Total Pageviews

Thursday 11 February 2010

சுட்ட எண் ஜோதிடம்.04 (பகுதி 06)

~*4*~
---------------------------------------------------------------------------------------

இன்று 4 ம் நம்பர்காரங்களுக்கு....
---------------------------------------------------------------------------------------

4ம் திகதி...
மிகுதியான கண்டிப்புடையவர்களாக இருப்பார்கள். நல்ல துணிச்சலும் பலமும் இருக்கும். போர் வீரர் போன்று வாழ்வார்கள். உண்விலும், போகங்களிலும் மிதமாக இருக்க பழகிகொள்ள வேண்டும். வாழ்வில் எதிர்பாராத சம்பவங்கள் நிகழும். சோர்வடையக்கூடாது. இனிமையாகவும் கவர்ச்சியாகவும் பேச கத்துக்கொள்ளவேண்டும்.

13ம் திகதி...
வாழ்க்கையில் திடுக்கிடும் படியான சம்பவங்கள் எதிர் பாராமல் நிகழும்.  அபாயங்கள் வந்து நீங்கும். சிறு வயதிலேயே  குடும்பத்தில் இவர்களை பாதிக்க கூடிய மாறுதல்கள் ஏற்படும். மிக்க வலிமையுடைய இவர்களை நேர்மையாகவும்; மறைவில்லாமலும் நடத்திகொள்ள வேண்டும். அப்படி வாழ்ந்தால் மிக உன்னத நிலையை அடைவார்கள். பெண்களால் சிரமங்கள் நேரும்.

22ம் திகதி...
நன்மையை விட தீமையே இவர்களை அதிகமாக கவரும். விதி இவர்களின் வாழ்க்கையை தீய வளியில் கொண்டு செல்ல பல சந்தர்ப்பங்களை கொடுக்கும். மித மிஞ்சிய நிர்வாக சக்தியும், சாமர்த்தியமும் உண்டாகும். சூழ்ந்திருப்போர் இவர்களை வஞ்சிக்க சமயம்பார்த்து கொண்டிருப்பர். இவர்களுக்கு பணம் சம்பாதிப்பது எளிது. சுலபமாக பந்தயங்களிலும்,  சட்டத்துக்கு முரணான வளிகளிலும் சம்பாதிப்பார்கள். இதிலிருந்து விலகியிருப்பது நலம்.
வாகனம், அச்சுக்கூடம், ஹோட்டல் இவையெல்லாம் இவர்கள் இலாபம் சம்பாதிக்க கூடிய துறைகள்.

31 ம் திகதி...
இது முற்று முழுதாக  மனோவசியம் சார்ந்த எண்ணாகையால் மிகுந்த தைரியமும், நுட்பமான அறிவும், மன உணர்வுமிருக்கும். புதிதாக பழகிறவர்கள் கூட சில நிமிடங்களில் இவர்கள் சாதாரன மனிதர்கள் இல்லை என்பதை கண்டு பிடித்து விடுவார்கள். இலாப நட்டங்களை பொருட்படுத்தாமல் தன்னிஸ்டப்படியே நடப்பார்கள்.  எப்படி பட்ட எதிரியையும் பணிய வச்சு விடுவார்கள். ஏகாந்த வாசத்திலும்... வேதாந்த ஆராச்சிகளிலும் ஆர்வம் காட்டுவார்கள்.  பொகுஜன உபகாரி...

அதிஸ்டகாலம்...
1,10,19 மிகச்சிறப்பு
4,13,22,31 சிறப்பு

துரதிஸ்ட தினம்...
8,17,26 மிக தீமை
7,16 தீமை

அதிஸ்ட நிறம்...
மஞ்சள், வெளிர் நீலமும் பரவாயில்லை.

துரதிஸ்ட நிறம்...
கறுப்பு

இரத்தினம்....
வெளிர் நீல கல் நன்மை,  கோமேதகமும் நல்லம்



1 comment:

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected