Total Pageviews

Tuesday, 23 February 2010

சுட்ட எண் ஜோதிடம்.03 (பகுதி 07)

**3**
---------------------------------------------------------------------------------------
இது 3 ம் நம்பர்காரங்களுக்காக....
---------------------------------------------------------------------------------------
3ம் திகதி...
நல்ல சிந்தனை சக்தியுடையவர்களாக இருப்பார்கள். தெய்வ பக்தியையும் சரீர பலத்தையும், போற்றி விருத்தி செய்ய வேண்டும். உணர்ச்சிகளை மேன்மையான முறையில் வெளியிட பழகிகொள்ளவேண்டும். கணிதத்தில் இவர்களது மூளையின் பலம் விருத்தியாகும். காவியங்கள், ஓவியங்கள் முதலியவற்றை ரசிக்க பழகிக்கொள்ள வேண்டும். வாழ்க்கைகெளரவமாகவும் உயர்வாகவும் அமையும். நடுவயதுக்கு மேற்பட்டு புகழ் உண்டாகும்.

12ம் திகதி...
இவர்கள் தன்னலங்கருதாத உழைப்பினாலும், தியாகத்தாலும் புகழடைவார்கள். வாழ்க்கையே உலகோருக்காக செய்யும் தவமாக முடியும். தியாகிக்கான குணங்கள் எல்லாம் பிறவியிலேயே அமைந்து இருக்கும். இளவயதிலேயே கவளைகளையும் பொறுப்புகளையும் உணரவேண்டியவர்கள் ஆதலால், இத்திகதியில் பிறப்பவர்களில் பெரும்பாலானோர் சிறு வயதிலேயே தந்தையை இழக்கின்றனர். தாயை மாத்திரம் சிலர் இழப்பதுண்டு. இதன் காரணம் எண்ணின் ஆதிக்கம் குறைந்து இருப்பது தான். பிரமிக்க தக்க பிரசங்கியாவார்கள்.

30ம் திகதி...
தீர்க்க சிந்தனையும் நுட்பமான மூளையுமுடையவர்கள். கம்பீரமாக வாழ்வதையே விரும்புவார்கள். தன்னிஸ்டப்படி நடக்கும் தீவிரவாதியாக இருப்பார்கள். எதையும் கூர்ந்து கவனித்து நுட்பமாக அறியக்கூடிய புத்திசாலிகள். துப்பறியக்கூடிய அளவுக்கு யோசனை கூடியவர்கள். மிகுந்த துணிச்சலும், நெஞ்சழுத்தமும் உடைய இவர்கள் தோல்வியைகண்டு கலங்க மாட்டார்கள். கலைகளில் சுலபமாகத் தேர்ச்சியடையக் கூடிய இவர்கள் தனிமையை ஓரளவு விரும்புவார்கள். இருக்கும் சக்தி எல்லாத்தையும் இப்பிறவியிலேயே உபயோகித்துப் பார்த்து விடுவார்கள்.

அதிர்ஸ்ட தினங்கள்:
3,9,12,18,21,27,30 திகதிகள் மிக்க நன்மையானவை.
விவாகம்,தொழில் என்பவற்றை கூட்டென் 3,9 வரும் தினங்களில் செய்தால் பலன் நீடித்து இருக்கும்.

துரதிஸ்ட தினங்கள்:
6,15,24 திகதிகள் சில சமயங்களில் சாதகமாகத்தோன்றி பின்னர் தீமை விளைவிக்கும்.
கூட்டெண் 6 ஐயும் தவிர்க்கவும்.

அதிர்ஸ்ட நிறங்கள்:
ஒரேஞ், றோஸ், மஞ்சள்,சிகப்பு, நீலம்
தாமரை பூவின் வர்ணம் மிக்க அதிஸ்டமானது.


துரதிர்ஸ்ட நிறங்கள்:
கருனீலம், கறுப்பு, ஆழ்ந்த பச்சை

இரத்தினம்:
செவ்வந்தி (Amethyst)

---------------------------------------------------------------------------------------
சொன்னது - வி.எ.சிவராசா BA (நன்றி)



2 comments:

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected