Total Pageviews

Monday, 22 February 2010

சிவாஜி (ஒரு பக்க வரலாறு)


ஒரு பக்க வரலாறு
-----------------------------------------------------------------------------------------
நட்புக்கரம் நீட்டி வரவைழத்த ஒளரங்கசீப், நயவஞ்சகமாகத் தன்னையும் தன் மகைனயும் கைதுசெய்து சிறையில் அடைப்பான் என்று கொஞ்சமும் எதிர்பார்த்திராத மராட்டிய மாவீர‌ன் சிவாஜி, அடிபட்ட புலி போல ஆக்ரா சிறையில் உறுமிக்கொண்டு இருந்தார். மகன் சம்பாஜியிடம், ‘‘ஒவ்வொரு வியாழனும் ஏராளமான பழங்கள் வைத்து பூஜித்து, அதைத் தானம் செய்வது
வழக்கம் என்று சிறை அதிகாரிகளிடம் சொல்லி, அதற்கான ஏற்பாடுகளைச் செய்’’ என்றார்.

‘‘தந்தையே! நாம் பெரும் ஆபத்தில் இருக்கிறோம். இப்போது எதற்காக பூஜை?’’
என்று மகன் கேட்க, ‘‘மகனே! நீ அச்சத்தின் பிடியில் அகப்பட்டுவிட்டாய் என
நினைக்கிறேன். அச்சப்பட்டவர்கள் வெற்றி பெற்றதாகச் சரித்திரம் கிடையாது. நான் இங்கிருந்து தப்பிக்கத்தான் வழி சொல்கிறேன்’’ என்றார் சிவாஜி.
‘‘முகலாயர்களிடம் இருந்து தப்புவதா... அது முடியுமா?’’ என மீண்டும் மகன்
சந்தேக‌த்துடன் கேள்வி எழுப்ப, ‘‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’’ என்றார் சிவாஜி உறுதியோடு!

அதன்பின், சிறைகுப் பழக்கூடைகள் வருவதும் போவதும் வழக்கமாயிற்று. அந்தக் கூடைக்குள் அமர்ந்துதான் சிவாஜியும் சம்பாஜியும் ஒருநாள் தப்பித்தார்கள்.

பூனேவுக்கு அருகே, 1630-ல் சிவானி கோட்டையில் பிறந்தார் சிவாஜி. தந்தை ஷாஜி, பூனே சுல்தானின் படைப்பிரிவில் மேஜராகப் பணியாற்றி வந்ததால், தாய் ஜீஜாபாய் மற்றும் தளபதி ஷாயாஜியின் மேற்பார்வையில் வளர்ந்தார் சிவாஜி. சிறு வயதிலேயே குதிரை ஏற்றம், வாட் போர், வில் வித்தை, குஸ்தி போன்ற வீர‌ தீர விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டினார். இந்துக்கைள அடக்கி ஆண்ட முகலாய ஆட்சியின் மீது அவருக்கு இயல்பாகேவ
வெறுப்பு இருந்தது. தாய் ஜஜீ போய் சொன்ன வீர‌ க் கதைகளும், சுவாமி ராமதாசரின் ஆசீர்வாதமும், இந்து சாம்ராஜ்யம் நிறுவ சிவாஜிக்கு ஆர்வமும் ஊக்கமும் தந்தன.
‘‘மாபெரும் படை கொண்ட முகலாயர்கைள என்னால் வெல்ல முடியுமா?’’ என்று சிவாஜி கேட்டேபாது, அவரது தாயும், சுவாமி ராமதாசரும் ஒரு சேரச் சொன்ன பதில்... ‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’.

பூனாவுக்கு அருகே மலைகளில் வசித்து வந்த ‘மாவலி’ மக்களிடமிருந்து
இளைஞர்கைளத் திரட்டி, ‘கொரில்லா’ படை அமைத்தார் சிவாஜி. முகலாயர்களின் பிடியில் இருந்த ரோஹிதேசுவரர் ஆலயத்தையும், தேரான் கோட்டையையும் கைப்பற்றினார். சிவாஜியின் இந்த வெற்றி, இந்துக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தேவ, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவரது படையில் இணைந்தார்கள். அதன்பின் குபா கோட்டை, இந்திரபுரி, ஜாவ்லி என கிட்டத்தட்ட முந்நூறு கோட்டைகள் சிவாஜி வசமாயின. ஒவ்வொரு முறையும் போருக்குப் புறப்படும் முன், தனது படையினரிடம், ‘‘தோல்வியில்லை, தோல்வியில்லை... துணிந்தவனுக்குத் தொல்வியில்லை’’ என்று உற்சாகக் குரல் கொடுப்பார் சிவாஜி.துணிந்து கிளம்பும் அந்தப் படை வெற்றி வாகை சூடி வரும்.

ஒருமுறை, சிவாஜியின் கோட்டை முன் பெரும் கடெலன முகலாயர் படை
நின்றது. போரைத் தவிர்க்க விரும்பினால், சிவாஜி நிராயுதபாணியாக தன்னிடம் பேச்சு வார்த்தை நடத்த வரேவண்டும் என அழைப்பு விடுத்தான் தளபதிஅப்சல்கான். தனிமையில் போக‌வண்டாம் என அனைவரும் தடுத்தபோதும்,

‘‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’’ எனப் புன்னைகத்தவாறு பகைவனைத்
தேடிப் புறப்பட்டார் சிவாஜி. ஆயுதமின்றித் தனிமையில் வந்த சிவாஜியைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தஅப்சல்கான், ‘‘உன்னிடம் சமாதானம் பேசவா இத்தனை படையுடன்வந்திருக்கிறேன்’’ என்றபடி சரேலென‌ தன்னுடைய வாளை உருவி, சிவாஜியின் மார்பில் செலுத்தினான். உள்ளே கவசம் அணிந்திருந்த சிவாஜி, கண் இமைக்கும் நேரத்தில் அப்சல் மீது பாய்ந்து, தன் கைகளில் மறைத்து வைத்திருந்த விஷம் தேய்த்த புலி நகங்களால் அவைனக் கீறிக் கொன்று போட்டார். தலைவன் இல்லாத படைகளைப் பந்தாடியது மராட்டிய சேனை. மாபெரும் வீர‌னாக, ‘சத்ரபதி’ என முடிசூடினார் சிவாஜி.

1680-ம் ஆண்டு மரணமைடயும் வரையில், சிவாஜியைத் தோல்வி என்பது
நெருங்கவே இல்லை. காரணம், ‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’ என்கிற
அவரது தாரக மந்திரம்தான்.
---------------------------------------------------------------------------------------
(நன்றி : எஸ்.கே.முருகன் , பாசீனிவாசன் ( அவர்களால் வெளியிடப்பட்ட (விகடன் பிரசுர ) புத்தகத்திலிருந்து எழுதப்படுகிறது)


1 comment:

  1. Good. Please use the kind of Tamil used in this page. Your Tamil is very difficult for us.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected