Total Pageviews

Tuesday, 7 September 2010

ஏலியன்ஸ் தங்களை அடையாளப்படுத்தாதது ஏன்? (டுவின்ஸ்டவர்)

விளங்க முடியாத பரிமாணங்கள்... (09)
ஏலியன்ஸ் தங்களை அடையாளப்படுத்தாதது ஏன்? 

------------------------------------------------------------------------------------------
ஏலியன்ஸ்தொடர்பான‌அடுத்த பதிவு இது...
போன பதிவில், தியரி ஒஃப் ரிலேட்டிவிடிபற்றி அறிந்ததை எழுதி இருந்தேன்...
அந்த வேகத்தை அடைந்தால் என்ன பிரச்சனைகள் எழும் என்பதையும்... ஏற்கனவே குறிப்பிட்ட சில சம்பவங்களில் ஏலியன்ஸ் தோன்றியதற்கு காரணம் என்ன என்பதையும் இன்று எழுதுகிறேன்...

------------------------------------------------------------------------------------------

ஏற்கனவே... கடந்த பதிவொன்றில்... செப்டொம்பர் 11 அமெரிக்காவின் டுவின்ஸ்டவர் தாக்கி அழிக்கப்பட்ட போது...
அதன் பின் புற வானத்தில் ஒரு பறக்கும்தட்டு நிற்பது போன்ற படத்தை போட்டிருந்தேன்...
அது ஏன் என்பதை பார்ப்போம்...

எனது தாத்தாவிலிருந்து அப்பாவும்... அப்பாவிலிருந்து நானும்... என்னிலிருந்து அடுத்த சந்ததியும் உருவாகப்போகிறது...
இதில்... ஒரால் அழிந்தாலும்... எதிர்காலத்தில் மாற்றம் வரும்...
ஒரு அடியில் இருந்து பல பேர் உருவாகி இருப்பார்கள்... ஆகவே பெரிய மாற்றம் நிகழும் எதிர்காலத்தில்... உதாரணமாக,  ஜித் என்பவருக்கு 5 பிள்ளைகள் என்றால்... 5 பிள்ளைகளுக்கும் ஒராலுக்கு 2,3 பிள்ளைகள் பிறக்கும்... 3ம் தலை முறை 10,15 ஆகும் நான்காவது 20,30 ஆகும்... இப்படியே அதிகரிக்கும்...  இதில் ஜித் இல்லை என்றால் பின்னால் ஒன்றுமே இருந்திருக்காது/ உருவாகி இருக்காது...

இதை இங்கு சொன்னதற்கு காரணம்...

ஏலியன்ஸின் வருகைகளால் இது வரைக்கும் எம்மில் இழப்பு ஏற்படவில்லை என்பதை நாங்கள் ஜோசிக்க வேண்டும்...
( ஒரேயடியாக காணாமல் போன இராணுவ வீரர்கள்... அது போன்ற சில சம்பவங்கள் தவிர்து... அதுக்கு ஏலியன்ஸ்காரண்மில்லை என்று ஏற்கனவே மாற்றுலக கொள்கைமூலம் எழுதியிருக்கிறேன்.)
இதுகூட அவர்கள் நம் எதிர்காலத்தவராக இருக்கலாம் என்பதற்கு சான்றுதான்.
மாறாக அவர்கள்... எம்மை அழித்தார்களானால்... இழப்பு அவர்களிலேயே ஏற்படும்... ( இதுக்கு மேல சொல்லத்தெரியல... )
அதனால்தான் அவர்கள் எம்மை கண்கானிப்பதிலும்... எமக்குத்தெரியாமல் சில ஆராச்சிகளை செய்துவிட்டு போவதாகவும் இருகலாம். ( இப்போது இருக்கும் நாமது உருவ,உடலமைப்பு தேவைப்பட்டதால்த்தான்... ஏற்கனவே சொன்ன சம்பவத்தில் அந்த பெண்ணுக்கு கர்ப்பமுண்டாக்கி... கருவை 7 மாதத்திலேயே கொண்டுபோனார்களாகவும் இருக்கலாம்.)

இப்போது விளங்கி இருக்கும்... டிவின்ஸ்டவர் சம்பவத்தில் பறக்கும் தட்டு நின்டமைக்கான காரணம்...
எமக்கு ராஜராஜ சோழரின் படையெடுப்பை பற்றி தெரிந்திருக்கிறது... பார்க்க ஆசை இருக்கிறது... ஆனால், பின்னால் சென்று பார்க்க முடியாது...
ஆனால், எதிர்காலத்தில் அதீதவேகங்கள் சாத்தியமாகும் போது... பின்னோக்கி பயணிப்பதும் சாத்தியமாகும். அப்போதும்... அதே ஆசைகள் இருக்கத்தான் செய்யும்... அதன்டிப்படையில்... 2001 செப்டொம்பர் 11 இல் என்ன நடந்தது என்பதை கண்கானிப்பதற்காக வந்திருந்திருக்கலாம்.
ஆனால், தடுக்க முடியாது... தடுத்தால்... அழிவது அவர்களாக கூட இருக்கலாம்...
அந்த பில்டிங்கில் இருந்தவர்கள் இருந்திருப்பின்... திருமண பந்தங்கள் மூலம் எதிர்காலம் மாறி இருக்கும்...
பறக்கும் தட்டில் வந்தவர்களே உருவாகாமல் இருந்திருக்கவும் வாய்ப்புள்ளதே...

------------------------------------------------------------------------------------------

இதேகாரணத்துக்காத்தான்... ஏற்கனவே சொன்ன சம்பவத்தில்... 2ம் உலக யுத்தத்தில்... விமானத்தை பிந்தொடர்ந்ததுக்கு காரணமாக இருக்கலாம். அதிலும்... அவர்கள் ஒரு மிரட்டலை மட்டுமே கையாண்டார்கள்...
ஏன் அந்த மிரடல் என்பது தெரியவில்லை... யுத்தத்தை தடுக்கும் நோக்கமில்லை...
( அன்று ஏற்படுத்தப்பட்ட அந்த மிரட்டல்... இன்று என்னையும் உங்களையும் அதை பற்றி பேச வைத்துள்ளது... அப்படியானால்... இது திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டதா???? ஏன்???... எனக்குத்தெரியாது... )

------------------------------------------------------------------------------------------

அவர்கள், எமக்கு தொழில் நுட்பத்தை கற்றுத்தருவதில்லை... அதற்கு காரணமும்... ஏற்கனவே சொன்ன காரணங்கள்தான்... அவர்கள் இல்லாமல் போக அதே வழிவகுத்துவிடும்...

------------------------------------------------------------------------------------------

இங்கு... ஒரு சைன்ஸ்ஃபிக்ஷன் சிறுகதை நினைவு வருகிறது ( சுயாத்தாவினதாக இருக்கலாம்)... தெவைப்பட்டால்... அதை ஒரு பதிவாக இடுகிறான். :)

சிபி கேட்டபடி... உடைந்ததை ஒட்ட வைக்க முடியுமா? என்பதற்கு வரும் பதிவுகளில் பதில் தருகிறேன்.

------------------------------------------------------------------------------------------
அப்படி இருந்தாலும்... 

எகிப்திய பிரமிட்டோவியங்களில்... ஏலியன்ஸ் உதவுவது போன்று வரையப்பட்டது ஏன்?
எகிப்தில் இருந்த... நட்சத்திர வட்டத்தை எவ்வாறு கச்சிதமாக உருவாக்கினார்கள்?
மற்றும் தற்போதைய விஞ்ஞான உலகம் கண்டு கொண்ட உண்மைகள்... சில பழங்குடி மக்களிடையே ஏற்கனவே பழக்கத்திலிருந்தது எப்படி?
மற்றும்... பல தகவல்களுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்...

------------------------------------------------------------------------------------------

9 comments:

 1. உங்க பின்னூட்டத்துக்கு ரொம்ப நன்றி நண்பா...
  உங்க அறிமுகம் கிடைச்சதுல ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி...
  வேலை விஷயமா ஒரு மாதத்துக்கு இங்கே வந்திருக்கேன்..
  இங்கே என்னுடைய நம்பர்: 0044 7924151842.... ஃப்ரீயா இருக்கும்போது கூப்பிடுங்க.... மாலை ஐந்து மணிக்குமேல் கூப்பிட்டால் வேலை டென்ஷன் இல்லாம பேசலாம் :)

  ReplyDelete
 2. உங்க பதிவு ரொம்பவே இண்ட்ரெஸ்டிங்... :)
  வாழ்த்துக்கள்.... தொடர்ந்து வாசிக்கிறேன்.... விடாம எழுதுங்க :)

  ReplyDelete
 3. நான் உங்கள் பதிவுகளை கடந்த சில நாட்கள் தான் படித்து வருகிறேன். உங்களுக்கு பின்னூட்டம் போடும் அளவுக்கு யாருக்கும் அறிவு இல்லை என்று நினைக்கிறேன்.


  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. நன்றி...பிரபு . எம்....
  நானும் 5 மணிக்கப்பறம் தான் ஸ்கூலால் வருவேன்...
  அப்போ கதைப்போம்.. :)
  இந்த மாதமும் தொடர்ந்து எழுதுவதில் சிக்கல்... :(
  ----------------------------------------
  நன்றி...PALANI...
  அவ்வ்வ்வ்... நான் அந்தளவுக்கு ஒன்றுமே பண்ணலயே... :(
  சும்ம ஜோசிச்சதையும்... வாசித்ததையும் தானே எழுதுறேன்...

  ReplyDelete
 5. முன்னால் மட்டுமல்ல பின்னாலும் போவது இயலாது.
  நீங்கள் இங்கிருந்து எத்தனை கோடி கி.மீ.வேகத்தில் பயணித்து திரும்பினாலும் போனதைப் பார்க்கமுடியாது..வருவதையும் பார்க்க முடியாது.நிகழ்காலத்தில் மட்டுமே வாழமுடியும்.
  நீங்கள் 5மணிக்கு இங்கிருந்து பல்லாயிரம் கோடி கி.மீ.வேகத்தில் பயணித்து திரும்பி வந்தால் இங்கே நேரம் 5.00000000000000000000001 மணி என்றுதான் இருக்கும்,நீங்கள் 4மணிக்குச் செல்லமுடியாது.
  இது மிகவும் சாதாரண விஷயம்..இது தெரியாமல் பதிவு மேல் பதிவு.. இதைப் பற்றி விரிவாக என்னால் எழுதமுடியும்..ஆனால் ...

  ReplyDelete
 6. நன்றி...ராவணன் ...
  இதுக்கு மேல் என்னாலும் விளங்கப்படுத்த முடியாது... :(
  சில நேரம்... ஐன்ஸ்டைன் ஜோக்காக இந்த கொள்கையை சொல்லி... விஞ்ஞானிகளும் தமாஷாக... அந்த மிகச்சிறிய அளவயைக்கொண்ட கடிகாரம் மூலம்... செய்மதியின் உதவியுடன் நிரூபித்திருப்பார்கள் போல( முதல் 3 பதிவுகளுக்குள் இந்த தகவல் இருக்கிறது)...
  ஆனால்... என்ன, நீங்கள் எழுதுங்கள்... சாதாரணமான நீங்கள் சொன்னது உண்மைதானே... பிறகென்ன தயக்கம்... எழுதுங்கள்... தியரி ஒஃப் ரிலேடிவிடி என்ற பெயரில் எழுதுங்கள்... அப்போதான் நான் இலகுவாக விளங்கி கொள்ளலாம். :)

  ReplyDelete
 7. raavanan unkalukku paththuthalaithan. (summaa thamasukku) neengalum eLuthunga vaatham eppothume nallathuthaan
  valaakam ungal pathivukal nanraakvum suvaarshyamaakavum ullathu.vaalthukkal. silathu vilangavillai aayinum(enakku)aarvam viduvathai illai. nari

  ReplyDelete
 8. நீங்கள் தவறாக விளங்கி கொண்டீர்கள் நம்மால் இறந்த காலத்திற்கு செல்ல இயலாது .
  இரண்டு நண்பர்கள்(a , b ) அவர்கள் இருவருக்கும் வயது 5 என்று வைத்து கொள்வோம் ஒரு நண்பர் ஒளியின் வேகத்தில் சூரியனுக்கு சென்று அங்கு ஒரு போட்டோ எடுத்து கொண்டு திரும்பி வருகிறார் என்று வைத்து கொள்வோம் ( சூரியனுக்கு போக முடியுமா என்று கேட்காதிர்கள் உதாரணதிற்கு). அவர் ஒளியின் வேகத்தில் அங்கே சென்றதால் சில வினாடிகளில் திரும்பி வந்த விட முடியும் ஆனால் இங்கு பூமியில் இருக்கும் நண்பர்க்கு பலவருடங்கள் கடந்து இருக்கும். உங்காளால் நம்ப முடியாவிட்டாலும் இது தான் உண்மை . பூமிக்கு வந்த பிறகு அவருக்கு வயது 5 தான். 5 வயதுக்காரர் எந்த உடலமைப்பில் இருப்பாரோ அப்படிதான் அவர் இருப்பார். ஆனால் பூமியில் இருந்த அனைவருக்கும் (பூமியில் இருந்த நண்பருக்கும் ) பலவருடங்கள் கடந்து வயது முதிர்ந்து இருப்பார்கள்.இதன் மூலம் காலம் என்பது அனைவருக்கும் சமம் கிடையாது வேகத்தை பொருத்து அது மாறுபடும்( வேகம் மிக அதிகமாக இருக்கும்போது மட்டுமே அதன் மாறுபாட்டை புரிய முடியும்).

  ReplyDelete
 9. காலம் என்பது ஒருவருக்கொருவர் வேகத்தை பொறுத்து மாறுமே தவிர இறந்த காலத்திற்கு எல்லாம் செல்ல முடியாது.

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails