ஃபோட்டோஷொப்
------------------------------------------------------------------------------------------பண்டிகை வருகிறது... அதற்கு நாங்களாகவே ஃபோட்டோஷொப்பில் ஏதாவது டிசைன் பண்ணினால் நன்றாக இருக்குமே... அதற்காக... இலேயே முக்கியமான உருவம் செய்வது எப்படி என்று... இங்கு எழுதி இருக்கிறேன்... மிச்சம் நீங்கதான் செய்யனும்... :)
------------------------------------------------------------------------------------------
தேவையான அளவில்... வேக் ஏரியாவை உருவாக்கிக்கொள்ளவும்.
இதற்கு... Ctrl + N ஐ பயண்படுத்தவும்.
ஒரு புதிய லேயரைப்போட்டு....
M கீயை அழுத்துவதன் மூலமாக... Eliptical Marquee டூலை தெரிவு செய்து... ஒரு வட்டத்தை வரைந்துகொள்ளவும்.
பின்னர்... Edit -> Transform -> Warp கிளிக் பண்ணி... படத்தில் காட்டப்பட்டவாறு அல்லது உங்களுக்குதேவையானவாறு... வட்டத்தில் மாற்றம் செய்யவும்.
அடுத்து வட்டம் போடப்பட்ட லேயரை... டபிள் கிளிக் பண்ணி... லேயர் ஸ்டைலுக்குள் செல்லவும்...
அங்கு... Gradient overlay , Inner glow , Inner Shadow என்பவற்றில் மாற்றம் செய்ய வேண்டும்... கீழுள்ள படங்களின் படி செய்யவும்.
அடுத்து... வட்டத்துக்கு இஃபெக்ட்கள் போடப்பட்ட லேயரைக்கொப்பி பண்ணவும். கொப்பி பண்ணிய லேயரை படத்தில் காட்டப்பட்ட வாறு சின்னதாக்கவும்...
இதற்கு Ctrl + Tஐ பயண்படுத்தலாம்.
இவ்வாறே மேலும் 2 தடவைகள் புதிய லேயர்கலாக செய்யவும்.
இறுதி வட்ட லேயருக்கு மாத்திரம்... கீழ்ப்பகுதியை றேஸர் டூல் (E) மூலமாக அழிக்கவும் ( றேஸர் ஃபெதர் உள்ளதாக பார்த்துக்கொள்ளவும்). பின்னர் லேயரை டபிள் கிளிக் பண்ணி... லேயர் ஸ்டைலுக்கு சென்று...Gradient overlay இல்... ஒரே நிறமாக மாற்றவும். படத்தில் காட்டப்பட்டுள்ளது.
இப்போது இதுவரை செய்த எல்லா லேயர்களையும் மேர்ஜ் பண்ணவும்...
( Ctrl + E ) ( எதற்கும்... எல்லாத்தையும் ஒரு கொப்பி எடுத்து ஹைட் பண்ணி வைப்பது நல்லம். :) )
அடுத்து... கஸ்டம் ஷேப் டூலை (U).. எடுத்து... அதிலுள்ள முக்கோணத்தை தெரிவு செய்து... புதிய லேயர் ஒன்றில்... இரண்டு கண்கள் போன்றும் மூக்கு போன்றும் மைக்கவும். இதே போன்று வாயையும் அமைக்கவும்.
பின்னர்... இப்போது செய்த லேயர்களை மேர்ஜ் பண்ணி...
Ctrl பயண்படுத்தி அழிக்கும் முறை மூலமாக அழிக்கவும். ( இந்த முறை தெரியாதவர்கள்... இதை கிளிக் பண்ணவும்... அல்லது " http://velang.blogspot.com/ "தளத்துக்கு சென்று பார்க்கவும். )
அடிப்படை உருவம் இப்போது தயார்... இனி உங்கள் விருப்பப்படி இந்த உருவத்தை மேலும்... மெருகேற்றிக்கொள்ளுங்கள். :)
இது நான் செய்தது...
------------------------------------------------------------------------------------------
0 comments:
Post a Comment