Total Pageviews

Tuesday, 25 May 2010

ஏலியன்ஸ்... பேய்... கடவுள்... (பரிமாணங்கள் - 04)

விளங்க முடியா பரிமாணங்கள்
---------------------------------------------------------------------------------
இது ஏலியன்ஸ்... பேய்... கடவுள்... விளங்க முடியா பரிமாணங்கள் தொடரின் 4ம் பகுதி... போன பதிவில்... எஸ்.எம்.எஸ் என்பவருக்கு விளக்கம் தருவதாக எழுதி இருந்தேன்... இன்னமும் அவருக்கு விளக்கம் கொடுக்க கூடிய அளவுக்கு தெளிவான விளக்கத்தை நான் பெறவில்லை... அதனால்... வரும் பதிவுகளில் நிச்சயமாக அவரின் மாற்றுக்கருத்துக்கு விளக்கம் கொடுப்பேன்... அத்தோடு இந்த தொடர் பதிவு தாமதமானதுக்கு மன்னிக்கவும்... இனி இப்படி நடக்காது... பழையபடி ஒழுங்கான பதிவுகள்... ஒரு ஒழுங்கு முறைப்படி போடுவேன் என்று நம்புகிறேன்... :)

எழுதிய பிறகுதான் பார்த்தேன் பதிவு நீளமாகிவிட்டது... பொறுமையாக வாசிங்க... :)
---------------------------------------------------------------------------------
முன்னைய பதிவுகள்...
பதிவு 01
பதிவு 02
---------------------------------------------------------------------------------

போன பதிவில்... ஒரு ஏலியன்ஸ்ஸின் சம்பவத்தை பாதியில் விட்டிருந்தேன்... இன்று அதிலிருந்து ஸ்ராட் பண்ணுகிறேன்... ( புதியவர்களுக்காக அந்த பகுதியை இணைத்துள்ளேன்... நினைவுள்ளவர்கள்... "***>>> " இக்கு  பிறகு வாசிக்கவும்....

<<<<*****
அமெரிக்காவில்... ஏதோ ஒரு பிரதேசத்தில்...
ஒரு கன்னிப்பெண்னின் நடவடிக்கையில் மாற்றமேற்படவே... அவளது பெற்றோர், அவளை டொக்டரிடம் அழைத்துச்சென்றார்கள்.  அவளை பரிசோதித்த டொக்டர்ஸ் அவள் கர்ப்பம் அடைந்து இருப்பதை உறுதிப்படுத்தினார்கள். ஆனால், அப் பெண்ணோ அதனை அடியோடு மறுத்தால்... மேலும்... பெண்ணின் நடத்தையிலும் சில மாற்றங்கள் தென்படவே... டொக்டர்கள் அவளை ஹிப்னாடிஸத்துக்கு உட்படுத்த முடிவெடுத்தார்கள்.

ஹிப்னாடிஸத்தின் போது... அப்பெண் சொன்ன விடையங்கள் பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியது....

ஏலியன்ஸினால் பரிசோதிக்கப்பட்டதாக நம்பப்படும் பெண் சொன்னது இதுதான்...

ஒரு வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் தனியாக வீட்டிலிருந்த போது... ஜன்னலடியில் ஏதோ சத்தம் கேட்பதாக உணராவே, ஜன்னலோரமாக சென்று பார்த்தேன். அங்கு சில குள்ளமான...ஒல்லியான.... பெரிய தலையுடைய மனிதரை ஒத்த உருவங்கள்... வீட்டை நோக்கு வந்துகொண்டிருந்தது. நான் வீட்டை தாள்பால் போட்டு விட்டு... உள்ளேயே இருந்தேன்... அவர்கள், கதவை திறக்காமலே உள்ளே வந்து... என்னை நோக்கி ஏதோ செய்துவிட்டு... என்னை அவர்கள் வந்த வாகனத்துக்குள் அழைத்து சென்றார்கள். பின்னர்.... எனது உடலில் ஏதேதோ சோதனை நடத்தினார்கள்.
இறுதியில்... நான் எங்கு இருந்தேனோ அங்கேயே இருந்தேன்....

*****>>>
அந்த தகவல்கள் யூ.எஃப்.ஓ இல் பதிவு செய்யப்பட்டது...

அடுத்து ஒரு 6 மாத காலத்தின் பின்னர்...

காலையில் எழுந்து பார்த்த அந்த பெண் அதிர்ச்சியுற்றாள்... காரணம் அவளது வயிறு பிள்ளை இருப்பதற்கான எந்தவித அறிகுறியுமில்லாமல் இருந்தது....
உடனே டொக்டரிடம் சென்று செக் பண்ணி பார்த்தார்கள்... என்ன ஆச்சரியம்... வயிற்றில் பிள்ளை இருந்தமைக்கான எந்தவித அறிகுறியுமே இல்லை!!!!

மீண்டும் ஹிப்னாடிஸம்...  அதே போன்ற சம்பவத்தையே பெண் மீண்டும் சொன்னால்...

அப்படியானால் என்ன நடந்து இருக்கும்????

வேற்றுக்கிரக வாசிகள் என பரவலாக நம்பப்ப‌டும் ஏலியன்ஸ் ஏன் அந்த பெண்ணின் வயிற்றில் குழந்தையை உருவாக்கி இருக்க வேண்டும்...  ஏன் மறுபடியும் அந்த கருவை கலைத்திருக்க வேண்டும்... அல்லது 6 மாதமான அந்த கருவை அவர்கள் தமது பரிசோதனைகளுக்காக கொண்டுசென்றார்களா???  பூமியிலுள்ள மனிதர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள் என்பதை அறிவதுதான் அவர்களின் நோக்கம் என்றால் அது ஏன்????

போன்ற பல கேள்விகள்... தேங்கி நிற்கின்றன.

---------------------------------------------------------------------------------

அடுத்து ஒரு இன்னொரு விசித்திர சம்பவம்...

இதுவும் பெயர்,ஊர் தெரியாதது... ( தெரிந்தவர்கள் கூறவும்...)

இரண்டு நண்பர்கள்... ஆற்றங்கரையோரமாக வந்து கொண்டிருந்தார்கள்... அப்போது... கண்ணைக்கூசச்செய்யும் வெளிச்சத்துடன்... பறக்கும் தட்டு ஒன்று வந்திறங்கியது... அந்த அதிர்ச்சியில் ஒரு நபர் மயக்கமுற்றுவிட்டார்...
மற்றவர் பார்த்தபோது ஒன்றுமே இல்லை... தனது நண்பர் மட்டும் மயக்கமுற்றிருப்பதைக்கண்டு... உடனே அவரை ஹொஸ்பிட்டலுக்கு கூட்டிச்சென்றார்... மயக்கம் தெளிந்த பின்னர் அந்த நபர்... டொக்டர்களிடம் தமக்கு நடந்தவற்றை கூறினார்...

அங்கு இருந்த யூ.எஃப்.ஓ ஆராச்சியாளர்களுக்கு தகவல் அனுபப்பட்டு... அவர்கள் இந்த நபர்களை பரிசோதிக்க முடிவெடுத்தார்கள்... இருவரையும் ஹிப்னாடிஸத்துக்கு உட்படுத்தியபோது...
ஒரு சிறிய வியப்பு காத்திருந்தது....

ஆம்...
அந்த மயக்கமுற்ற நபரிடம் ஏலியன்ஸ்கள் எந்தவிதமான சோதனைகளையும் செய்யவில்லை...
மாறாக... சுய நினைவுடனிருந்த நபர் சொன்னபடி... அவரை தமது ஓடத்துக்குள் அழைத்துச்சென்று... சில கருவிகள் மூலமாக இவரின் உடலில் துளைகள் இடாமலே ஏதேதோ ஆராச்சிகள் செய்தார்களாம்...

இதிலிருந்த சில முடிவுகளை நாங்கள் எடுக்க முடியும்...

இங்கு... மயக்கமுற்ற நபருக்கு... ஏலியன்ஸ் வந்தது தெரியும்...( அதை பார்த்த பின்னர்தான் அவர் மயக்க மடைந்தார்...) ஆனால், சுய நினைவுடனிருந்தவருக்கு அது தெரியாது... அப்படி என்றால்... ஏலியன்ஸ் ஏதோ ஒரு முறையை பயன்படுத்தி நினைவுகளை அழித்திருக்கிறார்கள். அவ்வாறு அழிப்பதற்கு மனிதன் சுய நினைவுடனிருக்க வேண்டும். இல்லை என்றால்... ஏன் அவர்கள் அந்த மயக்கமுற்ற‌ நபரின் நினைவை மட்டும் அழிக்கவில்லை...
ஆகவே... அவர்கள் எமக்கு உட்படாத தமது பரிமாணத்தை பயன்படுத்தியோ... அல்லது... எம்மைத்தாண்டிய அவர்களது அறிவை ( 7 வது அறிவு என்றும் வைத்துக்கொள்ளலாம்...) பயன்படுத்தியோ... எமது கண்கள்(????) ஊடாக தமது கட்டுப்பாட்டுக்குள் எங்களை ஆட்படுத்துகிறார்களாக இருக்கலாம். ( மயக்கமுற்றமையால் அந்த நபரை அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை போலும்... )

---------------------------------------------------------------------------------

அடுத்து...

கோர்டன் குஃபெர் என்ற ஜேர்மனிய விண்வெளி வீரர்... தான் இராணுவத்தில் பணியாற்றிய போது தனக்கு நிகழ்ந்ததை விபரிக்கின்றார்...
"நான் விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த போது... எனது விமானத்தை தாண்டி ஒரு மாறுபட்ட விமானம் பறந்தது... நான் அதை பின்தொடர்ந்து சென்றபோது... அது எதிர்பார்க்க முடியாத அளவுக்கு விரைவாகவும் கிட்டத்தட்ட 90 பாகையில் அதன் திசையை மாற்றி மறைந்துவிட்டது..."

இந்த சம்பவத்தில் அவர்கள் எம்மை விட எவளவு கூடிய அறிவை பெற்றிருக்கிறார்கள் என்பது தெளிவாகும்... அதாவது... இவரின் கூற்றுப்படி பார்க்கும் போது அது... கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் பறந்திருக்கிறது என்ற முடிவுக்குவரலாம்.... 90 பாகையில் மாறி மாறி திசை திருப்புவது என்பது நமது அறிவுக்கு இன்னமும் சாத்தியமாகாதது...

---------------------------------------------------------------------------------

சம்பவங்கள் இருக்கட்டும்... இவ்வாறான மேலும் சில முக்கிய சம்பவங்களை பிறகு பார்க்கலாம்...

அதுக்கு முதல்....

எகிப்திய சுவரோவியங்களை பார்த்தொமானால்... அதில் வேற்றுக்கிரக வாசிகள் என கருதப்படும் ஏலியன்ஸின் உருவ அமைப்புக்கள் காணப்படுகின்றன... ஆனால் என்ன குழப்பம் என்றால்... அவை மனிதனுடன் சேர்ந்து உதவுவதுபோன்று வரையப்பட்டுள்ளது. ( இது சில நேரம்... அவர்கள் இணைந்து செயற்படாவிடினும் அவர்களிடம் இருந்து பெற்ற அறிவுகளை தாம் எவ்வாறு பயன் படுத்தினோம் என்பதை காட்டுவதற்காகவும் வரையப்பட்டு இருக்கலாம்.)

மேலும்... புராதன குகைகளிலும் ஏலியன்ஸின் உருவ அமைப்பை ஒத்த உருவங்கள் வரையப்பட்டுள்ளன...

இதற்கு மேலாக... இராமாயணத்தில் இராவணனின் வாகனமான புஸ்பக (புட்பக) விமானத்தின் இயக்கமானது...  தரையிலிருந்து செங்குத்தாக கிழம்பி எங்கு வேணுமென்றாலும் குறுகிய நேரத்தில் செல்லத்தக்கது என்று கூறப்படுகிறது. இது உண்மையோ இல்லையோ... அது வேறுவிடையம் ஆனால், புராதன மக்கள் ஏலியன்ஸின் இயக்கத்தை உண்ணிப்பாக அவதானித்திருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்றாகும்.

---------------------------------------------------------------------------------

அடுத்து நான் போன பதிவில்.... தற்போது மனிதனின் பரிமாணவளர்ச்சி பற்றி கூறியிருந்தேன்...
அதன்படி பார்க்கையில்... இனி... எதிர்காலத்தில்...
மனிதன் தந்து உடல் வலுவைவிட மூளையைத்தான் பயண்படுத்தப்போகிறான்... ஆகவே... நமது விஞ்ஞானிகளின் கணிப்பு படி... அடுத்த கட்டமாக...
மனிதனின் உடல் சிறுத்து... தலை பெருக்கும்... அத்தோடு பார்வைப்புலன் விரிவடையவே கண்ணும் அகலாம்... என்னதான் கருவிகள் வந்தாலும்... பெரும்பாலும் அவை கைகளாக் இயக்கப்படுபனவே... எனவே கையும் நீளகாகலாம்... (உடம்ப்பு சிறிதாகும் போது கை நீளமாகாவிடினும் ஆகியதாகத்தானே தோன்றும்... )
இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்பது இப்போது விளங்கியிருக்கு... வரும் பதிவுகளில்... அதை தெளிவாக விளக்குகிறேன்....

---------------------------------------------------------------------------------
பதிவுகள் வர வர நீளமாகின்றன...
அடுத்து எஸ்.எம்.எஸ் இக்கான விளக்கத்துடன்...
வரும்பதிவுகளில்...
1000 சிப்பாய்கள் ரஷ்ய மலைப்பகுதியில் காணாமல் போனது எப்படி....
"என்னை காப்பாற்றுங்கள்..." என்று குரல் மட்டும் கேட்டது எப்படி?
நாய் இருக்கு... மற்றவர்கள் எல்லாம் எங்கே...  போன்ற வியத்தகு சம்பவங்களுடன் பதிவை தொடர்வேன்...
---------------------------------------------------------------------------------

9 comments:

 1. lishanthmithra26 May 2010 at 07:39

  wow super !!!!!!!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 2. Intresting! First time i came here, may be today i'll go through all your posts.

  ReplyDelete
 3. வணக்கம்
  நண்பர்களே

  உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

  உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
  நன்றி
  தலைவன் குழுமம்

  www.thalaivan.com

  ReplyDelete
 4. ஆர்வத்தை தூண்டி கொண்டே இருக்கிறீர்கள்!

  ReplyDelete
 5. நன்றி... lishanthmithra... :)
  -----------------------------
  நன்றி...பருப்பு The Great... :)
  வாசித்து பிழைகளை சுட்டிக்காட்டுங்க‌...
  -----------------------------
  நன்றி...www.thalaivan.com...
  இதுவரை இணைக்கவில்லை அடுத்த பதிவை இணைப்பேன்... :)
  -----------------------------
  நன்றி...வால்பையன்...
  உங்கள் "பரிணாமம் - தொடர்சி" சுப்பர்...

  ReplyDelete
 6. மிகமிக ஆச்சரியமான தகவல்கள் அற்ப்புதமான முறையில் எழுதும் திறமை உங்கள் பதிவுகள் எல்லாமே படிக்க படிக்க ஆவலை தூண்டுகிறது.

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. சொன்னபடி பொறுமையாக வாசித்தேன் . தெளிவாக உள்ளது .. தொடர்ந்து எழுதவும்

  ReplyDelete
 8. உண்மைய நடந்த ரெண்டு மூணு விடயங்களை வச்சு புகழ்ச்சிக்காக பலர் அப்ப (1950s ) கிளம்பிட்டாங்க. நல்லா இருக்கு தொடருங்க.

  ReplyDelete
 9. நன்றி...buruhaniibrahim... & S.Sudharshan...
  தொடர்ந்து எழுதுவேன்... (தகவல்களை திரட்ட கொஞ்சம் காலதாமதம் அவளவுதான்...)
  --------------------------
  நன்றி...chandru2110...
  ஓம்...ஓம்... உண்மைதான்... புகழ்ச்சிக்காக பலர் பொய் சொல்லி இருக்கிறார்கள் ( பிரபலங்கள் உட்பட)... அதுகளையும் வரும் பதிவுகளில் சும்மா கீழே ஒரு பக்கத்தில் போடுகிறேன்... :)

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails