Total Pageviews

Sunday, 7 February 2010

நோஸ்ராடாமஸ் - மாறுபட்ட(பட‌)விளக்கம்.


நோஸ்ராடாமஸ் நாளைய உலகம்.

-----------------------------------------------------------------------------------------
"நோஸ்ராடாமஸ்" விளங்க முடியாத மனிதரைப்பற்றிய இரண்டாம் பதிவு இது. போன பதிவில் அவரால் வரையப்பட்டவை என கருதப்படும் படங்களை போட்டு விட்டு விளக்கம் தருவதாக கூறியிருந்தேன். பலர் ஆர்வமாக எழுதும்படி கேட்டிருந்தார்கள். ஆனால், நான் அதை தொடந்து அடுத்த பதிவை எழுது வதற்கு அதிக காலம் எடுத்து விட்டேன்.

ஓகே... ஒவ்வொரு படமாக ஆராய்வோம்....
-----------------------------------------------------------------------------------------
இந்த படத்தில் ஒரு தேவதை போன்ற உருவமும்... அதனை ஒரு போர் வீரன் தாக்க முனைவது போன்றும் வரையப்பட்டுள்ளது. 
இது குறிக்க வருவது "போப் ஜோன் 2" சுடப்பட்ட சம்பவத்தையாகும். (13/05/1981)
இப்படத்தில்... 

தேவதை போன்று வரையப்பட்ட படமானது "ஜோன் போப் 2" பை குறிக்கின்றது. அதே வேளை சிப்பாய் உரு அளவில் தேவதையைகாட்டினும் சிறிதாக வரையப்பட்டதன் காரணம்... போப் இக்கு ஆபத்து வரும் ஆனால்... போப்பின் உயிரை பறிக்கும் அளவுக்கு பாரதூரமானதல்ல என்பதை குறிப்பதற்காகும்.

இப்படத்தின் பின் புலத்தில் ஒரு மிருகம் படுத்திருப்பது போன்றும்... ஒரு தலை காணப்படுவது போன்றும்... வரையப்பட்டிருப்பதன் காரணம் தெளிவு படுத்தப்பட வில்லை.
( விளக்கம் இதுவாக இருக்கும் என கருதுபவர்கள் கூறவும்.)

----------------------
சரி... இது நடந்து முடிந்தது. இதை பற்றி கதைத்து வியக்கலாமே தவிர ஒரு பலனுமில்லை. (படத்தை வைத்துக்கொண்டு விளக்கம் தேடியிருப்பார்கள் என கருதவும் சாத்தியமுண்டு.) அதனால்... இனி நடக்க இருக்கும் ஒரு சம்பவத்தை பார்ப்போம்.

இந்த படத்தை பார்த்தீர்களானால்... ஒரு தேவதையை ஒரு வீரன் கழுத்தில் குத்துவது போன்று வரையப்பட்டுள்ளது. இங்கும் "போப்" ஏ தேவதையாக வரையப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. இந்த படத்தில் தேவதை உருவுக்கு நிகரான உயரத்தில் சிப்பாயினதும் உரு வரையப்பட்டிருப்பதானது போப்பின் அகால மரணத்தை குறிக்கிறது. 
மேலும், சிப்பாயின் வாளை வானத்திலிரு ஒரு கரம் தடுப்பது(???) போன்று காட்டப்பட்டுள்ளது. அதனது அர்த்தமும் 3 நெருப்பு கம்பங்கள் எரிவதன் அர்த்தமும் தெளிவாக விளக்கப்படவில்லை. (எனது கருத்தின் படி வேற்று மதங்களை குறிப்பதாக இருக்கலாம்.).( விளக்கம் இதுவாக இருக்கும் என கருதுபவர்கள் கூறவும்.)

இது 16 ம் பெனடிக் போப் (தற்போதைய போப்) பை குறிப்பதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. எனினும், நோஸ்ராடாமஸின் குறிப்புக்களின் காலங்களை திட்ட வட்டமாக கணிப்பிட முடியாது என்பதால். நிச்சயமாக கூறமுடியவில்லை. (80% நம்புகிறார்கள், இது 16ம் பெனடிக் கைத்தான் குறிக்கிறது என.)

----------------------
அடுத்தும் இதே நிகழ்ச்சிகளுடன் சம்பந்தமான ஒரு படத்தை பார்ப்போம்... ( இந்த சம்பவங்களை ஒரேயடியாக பார்ப்பது இலகுவாக இருக்கும்.)

கோட்டை ஒன்று பத்தி எரிந்து கொண்டிருப்பது போன்றும், போர் வீரர்கள் சிலரை கொளை வெறியுடன் தாக்குது போன்றும் வரையப்பட்டுள்ளது. இப்படத்துக்கு பொருந்த தக்க தாக அவரின் நான்கு வரி குறிப்புகள் 3 உள்ளனவாம்.
இப் படமானது... வத்திக்கானின் வீழ்ச்சியையே குறிப்பதாக கருதப்படுகிறது.
படத்தில் அடி வாங்குபவர் கிறிஸ்தவருக்குரிய இயல்புடன் வரையப்பட்டுள்ளார், அதே வேளை போர் வீரர் குதிரையில் இருப்பதன் மூலம் அரேபிய இஸ்லாமியரால் ஏற்பட போகும் ஆபத்தை குறிப்பதாக கருதப்படுகிறது. 
நோஸ்ராடாமஸின் குறிப்புகளின் படியும் வத்திக்கான் எரியும் எனவும்... கிறிஸ்தவர்கள் தமது மதம் மீதான பற்றை இழப்பார்கள் எனவும். வேற்று மதமொன்று தனது வீரியத்தை அதிகரித்து கொள்ளும் எனவும் குறிப்பிட்டுள்ளாராம்.
(படத்தின், விளக்கம் இதுவாக இருக்கும் என கருதுபவர்கள் கூறவும்.)

-----------------------------------------------------------------------------------------
இனி வரும் பதிவுகளில்...
3ம் உலக போர்...
இந்தியா, சீனாவின் நிலை...
ஆசியா, இரோப்பா வின் நிலை...
அமெரிக்காவின் நிலை...
உலக அழிவு... 
என்பவற்றையும்  இவ்வாறான படங்களுடன் இணைத்து பார்ப்போம்.
-----------------------------------------------------------------------------------------
இந்த பதிவு நல்லம். பிரயோசணமானது என கருதினால் வோட் போட்டு பலர் படிக்க உதவுவதுடன்... எழுதவும் ஊக்கப்படுத்துங்கள்.




7 comments:

  1. இது மதங்களை புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை.
    நோஸ்ராடாமஸ் கிறிஸ்தவ மதம் பற்றியே அதிகமாக கூறியுள்ளமையால் அதை முதலில் எழுதியுள்ளேன்.

    ReplyDelete
  2. நல்ல பதிவு சார்.
    படங்களை பெரிதாக போடுங்க சார்.

    ReplyDelete
  3. நண்பரே வணக்கம்
    நல்ல பதிவு --இந்திய இலங்கை பற்றிய குறிப்புகளும் இருப்பதாக கேள்விபட்டேன் தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. இலகு வழியில் இணையத்தினூடு பணம் தேட அந்த இணப்பை அழுத்துங்கள்=http://www.trekpay.com/?ref=169994

    ReplyDelete
  5. thodardhu eludhungal nanraga ulladhu... Kutty Thevu (srilanka) onral mattum tane 3m ulaga war varum enru kurupitu irupathagavum karudhu kiren mudinthal atanai panriyum vilakavum nanbare... 21-12-2012 End of the World Day... plz confirm.

    ReplyDelete
  6. everything very nice,,,,, good job u have done. try to upload little big images if u can...............

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected