Total Pageviews

Friday, 19 February 2010

3ம் உலக யுத்தமும் நோஸ்ராடாமஸிம்... (பட விளக்கம்)


நோஸ்ராடாமஸ் நாளைய உலகம்.

---------------------------------------------------------------------------------------------------------------
இது நோஸ்ராடாமஸ் தொடர்பான 3ம் பதிவு...

போன பதிவில் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள் சம்பந்தமான விடையங்களை பார்த்தோம்...
படங்களுக்கு புதிய விளக்கம் தெரிந்தவர்கள் கூறுமாறு கேட்டிருந்தேன்... யாரும் கூறவில்லை...
ஆனால், எதிர் பார்த்த அளவு வரவேற்பு இருந்தமையால் இந்த அடுத்த பதிவினை இடுகிறேன்...‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍
---------------------------------------------------------------------------------------------------------------

        இது தான் நோஸ்ராடாமஸ் ஆல் நேரடியாக எழுதப்பட்ட புத்தகத்தின் வடிவமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இத்தாலி லைப்ரரியில் தற்போது இருக்கிறதாம்.
--------------------------------------
இந்த படத்தை பாருங்கள்.
ஒரு கட்டிடம் எரிவது போன்று வரையப்பட்டுள்ளது.
இது தான் 2001.09.11 அன்று அமெரிக்க இரட்டை கோபுரத்துக்கு நடந்த விபரீதத்தை விளக்குவதற்காக... நோஸ்ராடாமஸால் வரையப்பட்ட படம் என கருதப்படுகிறது. 
இது தொடர்பான அவரது குறிப்பிலும்... "ஒரு புதிய நகரத்தை... விண்னிலிருந்து வரும்  இயந்திர பறவைகள் தாக்கியழிக்கும்.." எனும் பொருள் பட எழுதியுள்ளாராம். அந்த புதிய நகரம் எனும் வார்த்தை நியுஜோர்க் கை குறிப்பதாக கருதப்படுகிறது. இயந்திர பறவைகள் என்பது... விமானம். (நோஸ்ராடாமஸ் காலம் 1600) 
ஆனால்... இன்னொரு குறிப்பில் "விண்ணிலிருந்து வரும் நெருப்பு கற்கல் புதிய நகரை நிலை குழைய செய்யும்..." அனும் பொருள் பட கூறியுள்ளார்.  அதுவும் இதே சம்பவத்தை குறிப்பதாக இருக்கலாம். அல்லது... 3ம் உலக யுத்தத்தின் போது நடக்க இருக்கும் அணுகுண்டு தாக்குதல்களை குறிப்பதாகவும் இருக்கலாம்.
--------------------------------------

இந்த படத்தை பாருங்கள்... 
பாம்பு இரத்தம் அல்லது விசம் கக்குவது போல்... வரையப்பட்டுள்ளது. 
இது 3ம் உலக யுத்தத்தை குறிக்கும் படம் என கருதப்படுகிறது. இங்கு இந்த 3 இரத்த துளிகளும், 3 தனிப்பட்ட மனிதர்களை குறிக்கும் என... ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 
முதல் துளி... ஜூலி கிறிஸ் (??? பேயர் நினைவில்லை... தெரிந்தவர்கள் கூறவும்...)
இரண்டாம் துளி...  ஹிட்லர்.
மூன்றாம் துளியாக... பெரும்பாலும்... பில்லேடன் கருதப்படுகிறார். மேலும் சில தெரிவுகளும் இருக்கின்றன... கடாஃபி, முல்லா உமர் என்போரும் இதில் அடங்குகின்றனர்...  கேனல் கடாஃபி தொடர்பான மேலும் பல குறிப்புகள் இருப்பதாக சந்தேகிக்க படுகிறது. ஆனால் உறுதியாக அவர்தான் என கூற முடியவில்லை.
( நோஸ்ராடாமஸின் குறிப்புகளில் ஒரே ஒரு குறிப்பில் மட்டும் தான் தெளிவாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும்... லூஜி பாஸ்டர் (??? அ அல்லது டாவினா என நினைவில்லை) உடையது.)

இந்த படத்தில்... 3 துளிகள் காட்டப்பட்டு உள்ள போதும். அவரின் குறிப்புகளின் படி... 7 உலக யுத்தம் நடை பெறும் என்பது திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளதாம். அதனால்... இப்படத்துக்கு வேற அரத்தமும் இருக்கலாம் என கருதப்படுகிறது. ( எனது கருத்தின் படி... முதல் 3 ம் மட்டும் தான் தனிப்பட்ட மனிதர்களின் முக்கிய பங்களிப்பால் ஏற்பட்ட, ஏற்படபோகும்... யுத்தம் என்பதை குறிப்பதாக இருக்கலாம்.

இன்னொரு முக்கிய மான விடையம்...
3ம் உலக யுத்தம் அடுத்தடுத்த நாடுகளின் மூலமே ஏற்படும் என கூறப்பட்டுள்ளது... (இந்தியா,சீனா???!!!... வடகொரியா, தென் கொரியா...???!!!)

காலம் ஒழுங்காக கூறமுடியவில்லை... 2012 தொடக்கம் 2023 வரைக்கும் இடையில் நடைபெறும் என கருதப்படுகிறது. ( 2016 ஆக இருக்குமோ???)
--------------------------------------

இப்படம் 3ம் உலக யுத்தத்தின் பின்னர், நாடுகளின் நிலையை குறிப்பது என கருதப்படுகிறது. இதன் விளக்கத்தையும்... 
(3ம் உலகயுத்தம் தொடர்பானதும்)
மேலும் பல விடையங்களையும் அடுத்த பதிவில் பார்ப்போம்.

9 comments:

 1. ஈழத்தமிழரின் ஜ,ய குழப்பம் இங்கும். நியூ யோர்க் அல்லது யார்க், லூயி... எல்லாவற்றும் ஜ போட்டு கடுப்பேற்றாதீர்கள். j = ஜ, y = ய. வித்தியாசம் பிடிபடா விட்டால். ஜவைத் தூக்கிக் கடாசி விட்டு, ய மட்டும் போட்டு எழுதுவது தானே. ஜ போடா விட்டால் ஒரு ஸ்டைல் இருக்காது போல. காட்டான் என்பார்கள் எல்லோரும்.

  ReplyDelete
 2. ம்...
  ஜ,ய வித்தியாசம் இருக்கிறது தான். ஆனால், பதிவுகள் நன்று.

  ReplyDelete
 3. நன்றி
  நீங்க வளாகத்துக்கு புதுசு போல... நான் முதலே சொன்னன் நான் எழுத்து பிழைவிடுவன் என்று...
  ஆனால், என் ஒருவனுக்காக ஈழத்தமிழர் அனைவரையும் குறிப்பிடுவது அழகல்ல... பிறகு காட்டான் என்பார்கள்...
  நீங்க வாசிக்கும் முறை வேறு... நாங்க வாசிக்கும் முறைவேறு...

  ReplyDelete
 4. நல்ல காத்திரமான பதிவு நண்பரே,
  விரைவில் அடுத்த பதிவினை இடவும்.

  ReplyDelete
 5. நல்ல பதிவு ஆர்வமானதும் கூட ஓகே அதிருக்கட்டும் வளாகத்துக்கும் வசை தொடங்கிட்டதா! நான் சொல்லலை இதுதான் தமிழன்,சொல்லும் விசயத்தில் இருப்பதை அறியவிருப்பப்படாமல் சொற் பிழையை நோண்டுவானுகள்,sir என்பதை நாம் சேர் என்று உச்சரிப்போம் சிலர் சார் என்பார்கள் இரண்டில் எது சரி? முட்டாள் தான் முட்டையில் மயிர் புடுங்குவான்.

  ReplyDelete
 6. நீங்க சொல்வது ரொம்ப சரிங்க விருமன்

  ReplyDelete
 7. நன்றி,
  சுரேன்... நன்றி விறுமன்... நன்றி பிரப(=)... ராஜ்...

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails