Total Pageviews

Monday, 7 June 2010

பதிவுக்கு மிரட்டலும்... ஏ.ஆர்.ரஹ்மானிற்கு ஸப்போட்டும்!!!

----------------------------------------------------------------------------------
பதிவு எழுதினா மிரட்டுறாங்கப்பா...

மேல் பகுதி முழுக்க எனக்கு நடந்தவைதான்...  அதை மட்டும் போட்டு போர்றாக்க விரும்பல... கீழே "செம்மொழியாம் எங்கள் தமிழ் மொழி..." என்ற ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல் தொடர்பாக ஸோஸல் நெட்வேக்கில் எங்களுக்குள் நடந்த கருத்துக்களை போட்டு இருக்கிறேன்...

பதிவு நீளமாக உள்ளது... பின் பகுதி சுவரஷ்யமானது... வாசிக்கவும்...
----------------------------------------------------------------------------------
நானும் போனவருடம் நவம்பர் மாசத்தில இருந்து பதிவெழுத ஆரம்பித்தேன்...
முதல்ல கனவுகள் , மூளையி அதிசய சக்திகள்...( விஞ்ஞான ரீதியான காரணங்கள்) மற்றும் ஃபிலாஸ் ரியூட்டோரியல்களை போட்டுவந்தேன்... பிறகுதான் ஒரே வட்டத்துக்குள்ள இருக்காம மற்ற விடையங்களையும் அப்பப்ப போடத்தொடங்கினன்...

முதல் முதலாக இலங்கைத்தேர்தல் தொடர்பாக ஒரு பதிவு போட்டேன்... அதுக்கு கொஞ்சம் மிரட்டினாங்க...
பிறகு.. "பல்டி சம்பந்தரும்... மல்டி கருணாநிதியும்..." என்று ஒரு தலைப்பில அப்ப நடந்ததை எழுதினேன்... அதுக்குத்தான் முதலாவது மெயில் வந்துது...  எனக்கு வயசு பத்தாதாம்... இப்படி கருனாநிதியை எல்லாம் எழுதி புகழ்தேட வேண்டாமாம் என்றாங்க... (ஹீ...ஹீ... அதில நான் புகழுக்காக ஒன்றும் எழுதல... அட்ச்சாங்களாம்... அதுக்குத்தான் எழுதினன்...)
நான் நினைக்கிறேன்... மூன்று நாட்களுக்கு முன்னர் ஒருவர் ஃபோட்டோ ஸொப் பதிவுக்கு கொமென்ட் போட்டார்... அவர் இந்த கருனாநிதிடய பதிவுக்குத்தான் போட்டிருப்பார் போல...

அடுத்து நான் "ஒருவருக்கொருவர் சளைக்காத சாமியார்கள்(???)..." இக்கு... நான் இந்துவா என்று கேட்டு ஃபேஸ்புக்குக்கு மெஸேஜ்... ஓம் என்றதுக்கு ஒராலுக்காக ஏன் எல்லாரையும் இழுத்து எழுதினேனாம்... ( அம்மா பகவான் ஸப்போட்டர்ஸ்தான் அதிகம்...)

இதெல்லாம் பறவாயில்லை... ஒரு காரணத்தை வச்சுக்கொண்டு கொம்ன்ட் போடுறாங்க...

இப்பட இந்த சுறா பட விமர்சன‌த்துக்குத்தான் கேனத்தனமான மிரட்டல்...
கொமென்ட்ஸில் தகாத வார்த்தைகளால் தங்களுக்குள்ளும் பேச்சு... எனக்கும் பேச்சு...
இதுல மிரட்டல் வேற... நான் அந்த விமர்சனத்தை அழிக்கனுமாம்... இல்லாட்ட அவர் அப்படித்தான் கொமென்ட் போடுவாராமாம்...
ஹீ...ஹீ... என்ற புளொக்கை நிப்பாட்டவாம்... இது 2 பேர் செய்றது...
ஒன்று ஆரோ டம்மிபீஸ்... மற்றது ஒரு பதிவர்... அவர் இப்பதான் ஆரம்பித்து ஓவர் நைட்ல ஒபாமா ஆக பாக்கிறார்...  அதுக்கு என்னை புளொக்கை நிப்பாட்டவாமாம்... ( நான் ஒன்றுமில்லாத விசையத்தை எழுதுறனாம்... ம்ம்ம்... இவருக்கு சினிமா எழுதுறது குறைவு என்று கவலை போல... அல்லது அவர்ட படத்தைப்போட்டு புகழ்ந்து எழுதனும் போல...)

----------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------

----------------------------------------------------------------------------------
உலகதமிழர் மாநாடு என்பது கலைஞர் தன்னுடைய குடும்பத்துக்கும் தி.மு.கா கட்சிக்கும் செய்யும் மாநாடே தவிர உலகதமிழருக்குரியதல்ல. தமிழ் வளர்த்த அறிஞர்களும் தமிழ் ஆர்வலர்களும் புறம்தள்ளபட்டும் கலைஞர்க்கு மட்டும் சாவுக்கு முடிசூடும் விழாதான் இது. உலகதமிழர் மாநாட்டுக்கு உருவாக்கபட்ட பாடலாம் அதில் தமிழ் பண்பாட்டிற்கும் பாரம்பரியதுக்கும் உரிய இசையோ அல்லது இசை கருவிகளோ பயன்படுத்தபடவில்லை.. தமிழுக்கு பெருமை தேடிக்கொடுத்த உங்கள் ரகுமான் எதற்கு இழிவையும் தேடிக்கொடுத்திருக்கிறார்.....தயவு செய்து இந்த மாநாடுக்கோ
அல்லது பாடலுக்கோ வக்காளத்து வேண்டாதீர்கள் ....
****
Sudharshan Subramaniam
வாருங்கள்... வெள்ளைக்காரனுக்கு தமிழின் பெருமையை தமிழில் எடுத்து சொல்ல சொல்கிறீர்களா ? ஆங்கிலத்தில் தானே சொல்ல வேண்டும் . எம் பண்பாட்டு இசையை ரகுமான் ஏற்க்கனவே பல பாடல்களில் காட்டி விட்டார் . ஒரு உதாரணம் ... திருக்குறளை மன்னிப்பாயாவில் சேர்த்தார் . அது ஒரு முன்னோட்டம் .. தற்ப்போதைய தலைமுறை பழமையான இசை கருவிகளை விரும்புவதில்லை . மண்டையை போட போவோருக்கு ஏற்ப்ப இசை அமைத்து பிரயோசனம் இல்லை . இந்த பாடல் வேற்று மொழிக்காரகளிடம் பெரும் வெற்றி பெற்றுள்ளது .. தில் தெரியவில்லை என்று கவலைப்படுகின்றனர் . இதில் கர்நாடக , தமிழ் , சூபி இசைகள் கலக்கப்பட்டுள்ளன .. அனைத்து விதமான வாத்திய பயன்பாடு. ரகுமானுக்கு தனியே செய்யவும் தெரியும் . ஆனால் எம்மவர்களை மட்டுமே அடைந்திருக்கும் .. இது கலைஞரின் அயிடியா அல்ல .. ரகுமானின் திட்டம் . ரகுமானும் இளையராஜாவும் எமது கலைகளுக்கு பூச்சு பூசி மேலைத்தேயத்தை அடைய வைப்பார்கள் . ஆனால் இந்த பாடலில் ஒரு தமிழ் உச்சரிப்பு கூட பிழையில்லை என்று நினைக்கிறேன் .. த்தமிழ் உணர்வு இல்லாதவர்கள் எத்தனையோ பேர்.. ஆனால் அவர்களிடமும் இது தமிழனாக இருப்பதில் பெருமையை ஏற்ப்படுத்தும் . கருணாநிதியை எனக்கு தனிப்பட்ட ரீதியில் இனியும் பிடிக்காது ...ஆனால் இது ரகுமானுடையது .. அவரது மாநாட்டுக்கு நான் எதிர்ப்பு தான் .. அதே நேரம் ரகுமானின் தமிழ் இசைகளையும் ரசிப்பவன்
****
Kayan Kanagasabi 

இசையால் மொழியை வளப்படுத்த முடியும் ஆனால் மொழியும் இசையும் வேறுபட்டவை. நம் மொழியின் பெருமையினை வெளிப்படுத்த வேறு மொழியோ மேற்கத்தைய இசையோ தேவையில்லை ..ஏற்கனவே அதன் தனித்துவம் உலகரீதியாக உணரப்பட்டதொண்டு.. நம் மொழியின் தனித்துவத்தை இழந்து மற்றவர்களுக்கு அதன் பெருமை கூறவேண்டிய தேவையில்லை இது கூட நம் மொழியின் சிதைவுக்கு காரணம்தான். தற்போதைய தலைமுறைக்காக தமிழின் தனித்துவத்தை விட்டுகொடுக்க சொல்கிறீர்களா என்ன ? ரகுமான் உலக அரங்கில் இசையால் பெருமைப்படுதப்பட்டவர் அனால் தனது அந்த இசையாலே தன் மொழியின் தனித்துவத்தை இழக்க செய்கிறார் ....




****
Pirabu Chandran எதில... எதில குற்றம் கண்டு பிடிக்கிறதென்று விவஸ்தையே இல்லாமல் போச்சு...
நீங்கள் சொல்கிற மாதிரி... தமிழ்கருவியை மட்டும் வைத்துக்கொட்டிக்கொண்டிருந்தால்... இவ்வளவு காலமாக.. தனித்துவம் தனித்துவம்... என்று கத்திக்கொண்டு... அந்த தனித்துவத்தை நாங்களும் பேனாமல்... மேற்கத்திய நாடுகளுக்கு கொண்டும் செல்லாமல்... இருப்பதைவிட... இவ்வாறு... இசை என்ற பொது மொழிமூலம்... வேற்று மொழிக்காரர்களுக்கு... எமது பண்பாடுகளை கொண்டு செல்லவதில் தவறே இல்லை...
வெறும்... மேற்கத்திய அல்லது தமிழுக்கு தொடர்பற்ற கருவிகளை மட்டும் பயன்படுத்தி இருந்தால் நீங்கள் சொல்வது சரி... ஆனால்... இதில் தமிழ் கருவிகள் பயண்படுத்தப்பட்டிருப்பதானது... இதை பார்க்கும் வேற்று மொழி இசைபிரியர்கள்... "எவ்வாறு எமது இசைகருவியுடன் (வேற்று கருவிகள்)... இவர்களது(எமது) இசைகருவிகளையும் பயன்படுத்தி இவ்வாறான இசையை இயற்றுகிறார்கள்..." என்ற கேள்வி எழும்... இதுவே... நீங்கள் சொல்கிற பண்பாட்டை( கருவிகளை) உலகறியச்செய்யுமே...

மற்றம் படி... அந்த கருநாநிதியை ஆருக்குமே பிடிக்காதுதான்.... :)


****
Jeyakanth Jai 

டேய் போதும்டா அவர் அழுதுடுவார்!!!!!


****


Kayan Kanagasabi
மொழி என்பது வணிக சொத்து அல்ல தன் இயல்புகளை இழந்து மேற்கதயதுக்கு வியாபாரம் செய்ய.நம் மொழியை முதல் நமக்குள்ளே கட்டி காப்போம் அதனால் அது பெருமை பெறும்.... பிரபு நீங்க சொல்லுறமாதிரி வேற்று மொழிக்காரருக்கு நம் பண்பாடுகளை எடுத்து செல்வது தப்பில்லை அனால் நம் மொழியின் பெருமையை அதன் இயல்பை இழந்து மற்றவர்களுக்கு வெளிபடுத்துவதுதான் தவறு. இசை என்பது பொது மொழிதான் அனால் ஒவ்வொரு மொழிக்கும் அதேட்கெண்டு பண்பாட்டு இசை இருக்கிறது உதாரணமாக தமிழுக்கு நாதஸ்வரம் ,உடுக்கு ,பறை ..... அவைகளை சிறிதளவும் பயன்படுத்தவில்லையே என்ன ரகுமான் எங்கள் மொழியை இசையால் நவீனபடுதி அவர்களின் இசையை வைத்தே நம் மொழியின் பெருமையை வெளிப்படுத்துகிறார என்ன ?? அப்படிஎன்றால் நம் மொழி தனக்கே உரிய இசையை கொண்டு தன் பெருமையை சொல்ல முடியாத குறைபாடுடைய மொழியா ? அதை ரகுமான் நிவர்த்தி செய்துள்ளார் என்கிறீர்களா ?






****
Sudharshan Subramaniam 

ஒரே கேள்வி......... உடுக்கு பறை பயன்படுத்தினால் நீங்கள் எத்தனை தடவை கேட்ப்பீர்கள் ??


****
Jeyakanth Jai ஹேய் ஒழுங்கா ஸோங்க கேலுங்க!!! புருஷோத்தமன் >தவில் ; நடராயன் > நாதஸ்வரம் வாசிச்சிருக்காங்க.


****
Sudharshan Subramaniam 

ரகுமான் தேவையான அளவு மயிலிறகே மயில்ர்றகே லையே அடிச்சுட்டார் ..விண்ணைத்தாண்டி வருவாயிலே அடிச்சுட்டார் . இந்த பாட்டு எல்லாரையும் சென்றடையனும் .. சென்றடைந்தது ... மேளத்தை எதோ நாங்க டெயிலி காலேல பின்னேரம் கேக்கிற மாதிரி இருக்கு கதை . மேளம் அடிச்சா பக்கத்திலையே இருக்கிறேல்ல... லொள் .... பாடும் முறையில் தமிழ் கர்நாடக சூபி இசை முறைகள் உண்டு .. இளையராஜாவின் பாடல்களுக்கும் இது போன்ற விமர்சனம் வந்தது .. இப்போது ரகுமானுக்கு ..ரகுமானை துரத்திரதிலையே இருங்க .... அப்புறம் ரகுமான் போய் ஹிந்தீல போய் பாட்டு அடிப்பார்.. அதை கேட்டுட்டு சூபர் எண்டிறது .




****
Pirabu Chandran 

ஐயோ கஜன்...
நீங்க தப்பா புரிஞ்சுகிறீங்க...
பறை,உடுக்கு, நாதஸ்வரத்தையும் பயண்படுத்தல என்று சொல்லுரிங்க... ( அந்த வீடியோல மேலம் இருக்கிறமாதிரி இருக்கு...)
அடுத்தது... இந்த கருவிகள் பிரபலமாக பாவனையில் இருந்த காலத்தில்... சிலேட்டில் எழுதிபடிச்சுட்டு.. வேட்டி சட்டையோட தானுண்டு தன்ற வேலையுண்டு என்று தெரிந்தனாங்க... அதால தான்... தமிழ் கொஞ்சம் கொஞ்சமா அழியுது... இப்பவும்... இதே.. மாதிரி கருவிகளோட மட்டும் தெரிய நினைப்பது சரியா... கொம்பியூட்டர்... லோங்ஸ்ஸட்டை ஓட... உலகாறிவை வழத்துட்டு தெரியிற நாங்க... உலகத்தோட ஒத்து போய்த்தான்... அவர்களுக்கு... எமது பண்பாட்டை வெளிப்படுத்தனும்... அதை விட்டுட்டு அவர்களா வருவார்கள் என்று நினைப்பது சரியா?...
இப்படி இருந்துதான்... மொரிஸியஸ் போன்ற நாடுகளில் தமிழை வழர்த்து கிழிச்சிருக்கம்... :) ( மொரிஸியஸ் ல தமிழர் இருக்காங்க என்று சொல்லுறதே கேவலம்... தமிழைமறந்த தமிழர்கள் என்று பெருமை பட்டுக்கலாம்... :D )

இப்ப கூட பாருங்க... எவ்வளவு தமிழ் தளங்கள் சினிமா சேவையாற்றுறாங்க... ஹீ...ஹீ...
ஆனா, மற்ற மொழிக்காரங்க... எப்படி தமது மொழிய வழக்குறாங்க பாருங்க...

http://www.francaisfacile.com/

ஹீ...ஹீ... நாங்க... லவ்வறுக்கு கவிதை எழுதுறதோட சரி... இப்படி ஒரு வெப்சைட்டை உருவாக்க ஏன் யாருமில்லை... ( ஹீ...ஹீ... நீ செய்ய வேண்டியது தானே.. என்று சொல்லவேனாம்... எனக்கு தெரியாது...)




****
Sudharshan Subramaniam 

நீ என்ன பிரபு தப்பா சொல்லுறா ?இப்பிடியெல்லாம் இணையத்திலை தமிழ் போட்டா . தமிழ் தனித்துவம் கெட்டுப்போகும் .. நான் ஓலைச்சுவடீல எழுதினா தான் படிப்பன்..


****


ஹீ...ஹீ... ஓம் என்ன... சுதர்ஷன்...
நாங்க மூத்த குடிகள் என்னா...
சொறிடா மறந்துட்டன்...

ஓ.டா ஏ.ஆர் வேல இல்லை...
கோட் எல்லாம் போட்டு இருக்கார்... மற்றதோட நிக்கனும்... வேல இல்ல..


****
இடையில சிலத அழிச்சுட்டாங்க... 


****
SAn Santhosh 

என்னது “தமிழ் மொழியின் தேசிய கீதமா”?????
நாசமாய் போக..... தமிழனுக்கென்று தேசமே இல்லை. இதில் எங்கிருருந்து வந்தது “தமிழ் மொழியின் தேசிய கீதம்”?

இலக்கணமே பிழைக்கிறதே..
ஒரு தேசத்துக்குத்தானே தேசிய கீதம் என்று ஒன்று இருக்க முடியும். ஒரு மொழிக்கு எப்பிடி அவ்வாறு அமையும்?




****
Aravinth Sivarasa 

@ கயன் அண்ணா
வெறும் பானை ,கரண்டியை வைத்து பசி உள்ளவனிட்கு உணவு வழங்க முடியாது...


****


SAn Santhosh
போதும்மடா சாமி....
e-mail ல notification குப்பையா குவிஞ்சுபோய் கிடக்குது....




----------------------------------------------------------------------------------
இதைத்தான் நாங்க ஃபேஸ்புக்கிள பண்ணுறம்... :P
----------------------------------------------------------------------------------

7 comments:

  1. Very simple to defined this song:

    ரகுமானின் இசையில் இலங்கை தமிழருக்கான கலைஞர் எழுதிய ஒப்பாரி

    ReplyDelete
  2. இந்த பாடலில் உள்ள வரிகள் அனைத்தும் பல தமிழ் பாடலில் இருந்து திருடப்பட்டது.

    ReplyDelete
  3. எனது படம் வேண்டுமோ?

    ReplyDelete
  4. :) :p gud but ondume puriyala!!!!!!!!!

    ReplyDelete
  5. Tnx...Anonymous...
    Apa enna gud??? :P

    ReplyDelete
  6. பாட்டாலும்,இசையாலும் எந்தவொரு சமூகமும் முன்னேராது. நல்லொழுக்கத்தாலும், நல்ல கல்வியாலும் தான் முன்னேறும். இதை போன்ற அரட்டைகளை முதலில் விட்டொழியுங்கள்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected