ஒரு மண்ணும் விளங்கல...
--------------------------------------------------------------------------------------"ஒரு மண்ணும் விளங்கல" பகுதி எழுதி கன நாளாச்சு...
இன்று சில சம்பவங்களை பார்ப்போம்...
--------------------------------------------------------------------------------------
சம்பவம் 1...
1920 இல் தென்னமெரிக்க பெரு நாட்டில் 3 ஆங்கிலேயர்கள் ஒரே ரெயில் பெட்டியில் பயணித்தார்கள். அந்த பெட்டியில் மொத்தமே 3 பேர்தான். அவர்கள் தங்களுள் கதைச்சுக்கொண்டார்கள்.
முதலாமவரின் பெயர் பிங்ஹாம்... 2வது நபரின் பெயர் போவெல்... 3ம் நபரின் பெயர் பிங்ஹாம் போவெல்!!!!
( த றூட்ஸ் ஒஃப் கொன்ஷிடன்ட்ஸ்)
சம்பவம் 2...
ஃப்ராங்ரிக்டர் ஓய்வு பெற்ற போர் வீரர். ஓய்வின் பின்னர் பேரூந்து கொம்பனியில் பணியாற்றி வந்தார். ஒரு முறை நிமோனியா ஏற்பட்டு ஹொஸ்பிடலில் சேர்க்கப்பட்டார். அதே ஹொஸ்பிடலில் இன்னொரு ஃப்ராங் ரிக்டரும் சேர்க்கப்பட்டார்! அவரும் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் பேரூந்து நிலையமொன்றில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.
( த றூட்ஸ் ஒஃப் கொன்ஷிடன்ட்ஸ்)
சம்பவம் 3...
1940 ம் ஆண்டு...
ஒரு இளம் இராணுவவீரரின் மனைவி, அவர் நீண்ட நாட்களாக பாதுகாத்திருந்து வைத்திருந்த போட்டோவை போஸ்டில் அனுப்பி வைத்திருந்தார். இராணவ வீரரும் ஆவலுடன் திறந்து பார்த்த போது....
அதில் இவரின் முகசாயலையும் வயதையும் ஒத்த வேறொருவரின் புகைப்படங்கள் இருந்தன.
லெட்டரை திருப்பி பார்த்த பொது 'ஸ்டீஃபன் பேப்' என குறிப்பிட பட்டிருந்தது. ( இவரி பெயர் 'பேஜ்').
இவரின் இராணுவ நம்பர் 1509321. பேப்பின் இராணவ நம்பர் 1509322!!! உடனே விசாரித்து பார்த்த போது அவர் மற்றொரு குழுவுடன் பணியாற்றிகொண்டிருப்பது தெரிய வந்தது.
அங்கு படங்களை ஒப்படைக்க சென்ற போது... என்ன ஆச்சரியம்... பேப் இவரின் படங்களை கையில் வைத்து முழிச்சுக்கொண்டிருந்தார்!!!
சில காலங்களின் பின்...
இராணவத்திலிருந்து விலகிய பின் லண்டன் ரான்ஸ்போர்ட்டில் றைவர் வேலைக்கு சேர்ந்தார் பேஜ்.
ஒரு முறை செக்கில், சம்பளம் குறைவாக இருக்கவே... கவரை திருப்பி பார்த்தார் பெயர் பேப்! இவரின் கொம்பனியிலேயே வேறொரு கிளையில் றைவராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.
செக் சம்பந்தமாக விசாரிப்பதற்காக ஹெட் ஒஃபிஸ் சென்றபோது... அங்கே அதே முன்னாள் இராணுவ வீரர் முழிச்சுக்கொண்டு நின்டிருந்தார்!!!
அவரின லைசென்ஸ் நம்பரை வாங்கிபார்த்தபோது... 29223. இவரி நம்பர் 29222!!!
(த சன்டே டைம்ஸ்/த றூட்ஸ் ஒஃப் கொன்ஷிடன்ட்ஸ்)
சம்பவம் 4...
1930 ம் ஆண்டு, தெருவில் ஜோசப் பிக்லாக்ஸ் என்பவர் தெருவில் நடந்து கொண்டிருந்த போது, மாடியிலிருத்து ஒரு குழந்தை திடீரென இவர் மேல் விழுந்து தப்பியது.
சரியாக ஒரு வருடம் கழித்து...
அதே தெருவினூடாக பிக்லாக்ஸ் சென்று கொண்டிருந்தார்... மீண்டும் அதே இடம்...
குழந்தை ஒன்று இவர் மேல் விழுந்தது... இம்முறை தப்பியது அதே குழந்தை தான்!!!
--------------------------------------------------------------------------------------
காணும் இதெல்லாம் ஓவரா இருக்கு... சொல்லுறது விளங்குது....
ஆனா இதெல்லாம் தக்க சாட்சியங்களோடு நிரூபிக்க பட்டது...
நான் சொன்னது சரிதானே...
"நாமெல்லாம் ஏற்கனவே புரோகிறாம் பண்ணப்பட்டு இயங்குகிறோமாக்கும்..." என்பது.
/நான் சொன்னது சரிதானே...
ReplyDelete"நாமெல்லாம் ஏற்கனவே புரோகிறாம் பண்ணப்பட்டு இயங்குகிறோமாக்கும்..." என்பது//
athellam ellai. nam than programmer
Tnx Jaganathan...
ReplyDeleteAppa eppidi ethellaam...? ellaame thatseyal endru solla mudiyuma...sir...
ஆச்சர்யமா இருக்கே நண்பா..
ReplyDeleteசுவாரசியமாகவுள்ளது வேறும் இது போல இருந்தால் அறியத்தரவும்!பை!!!
ReplyDeleteNandri... Tharma,Viruman...
ReplyDeleteEnakkum Aachchariyamaa thaan irukku...
Ana ivai nirupikka paddavai...
Innum thara muyattchikiren...