இன்று காதலர் தினம்... சிம்பிளா ஒரு லவ் ஸ்டோரி எழுத இருக்கிறேன்... பாருங்க.... :P
கதை பெருசுதான் எனக்காக ஒருக்கா வாசித்து... பிடித்திருந்தா வோட்டும் போடுங்க... :D
-----------------------------------------------------------------------------------------
மிஸ்டர் y...
காலைல ஸ்கூல் போய்ட்டு... வீட்ட வந்தோன முதல்ல செய்றவேலை லப்டொப்பை ஒன் பண்ணி ஃபேஸ்புக்போறதுதான்... ஸ்கைப் தானாவே ஒன் ஆகிடும் :P... அனேகமா இரவு 12 மணிவரைக்கும் அதுதான் வேலை... ஸ்கைப்ல கொன்ஃபரன்ஸ்கோல்... ஃபேஸ்புக்ல சட்... ஆக்களுக்கு கொமென்ட் பண்ணி கலாய்க்கிறது.... சாட்டர் ஆக்கிறது அல்லது ஆகிறது.... :P இடைல ஆரும் இல்லை என்றா புளொக் உம் எழுதுறது. கடைசி பிள்ளை... பொறுப்பு ஒன்றும் சொல்லல இன்னும்.
ஒரு முறை இப்படித்தான்... ஃபேஸ்புக் ஃபான்பேஜ் ஒன்றில இருந்த.... கேர்ல் ஒராலுக்கு ஃப்ரென்ட் றிக்குவஸ்ட் பண்ணி இருக்கார் மிஸ்டர் y... அடுத்த நாள் பார்த்தால் அந்த கேர்ல் றிக்குவஸ்ட் ஓ.கே பண்ணிட்டு... பிறகு றிமூவ் பண்ணி இருக்கு. கடுப்பில.... "இதுக்கு றிக்குவஸ்ட அக்ஷப்ட் பண்ணி இருக்கவே தேவலை... பைய்" என்று மெஸேஜ் அனுப்பியாச்சு. அதுக்கு பதில் மெசேஜா " நான் தெரியாத ஆக்களை அட் பண்றல... ஸொறி" என்று வந்திட்டுது.
இந்த மெசேஜ் அனுப்பும் போதே... அங்காள ஃப்ரென்ட்ஸ்கூட கொண்ஃபரன்ஸ்ல பேசிட்டு இருக்கக... "ஒருத்தி ஓவராதான் மச்சான் படம்(ஸீன்) காட்டுறாள்... அட் பண்ணிட்டு நான் பாக்க முதல் றிமூவ் பண்ணிடால்டா... கலாய்க்கனும்.." என்று ஃப்ரெண்ட்ஸ்கிட்டையும் சொல்லியாச்சு...
அடுத்ததா... "ஓ.கே அப்போ ஏன் அட் பண்ணினிங்க சிஸ்டர்..." என்று தொடங்கியாச்சு... எல்லாமே லொல்லாத்தான்.. மெசேஜ்...
இரண்டு மூன்று நாட்களின் பின்னர்....
"இனி றிக்குவஸ்ட் பண்ணினா... நான் அட் பண்ணுவன்... இப்போ தெரிஞ்சுகிட்டன்" என்று அந்த மெடம் x... சொல்லிட்டா....
அதுக்கு மிஸ்டர் y... " நான் அட் பண்ணுவனாமாம்... நீங்க றிமூவ் பண்ணுவிங்களாமாம்... ஏலாது... றிக்குவஸ்ட் பண்ண மாட்டன்..." என்டுட்டார்.
மெடம் x... பிறகு தானே றிக்குவஸ் பண்ண y ம் ஓ.கே பண்ணீட்டார்.... :D... ஸ்கைப்ல ஃப்ரெண்ட்ஸ்கும் சொல்லியாச்சு... "இப்போ ஆள் தானாவே அட் பண்ணீட்டா மச்சான்..." என்று...
எதிரிடி நீ எனக்கு என்று... சொல்லி மெசேஜ்ல பேசத்தொடங்கியாச்சு... கொஞ்ச நாள்ளையே நல்ல ஃப்ரெண்டாகிற அளவுக்கு பேசியாச்சு.... நோர்மலா... மிஸ்டர் y கேர்ள்சோட சீக்கரமா குளோஸ் ஃப்ரெண்டாகிறது குறைவு... இவவோட ஆகியாச்சு... நல்ல ஃப்ரெண்லியா ஜோக்க கொஞ்சம் பாசமா... பழகினது பிடித்திருந்தது...அவவும்.... தனக்கு ஜொல்லுவிடுற ஆக்களை பற்றி எல்லாம் சொல்லி றொம்ப பெஸ்டாகிடினம்.... (என்றாலும் சில.. வேளைகளில் ஒன் லைன்ல இருந்து கொண்டே... றிப்ளை பண்ண மாட்டார்... ஹீ ஹீ... அங்கால ஸ்கைப்ல பிஸி... வேற காரணம் சொல்றது... நான் பாக்கல... நெட் வேலை செய்யல என்று... :P ஆனால், அந்த கேர்ள் கோவிக்கிறல லேட் எண்டாலும்... :) )
மிஸ்டர் y கு ஃப்ரெண்ட்ஸிப்பை பற்றி ஓவரா பில்டப் பண்றது... ஒரு பொழுதுபோக்கு... :D இந்த கேர்ல்டையும் பில்டப் பண்ணீட்டார்.
-----------------------------------------------------------------------------------------
மெடம் x...
ஸ்கூல் முடிந்து... வீட்ட வந்ததும் அடுத்த நாள் செய்யவேண்டிய கோம்வேர்க்கை செய்திட்டு... கொம்பியூட்டரை ஒன் பண்ணி ஃபேஸ்புக்... எம்.எஸ்.என் போறது தான் வேலை....
வீட்டு வேலைகள் செய்ய விடுறல ஒரே ஒரு பொம்பிளை பிள்ளை என்று... சமைக்க கூட தெரியாது.
ஃபேஸ்புக், ஸ்கைப்பில் ஃப்ரெண்ட்ஸோட அரட்டை அடிக்கிறதுதான் வேலை 11 மணி வரைக்கும்.
ஒரே நாளில் 3 ஃப்ரெண்ட் றிக்குவெஸ்ட்... அதில ஒன்றுக்கு கொமன் ஃப்ரெண்ட்ஸே இல்லை... ஜொல்லு விடத்தான் நிக்குது என்று நினைச்சுக்கொண்டே... படங்களை பார்த்திட்டு றிமூவ் பண்ணுவம் என்று அட் பண்ணியாச்சு.. (தெரியாத ஆக்கள் என்றால்... இப்படி அட் பண்ணி படங்களை பார்த்திட்டு கலட்டி விடுறது இவாட பொழுது போக்கு.. :P ) ஆனால், படங்களி எல்லாம் பார்க்க முடியல... பேர்சனல் படங்கள் எல்லாம் ஹைட்... ஸோ, வேஸ்ட் என்று உடனே கட் பண்ணியாச்சு.
கொஞ்ச நேரத்தில ஒரு மெஸேஜ்... "இதுக்கு றிக்குவஸ்ட அக்ஷப்ட் பண்ணி இருக்கவே தேவலை... பைய்"... இப்படித்தான் கனக்க மெஸேஜ் வாறது ஜொல்லுகள்கிட்ட இருந்து..
"நான் தெரியாத ஆக்களை அட் பண்றல... ஸொறி" என்று பதில் அனுப்பியாச்சு....
பிறகு... "ஓ.கே அப்போ ஏன் அட் பண்ணினிங்க சிஸ்டர்..." என்று ஒரு மெசேஜ்...
அதுக்கு... " படங்கள் பார்க்கிறது என்ட ஹொபி பிறதர்..." என்று அனுப்பியாச்சு... பிறகும் லொல்லா மெசேஜ் வந்திச்சு... பேசிட்டு இருக்ககதான் தெரியும்... ஒரே நாட்டில தான் இருக்கம் என்று... ஜொல்லு விடாம சிஸ்டர் என்று சொல்லி பேசுறானே... அட் பண்ணுவம் என்று...
"இனி றிக்குவஸ்ட் பண்ணினா... நான் அட் பண்ணுவன்... இப்போ தெரிஞ்சுகிட்டன்" என்று ஒரு மெஸேஜ் அனுப்பினால்... " நான் அட் பண்ணுவனாமாம்... நீங்க றிமூவ் பண்ணுவிங்களாமாம்... ஏலாது... றிக்குவஸ்ட் பண்ண மாட்டன்..." என்று பதில்...
நண்பனா அவன பிடிச்சதால.. பிரச்சனை வராது என்று... அட் பண்ணியாச்சு... ( பிறகு அப்படி நடக்கும் என்று நினைக்கவே இல்லை... )
கொஞ்ச நாள் போக...
அவன் ஜொலியா பேசுறதும்... பழகிறது...ட தன்னைப்போலவே இருந்ததால...
அவன லவ் பண்ணலாம என்று தோனிச்சு... அதுக்கு முதல் மெடம் x எவரையும் லவ் பண்ணல ( அட்ராக்ஷன் இருந்திருக்கு 10, 13 வயசில... )
ஆனால், அவன் ஃப்ரெண்ட்ஸிப் தான் முக்கியம்... என்று எல்லாம் ஓவரா பேசினான்... தன்ன புறக்கணிக்கத்தானோ என்று நினைச்சு லவ் பண்ணி நல்ல ஃப்ரெண்ட விட வேனாமே என்று... நண்பியாகவே இருக்க நினைச்சிட்டா.
-----------------------------------------------------------------------------------------
ஹொலூன் பண்டிகைக்கு முதல் நாள்...
எம்.எஸ். என் ல சட் பண்ணிட்டு இருக்கக... திடீரெண்டு...
மிஸ்டர் y... "நீ என்னை லவ் பண்றியா?" என்று மெடம் x ட கேட்டார்...
(அவருக்கு இவாவ பிடிச்சிருந்துது... ஜோக்கா பேசுறது... ஃப்ரெண்டா இருக்ககவே விட்டு கொடுக்காமல் இருந்தது... அன்பா பேசினதெல்லாம் சேர்த்து 1st லவ் பத்திகிச்சு... :P ( அதுக்கு முதல்ல அட்ராக்ஷன் வந்திருக்கு 14,16,17 ல... :D)
ஜோக்கா கேக்கிற போல இருந்ததால மெடம் y " நீ பண்றியா?" என்று கேட்டுடே இருந்தா...
அதே நேரம்... மிஸ்டர் x தன்ட பெஸ்ட் ஸிஸ்டர்ட... இதை சொல்லிடு இருந்தார்... அவா நம்பல... காரணம் ஜோக்காதான் பேசுறான் என்றுதான்...
பிறகு சட் முடிஞ்சு போற டைம் அவவும் "ஐ லவ் யூ" போட்டுட்டு உடன போய்டா...
ஹொலூன் பண்டிகை...
அன்றுதான் லவ் 2 சைட்டாலையும் கொண்ஃபோர்மாச்சு...
பிறகு 11 நாளுக்கு பிறகு 1st மீட்டிங்...
3 கிழமைக்குள்ள... மெடம் x ட அப்பா... கேட்டு இருக்கார்... " ஃப்ரெண்ட்ஸிப் தானா அல்லது லவ்வா என்று..." லவ் என்று சொல்லீட்டா மெடம்... அவையும் படங்களைப்பார்த்து நல்லம் என்று நம்பீட்டினம்... :P
1-1/2 மாசத்துல மிஸ்டர் y உம் வீட்டுக்கு கொண்ஃபோர்மா சொல்லீட்டார்.
முதல்ல அம்மா எதிர்ப்பு... காரணம், அவா... ஃபமிலி ஃப்ரெண்ட் ஒரால் ட மகளுக்கு கட்டிவைக்க விரும்பினா... பிறகு பிள்ளைட விருப்பம் முக்கியம் என்றுட்டு ஓ.கே பண்ணீட்டா... :D
பிறகி ஸ்கைப்ல 2 ஃபமிலியும் பேசிச்சு... அப்போதான் தெரியும் தூரத்து சொந்தம் என்று... மெடம் x ட பெரியப்பாவோட மிஸ்டர் y உம் அவர்ட அம்மாவும் நல்ல குளோஸ்....
பிறகென்ன சிம்பிலா... ஓ.கே சொல்லிடினம்...
ஆனால்.. இடைல கொஞ்சனால்
மிஸ்டர் x க்கு தொடர்ந்து கதைக்கக அடிக்கடி கடுப்பாகி... ஃப்ரெண்டாவே இருந்திருக்கலாமோ.... என்ற எண்ணம் வந்திருக்கு... (முதல்ல என்றால்... கனபேரோட கதைக்கக சின்ன விசயத்துக்கு கோவம் வராது... பழச சொல்லினாலும் கோவம் வாறல... )
மெடம் x இக்கும்... என்ன இவன் இப்படி கோவமாகிறானே... ஃப்ரெண்டா இருக்கக இப்படி இல்லையே என்று தோனி இருக்கு...
போக போக இப்போ... புரிஞ்சுகிட்டினம்... எஸ்.எம்.எஸ், ஸ்கைப்ல நெடுக பேசீட்டு இருக்கினம்...
2 சை ஃபமிலியும் ஓ.கே சொல்லியாச்சு... காதலுக்கே உரிய எதிர்ப்பு ஒன்றும் இன்னும் வரலை...
வாறதுக்கு ஒரு சந்தர்ப்பமும் இல்லை... முக்கியமா இவர்கள் 2 பேருகும் தங்களைதாங்கள் டவுட் படுறலை...
ஃபேஸ்புக் ல என்ன என்ன நடக்குது ஆரார் ஜொல்லு விடினம் என்கிறதெல்லாம்... பார்த்து... மாறி மாறி மறுபடியும் கலாய்ப்பது தான் இபோதைய ஹொபி..
-----------------------------------------------------------------------------------------
இதில ஒரு மெஸேஜ்ஜும் இல்லை... :D
ஆனால், லவ் பண்ணீட்டு வீட்டுக்கு மறைக்காமல் வெளிப்படையாக நடந்தால்... அவையே சம்மதிக்ககூடிய வாய்ப்புக்கள் இருக்கு... லவ் உம் தோற்காது.... பெற்றோருக்கும்/எவருக்கும் அவமான படவோ... கவலைப்படவோ தேவை இருக்காது... :)
<3 அனைவருக்கும்... காதலர் தின வாழ்த்துக்கள்... Ɛ>
-----------------------------------------------------------------------------------------
heheheh இதிலை அரைவாசி ஏற்க்கனவே கேட்டிருக்கன் ... இப்ப முழுசா வாசிச்சுட்டன் .. யார்டையோ உண்மை கதை போல இருக்கு ..யார்டைன்னு என்னால கண்டு பிடிக்கவே முடிஎல்லைஎண்டா பாரன் .. நல்ல கதை .. :)
ReplyDeleteநன்றி..S.Sudharshan :)
ReplyDeleteஅதே அதே... மிக்க நன்றி... :)
---------------------------------
நன்றி... ஆகாயமனிதன்..
பார்திடம்ல... :)
nama story 100%
ReplyDelete