**: 5 :**
-------------------------------------------------------------------------------------------5 ம் நம் நம்பர் காரங்களுக்கு...
-------------------------------------------------------------------------------------------
5ம் திகதி...
இத்திகதியில் பிறப்போர் சிறு வயதிலேயே பெரிய இலட்சியங்களால் கவரப்படுவர். வசீகரமான குணங்களும், பிறரை மதித்தலும் எல்லா மேலான குணங்களும் நிரம்பியவராக இருப்பர். பிறருக்கு போதிப்பவராவர். தெய்வீகமான வாழ்க்கை அமைவதுண்டு.
14 ம் திகதி...
பிரயாணத்தில் சலியாத ஊக்கமும் ஓரளவு பிடிவாதமுமிருக்கும். பொருட்களை சேர்க்கும் அதிஸ்டமிருக்கும், ஆகையால் எல்லாவிதமான பெரும் வியாபாரங்களும் பலிதமாகும். பணப் புழக்கம் அதிகமாகவிருக்கும். எப்போதும் இவர்களை சுற்றி ஜனக்கூட்டம் இருக்கும். பிறரை நம்புவதால் பெருத்த நட்டங்கள் ஏற்பட்டுவிடும். மழை, இடி, நெருப்பு, வெள்ளம் இவைகளைக்கண்டு விலகவேண்டியது அவசியம். உயிருள்ளவரை பிறர் உதவியுண்டு. குன்றாத அதிர்ஷ்டமும் அடிக்கும்.
23ம் திகதி...
இவர்களால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை. மிதமிஞ்சிய ராஜவசியமும், ஜனவசியமும் இருக்கும். இவர்களைவிட மேல் நிலையில் இருப்பவர்களும் இவர்களைப் புகழ்வார்கள்.மேலான பண்பாடுகளும் நல்ல நடத்தைகளும் அமையப்பெறின் இவர்கள் சரித்திரம் போற்றும் பெரியாராக ஆகிவிடுவார்கள்.
அதிஸ்ட காலம்...
5,9,14,18,23,27
அதிஸ்ட நிறம்...
சாம்பல்
துரதிஸ்ட நிறம்...
பச்சை, கறுப்பு
இரத்தினம்....
வைரம். இயலாதவர்கள் ZIRCON கற்களை தரிக்கலாம்.
-------------------------------------------------------------------------------------------
சொன்னது - வி.எ.சிவராசா BA (நன்றி)
உங்கள் லெமூரியா'வுக்காக வெயிட்டிங்..
ReplyDeleteநன்றி..
Ohh sorry... Friday podava...
ReplyDeleteahaaaaaaaaaaaaaaa thanks anna
ReplyDelete