டுக்கள் பற்றிய பல பதிவுகள் இருந்திருக்கின்றன என்பதற்கு உதாரணமாக இந்த பதிவு.

-------------------------------------------------------------------------------------------
இந்தப்படம்... ஆபிரிக்க கண்டத்திலுள்ள தன்ஷானியா (
நாட்டுக்குகை ஓவியங்கள்.
29 000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
(1) முதலாவது படத்தில்... வானில், இரண்டு பறக்கும் தட்டுக்களை ஒத்த தெளிவான ஓவியங்கள் குகைச்சுவர்களில் வரையப்பட்டுள்ளது.
(2) இரண்டாவது படத்தில்... ஒரு பெண்ணை வேற்றுவாசிகள் (?) சூழ்ந்துகொள்வதுபோல் வரையப்பட்டுள்ளது.

-------------------------------------------------------------------------------------------

(3) இந்த படங்கள் ஃப்ரான்ஸின்... "Pech Merle "  எனும் குகையின் சுவரில் வரையப்பட்ட ஓவியங்கள். கிறிஸ்துவுக்கு முன்.. 17 000 தொடக்கம் 15 000 ஆண்டுகளுக்குட்பட்டது. இதில், பல பறக்கும் தட்டுக்கள் வரையப்பட்டுள்ளன.
இதில் உள்ள மனித உருவம் ஏலியன்ஸாக அல்லது... ஏலியன்ஸ் மனிதனுடன் தொடர்புகொள்வதைக்காட்ட வரையப்பட்டுள்ளது.

-------------------------------------------------------------------------------------------
(4) இந்தப்படங்கள்... தஷிலி (
, கிறிஸ்துவுக்கு முன் 6 000 ஆண்டை சேந்தது. இதிலும் பறக்கும் தட்டுக்களின் அடையாளங்கள் இருக்கின்றன. வரையப்பட்ட உருவமும் வித்தியாசமானது.

-------------------------------------------------------------------------------------------
(5) இது மெக்ஷிகோ (
Querato, Mexico)
 குகை ஓவியங்கள். 7 000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. 
இதில் 4 மனித உருவங்களும்... அதற்கு மேலாக, ஒரு பெரிய பறக்கும்தட்டை ஒத்த வடிவமும் வரையப்பட்டுள்ளது. மனிதன் அவர்களுடன் தொடர்புகொண்டான் அல்லது கண்டு வியந்தான் என்று வேறு வேறு தகவல்களை தருகிறது இந்த ஓவியங்கள்.

-------------------------------------------------------------------------------------------
(6) இது அவுஸ்ரேலியாவில் 5000 வருடங்களுக்கு முன்னர் வரையப்பட்டதாக கருதப்படுகிறது.
நடுவில் ஆண்,பெண் மனித உருவங்களும்... அவர்களைச்சூழ ஏலியன்ஸின் முகங்களும் வரையப்பட்டுள்ளது.
ஏலியன்ஸிடன் உதவி பெற்றதைக்குறிக்கலாம் எனக்கருதப்படுகிறது.

-------------------------------------------------------------------------------------------
(7) இந்த குகை ஓவியங்கள் Sego Canyon , Utah. வை சேந்தது.... இங்குள்ள பல ஓவியங்களின் உருவங்கள் மனிதனுக்கும் முரணானதாகவும்... ஏலியன்ஸிக்கு ஒத்ததாகவும் உள்ளதாம்.

-------------------------------------------------------------------------------------------

(8) இந்த பதிப்போவியங்கள்... 10 ம் நூற்றாண்டை சார்ந்தவை, ஜப்பானிய மியூஸியத்தில் அறியப்பட்டது.  "பிராஜ்ஜபரமித்த சூட்ரா (Prajnaparamita Sutra) " என அறியப்பட்ட இந்த ஓவியத்தில்... இந்திய பிராக்மி எழுத்துக்களாள் எழுதப்பட்டுள்ளது. இவை, இராமயாணத்தை பற்றி கூறுகிறதாம்... அதுவும் இந்த பக்கத்தில், இராவணனின் புஷ்பக விமானம் பற்றி கூறப்பட்டுள்ளது என அறியப்பட்டுள்ளது. அந்த பக்கத்தை பெரிப்பித்து பார்க்கையில், இரண்டு பறக்கும்தட்டுக்களின் உருவங்கள் தெளிவாக வரையப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------
(9) இது 
"The Madonna with Saint Giovannino".
... 15 ம் நூற்றாண்டில் பலஷோ என்பவரால் வரையப்பட்ட புகழ்மிக்க ஒவியம். இதில்... மேரியின் வலப்பக்க மேல் மூலையில் ஒரு பறக்கும் தட்டை சார்ந்த உருவம் வரையப்பட்டுள்ளது. அதன் கீளேயே... ஒரு மனிதன் தனது நாயுடன் அந்த பறக்கும்தட்டு உருவத்தை பார்ப்பதுபோன்று தீட்டப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------
(10) ஹம்பேர்க், ஜேர்மனியில் நடந்த சம்பவத்தை பின்னனியாக கொண்டு தீட்டப்பட்ட படம். 1697 Nov 4  அன்று நடந்திருக்கிறது. இதில் வானில் இரண்டு பெரிய சக்கரங்கள் போன்ற அமைப்பு இருப்பது போன்று வரையப்பட்டுள்ளது. கீழே... பலர் நின்று பார்ப்பதுபோன்று உள்ளது. ஆகவே... அது தனி ஒருவரின் பொய் அல்ல எனலாம்.
-------------------------------------------------------------------------------------------
ஆர்வமுள்ளவர்கள்... மேற்படி லிங்களை கிளிக் பண்ணி படங்களின் முழுவிபரத்தை அறிந்து கொள்ளுங்கள். :)
-------------------------------------------------------------------------------------------

எனது நண்பர்களின் (RHn Crew) முதலாவது வீடியோ பாடல்...

பதிவைப்பார்வையிடும் நண்பர்களே... இதை டவுண்லோட் செய்து, பார்த்து உங்கள் கருத்துக்களை தெருவியுங்கள்.
நேரடியாக அவர்களை தொடர்பு கொள்வதென்றால்... புளொக்கின் மேல் மூளையில் உள்ள "எந்தன் காதலே..." விளம்பரத்தை பார்வையிடவும்.

-------------------------------------------------------------------------------------------

Friday, 17 December 2010

ஏலியன்ஸிக்கு விட்ட தூது சமிக்ஞை... ( ஏலியன்ஸ் *பரிமாணங்கள் 12)

பரிமாணங்கள் 12
-------------------------------------------------------------------------------------------
ஏலியன்ஸ் சம்பந்தமான பதிவில்... புதிய தகவல்களைத்தருமாறு கேட்டிருந்தார்கள். இன்னமும் நான் தேடிப்பெறவில்லை... பெற்றபின் புதிய/சமீபகாலத்தகவல்களைத்தருகிறேன்.
-------------------------------------------------------------------------------------------

இப்போது... போனபதிவில் குறிப்பிட்டிருந்ததுபோல்... நாங்கள், பிரபஞ்சத்தில் வேற்று உரினங்கள் இருக்கின்றனவா... இருந்தால் தொடர்பு கொள்வதற்காக அனுப்பிய சமிக்ஞையையும் விளக்கத்தையும் பார்ப்போம்.

உக்ரைனிலி இருக்கும் ரேடியோ டெலஸ்கோப் மூலம்... 1999 இலும் 2003 இலும் பிரபஞ்சத்தில் வேற்று உயிரினங்கள் இருந்தால்... எமது இருப்பை அவர்களுக்கு உணர்த்தும் வகையில் செய்தி சமிக்ஞையாக அனுப்பப்பட்டது...
இது தான் அந்த செய்தி...

இந்த செய்தியில்..
கணிதக்குறியீடுகள்...
இதுவரை கண்டறியப்பட்ட மூலக்கூறுகள்... முக்கியமானவற்றின் சேர்க்கை...
கலப்பிரிவு... ( அடிப்படை உயிரினமான அமீபாவின் தோற்றம்.. )
டி.என்.ஏ அமைப்பு...
மனித உடற்கட்டமைப்பு..
புவியியல் அமைப்பு... நில அமைப்பு...
மற்றும் சமிக்ஞை அனுப்பப்பட்ட முறை உள்ளடங்களாக பல தகவல்கள் இருக்கின்றன.

கூர்ந்து அவதானித்தால்... எவருக்கும் விளங்குமாம் இந்த குறியீடுகள்.
-------------------------------------------------------------------------------------------

-------------------------------------------------------------------------------------------
ஆனால், இதுவரை ஏவப்பட்ட இந்த சமிக்ஞைக்கான பதில்கள் வெளியிலிருந்து கிடைக்கவில்லை.
ஒன்று... இந்த தகவல்கள் இன்னமும் வேற்று உயிரினங்களை சென்றடையவில்லை... அவர்களால் இதை உணரமுடியவில்லை.. அதாவது எமது பரிமாணங்களுடன் அவர்கள் ஒத்துப்போவதில்லை... என்ற முடிவுக்கே வரலாம். மாறாக.. உரினங்கள் இல்லை என்ற முடிவுக்கு வர முடியாது. 
காரணம், இந்த சமிக்ஞை இன்னமும்... அண்டவெளியில் பயணித்துக்கொண்டுதான் இருக்கிறதாம்... விரிவடைந்துகொண்டே இருக்கும் இந்த பிர பஞ்சத்தில்... எங்கோ ஒரு நாள்.. எமது பரிமாணத்தை ஒத்துப்போக்கக்கூடியர்களிடன்ம்... இந்த தகவல் சென்றடையும் என்ற நம்பிக்கையுடனேயே இந்த நீண்ட காலத்திட்டம் நடைமுறையில் உள்ளது.
-------------------------------------------------------------------------------------------

இந்த பதிவுடன்... 
பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே.. ஏலியன்ஸ் தொடர்பான செய்திகள் உலகில் நடந்துள்ளன... சில தரப்பினர் சொல்வதுபோல்... அது உலகயுத்தத்தில் நடைபெற்ற அமெரிக்க ரஷ்ய யுத்த தந்திரம் அல்ல... என்பதை நிரூபிப்பதற்காக ஆராயப்பட்ட படங்களை போட இருந்தேன்... பதிவு மிக நீளமாகிவிடும் என்பதால்... போட வில்லை... அடுத்த பதிவிலேயே.. போட்டுவிடுகிறேன். :)

சமிஞையின் கடைசிப்படம்... 6 வது பக்கமா என்பது தெளிவில்லாமல் இருக்கிறது... தெரிந்தவர்கள் உறுதியாக சொல்லவும்.

பதிவு பிடித்திருந்தால் வோட் போடவும்... அல்லது, கொமென்ட்ஸில் சொல்லவும் காரணம் / பிழைகளை.
-------------------------------------------------------------------------------------------

Tuesday, 14 December 2010

தமிழச்சியும் ஃபேஸ்புக்கும்... :@

இந்த கூத்துக்கு என்ன தலைப்பு வைக்கிறதென்றே தெரியவில்லை... 
:@
------------------------------------------------------------------------------------------
தமிழச்சி...
பொதுவாக இவாவை, இணையத்தில் புளொக்களை பார்வை இடும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். பெரியாரின் கருத்துக்களையும்... வேறு சிலரின் முன்னோடிக்கருத்துக்களையும் இணையத்தினூடு சமூகத்துக்கு எடுத்துரைப்பவர்.
இவரின் இணையத்தளப்பக்கத்தை முதல் முதலில் தட்செயலாக பார்த்த போது... தனது படங்களை சைட்டில் ஸ்லைட் ஷோவாக போட்டு இருந்ததை கண்டு, புகழுக்காக செய்கின்றாவென எண்ணினேன். பிறகு, அவாவின் இணையப்பக்கத்திற்கு அதிகம் செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மற்றும், வாசித்த முதலாவது ஆர்ட்டிக்கலும் எனக்கு அவளவாக பிடித்திருக்கவில்லை...

2 மாதங்கள் முன்பாக... எனது நண்பர் ஒருவர், ஃபேஸ்புக் ஃபான் பேஜ் ஒன்றை அனுப்பி இருந்தார்... அது தமிழச்சியுடையதுதான்... நானும் இணைந்தேன்...

ஃபான் பேஜ் சமூக சேவைக்கானது என காட்டிக்கொண்டாலும்... அங்கும் அவாவின் படங்களைக்காணக்கூடியதாக இருந்தது (இது அவரின் விருப்பு வெறுப்பு... அதை நான் குற்றம் சொல்லவில்லை. )

அவாவின் கருத்துக்கள் ஒவ்வொரு தடவையும், ஃபேஸ்புக் ஹோம் பேஜ்ஜில் வரத்தொடங்கியதும்.... நானும் வாசித்தேன்... சில கருத்துக்கள் ஒத்துப்போவதாக இருந்தது... அவரின் கருத்துசார்பாகவும், எனது சுய கருத்தையும் கொமெண்ட்ஸாக‌ கொடுக்க ஆரம்பித்தேன்... அதற்கு அவாவின் பதிலளிப்பு முறையில் இருந்து என்னால் ஊகிக்க முடிந்தது... அவா சுயமான சிந்தனையுடன்... நடைமுறை சமூகத்துக்கு ஏற்றவாறு இல்லாமல், பெரியார் சொன்னதுகளை மட்டுமே கருத்தில் கொண்டு ஒரு கட்டுப்பட்ட கோட்பாட்டிலே இயங்குகிறா என.
காரணம், நான் போட்ட கருத்துக்களுக்கு...  அடைப்புக்குறியினுள் சில தகவல்களைத்தந்துவிட்டு பெரியார் எந்த நாள் எங்கே சொன்னார் என்று போடுவா... ஆனால், எதிர்கருத்து போடுமிடத்து, அதற்குரிய விளக்கம் போடுவதில்லை... கேள்விகளாக கேட்டால் கூட பதில் இல்லை.. "லைக்" மட்டும் போட்டுவிட்டு வேறு ஒரு கருத்தை ஸ்ரேட்டஸாக போடுவா... சில வேளைகளில் நான் போட்ட கொமென்ட்ஸிம் காணாமல் போய்விடும். ( இத்தனைக்கும்... இரட்டை அர்த்த வசனங்களில் அவருக்கு சார்பாக போடப்பட்ட அல்லது குசும்பாக போடப்பட்ட பின்னூட்டங்கள் அப்படியே இருக்கும். )

ஒரு முறை ஏதோ,  ஈழம் சம்பந்தமாக நடைமுறை சாத்தியமே அற்ற விடையத்தை போட்டிருந்தார்... குறிப்பிட்ட நாளிலேயே... தனது படத்தைப்போட்டு "கருத்துக்கும் உருவத்துக்கும் ஒற்றுமை தேவையா?" எனும் பொருள் பட எவரோ ஒருவர் இவரின் புகைப்படத்தை கிண்டல் பண்ணிய காரணத்தினால் போலுஇம்.. ஸ்ரேட்டஸ் போடப்பட்டது.
அந்த அன்றே... நான் எனது கருத்தை பதிவு செய்துவிட்டு...
"சமூக சேவை என்று இயங்குகிறீர்களே... ஏன், ஃபான் பேஜ்ஜில் எமது சுய கருத்தை போட அனுமதிப்பதில்லை?" என்று கேட்டேன்... அதற்கு பதிலாக " நிர்வாணப்படங்கள் போடுகிறார்கள்... வேறு ஒன்றுமில்லை.." என பதிலளித்தார். நான் மொபைலில் இருந்ததால்.. தமிழில் டைப் செய்ய முடியாத காரணத்தினால்... ஒன்றும் கூறவில்லை.

ஆனால்,
2 நாட்களுக்கு முன்னர்...
 "அடிச்சா திருப்பி அடிப்பேன்டா" - அடிவாங்கறவன் ஈழத்திலே,  வசனம் பேசறவன் தமிழகத்திலே..." என்று போட்டிருந்தார்... இது என்னால், ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை... ( இது போன்று பல கருத்துக்கள் ஈழத்தை வைத்து பிழைப்பு நடத்துவதாக இருக்கின்றது. )
நாங்கள் இப்போது தோற்றுவிட்டோம் என்பதற்காக... நாங்கள் அடிவேண்டுவதாக கூற யாருக்கும் தகுதி இல்லை...
தருவதை வாங்கிக்கொண்டு இருக்காமல்... எமக்கு முழு சுதந்திர உரிமை வேண்டும், நாம் வாழ்ந்த மண் எமக்கு உரிமை உடையதாக வேண்டும் என்றே இழக்க இழக்க மீண்டும் மீண்டும் போராடினோம்... சந்தர்ப்ப சூழ் நிலைகளும், பச்சோந்தி தனங்களும் இன்று எம்மை முடக்கிவிட்டன... அதற்காக நாங்கள் அடிவாங்கின்கொண்டிருப்பவர்கள் அல்ல... என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இது சம்பந்தமாக என் போன்ற ஈழத்தமிழர்களின் சொந்த கருத்தை கூறுவதற்காகவும்... மற்றையவர்களின் மாற்றுக்கருத்தை கூறுவதற்காகவும்...
ஃபேஸ்புக்குல்... ஃபான் பேஜ்ஜில், உறுப்பினர்களாக இருப்பவர்கள் கருத்தை தெரிவிக்கும் ஒப்ஸனை திறந்துவிட கோரினேன்.... ( படங்கள், வீடியோ லிங்கள் இல்லாமல்... கருத்தை மட்டும் பகிர்ந்து கொள்ளத்தக்க வழிமுறை இருப்பதை சுட்டிக்காட்டினேன்.) ஆனால், நான் போட்ட கொமென்ட உடனடியாக அழிக்கப்பட்டு விட்டது... ( எனக்கு மட்டும் அல்ல... பலருக்கு இதே நிலை நடந்திருக்கின்றது.. )
ஏன்... எங்களுக்கு கருத்தை கூற உரிமை இல்லையா? அல்லது அவா போன்றவர்களால் பதில் அளிக்க முடியாதா?
ஆனால், எமது ஈழப்பிரச்சனையை வைத்து... தாங்கள் மட்டும் பிளைப்பு நடத்துவார்களாம்... 
சாதாரண ஃபேஸ்புக் ஃபான் பேஜ்ஜிலேயே ( அதுவும் தமிழர் ஒருவர்ன் நடாத்தும் பேஜ் )... எங்களது உரிமையான கருத்துக்களை தெரிவிக்க முடியவில்லை என்றால்... பிறகு என்னத்துக்கு... சிங்களவங்கள பேசனும்???

இப்போது, நான் ஆரம்பத்திலேயே நினைத்தது போனறு... இவர் தனது புகழுக்காகத்தான் இயங்குகிறார் என்று என்னால் முடிவே பண்ண முடிகிறது.
நீங்கள்... இவ்வளவு நாளா என்ன செய்தீர்கள்? என்ற ஒருவரின் கேள்விக்கு... 22 000 மெம்பர்ஸ் (உண்மையில் 17 000) சேர்த்தாவாமாம்... இதுவா ஒரு சமூக சேவகரின் பதில்?
22 000 என்ன 100 000 கூட சேக்க முடியும் இவாவால்... ஏனென்றால்... தமிழ் பெண்கள் எழுதுவது குறைவு... இவா படமும் போட்டு எழுதும் போது... ஜொல்லு விடுவதற்கு ஒரு கூட்டம் எப்போதுமே தயாராகத்தான் இருக்கும். சமூகத்துக்கு சவுண்ட் கொடுப்பதை தவிர என்ன செய்தார் என்பதுதான் முக்கியம்.

ஒரு தனிப்பட்ட பதிவரைப்பற்றி எழுதக்கூடாது என்றிருந்தேன்... இன்று எழுதும் நிலை ஏற்பட்டுவிட்டது...
ஈழத்தமிழனை வைத்து புகழுக்காக பிளைப்பு நடத்துவதை பார்த்திட்டு இருக்கமுடிகிறதில்லை.
ஏற்கனவே... அரசியலுக்காக கருனா நிதியும்....
குடும்பத்துக்காக சோனியாவும்....
சீனா இலங்கைக்கு உதவி, இலங்கையை கொன்றோலுக்குள் வைத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக றோவும்...
எங்களை வைத்து விளையாடிவிட்டார்கள்..
கண்டவரும்... யூஸ்பண்ணிட்டு துப்பிட்டு போக நாங்கள் ஒன்றும் சுவிங்கம் இல்லை...

இதை எழுதும் எனக்கு... ஈழப்போராட்டம் தொடர்பாக என்ன தெரியும் என்று கேக்கலாம்...

நானும் ஈழத்தில் பிறந்தவன்தான்... யுத்த காலத்தில் அங்கு வாழ்ந்தவன்... சனம் இடம் பெயர்ந்து செல்வதை நேரடியாக கண்டவன்... பலரது இழப்புக்களை பக்கதிலிருந்து கேட்டவன்... எனக்கு உரிமை உண்டு.

நேரடியாக நான் யுத்தத்தால் பாதிக்கவில்லை...

ஆனால், இன்றும் 7 பேரடங்கிய குடும்பம்... பிரிந்து எங்கெங்கேயோ இருக்கிறது... ஒன்றாக இருந்து 17 வருடங்கள் போய்விட்டது (3வயசில் இருந்தேன்.. )... எனக்கும் பேசுவதற்கு உரிமை உண்டு.

ஸைட் இஃபக்டாவே எங்களுக்கு இப்படி என்றால்... ஜோசியுங்கள் நேரடியாக இழப்பை சந்திதவர்களது மன நிலையை...
சும்மா... வெறும் பேச்சுக்காகவும், ஆரோ சொன்னதை கேட்டும் எம்மை பற்றி பேசி... பிளைப்பு நடத்த வேண்டாம். உதவ முடியாட்டியும்... இதை வைத்து சுய பேருக்காக கேவலமான பிளைப்பு நடாத்த வேண்டாம்.

கருத்து சுதந்திரத்தையாவது நாங்கள் பேணவேண்டும்.

எனது வலைப்பதிவு சிறிய அளவிலானது எனினும்...
பட விமர்சனங்களுக்கும்... சில அமூக பதிவுகளுக்கும் என்னை திட்டி கொமென்ட்ஸ் வந்ததுண்டு.... அவற்றை நான் அழித்ததில்லை... ( தகாத வார்த்தை பிரஜோகங்களை கூட... "*****" பண்ணி மற்ற கருத்துக்களை விட்டிருக்கிறேன். )
அப்படித்தான் பல பதிவர்கள் இயங்குகின்றனர்... கருத்துக்களை கூறவிட வேண்டும்... அது தான் நாகரீகம்.
------------------------------------------------------------------------------------------
இது போன்ற சமூக பக்கங்களே...  எமது கருத்துக்களை உள்வாங்குகிறார்கள்...
------------------------------------------------------------------------------------------
இது இப்போது.. இறுதியாக நான் பார்த்தது... இப்படி மிக முக்கியமான சமூக கருத்துக்களை கூறும்போது... இவா சொன்னது போல்... 17 000 என்பது பெரிய விடையமல்ல... 
------------------------------------------------------------------------------------------
கருத்துக்கேட்டா... மிரட்டுறாவாம்... நாகரீகமானவா... :P

------------------------------------------------------------------------------------------

Monday, 13 December 2010

ESP உம் எலியும்... ( ESP * மூலையும் அதிசய சக்தியும்* )

-------------------------------------------------------------------------------------------
பதிவு எழுதிய ஆரம்பகாலங்களில்... மூளையும் அதிசய சக்திகளும் , கனவும் நனனும் என்று இரண்டு தொடர்பதிவுகள் எழுதி இருந்தேன்... பின்னர், தற்காலிகமாக நிறுத்தி இருந்தேன்...
மூளை தொடர்பான மேலும் சுவாரஷ்யமான பல விடையங்களை மீண்டும் உங்களுன்டன் பகிர்ந்து கொள்வதற்காக இந்த பதிவினை ஆரம்பிக்கிறேன்...
-------------------------------------------------------------------------------------------
மூளை தொடர்பாக பேச முனையும் போது.... இ.எஸ்.பி பற்றி கட்டாயம் பேசியே ஆக வேண்டும்... முன்னைய பதிவுகளிலும் கொஞ்சம் எழுதி இருந்தேன்...
சாதாரண மனிதர்களுன் மூளையின் உணர்திறனுக்கு அப்பாற்பட்டவை இந்த "ESP (Extrasensory perception) "  என இனங்காணப்படுகிறது.
இந்த ESP இலும் பலவகையான உட்பிரிவுகள் இருக்கின்றன...
இறந்த கால்த்தை சொல்பவர்கள்...
எதிர்காலத்தை சொல்பவர்கள்...
நிகழ்காலத்தில் நட்பபவற்றை சொல்பவர்கள்...
மற்றும்... பெளதீக விதிகளை மீறி செய்கைகளை செய்து காட்டுபவர்கள்... (இதில் பல உட்பிரிவுகள் சக்தியின் அளவைப்பொறுத்து உண்டு)...

முதல் இரண்டு பிரிவுகளையும் (இறந்தகாலம் , எதிர்காலம்)... "டைம் ஸ்லிப்" எனப்படும் ஒரு தனிப்பிரிவுடனும் ஒப்பிட முடியும்... அது சம்பந்தமாக பின்னர் பார்க்கலாம்....
இப்போது... அடிப்படையில் நாம்... மூளையை தூண்ட எம்மை அறியாமல்... என்ன என்ன செய்கின்றோம் என்பதை பார்ப்போம்...
-------------------------------------------------------------------------------------------
உதாரணமாக...
நாம் கணக்கு அல்லது ஏதாவது பயிற்சிகள் செய்துகொண்டிருக்கும் போது... செய்யும் முறை நினைவு வராதவிடத்து... பேனாவால்... நெற்றிப்பக்கத்தில் இலேசாகத்தட்டுவதுண்டு (அல்லது விரலால் ஏதோ செய்வோம்.)...  அதன் பின்னர், பல வேளைகளில் செய்முறை நினைவுக்கு வந்துவிடும்...

இன்னொரு உதாரணத்துக்கு...
பாடசாலைகளில்... மாணவர் ஒருவர் விடை சொல்லத்தடுமாறும் போது, ஆசிரியர் காதைப்பிடித்து திருகுவார் (இதில் சிலர் கொலைவெறித்தனத்தையும் காட்டி விடுவார்கள் :D )... பின்னர் ஏதோ அரை குறையாக மாணவன் விடையை கிட்டத்தட்ட சொல்லுவான்...

இந்த இரண்டு உதாரணங்களிலுமே... நடப்பது மூளையைத்தூண்டும் செய்கைதான்...
மூளைக்குப்போகும்... இரத்த நரம்புகளில் சிறு மின்னதிர்வை ஏற்படுத்தும் முறைதான் இது... அந்த அதிர்வுகள் மூளையில் முன்னர் சேமிக்கப்பட்ட நினைவுகளை மீட்டுக்கொடுக்கின்றன...  இதை அறியாமலே நாம் இந்த முறைகளைப்பின்பற்றி வந்திருக்கின்றோம்... :) ( அது எப்படி?... இதற்குரிய ஜோசனை... பின்னர் வர உள்ள பதிவுகளில் வரும்.. :) )
-------------------------------------------------------------------------------------------
இப்போது... நான் குறிப்பிட்டது போன்று... மூளையில் மின்னதிர்வை ஏற்படுத்துகையில் புத்துணர்வு பெறும், என்ற கருத்தை நிரூபிப்பதற்கு ஆய்வுகளும் செய்யப்பட்டுள்ளது...

சில எலிகளின்... மூளையின் குறிப்பிட்ட பகுதியில், மிகச்சிறிய ஒரு மின் தகட்டை பொருத்தி... மறுமுனையை தயார்ப்படுத்தப்பட்ட மின்கல மிதியுடன் பொருத்தினார்கள்...
எலிகள், அந்த மிதியை மிதிக்கும் போது... மூளையில் மெதுவாக மின் பாய்ச்சப்பட வேண்டும் என்பதே நோக்கம்...
பரிசோதனை எலிகள் அந்த கூண்டினுள்... பல இடங்கள் இருக்கும் போது;  மறுபடியும் மறுபடியும் அந்த மிதியிலேயே அவை ஏறிக்கொண்டிருந்தன...
இதிலிருந்து, மின் பாய்ச்சப்படும் போது... உணவைக்கூட கவணிக்காது... 24 மணி நேரமும்...எலிகள் வித்தியாசமான ஒரு உணர்வை பெற்றிருக்கின்றன... அதுதான், மீண்டும் மீண்டும் ஏறின என்ற முடிவுக்கு வந்தார்கள்.

ஆகவே, மூளையில்... பல சக்திகள் பொதிந்துள்ளன என்ற உண்மை உணர்ப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------
விஞ்ஞான மருத்துவப்படியும்...
4 பில்லியன்ஸ் செல்கள் மூளையில் இருக்கின்றன... ஆனால், நாம் அதில் 10% ம் கூட பயண்படுத்துவதில்லை... ( விஞ்ஞானிகளுக்கும் சாதாரண படிக்காத மனிதனுக்கும் கூட 100 செல்களுக்குள் தான் வித்தியாசமாம். )
ஐன்ஸ்டைன் மேலதுகமாக 500 தொடக்கம் 1000 செல்களை பயண்படுத்தி இருப்பதாக கருதப்படுகிறது. ( ஐன்ஸ்டைனின் மூளையில், சாதாரண் மூளையை விட மடிப்புகள் அதிகம் என்பது தெரிந்ததே.. )

ஓ.கே... இனி நாங்கள், ESP மனிதர்களையும் அவர்களின் செய்கைகளையும் பார்க்கப்போகின்றோம்...
வரும் பதிவுகளில்... நம்மவே, முடியாத... பல பெளதீக மீறல்களையும், அதிசயங்களையும் பார்ப்போம்.

-------------------------------------------------------------------------------------------
ஒருவர்... திடீரன புவியீர்ப்பு விசையை மீறிப்பறந்தால் எப்படி இருக்கும்?
மாஜாயால படங்களில் வருவதுபோன்று... இருந்த இடத்திலிருந்த படியே, பொருட்களைத்தூக்க முடியுமா? 
போன்ற வினாக்களுக்கு... உதாரணமான சம்பவங்களையும்... மேலும் பல, வரலாற்று ஒப்பீடுகளையும் பார்ப்போம்... :)
-------------------------------------------------------------------------------------------

LinkWithin

Related Posts with Thumbnails