இராவணன்
----------------------------------------------------------------------------------- நேற்று நைட்தான் ராவணன் படம் பார்த்தேன்...
நீண்டகாலமாக எப்படியும் முதல் நாளே பார்த்துவிட வேண்டும் என்று நினைத்திருந்த படம்...
சரி இனி படத்தில நான் என்னத்தை பார்த்தேன் என்பதை... விமர்சனம் என்கிற பேர்ல எழுதுறேன்...
-----------------------------------------------------------------------------------
படத்தின் கதை...
படத்தின் ஆரம்பக்காட்சி...
முதல் காட்சியிலேயே ஐஸ்வர்யாராஜ்ஜை(டி.ஸ்.பி இன் மனைவி/குருவம்மா / ஹீ...ஹீ... சீதை) கிட்னாப் பண்ணுறாங்க விக்ரமும் அவரது கூட்டத்தினரும் (வீரய்யா/ஹீ...ஹீ...இராவ(ண)ன்)...
கிட்னாப்பின் போதே பொலிஸ்ஸாருடனான மோதலை ஆரம்பிக்கின்றனர் விக்ரமின் கூட்டத்தார்...
மனைவிகடத்தப்பட்டதை அறியும் பிருத்திவிராஜ் (பொலிஸ்/ஹீ...ஹீ...ராமன்) விசேட அதிரடி படையுடன் காட்டுக்குள் புகுகின்றார்... உதவிக்கு வனக்காவல் அதிகாரியான கார்த்திக்கும் ( ஹீ...ஹீ...ஹனுமார்...) போகின்றார்...
ஐஸ்வர்யா ராஜ்ஜை கடத்தி 14 மணித்தியாலங்களில் கொல்லப்போவதாக மிரட்டிய விக்ரம்... கொல்லபோகும் தருனத்தில் ஐஸ்வர்யாவின் அழகு,துணிச்சலில் மயங்கி மனத்தின் வன்மத்தை இழக்கின்றார்... 14 மணினேரம் 14 நாட்களாக நீள்கிறது.
இதற்கிடையில் வீரய்யா ஏன் தன்னை கடத்தி வைத்திருக்கிறார் என்பதை வீரய்யனின்அண்ணன் பிரபு ( கும்பகர்ணன் (?) ) மூலமும் வீரய்யா மூலமும் அறிந்து... தனது மனதில் இருந்த தைரியத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கின்றார் குருவம்மா...
இதற்கிடையே வீரய்யா தனது காதல் (?) ஐ குருவம்மாவிடம் சொல்லி தங்களுடன் தங்குமாறு கேட்டு கொள்கின்றான்...
இடையில் பல சுவாரஷ்யமான காட்சிகள் ஓடுகின்றன... அதை சொன்னால்... படம் பார்க்கப்போகும் உங்களுக்கு ஒரு ஆர்வமில்லாமல் போய்விடும்... ( 100 % ரசித்துப்பார்க்க கூடிய படம்... )
இறுதியில் தூதுபோன வீரய்யாவின் தம்பி(ஹீ...ஹீ...விபீஷனன்)யை கொல்வதன் மூலம்... எஸ்.பி நேரடியாகா வீராய்யாவுடண் மோதுகிறார்... தம்பி கொல்லப்பட்டதும் தனது குழுவுடன் இராணுவ முகாமுக்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபடுகின்றான் வீரய்யா... ( வழமையான படங்கள் மாதிரி திடீரென ஆயுதங்கள் வரவில்லை... அதற்கு முன்னரே விடை கூறிவிட்டார் இயக்குனர்...)
படத்தின் முடிவாக...
பிருத்திவிராஜ் ஐஸ்வர்யா மீது சந்தேகப்படுகிறார், காரணம் விக்ரம் கூறிய வார்த்தைகள் என கூறுகிறார்...
முடிவாக...
விக்ரம்/வீரய்யா/இராவண் சுபமான முடிவையும்...
பிருத்திவிராஜ்/இராமர் + ஐஸ்வர்யா/ சீதை நெருடலான முடிவையும்... பெறுகின்றனர்...
-----------------------------------------------------------------------------------
சரி... இனி படத்தின் மற்ற விடையங்களை பார்ப்போம்...
விக்ரம்...
தான் ஒரு சிறந்த நடிகர்... எந்த கதாப்பாத்திரமாகவும் மாறக்கூடியவன்... என்பதை பறைசாற்றியுள்ளார்...முக்கியமாக... தங்கை பிர்யாமணி (சூர்ப்பனகை) தனக்கு நடந்ததை விளக்கும் போது... கதைக்க முடியாத நிலையில் இருப்பதாக காட்டப்படும் விக்ரம்... தனக்கு வசனங்கள் தேவையில்லை.. முக பாவணையே போதும் என்பதை நிரூபித்துள்ளார்...
மற்றும் இறுதி காட்சிகளில் ஐஸ்வர்யாவிடம் அன்பை சொல்லும் போதும், தம்பி இறந்த போதும், தங்கைக்கு நடந்ததை சொல்லும்போதும்... முகபாவணையே அனைத்தையும் கூறிவிடுகிறது...
உடையை மட்டும் மாற்றி கெட்டப் சேஞ் பண்ணும் சில நடிகர்கள் இனியாவது நடிப்பு என்றால் என்ன என புரிந்து கொள்ள வேண்டும்...
நீண்டகால இடை வெளியில் படங்கள் வந்தாலும்... ஒரேயடியாக விட்ட கப்பை பூர்த்தி செய்துவிட்டார்...
விக்ரம் தனது ரசிகர்களைத்தாண்டி ஒரு பொதுவான ரசிகர் கூட்டத்தை இப்படம் மூலம் பெற்றுவிடுவார் என்பது உண்மை...
ஐஸ்வர்யா...
சுப்பராகவும்... சிம்பிலாகவும் அழகு காட்டப்பட்டுள்ளது... நடிப்பும் தான் ஒரு தேர்ச்சியான நடிகை என்பதை காட்டியுள்ளார்...
பிரித்விராஜ்...
பொலிஸ்ஸிக்கு ஏற்ற உடல்வாகுள்ள ஆளைத்தான் இயக்குனர் தேர்வு செய்துள்ளார்... நடிப்பும் என்னை பொறுத்த வரை இயல்பானது... சிம்பிளான... அழகான நடிப்பு... ( தூரத்தில் சூரியாவின் பொடிலாங்வேஜ், முகசாயல்...)
பிரபு + கார்த்திக்...
தத்தமது கதாப்பாத்திரங்களில் பின்னியிருக்கிறார்கள்...பிரியாமணி...
கொஞ்ச நேரம் வந்தாலும் கதைக்கு முக்கியமான கதாப்பாத்திரம்...நடிப்பை சொல்லதேவையில்லை.. சுப்பர்..
இயக்குனர் மணிரத்தினம்...
ஸ்ஸ்ஸ்ஸ் சுப்பர்ப் .... தெளிவான திரைக்கதை... இராமாயாணக்கதை என்பதை எவ்வளவு சுவாரஷ்யமாக சொல்ல முடியுமோ அவளவு சுவாரஷ்யமாக சொல்லி இருக்கார்... இவரைப்பார்த்தாவது... சமீப காலமாக பிரபல நடிகர் ஒருவரை வைத்து பீளாப் கொடுத்துக்கொண்டிருக்கு இயக்குனரகள் படம் இயக்குவது என்றால் என்ன என்று கத்துக்கனும்...இசை...
இந்தப்படத்துக்கு இதுதான் இசை என்று சொல்லுமளவுக்கு இருக்கிறது.... ( இசை பற்றி எனக்கு தெரியாததால் மேலதிகமாக சொல்ல முடியவில்லை...)பாடல்கள்...
ஏற்கனவே ஹிட்... அதுக்கேற்ற ஒளிப்பதிவு....காட்சிகள்... கமரா...
இயற்கையை எவ்வளவு பிரமாதமாக காட்ட முடியுமோ அவளவுக்கு காட்டி இருக்கிறார்கள்... பழையகட்டுடங்கள் வியப்பை ஏற்படுத்துகின்றன....கண்னுக்கு குளிர்ச்சியாகவுள்ளது... நாங்கள் இயற்கையை எவளவு மிஸ்பண்ணுறோம் என எண்ணத்தோன்றுகிறது...
-----------------------------------------------------------------------------------
சரி... இனி நாங்கள் ஏதாவது குறை கண்டு பிடிக்கனுமே...
வசனங்களில் அடுக்கு, கவித்துவமாக வசனங்களை குறைத்திருக்கலாம்... சில இடங்களில் வசனங்கள் அலட்டுகிறது...
கார்த்திக் ஹனுமார் கதாப்பாத்திரம் என்பதற்காக மரத்துக்கு மரம் தாவுவதை காட்டாமல் விட்டிருக்கலாம்...
பிரியாமணியின் காதலராக வருபவர் பொருத்த மற்றவர்... நடிப்பு வருதில்லை...
வீரய்யா ஏன் இப்படியானான் என்பதற்கு காரணம் இல்லை... ( படத்துக்கு அது தேவையுமில்லை... )
கேபிள் காட்சிகளில் கொஞ்சம் செயற்கைத்தனம்... ( காடு என்பதால் கேபிள் பாட்சிகள் சிரமமாக இருந்திருக்கும் சோ... ஓ.கே...)
-----------------------------------------------------------------------------------
ஹொலிவூட் ரேஞ்சிலான ஒரு தமிழ்ப்படம்...
அனைவரும் பார்க்க வேண்டிய படம்...
அன்பு (முறைதவறியதுதான்) ஒருவனை எப்படியெல்லாம் மாற்றும் என்பதை காட்டியுள்ளார்கள்...
காதல், பாசம், கோவ்ம், வன்மம், பழியுணர்ச்சி, துரோகம், விசுவாசம்.... என்பதை கதாப்பாத்திரங்கள் ஊடாக தெளிவாக காட்டியுள்ளார்கள்...
-----------------------------------------------------------------------------------
Nice film & good review
ReplyDeleteநல்ல படத்துக்கு நல்ல பதிவு.... நிஜமாவே(இராமயண சீதா ராவணனோட இருந்திடதான் நினைச்சா (பர்மா இராமாயணம் படிக்கவும்)இது கதை அல்ல நிஜம்
ReplyDeletetnx Anonymous...
ReplyDelete----------------------
நன்றி...கெட்டவன்
ஓம்... கம்பர் எழுதியது திரிபு படுத்தப்பட்டது என படித்திருக்கிறேன்... ( இராவணனை அரக்கனாக்கியது கம்பராமாயணம் தான்...) காலத்தால் முந்திய வான்மீகி இராமாயணம்தான் உண்மையானதென கேள்விப்பட்டேன்... ( சிலது வாசித்தேன்...)
நீங்கள் சொன்ன பர்மா இராமாயணத்தின் புத்தகம் கிடைக்கவில்லை...
நண்பரே ... மிக அழகான எழுத்து. இந்திய பதிவர்கள் திரைபடத்தின் அரசியல் குறித்தும் ஆய்வு செய்து உள்ளனர்.
ReplyDeleteஉங்கள் நடை ... சிறப்பாகவே உள்ளது. இந்தியாவின் வனப்பகுதியில் நடக்கும் சில உண்மைகளை இந்த படத்தில் இயக்குனர் தூவ முயற்சித்துள்ளார்.
வாழ்த்துக்கள்.