Total Pageviews

Sunday 17 October 2010

அங்க இருக்கு... இங்க இல்ல...

ஒற்றுமை / மனிதம்
------------------------------------------------------------------------------------------
இன்று தமிழ் இணையங்களிலும்... பத்திரிகைகளிலும்... "ஒற்றுமை" என்ற விடையம் பெரிதாக பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது.
எல்லாம்... இலங்கை யுத்ததின் பின்னர் ஜோசித்து... உணர்ந்த இல்லாத/மறைந்து போன‌ ஒரு விடையம்.
பொதுவாக... இங்கு... வெளி நாடுகளில்... இந்த ஒற்றுமை, உணர்வு என்பது.. சும்மா பேச்சளவிலும்.. சுய நலத்துக்காகவும் மட்டும்தான் இருக்கிறது... :( உண்மையான ஒற்றுமை குறைவாகவே உள்ளது. :/
------------------------------------------------------------------------------------------
சமீபத்தில்... இணையத்தளம் நடாத்தும் ஒரு நிறுவனத்தில் நான் கேட்ட சம்பவம்...
சில வாரங்களுக்கு முன்னர் இலங்கையில்... ஒரு பிரதேசத்தில்... குண்டு வெடிப்பொன்று இடம் பெற்றது.
உடனே அந்த செய்தியை சற்று திரிபாகவும்... பீதியை ஏற்படத்தும் வகையிலும்... இணையத்தில் பிரசுரித்து விட்டு...
தங்களுக்குள் பேசினார்கள்...
" இன்டைக்கு எப்படியும் சைட்டுக்கு கன சனம் வரும்... சண்ட நடந்தாத்தான் சனம் சைட்டுக்கு வருது... "
" அப்ப சண்ட நடந்தாத்தான் உங்களுக்கு பிளைப்பு போல... "
"போன வருசம் இப்படித்தான்... சன்ட நடக்கக்க..  10 , 15000 ம் பேருக்கு மேல வந்த‌துகள்..."
" :D " ( சிரிப்பு
------------------------------------------------------------------------------------------
இதுதான் ஒற்றுமையா? உணர்வா? தங்களது இணையம் ஃபேமஸாக இயங்க வேண்டும் என்றால்... இலங்கையில் யுத்தம் நடந்து எத்தனை பேர் செத்தாலும்... கவலை இல்லை இப்படியானவர்களுக்கு.
( அதிக வியூவர்ஸ் இருந்தால்தான் இலகுவாக கூகுள் அட்ஸ்களையும்... ஏனைய விளம்பரங்களையும் பெற்று பணம் சம்பாதிக்கலாம்... பணம்தான் முதல்... மனிதம் இல்லை... )
------------------------------------------------------------------------------------------
இப்படி மனிதர்கள் ( இன்று தமிழர்கள்) ஏங்கும் இந்த ஒற்றுமை... மிருகங்களிடம் நிறையவே இருக்கிறது... வீடியோவை முழுவதுமாக பாருங்கள்... பிளீஸ்...
------------------------------------------------------------------------------------------

------------------------------------------------------------------------------------------

இதுவும் கிட்டத்தட்ட எம்மிடமில்லாமல் போய்க்கொண்டிருக்கும்... மனிதம்தான்... (பெயர் மட்டும் மனிதமாமாம்... எருமைகள்... :P )

------------------------------------------------------------------------------------------



------------------------------------------------------------------------------------------

4 comments:

  1. ம்ம் .. இந்த வீடியோ பார்த்திருக்கிறேன் .. பிரமிப்பாக இருந்திச்சு ... இதாவது பருவாயில்லை , இந்திய ஊடகங்கள் எவன் எவனோட ஓடி போவாங்க எண்டே பாத்துக்கொண்டு இருக்குதுகள் .. இது அவங்க பிழை இல்லை .. இவங்க அதுக்கு குடுக்கிற முக்கியத்துவம் தான் ,,,

    நல்ல பதிவு , சிந்திக்க வேண்டியது .:)

    ReplyDelete
  2. ரெண்டாவது வீடியோ நல்லா இருந்திச்சு .
    மனுசனுட்ட இல்லாததெல்லாம் நீங்க எப்படி எதிர்பார்க்கலாம் .. :((

    ReplyDelete
  3. நன்றி...S.Sudharshan :)
    ம்ம்ம்... உண்மைதான் சுதர்ஷன்... கேவலமா எல்லாம் நடந்துகிறாங்க... எல்லாம் வெளில எழுத முடியாத நிலை... :(
    ம்ம்ம்... மனிதம் மரித்த மனிதர்கள் நாங்கள். :)

    ReplyDelete
  4. இவர்கள் எல்லாம் சமூக உணர்வு இல்லாதவர்கள். நல்ல பதிவு..

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected