------------------------------------------------------------------------------------------
ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை பற்றி பல இலங்கை தமிழர்களுக்கு தெரிந்திருக்கும்...
1860 ஆம் ஆண்டு மார்ச் 7ம் திகதி... வசாவிலானில் பிறந்தார்...
குறிப்பிட்ட ஈழத்து புலவர்களில் இவரும் ஒருவர்... இவரால் எழுதப்பட்ட "யாழ்ப்பாண வைபவ கெளமுதி" என்ற நூல்... யாழ்ப்பாணத்து உண்மை வரலாற்றை கூறுவதாக உள்ளது. மேலும், பல இலக்கிய படைப்புக்களையும்... உரை நடையிலான கவிகளையும் இயற்றியுள்ளார். இவரின் விகடமான கவிதைகள் இன்றளவிலும் பாவணையில் உள்ளது.
இவரைப்பற்றி பலர் ஏற்கனவே பல பதிவுகளை எழுதி இருப்பதால்.... இவர் தமிழின் நுட்பங்களை பயண்படுத்தி செய்த விகடகவித்தனங்களை மட்டும் எழுதுகின்றேன்...
இவரைப்பற்றி அறியவிரும்புபவர்கள் இந்த லிங்களில் பார்கலாம்... :)
விக்கிபீடியா
http://kanaga_sritharan.tripod.com/veluppillai.htm
http://www.thejaffna.com
PDF Book
------------------------------------------------------------------------------------------
சம்பவம் 01 :
ஒரு முறை ரெயில் கடவை அருகே சென்றுகொண்டுருந்த போது.... அங்கே இருந்த பலகையில், "கோச்சி வரும் கவணம்" என எழுதப்பட்டிருந்ததாம். ( சிங்களத்தில் இரயிலை கோச்சி என்று சொல்வார்கள். )
உடனே, அதன் கீழ் "கொப்பரும் வருவார் கவணம்" என்று எழுதிவிட்டு சென்று விட்டார்.
பின்னர், ரெயில்வே அதிகாரிகள் அதைப்பார்த்துவிட்டு.. அவர் மீது வழக்குத்தொடுத்துள்ளார்கள்...
நீதிபதி விசாரித்த போது...
கோச்சி என்றால் தமிழில் "அம்மா" என்றும் அர்த்தமுள்ளது... அதனால்த்தான் கொப்பரும் வருவார் என்று எழுதினேன்... பிழை எனதல்ல... தமிழை பயண்படுத்தாமல் தவறாக எழுதியதுதான் பிழை என சுட்டிகாட்டினார்.
( இலங்கை பேச்சு வழக்கில் கோத்தை /கொம்மா= அம்மா, கொப்பர் = அப்பா )
சம்பவம் 02 :
ஒரு முறை கொடுத்த கடனை வசூலிப்பதற்காக சிங்கப்பூர் சென்றுள்ளார்.
அங்கு கடனை வேண்ட செட்டியாரின் வீட்டிற்கு சென்ற போது... அவர் சாப்பிட்டுகொண்டிருப்பதாக சொல்லி தாமதப்படுத்தியுள்ளார்... உடனே பலரின் முன்னிலையில்... "தட்டி உண்ணும் செட்டி " என்று கூறிவிட்டார்.
இதனால் கடுப்பாகிப்போன செட்டியார்... வழக்குத்தொடுத்தார்....
நீதிபதி விசாரித்த போது...
யாழ்ப்பாணத்தில் தட்டிக்கு (வீட்டின் குறிப்பிட்ட ஓர் பகுதி) பின்னால் இருந்தே, சாப்பிடுவது வழக்கம்... அதைத்தான் தட்டிக்கு பின்னால் இருந்து உணவருந்தும் செட்டியார் என்பதை அப்படி சொன்னேன் என்று கூறி... வழக்கை தள்ளுபடி செய்ய வைத்தார்.
சம்பவம் 03 :
ஒரு கலை நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது... அங்கு விளம்பர பலகையில்... "கதிரை 2 ரூபா"... எனப்போடப்பட்டிருந்ததாம்... இவர் அதைக்காட்டி இது தவறு "கதிரைக்கு 2 ரூபா" என்று வரவேண்டும் என்று போட சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. இவரும் 2 ரூபா கொடுத்து டிக்கட் எடுத்துவிட்டு, பாதி நிகழ்ச்சியின் போதே கதிரையுடன் சென்றுவிட்டார்... பின்னர், வழமை போலவே வழக்கில் தவறு திருத்தப்பட்டது.
சம்பவம் 04 :
ஒரு முறை ஏதோ மனக்குழப்பத்தில் வந்துகொண்டிருந்தபோது... அவரின் முன்னால்... கிறிஸ்தவ சகோதரிகள் வந்திருக்கின்றனர்... அவர்களைப்பார்த்து "தேவடியாட்கள் போகிறார்கள்" என்று சொல்லிவிட்டார்.
உடனே இந்த சம்பவம்... நீதிமன்றத்துக்கு வந்தது...
நீதிபதி கேட்ட போது...
தான் தவறாக ஒன்றுமே சொல்லவில்லை... தேவனுக்கு அடியார்களாக இருப்பதால்... தேவ அடியாட்கள் என்றே சொன்னன் என்று கூறி நுட்பமாக வழக்கை திசை திருப்பினார்.
சம்பவம் 05 :
இவ்வாறு அடிக்கடி வழக்குக்களை திசை திருப்புவதால்... ஒரு முறை நீதிபதி... இனி உங்கட தலை கறுப்பு தெரியக்கூடாது என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.
அடுத்த முறை கோட்டுக்கு செல்லும் போது... தலையில் சிவப்பு மண் சட்டியை போட்டுகொண்டு போய்... நீதி பதிவிட்ட தமிழ் பிழையை சுட்டிக்காட்டினார்.
------------------------------------------------------------------------------------------
இவ்வாறு பல சுவாரஷ்யமான சம்பவங்கள் இருக்கின்றன.. நான் இங்கு எனக்கு உறுதியாக தெரிந்த 5 சம்பவங்களை குறிப்பிட்டுள்ளேன்.
இவரின் வசாவிலான் வேலுப்பிள்ளை வித்தியாசாலை மீண்டும் இயங்க ஆரம்பித்திருகிறதாம். :)
------------------------------------------------------------------------------------------
smileing I am...
ReplyDeleteசுவாரசியமான தகவல் .. அதென்ன எப்ப பாத்தாலும் கோர்ட்டுக்கு போகுது .:).கோர்ட்டுக்கு வேற வேலை இல்லையா .. இல்லாட்டி சும்மா கதையா
ReplyDeleteநன்றி... நிலாமகள் :)
ReplyDelete----------------------------------------
நன்றி... S.Sudharshan :)
இல்ல இது உண்மையானதுதான்... :D சொல்றத கேட்டுத்தான் எழுதினேன்... :D