Total Pageviews

Tuesday, 18 May 2010

நொஸ்ராடாமஸிம் உலக‌ முடிவும்... (இறுதி)


நோஸ்ராடாமஸ் நாளைய உலகம்.


------------------------------------------------------------------------------
இன்றைய பதிவில் நீண்ட  நாட்களாக எழுதாமல் இருந்த நொஸ்ராடாமஸ் தொடர் பதிவின் இறுதி பகுதியை எழுதுகிறேன்.
போன பதிவில் உலக அழிவு பற்றி நொஸ்ராடாமஸ் என்ன சொல்லி இருக்கார் என்று பார்க்கலாம் என்று எழுதியிருந்தேன். அதோடு... சமீபத்தில் பதிவிட்ட 2012 இனையும் ( அதில் குறிப்பிட மறந்ததையும் ) இதனுடன் ஒப்பிட்டு பார்ப்போம்...
------------------------------------------------------------------------------
நொஸ்ராடாமஸ்...
தனது அனைத்து கணிப்புகளையும் வான சாஸ்திரத்தை அடிப்படையாக வைத்தே கணித்தார். (அவருக்கு விசேடமாக உணர்ந்து கொள்ளும் தன்மையும் இருந்தது... )
வழமையாக வான சாஸ்திர நூல்களோ... வான சாஸிதிரிகளோ.. 12 ராசிகளைக்கொண்டே கணித்தார்கள்.
ஆனால்; நொஸ்ராடாமஸ் இவற்றிலிருந்து விதி விலக்காக 13 ராசி வட்டத்தையும் உருவாக்கி (?) அதைக்கொண்டே தனது கணிப்புக்களை  கணித்திருந்தார்.

அந்த 13 வது ராசியிலிருக்கும் ஒரே ஒரு நட்சத்திரமான ஃபீக்கஸ் நட்சத்திரமே... இன்று பெரிய அளவில் பேசப்படுகிறது... முக்கியமாக 2012 இல் உலகம் அழியும் என்பதுடன் இதனை தொடர்பு படுத்தி பார்க்கிறார்கள். ஏனென்றால்.... அந்த ஃபீக்கஸ் நட்சத்திரம் இது வரை வானில் தோன்றியதில்லை.
2012ம் ஆண்டு 12ம் மாசம் 21ம் திகதியே அது வானில் முதல் முதலாக தோன்றப்போகிறது என நொஸ்ராடாமஸின் குறிப்புக்கள் கூறுகின்றனவாம். அது காட்சியளிக்கும் போது பூமியில் பாரிய மாற்றங்கள் நிகழும் எனவும் அவர் தனது குறிப்புக்களில் கூறியிருக்கிறாராம். பஞ்சம், இயற்கை சீற்றம், யுத்தம் போன்ற அழிவுகளை அது ஏற்படுத்த இருக்கிறதாம்.

இங்கு இன்னொரு விடையம்... கி.மு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மாயன்களின் இராஜ்ஜிய படிவுகளிலும் இந்த புதிய நட்சத்திரம் பற்றி கீறப்பட்டுள்ளதாம். ( உறிதிப்படுத்தப்பட்டுள்ளது.)
எகிப்திய பிரமிட் சுவர்களிலும் வான வெளியை கீறி ஏதேதோ குறிப்பிட்டுள்ளார்கள்... அவை என்ன என சரியாக இனங்கானப்படவில்லை.

அது இருக்கட்டும்... நொஸ்ராடாமஸ் குறிப்பிடும் ஃபீக்கஸ் நட்சத்திரம் பற்றி விஞ்ஞனிகளின் கருத்தைப்பார்ப்போம்...

2012 ம் ஆண்டில் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தின் காந்தப்புல பாதிப்பு எமது சூரிய குடும்பத்தை பாதிக்குமாம்.
இதனால் தான் பூமி தனது வட,தென் துருவங்களை மாற்றி அமைத்துக்கொள்ளும் என்ற கருத்து வலுப்பெறுகிறது.
( இதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு, அதாவது... 72 வருடங்களுக்கு ஒரு முறை பூமி சற்று திருப்பமடைகிறது. அது 1 பாகையோ அல்லது 1 கலையோ என்பது எனக்கு நினைவில்லை.... தெரிந்தவர்கள் கூறவும்.)

இதன் படி... அந்த நட்சத்திரத்தால் பாதிப்பு வருவது நிச்சயமென்றால்... உலகில் பாரிய அழிவுகள் வரும். ஆனால், ஒரேயடியாக அழிந்து போகாது.

அடுத்து... நொஸ்ராடாமஸின் கூற்றுக்களின் படி 7 உலக யுத்தங்கள் நடைபெறும்.
ஏற்கனவே 2 முடிவுற்று விட்டது... இனி வரப்போவது 3 ஆவது... அது 2012 ல் வரும் என்று ஒரு ஊகமும் இருக்கிறது.
ஆனால், அத்தோடு உலகம் அழிந்துவிடும் என்று சொல்ல முடியாது.
அப்படி இருக்குமானால், அவரின் குறிப்புக்களில் 7 உலக யுத்தங்களைப்பற்றியும் தெளிவாக கூறியிருக்கத்தேவை இல்லை.

3750 ம் ஆண்டலவிலேயே இந்த 7 ம் உலக யுத்தம் நடை பெறுமாம். அதற்குப்பிறகு பூமி மனிதன் வாழத்தகுதியற்றதாகிவிடும் என குறிப்பிட்டுள்ளாராம்.
------------------------------------------------------------------------------
ஓ.கே.... மொத்தத்தில் உலக அழிவு பற்றி நொஸ்ராடாமஸ் என்ன சொல்லி இருக்கார் என்று பார்ப்போம்...

40 வருடங்களுக்கு பூமியில் ஒரு சொட்டு மழை கூட பெய்யாது... பனிப்பொழிவு நின்றுவிடும்... உலகம் எங்கும் கடுமையான வெப்பம் நிலவும்... அதனால், மரங்கள் தாவரங்கள் என்பன முற்றாக அழிந்துபோகும்... மனித இனமும் இக்காலப்பகுதியில் முற்றாக அழிந்துவுடும்.
அதற்குப்பிறகு...
40 வருடங்கள் தொடர்ச்சியாக மழை பெய்யும்.. ஆனால், அதை அனுபவிப்பதற்கு பூமியில் ஒரு உயிரினமும் இருக்காது...
40 வருட கால மழையைத்தொடர்ந்து பூமி குளிர்ச்சியடைந்து மீண்டும் தாவ்ரங்கள் உருவாகி... உயிரினம் தோன்றும்...

உலகம் புதுப்பிக்கப்படும்...

இந்தக்கூற்று கிறிஸ்தவ மததிலிள்ள நோவாவின் கதையோடு ஒத்துப்போக கூடியது... அது பற்றி இங்கு பெரிதாக எழுத வில்லை.... ஆனால், லெமூரியா பதிவில்... நோவாவின் கதைக்கும்.... இந்துக்களின் வேத நூல்களில் கூறப்பட்டுள்ள கதைக்கும் இருக்கும் ஒற்றுமையை நிகழ்கால வரலாற்றுடனும்... லெமூரிய வரலாற்றுடனும் ஒப்பிட்டு எழுதுவேன்... இயன்றவரையில் வேறு மதங்களில் இது போன்ற ஒற்றுமைகளை கண்டறிந்து எழுத ட்ரை பண்ணுறேன்...

நொஸ்ராடாமஸ் பற்றி எழுதுவதற்கு அதிகம் இருக்கிறது... ஆனால்; நொஸ்ராடாமஸ் என்பதே பொய்...  சூழ்ச்சி என சில கருத்துக்கள் இருக்கின்றன...

அதாவது... இந்த நொஸ்ராடாமஸ் எனும் நபர்... கிறிஸ்தவர்களாலும் அமெரிக்க வல்லரசு நாடுகளாளும் முஸ்லீம் மதத்துக்கு எதிராக சில நடவடிக்கைகளை எடுப்பத்ற்காக உருவாக்கப்பட்டது. ( இங்கு 3ம் உலக யுத்தம் பற்றி கூறும் போது... முஸ்லீம் படைகள் உலகை அடக்க முனையும் என அடிக்கடி கூறப்ப்ட்டுள்ளது... இது முஸ்ஸீம்களுக்கு எதிரானதாக கருதப்படுகிறது...)

அதனால்... அவர் கூறிய மற்ற விடையங்கள் பற்றி பெரிதாக ஒன்றும் எழுதவில்லை....
------------------------------------------------------------------------------
அடுத்து... "ஏலியன்ஸ்... பேய்... கடவுள்..." அல்லது... "லெமூரியா" தொடர் பதிவுகளை பார்ப்போம்... :)

------------------------------------------------------------------------------

8 comments:

 1. GD info! 10x u!
  V expt lemuria!

  ReplyDelete
 2. நல்லா விளக்கிறிக்கீங்க. நோஸ்ராடாமஸ் பத்தி எனக்கு தெரியாதனால பதில் கருத்து சொல்ல முடியல.

  ReplyDelete
 3. நல்லா விளக்கியிருக்கிறிங்க பிரபு சார்
  நாஸ்ட்ராடாம்ஸ் பத்தி இன்னும் எலுதுங்க
  visit my blog
  www.vaalpaiyyan.blogspot.com

  ReplyDelete
 4. Tnx Anonymous...
  ----------------------
  நன்றி... chandru2110...
  நேற்றுத்தான் பார்த்தேன் யூட்டியூப்பில் ஹிஸ்ரி சனல்ட புறோகிறாமிருக்கு...
  ----------------------
  நன்றி... VAAL PAIYYAN...
  சேர் போடாதிங்க... அந்தளவுக்கில்லை...
  உங்க புளொக் அடிக்கடி பாக்கிறனான்...

  ReplyDelete
 5. நல்ல பதிவு , வழமை போல , என்னா !! ஏன் இப்பிடி பயமுறுத்திறீங்க எல்லாரும் உலகம் அழியப்போகுது எண்டு .. அழியுமா ? அழியாதா ?... முதலே சொன்னா சந்தோஷமா இருப்பம்ல ...

  ReplyDelete
 6. நன்றி...
  அவ்... 2012 ல அழியாது... இவங்க ஓவர் பிட்டப் கொடுக்கிறாங்க... :D

  ReplyDelete
 7. நோஸ்ட்ராடமஸ் பற்றிய தொடர் முற்றும் படித்தேன், ஆனால் திடீரென ஆரம்பித்து திடீரென் முடித்துவிட்டது போலுள்ளது. இன்னும் விரிவாய் கொண்டு போயிருக்கலாம். இத்தனை கான்ட்ரவர்ஸியான விஷய‌ங்களையும் நன்றாக தமிழாக்கப்படுத்தியிருக்கிறீர்கள். நன்றி, பகிர்ந்தமைக்கு.

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails