Total Pageviews

Thursday, 6 May 2010

2012!!! உலகஅழிவு!!! எல்லாம் பொய்!!!

---------------------------------------------------------------------------------
பரவலாகப்பேசப்பட்டு தற்போது... அடங்கிப்போயிருக்கும் 2012 ஐப்பற்றி, எனக்குத்தெரிந்தவற்றைக்கொண்டு ஒரு பதிவை எழுதுகிறேன். ( குட்டையை குழப்பத்தான்...:) )

அவ்... பதிவை எழுதிட்டுதான் பார்த்தேன்... ஓவர் பெருசா இருக்குது...
அனா, இதுக்குமேல சுருக்கமா எழுத ஏலாது...  :(
பொறுமையாக வாசிங்க‌... :P

---------------------------------------------------------------------------------
2012 உலக அழிவு என்றதுமே...
அனைவரும் "மாயன்" களின் நாற்காட்டியைத்தான் முக்கியமாக குறிப்பிடுகிறார்கள். அதனால், நானும் அதிலிருந்தே ஸ்ரார்ட் பண்ணுகிறேன்.

மாயன்கள் என அழைக்கப்படும் சாம்ராஜ்ஜம்...

எகிப்திய நாகரீகம் நிலவிய காலப்பகுதியில், தென்னமெரிக்க (?) பகுதியில் வாழ்ந்த... உயர்ந்த நாகரீகத்தையுடைய மக்கள் கூட்டமாகும். அவர்களால் உருவாக்கப்பட்ட கலண்டர் (?) உலகின் பல முக்கிய சம்பவங்களை எதிர்வுகூறத்தக்கதாக இருந்ததுடன், நவீன கலண்டருக்கு மிகவும் ஒத்துப்போகக்கூடிய ஒன்றாகவுமுள்ளதாம்.
(அப்போதைய காலத்தில் என்னென்று இவ்வளவு துள்ளியமாக நாற்காட்டியை வடிவமைத்தார்கள், என்பது இன்னமும் விளங்கமுடியாத புதிராகவே இருக்கிறது. அதுக்கு லெமூரியா பதிவில் சில காரணங்கள் சொல்லியிருக்கிறேன். :) )

சரி... இந்த மாயன்களுக்கும் 2012 இக்கும் (உலக அழிவுக்கும்) என்ன சம்பந்தம் என்பதை பார்ப்போம்...
மாயன்கலால் உருவாக்கப்பட்டு பாவிக்கப்பட்டதாக கருதப்படும் நாட்காட்டியில் இறுதி நாளாக 2012. 12. 21 குறிப்பிடப்பட்டுள்ளது. ( அதாவது அதோட கலண்டர் முடியிது.)
அதை முக்கியமாக வைத்துத்தான் 2012 ஓட உலகம் அழியப்போறதா சொல்லுறாங்க.
ஆனால், அதுக்கு பின்னரும் ஒரு வேறு நாற்காட்டி இருக்கலாம்... அது இன்னமும் ஆய்வாலர்களால் கண்டுபிடிக்கப்படாமலிருக்கலாம் என்றும்... ஒரு கருத்து உள்ளது. நானும் அக்கருத்தையே நம்புகிறேன்.
இன்னும் கண்டு பிடிக்காமல் எவ்வளவோ இருக்கும்போது... அதில இந்த கலண்டரும் இருக்காதா... :) )

( இதைப்பற்றி (மாயன் கலண்டர்) பலர் ஏற்கனவே பதிவு எழுதிவிட்டார்கள் என்பதால்... நான் விரிவாக ஒன்றும் எழுதவில்லை.)

நாங்கள்... இந்த பதிவில் வேறு என்னவெல்லாம் காரணம் கூறப்படுகிறது என்பதைப் பார்ப்போம்...

முதலாவதாக... மாயன் நாகரீகம் நிலவிய காலத்தில் நிலவிய எகிப்திய நாகரீகத்தில் இது பற்றி எதாச்சும் இருக்கா என்று பார்த்தால்.... இருக்கிறது....

எகிப்திய பிரமிட்களின் சுவர்களில்.... உள்ள சித்திர எழுத்துக்கள் பல... எதிர்கால உலக நிகழ்வுகளைப்பற்றியவையாம்.
எகிப்திய பிரமிட்டுக்கள் கி.மு 10000 ம் தொடக்கம் 5000 ஆண்டளவில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. அப்போதே அவர்கள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம்... பூமியின் விட்டமெல்லாம் அறிந்து வைத்திருந்திருக்கிறார்கள். (இது சம்பந்தமா ஒரு பதிவு போடனும்... அதுக்கு முதல் தொடங்கினதுகள முடிக்கனுமே... :( )
அவ்வளவு அறிவை அந்தக்காலத்திலேயே பெற்றிருந்தவர்களுக்கு... பூமியின் எதிர்கால மாற்றத்தை கணிக்கும் சூட்சுமமும் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.
அவர்களின் எழுத்துக்களை ஆராய்ந்ததின் படி... 2007 இக்கும் 2023 இக்கும் இடைப்பட்ட காலத்தில் பூமிக்கு ஒரு மிகப்பெரிய ஆபத்து உள்ளது என்பதை மட்டுமே தெளிவாக கூறக்கூடியதாக உள்ளதாம். :O
அந்த ஆபத்து என்னத்தால் ஏற்படப்போகிறது என்பதில்... பல மாற்றுக்கருத்துக்கள் உள்ளன... :\
யுத்தம் (3ம் உலகயுத்தம்.) , சுனாமி, நில நடுக்கம், பாரிய கண்டப்பெயர்ச்சி, கடும் வறட்ச்சி, தொடர் மழை, புயல்... என பல காரணங்கள் அந்த எழுத்துக்களுக்கு கற்பிக்கப்படுகின்றன.

ஆனா... ஒன்று மட்டும் உறுதியாக கூறப்படுது... ஆப்பு இருக்கு... :)

அடுத்ததாக... நான் வழமையாக குறிப்பிடும் பொரிக்ஷாவையும் இதுக்குள்ள‌ சேர்க்க வேண்டும்... ( புதுசா பார்க்க வந்தவங்க... "ஏலியன்ஸ்..." ," செவ்வாய்" பதிவுகளைப்பார்க்கவும்.,, அவற்றில் பொரிக்ஷா பற்றி கூறியுள்ளேன். :) )

செவ்வாயில் வாழ்ந்ததாக கூறிக்கொள்ளும் இச்சிறுவனும் 2012 தொடக்கம் 2025 இக்குள் பூமியி பாரிய ஒரு அழிவு (போர், இயற்கையழிவு) ஏற்படும்... அது மக்கள் எதிர்பார்ப்பதை விட பெரிதாகவிருக்கும்... என கூறியிருக்கிறான்.
இது எவ்வாறு உறுதியாக கூறமுடிகிறது என்றால்.... அவன் தாம் கால இயந்திரத்தை பயண்படுத்துமாற்றல் பெற்றிருந்தோமென விளக்கத்துடன் கூறுகின்றானாம்.
இச்சிறுவனை முழுவதுமாக நம்பாவிடினும்... இன்னமும் விஞ்ஞானிகளால் புறக்கணிக்கவும் முடியவில்லை. :|

அடுத்து... நொஸ்ராடாமஸ் ( தீர்க்கதரிசி ) சொன்னதை பார்த்தால்...
அவரின் கணிப்பின் படி... ஃபீக்கஸ் எனும் நட்சத்திரம்... ( 13வது ராசி) 2012 இல் தோன்றுகிறதாம். அதன் பலனாக பாரிய அழிவுகள் ஏற்படுமாம். ( இது சம்பந்தமாக நொஸ்ராடாமஸ் தொடரில் பார்ப்போம்... )
மேலும்... அவரது கணிப்புக்களின் படி... 3ம் உலகயுத்தம் இடம்பெறும்காலமாக 2007 தொடக்கம் 2023,30 என்று குறிப்பிட்டுள்ளார். (இது நொஸ்ராடாமஸ் இல் எழுதியுள்ளேன்.)
அவரின்... கருத்துப்படி...
"3ம் உலகயுத்தத்தில் கருவை அழிக்ககூடிய (அணு) ஆயுதங்களால் போர் கொரூரமாகும்... இந்த ஆய்தங்களின் தாக்கத்தால் கடல் அலைகள் 100 அடி உயரம் வரை எழும்... 100 கோடி பேர் சாவது என்பது ஆச்சரியப்படத்தக்கதல்ல. போரின் பாதிப்பு நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்கும்...." :(
இதுவும் 2012 ஓடு சம்பந்தப்படுத்தி பார்க்கப்படுகிறது. ( ஆனால், நொஸ்ராடாமஸ் உலக அழிவாக இதை குறிப்பிடவில்லை... அது வெறயொன்று... :) )

அடுத்து... புவியியலாலர்களின் கருத்துப்படி...
பூமியில்... 2000,2100 ஆண்டுகளுக்கு ஒரு முறை... ஒரு சிறியலவிலான பனியுகம் ( உறைபனிக்காலம்) ஏற்படுமாம்...
இப்படியேற்பட்ட ஒரு குறுகிய பனியுகமே... நீண்ட காலமாக செழிப்போடிருந்த எகிப்திய ராஜ்யியம் திடீரென வீழ்ச்சியடைந்ததுக்கு காரணம். ( ஒருசாரர்.. கடும் வறட்சிதான் காரணாம் என்றும் சொல்கிறார்கள்.)
அது ஏற்படக்கூடிய கால கட்டம் தற்போது நடந்துகொண்டிருக்கிறதாம்.( இது நிச்சயமானதல்ல 100 ஆண்டு இடைவெளியில் எப்ப வேணும் என்றாலும் வரலாம்.)
அது 2012 இல் தான் ஏற்படுமென... ஊகித்து உலக அழிவுடன் ஒப்பிடுகிறார்கள்.

அடுத்து... சமயங்களுடன் ( மதங்களுடன்) இதை சம்பந்தப்படுத்தியும் பார்க்கிறார்கள்.
பொதுவாக... மதங்களில் உலகம் மீண்டும் புதுப்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளதாம். அந்த புதுப்பிக்கப்படும் காலம் 2012 இலாக இருக்கலாம்... என்றும் கருதுகின்றார்கள்.
பொரிக்ஷாவை இன்டிகோ என வர்ணிக்கப்படும் உலகை காக்க வந்த தூதுவராகவும் சிலர் கருதுகின்றனர்.

( அனைத்து மதங்களிலும் ஒருவர் அவதரிப்பார் என கூறப்படுகிறது... ஆனால்... இங்கு பலர் அவதரித்து விட்டார்கள்... ஹீ...ஹீ...)

சமீபத்தில்... பூமியில் எதிர்பாராமல் ஏற்பட்டுக்கொண்டிருக்கும்... புயல், திடீர் வறட்சி, அதீத வெப்பம், அதீத குளிர், புவி நடுக்கம், எரிமலை வெடிப்பு, அண்டார்டிக்கா உருகல்... போன்றன... ஏதோ ஒரு ஆபத்து இருக்கு என்பதை காட்டுகிறது.

அதுக்கு மேலாக... எங்களது விஞ்ஞானிகள்...
"கடவுளின் துகள்" என்கிற பேர்ல... பூமிக்கடியில் அணுக்களை மோதவிட்டு... அந்த வெடிப்பின் மூலம்...இந்த பிரபஞ்சம் எப்படி உருவான‌து, உயிரினங்கள் எவ்வாறு தோன்றியது என்பதினை ஆராய்வதற்காக பாடு பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
அந்த மோதலை... எப்பவோ செய்திருப்பார்கள்... ஏதோ ஒரு நியூட்ரன் குழாய்ல ஏற்பட்ட கசிவால் இன்னமும் செய்யல.
பிழை சரி செய்யப்பட்டதும்... அந்த மோதலை செய்வார்களாம்.
இவர்களால், ஏற்படுத்தப்படும் அந்த வெடிப்புத்தான் உலக அழிவுக்கு வித்திடுமோ தெரியல.
( எல்லாம், கணிப்பிட்டு பாதுகாப்பாக... நிலத்துக்கடியில்தான் செய்கிறார்கள்... ஆனால், அந்த பிரஞ்சவெடிப்பின் பின்னர் பிரபஞ்சம் ஊதிபெருத்து, பெருத்துக்கொண்டு இருப்பது போல்.... விளைவுகள் ஏற்படுமா என்பது தெரியவில்லை... )


பூமியில் துருவமாற்றம் நடைபெறப்போகிறது என்ற காரணமும் சொல்லப்படுகிறது.
இது நடை பெறக்காரணம்... சூரியனில் ஏற்டும் பாரிய காந்தபாய்ச்சல்தான். இந்த பாரிய காந்தப்புலம்...  சில மில்லையன் ஆண்டுகளுக்கு ஒருமுறை சீரற்ற இடைவெளியில் ஏற்படும், என்பதால்... சான்ஸ்குறைவு... :D


சிலர்...
பூமி... ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் சனத்தொகையைத்தாங்கும். இப்போது... இயற்கை சமனிலை பாதிப்படைந்துவிட்டது... அதை சீர் செய்ய இயற்கையால் அனர்த்தங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் கூறுகிறார்கள்.
அதுவும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே உள்ளது.

இன்னும் எழுத இருக்கு... இதில எழுதினா... பதிவுக்கு தொடர்பில்லாமலிருக்கும்... மற்ற பதுவுகள்ள எழுதுறேன்...

எது எப்படியோ...
என்னைப்பொறுத்த வரைக்கும் 2012 ஓடயோ அல்லது... 2030 இக்குள்ளயோ... உலகம் முற்றாக அழியப்போறதில்லை...
ஆனால், பாரிய அழிவுகள், மாற்றங்கள் ஏற்படும்...
(பார்ப்பம்... அந்த 100 கோடில நாங்க இல்லை என்றால்... என்ன என்ன மாறிப்போச்சு... இந்த அனியாயத்துக்கு ஆர்..ஆர் காரணம் என்றெல்லாம்... மாறி மாறி கத்துவோம், எழுதுவோம்... நாங்க ஸேஃப்ஃபா இருந்துகொண்டு... ஹீ...ஹீ... )

---------------------------------------------------------------------------------
விட்டா பதிவு நீண்டுகொண்டே போய்... வாசிக்கிற உங்களுக்கு வெறுப்பை ஏற்படுத்திவிடும்... அதனால.... ஸ்டொப்.
ஒரு மாதிரி அடங்கிப்போயிருக்கிற குட்டையை கிழறியாச்சு.... :D


நான் குறிப்பிட்டதில் பிழைகள் இருக்கும்...அதை கொமென்ட்ஸில் போட்டு... போஸ்ட்டை பிரயோசனமானதாக்கினா நல்லம்.


---------------------------------------------------------------------------------

22 comments:

  1. Good Post!
    We need this kind of posts.

    ReplyDelete
  2. நல்ல விடையங்கள். பகிர்வுக்கு நன்றி நண்பரே.

    -கஜன்.

    ReplyDelete
  3. lishanthmithra7 May 2010 at 06:10

    ahaa nice :(

    ReplyDelete
  4. Good Post!
    We need this kind of posts.

    ReplyDelete
  5. அருமையான பதிவு

    ReplyDelete
  6. மெய்யலுமே அசத்திபுட்ட வாத்யாரே

    ReplyDelete
  7. //சிலர்...
    பூமி... ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் சனத்தொகையைத்தாங்கும். இப்போது... இயற்கை சமனிலை பாதிப்படைந்துவிட்டது... அதை சீர் செய்ய இயற்கையால் அனர்த்தங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் கூறுகிறார்கள்.
    அதுவும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே உள்ளது.
    //

    இதை ஏற்றுக்கொள்ள முடியாது. பூமியின் எடை எப்போதும் ஒரே மாதிரி தான் இருக்க முடியும். ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாகத்தான் மாற்ற் முடியுமே தவிர ஆற்றலை ஆக்ககோ அழிக்கவோ முடியாது. (எட்டாம் வகுப்புல படிச்சது)

    ReplyDelete
  8. நன்றி... Harini & HLJ...
    try pannuran...
    -------------------------
    நன்றி... கஜன் & lishanthmithra...
    அது தான் அழியமாட்டுதில்ல... :(---> :)
    -------------------------
    நன்றி... KARTHI...(Harini)
    இதெல்லாம் ஓவரா இல்லையா? Blog la chat ஆ? :@
    -------------------------
    நன்றி...Sundar & ராஜேஷ்...
    -------------------------
    நன்றி...செந்தாரப்பட்டி பெத்துசாமி...
    நீங்க சொல்வது சரிதான்...ஆற்றலை ஆக்ககோ அழிக்கவோ முடியாது...
    நான் முக்கியமாக குறிப்பிட்டது இயற்கை சமனிலை மாறிவருகிறதே அதைதான். :)

    டவுட்...
    ஒவ்வொருவருக்கும் தேவையான சக்திகளில்... வெப்பமும் ஒன்று...( விட்டமின் டி உட்பட...) அது எல்லாத்தையும் பூமிக்கு வெளியிலிருந்தும் பெறுகிறோம். அப்படினா... சனத்தொகைகூட... திணிவும் கூடும்தானே... ( வெளியிலிருந்து அதிக சக்தி உள்ளுக்கு வருமே... :(

    ReplyDelete
  9. அன்புடன் நண்பருக்கு வணக்கம்,உலக முழுக்க இது போன்ற கருத்துக்கள் உள்ளன..நமது முன்னோர்களும் நமது நாட்டின் தென் பகுதி மலை பிரதேசத்தை ஒட்டி 1979 வருடம் பிறக்கும் ஒரு நபர் விருப்பு வெரிப்பின்ரி இருப்பார் .உலகமே அவர் சொல் கேட்கும் அதாவது போர் முடிந்து 2019 இல் உலகமே ஒன்றுபடும் ஒருகுடைன் கீழ் ஆட்சி நடக்கும் என்று இருக்கிறது ...எதோ ஒரு நூலில் படித்த ஞாபகம் சரியான சான்று இல்லை ஆனால் அதில் கூறப்பட்டுள்ள பலவிஷயங்கள் நடந்துள்ளன..இரண்டு வயது குழந்தை கர்ப்பம் தரிக்கும் என அதில் உள்ளது ... தாயாரின் வயற்றில் உள்ளே இருக்கும் போது ஒரு முட்டை கருவாக உருவாகி அது அந்த குழந்தை வயற்றில் தங்கி இருந்தது என மருத்துவம் கூறியுள்ளது இதில் விசேடம் ...இந்தியாவின் பெயர் மாறும் அதுவே எல்லா நாடுகளையும் ஜனநாயக ஆட்சி செயும் ....பொறுத்திருந்து பார்ப்போம்!!!!

    ReplyDelete
  10. சுவாரசியமான பதிவு .வழக்கம் போல இந்த குட்டையும் குழப்பியாச்சா ? என்ன நடந்தாலும் சரி அழியக்கூடாது . அழியும் எண்டா இப்பவே சொல்லீடுன்கப்பா .

    ReplyDelete
  11. தகவல் பிழை: LHC - ல் மார்ச் 30, 2010 அன்று மோதல் ஏற்படுத்தப்பட்டது. நீங்கள் குறிப்பிட்டதுபோல் ஒரு கசிவு ஏற்பட்டது. ஆனால் அது சரி செய்யப்பட்டு, மோதல் ஏற்படுத்தப்பட்டு அடுத்தக்கட்ட ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    மேலும், மனித குலம் தோன்றிய காலம் முதல் பல்வேறு சமயங்களில், உலகம் அழியப்போகிறது என்று எண்ணி வந்தனர். அதற்கேற்றாற்போல், அவ்வப்போது நடைபெறும் சம்பவங்களை வைத்து பல கற்பனைகளையும் அள்ளிவிட்டனர். 2000 -ஆம் வருடம் உலகம் அழிந்துவிடும் என்று சிலர் கூறிக்கொண்டிருந்தபோது, பாக்யா வார இதழ் Y2K பிரச்னையால் உலகம் அழிந்துவிடும் என்று ஒரு கட்டுரை எழுதியது. (2000 -ஆம் வருடம் பிறக்கும்போது Y2K பிரச்சனையால், அணு உலைகளை, ஏவுகணைகளை இயக்கும் கணினிகள் செயல் இழக்கும். அதனால், உலகில் உள்ள அனைத்து அணு உலைகளும் வெடித்துச் சிதறும்; ஏவுகணைகள் சீறிப்பாயும்; உலகம் அழியும் என்று எழுதினார்கள்.)

    அதுபோல், யூகங்களின் அடிப்படையில் 2012 மாட்டிக்கொண்டு முழிக்கிறது. நாஸ்ட்ரடாமசின் பாடல்கள் எந்த அடிப்படையில் அமையப்பெற்றுள்ளன என்பது தெரிந்தும், ஒவ்வொரு செயலுக்கும் அவரது பாடலை இழுப்பதை நினைத்தால் சிரிப்புதான் வருகின்றது.

    ReplyDelete
  12. hi harani MAIL TO THIS email id alagarkarthikeyan007@gmail.com

    karthikeyan 6 th std
    karthika 4 th std

    ReplyDelete
  13. நன்றி...hamaragana
    இந்தியாவிலிருக்கும் எனது நண்பர் ஒருவரும்... ஏதோ, குகை ஒன்றில் (சித்தர்களால்) எதிர்காலம் கணிக்கப்பட்டு இருப்பதாக கூறியிருந்தார். இடம் நினைவிலை. 1979 இல் பிறந்தவரின் பெயர் என்ன?
    ---------------------------------
    நன்றி...S.Sudharshan
    ஹீ..ஹீ... அழியாது... சும்மா பீதிய கிழப்புறாங்க...
    HLC ஐ பற்றி விம்பத்தில எழுதலாமே...
    ---------------------------------
    நன்றி...கும்மி
    சொன்னமாதிரியே கும்மி அடிச்சுட்டிங்க...
    ஆனா, சரியான கும்மிதான். ( இறுதிக்கட்டம் நடக்கட்டுமேன்... அட்லீஸ்ட்... கோஸ்தியடிப்ப்டியாவது... எதாச்சும் நடக்காதா???

    ஆம்... இதில அதைப்போட்டதுக்கு காரணம்... எகிப்திய எழுத்துக்கள் அதே கருத்தோட ஒத்துபோகிறதாலதான்... :)
    ---------------------------------
    tnx ஷ.மரிக்கார்... ur wlc..
    ---------------------------------
    tnx karthi..
    intha post chat panna naan podala... :)
    ha...ha... mail vantha happy enna... :P

    ReplyDelete
  14. 1979 இல் பிறந்தவரின் பெயர் .....நித்தியந்தா சாமீ ....நமது நாட்டின் தென் பகுதி மலை பிரதேசத்தை ஒட்டி 1979 வருடம் பிறக்கும் ஒரு நபர் விருப்பு வெரிப்பின்ரி இருப்பார் .உலகமே அவர் சொல் கேட்கும் அதாவது போர் முடிந்து 2019 இல் உலகமே ஒன்றுபடும் ஒருகுடைன் கீழ் ஆட்சி நடக்கும் என்று இருக்கிறது ... realy mudiyalla ....

    ReplyDelete
  15. ஹாய் கார்த்திகேயன் நீ எப்படி இருக்க நான் நல்ல சுகம்

    ReplyDelete
  16. விஜய்: என்னங்ணா இப்பிடிக் கேட்டுபுட்டீங்க? என்னோட போன பட டைட்டில் வேட்டைக்காரன், இந்த படத்துக்கு சுறா, போன படத்துல அனுஷ்கா ஹீரோயின், சுறாவுல பாத்தா தமன்னா ஹீரோயின், இப்படி எவ்வளவோ வித்தியாசங்கள் இருக்கு. அதெல்லாம் ஏன் உங்களுக்குத் தெரிய மாட்டேங்குது? இவ்வளவு ஏன், பஞ்ச் டயலாக்கே ரெண்டு படத்துலயும் வேற வேறதான்! நாங்களும் கஷ்டப்பட்டுதாங்க படம் பண்றோம். இதுக்குமேல வித்தியாசமா படம் எடுக்கனும்னா, தலைகீழா கேமராவ வெச்சுதாங்க எடுக்கனும்

    ReplyDelete
  17. நன்றி...karthik...
    நம்ம நித்துவா அவர்... சொல்லவே இல்ல...
    -----------------------------
    நன்றி...Harini...
    அவர் அப்படியேதான் இருப்பார்... நீங்கதான் ஹொஸ்பிடல்ல இருந்து எஸ்கேப்பாய்ட்டிங்க...:P
    -----------------------------
    நன்றி...Anonymous...
    நீங்க ஏன் கவலப்படுறிங்க விஜய்... உங்கட பழைய படத்தை... புது டைடிலோட போட்டாலே... ஈ என்று பாக்க நாங்க இருக்கமுள்ள... என்ன நீங்க சேர்ட் இட கலர் ஐ மாத்தி... கெட்டப் சேஞ் பண்ணுறத பாக்கமுடியாம போய்டும்... ஹீ...ஹீ...

    ReplyDelete
  18. உலகத்துல இருக்குற எல்லா மக்களுக்கும் உலகம் அழியுறதை பாக்கணும்ன்னு ஆசை இருக்கு. தான் சாக போறதை பத்தி கவலை இல்லை. அது ஆர்வமோ ஆசையோ , அந்த எண்ணங்களோட ஒரு மித்த ஆற்றல் உலகத்தை அழிக்கும் ஆயுதமாகும்.

    ReplyDelete
  19. நன்றி...chandru2110...
    நீங்க சொல்வதும்... ஏற்கக்கூடியதே...

    எண்ணங்களின் ஆற்றல்லைப்பற்றி நான் பரிமாணங்கள் தொடரில் எழுதலாம் என்றிருக்கிறேன்... :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected