லெமூரியா
-----------------------------------------------------------------------------------------இந்த கிழமை முழுவதும் ஒரு ஒழுங்கான பதிவும் இட முடியவில்லை...
இனி மீண்டும் ஆரம்பிப்போம்....
போன லெமூரியா பகுதிக்கு வழமை மாதிரியே எதிர்ப்பும், சப்போட்டும் இருந்தது.
நான் இங்கு எழுதும் போது... இப்படி இருக்கலாம் என்று தான் பொதுவாக எழுதுகிறேன். நிச்சயமான, நிரூபிக்கப்பட்ட விடையங்கள் வரும் போது அடைப்புகுறியினுள் குறிப்பிட்டு வருகின்றேன். அதனால்... தவறுகள் இருக்க சந்தர்ப்பம் அதிகம். தவறுகளை சுட்டிக்காட்டவும்...
போன பதிவில் லெமூரியர்களின் தொழில் நுட்ப அறிவை பார்ப்பதாக கூறியிருந்தேன்... இன்று அதை பற்றி சற்று ஆராயலாம்.
-----------------------------------------------------------------------------------------
ஏலியன்ஸ் (வேற்று கிரக வாசிகள்) பற்றி பொதுவாக அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவை தொடர்பான சம்பவங்களை பார்த்தோமானால்... அவர்கள் பயணிப்பதாக கருதப்படும் பறக்கும் தட்டானது; திடீரென திசைகளை மாற்றத்தக்கதாயும், பறப்பதற்கு ஓடுபாதை தேவையற்ற ஒன்றாகவும் இருக்கும் என கருதப்படுகிறது.
அதேவேளை இராமாயணத்திலும் இராவணனின் வாகணமான புட்பக (புஸ்பக வோ தெரியல) விமானம் விபரிக்க பட்டுள்ளதும் இதே முறையில் தான். இராவணனுக்கு 10 தலைகள் என கூறப்பட்டுள்ளது அது அவனது அறிவு மேம் பாட்டை குறித்ததாக இருக்கலாம். காலப்போக்கில்... லெமூரியாவின் பேரழிவின் பின்னர்...அவை மாற்றப்பட்டு கதைகளாகியிருக்கலாம்.
(இன்னும் நாம் ஏலியன்ஸின் பறக்குந்தட்டுக்கு கிட்டக்கூட வரவில்லை... பறக்கும் தட்டின் இயக்கம் பற்றியும் பொரிக்ஷா கூறியுள்ளான்.)
பொரிக்ஷா எனும் ரஷ்ய சிறுவன் ஏற்கனவே... லெமூரியாவில் வாழ்ந்தவர்கள் அறிவாளிகள் என கூறியுள்ளான். (பொரிக்ஷா பற்றி ஏற்கனவே குறிப்பு தந்திருக்குறேன்.)
(யார் இந்த ஏலியன்ஸ்? பிறகு பார்க்கலாம்... நீங்கள் விரும்பினால் இத்தொடரிலேயே பார்க்கலாம்.)
மேலும் இந்து சமுத்திரத்தில் மேற்கொள்ளபட்ட சிறிய அளவிலான ஆராச்சியின் போது... சில பாறைப்படிவங்களில் அணு படிவுகள் காணப்பட்டுள்ளன. ( இது "அலெக்ஸான்டர் கொண்ட்ற டேவ்" எனும் பிரபல ஆராச்சியாலரின் தலைமையில் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட போது அறியப்பட்டுள்ளது. இது அவரால் எழுதப்பட்ட புத்தகத்திலிருந்தது.)
இது பற்றி அவர் குறிப்பிடுகையிலேயே... எம்மை விட அறிவில் மேம் பட்டவர்கள் வாழ்ந்திருக்க கூடிய சந்தர்ப்பம் இருக்கலாம் என ஐயம் வெளியிட்டுள்ளார்.
சில நேரம் அது இயற்கையானதாகவும் இருக்கலாம்.
அதே வேளை எகிப்து நதி பகுதிகளிலும், யூப்ரட்டீஸ் நதிகரையிலும் கண்டெடுக்கப்பட்ட புராதன பொருட்களை பார்க்கையில் அதில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களானது திராவிட மொழிக்குடும்பத்தை சார்ந்த எழுத்துக்களாக உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது. ( முன்னர் சுமேரிய எழுத்துக்கள் என கருதப்பட்டு வந்தது. எனினும் பின்னைய ஆராச்சிகளின் மூலம் அது அதிகமாக திராவிட எழுத்துக்களை, சொற்களை ஒத்துப்போவது அறியப்பட்டது. பொதுவாக இடத்தை குறிப்பதற்கு ஊர் எனும் சொல் பாவிக்கப்பட்டுள்ளது.( இன்னும் பல சொற்றகள் உதாரணமாக போட்டிருந்தார்கள் எனக்கு மறந்துவிட்டது.) ஈரானில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் போதும், திராவிட, தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அன்றாட பாவணைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.
இன்னொரு விடையம்... உலக வரை படத்தில் தெற்கு நோக்கி செல்லச்செல்ல திராவிடத்தன்மை அதிகரிப்பதை காணமுடியும். ( நிரூபனமானது.)
ஆகவே... இந்து சமுத்திரத்தில் ஒரு கண்டம் இருந்தது... அங்கு திராவிட மொழிக்கு நிகரான மொழி பேசப்பட்டது எனும் வாதம் நிரூபனமாகிறது.
-----------------------------------------------------------------------------------------
இனி...
மாயன் நாட்காட்டி, எகிப்திய தொழில் நுட்பம் , இன்றைய நாட்காட்டி, இன்றைய தொழில் நுட்பம் என்பவற்றுடனான லெமூரியாவின் தொடர்பை பார்க்கலாம்.
நாட்காட்டி வியக்கத்தக்கதாக உள்ளது.
குறிப்பாக இன்றைய கிறீன் விச்சிக்கு நிகராக முன்னர் இலங்கையில் ஒரு இடம் இருந்துள்ளது....
நல்ல பதிவு. இன்றுதான் உங்களது பதிவுகளை வாசித்தேன். நல்லதொரு முயற்சி. தொடர்ந்து எழுதுங்கள்.
ReplyDeleteமகாபாரத தகவல்களையும். ஒப்பிடலாமே.
பார்த்த சாரதி
மிக நல்ல தகவல் நானும்lookeddriver அதாவது பார்த்த சாரதி யுட கருத்துக்கு ஒத்துப்போகிறேன்.
ReplyDeleteநல்ல பதிவு. ஆனால், இவ்வாறான பதுவுகளுக்கிடையே நீண்ட காலம் எடுத்துகொள்கிறீர்கள்.
ReplyDeleteமிக பயனுள்ள விடயங்களாக எழுதுகிறீர்கள்,வாசிக்க ஆவலாக இருக்கு.ஆனால் நீங்கள் புட்பகவிமானம் பற்றி இந்த நாட்களில் எழுதித் தொலைத்துட்டீர்கள் அதைப்பற்றி மறந்திருந்த நம்மவருக்கெல்லாம் நினைவுபடுத்திப்போட்டியள் இனி நெட்டுகளில் "தலைவர்"புட்பகவிமானத்தில் கடாரம் சென்றார் கிடாரம் சென்றார் அடுத்த மாவீரர் நாளுக்கு தரிசனம் தருவார் என்டு அம்புலிமாமா கதைவிடத்தொடங்குவார்கள் ஏதோ உங்களால் இங்கு சிலருக்கு பிளைப்புஓடப்போகுது.
ReplyDeleteஹலோ... விறுமன், எல்லாத்தையும் அரசியலாக்க வேண்டாம்.
ReplyDeletePlz. Aliens ai patti ezthungka.
ReplyDeleteவிருமன் சும்மா ஜோக் அடிக்காம போங்க . இதுக்கும் அதுக்கும் என்னசம்பந்தம் ...
ReplyDeleteKeepitup!
ReplyDeleteஇருக்கு சுதர்சன்,இருக்கு!ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள வேனும் என்டும் சேரன்(டைரக்டர் இல்லை)சோழன் வரலாறு இதுபற்றியெல்லாம் எதுக்காக இப்பவும் பேசுகிறார்கள்?இது போன்ற தகவல்களில் உள்ள விசயங்களை புரியாமல் நம்மவர்கள் ஏடாகூடமாக உணர்ச்சி வசப்பட்டால்?மேய்ப்பன் இல்லாமல் இருக்கும் மந்தைகளை மேய்க்க நரித்தந்திரத்துடன் மேய்க்க(ஏய்க்க)இருக்கும் ஜந்துக்களுக்கு நாமாக எதுக்கு இது போன்ற வாய்ப்புக்களை கொடுக்க வேனும்?உனர்ச்சி வசப்பட்டதுக்கு வேண்டிய அடி போதாதா?"சோ"சின்னபுள்ளதனமாக சிந்திக்காமல் தமிழருக்கும் மக்கழுக்கும் பயனாக நான் கருத்து சொல்லியுள்ளேன்!ஓகே !
ReplyDeleteநன்றி,
ReplyDeleteபார்த்தசாரதி, விறுமன், நிறோஷ், நித்தியவேனி,சுதர்ஷன்!!!
ஆனா சின்ன ஒரு விண்ணப்பம்... இது பொதுவாக ஒரு மறைந்த கண்டத்தையும் அங்கு நடந்திருக்க கூடியதையும் மட்டுமே எழுதிவருகிறேன்.
கூறியிருக்கும் கருத்து சரி விருமன் . நீங்கள் கூறுவது உண்மை . இவளவு காலமும் நடந்து வருவது இது தான். ஆனால் இந்த பதிவில் அந்த சந்தேகம் எனக்கு எழவில்லை .
ReplyDelete"ancient astronaut theory "...please refer that too..it will help u more...
ReplyDeleteநல்ல கருத்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள். திராவிட ஆரிய மாயையில் சிக்காமல் நடுனிலையுடன் எழுதுங்கள். நன்றி.
ReplyDeleteஇராமாயணம், மகாபாரதம் போன்றவை எல்லாம் லெமூரியாக் கண்ட காலத்திற்க்கு மிகவும் பிற்பாடு வந்தவை. அதை இதனுடன் இணைக்காதீர்கள். உதாரணத்துக்கு சொல்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன். டைரிஸ் நதி மற்றும் டெதீஸ் கடல் போன்றவைகள் தான் இருந்தனர். மதக்கருத்துக்கள் மற்றும் புராண இதிகாச ஆதாரங்கள் காட்ட நினைத்தால் உங்கள் பதிவின் திசை மாறிவிடும் ஆதலால் கூடுமான வரை சரித்திர ஆதாரங்களைக் கொடுங்கள். லெமூரியா கி மூ 5000 ஆண்களுக்கும் முன்னர் இருந்து அழிந்தவை. ஆனால் இதிகாசங்கள் கி மு 2000 அண்டுக்கு உட்ப்பட்டவை. ஆதலால் இதில் இருந்து ஆதாரங்களைக் கொடுக்காதீர். நன்றி.
ReplyDeleteநன்றி பித்தன் வாக்கு அவர்களே!
ReplyDeleteநடுனிலையுடன் எழுதுவதே எனது விருப்பமும்.
ஆனால் ஒரு குழப்பம்,
நீங்கள் சொல்வது போல் கி.மு 5000 என்பது என்னால் ஏத்துக்கொள்ள முடியவில்லை.
காரணம், எகிப்திய இராச்சியத்தின் (கி.மு 10000 தொடக்கம்...) படிவுகள் மீட்க கூடியதாக இருக்கும் போது; ஏன் லெமூரிய படிவுகள் முற்றாக இல்லாது போயிருக்கும்: எனும் சந்தேகம் வருகிறது.
மகா பாரதம் கலியுகத்திற்கு முந்தைய யுகத்தில் ஆரம்பித்து கலியுக முற்பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது. ஆகவே... இராமாயணம் கி.மு 2000 ல் நடக்க வாய்ப்பு இல்லை என்பது எனது கருத்து.
கூடிய வரையில் ஆதாரங்களுடன் எழுத முயற்சிக்கின்றேன்.
சேர்... இது இறுமாப்போட உங்களுக்கு போட்டிக்கு சொல்லல.
ReplyDeleteடவுட் அது தான்...
வேதகாலம் தான் மகாபாரத இதிகாச காலமே தவிர கலியின் ஆரம்பம் இல்லை. விரைவில் கலி வரும் என்பன போன்ற கருத்துக்கள் தான் உள்ளன. ஆதல்லால் மகாபாரதம் மற்றும் இராமயாணம் கி மு 2000- 1000 என்பதில் எந்த சந்தோகம் இல்லை. எகிப்து ஆராய்ச்சிகளில் அவர்கள் எடுக்கும் எல்லாம் 5000 ஆண்டுகளுக்கு உட்ப்பட்டவைதான். ஒரு 5000 ஆண்டுக் கல்லில் 5000 ஆண்டுக்கு முன்னர் ஒரு கல்வெட்டு எழுதினால் அது 10000 ஆண்டு ஆகிவிடும். இது போல அல்ல. எகிப்து புராணங்கள் பழமையும், புதுமையும் கலந்து அவர்கள் முன்னேடிகள் என்று நிருப்பிப்பதில் சாதித்து விட்டார்கள்.
ReplyDeleteஆனால் நம்ம ஆளுக நம்மிடம் உள்ள தாழ்வு மனப்பான்மையால் நாம் செய்வது எல்லாம் சிறுமை, பிரிட்டிஷ் சொல்வது சரி என்று வந்ததால் நாம் நம்மை நிறுபிக்க இயலவில்லை. இமய மலை இன்று இருக்கும் இடம்தான் அந்தக் காலத்தில் டேதிஸ் கடலாக இருந்த்தது. அதற்க்கான பாசில் படிவங்கள் கண்டறியப் பட்டன. ஆஸ்த்திரேலியா, மற்றும் தாய்லாந்து, கம்போடியா, போன்ற நாடுகள் இணைந்து இருந்த மிகப் பெரிய கண்டம் அது. காண்டினெண்டல் டிரிப்டேசன் காரணமாய் முற்றிலும் அழிந்த அல்லது கடலில் போய் விட்ட நாகரீகத்தை கண்டு பிடிப்பது சிரமம். டைரீஸ் எண்ணும் ஆறு முற்றிலுமாக கடல் உள் போய் அதன் துண்டுகள் கூட இல்லை. எகிப்து மற்றும் லெமுரியாவை இணைத்தது இந்த ஆறு. இதன் வழியாகத் தான் நாற்பது இரவு,பகல் நாட்களில் எகிப்து போனர்கள். இன்று முற்றிலும் மாறி விட்டது. ஆனாலும் இமய மலையை முற்றிலுமாக ஆராய்ந்தால் கிடைக்கலாம்.
ஒரு சின்ன சில மைல்கள் பாறைப் பிளவு அல்லது நகர்தலில் வந்த சுனாமியை தாங்கள் கண்டுருக்க கூடும். அது சில மைகள் பாறையில் ஒரு செண்டிமீட்டர் அளவுக்கு விழுந்த குழி. அதுக்கே இப்படி என்றால். ஆஸ்த்திரேலியா பிரியவும் , கடல் மலையாகவும்,நிலம் கடலாகவும் ஆன போரழிவை நினைத்துப் பாருங்கள். ஆதலால்தான் லெமுரியா ஒரு கற்பனையாகவே உள்ளது. பலரும் பல மாதிரி கருத்துக்கள் சொல்லுகின்றன். இப்பத்தான் குஜராத்,தமிழகம் போன்றவற்றில் டைனேசர் பாசில்கள் கிடைக்கின்றன. இன்னம் கொஞ்சம் போனால் லெமுரியா பற்றி அறியவும் வாய்ப்பு உள்ளது. நன்றி.
Tnx Sir...
ReplyDeleteசுவாரசியமான பதிவு...
ReplyDeleteதொடருங்கள் பிரபு..