Total Pageviews

Wednesday, 9 February 2011

பனி மனிதன்... (மர்ம குரங்கு மனிதர்கள்? ) (01)

-----------------------------------------------------------------------------------------
ஒரு மாத இடைவெளியின் பின்னர், மீண்டும் பதிவெழுதவுள்ளேன்... ஜனவரியில் 2 பதிவுகள் மட்டுமே இட முடிந்தது... இனி வழமைபோல் மாதாந்தம் 10 இக்கு மேற்பட்ட பதிவுகளை எழுத முடியும்.

ஏலியன்ஸ்,லெமூரியா, மார்ஸ் போன்ற பல குழப்பமான தலைப்புக்களை ஏற்கனவே எழுதியிருக்கிறேன்...
அதே போல் இன்று, நாம் அனைவருக்கும் பழக்கப்பட்ட "பனி மனிதன்" சம்பந்தமாக நான் அறிந்து கொண்ட தகவல்களையும் எனது ஊகங்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்... :)

-----------------------------------------------------------------------------------------

சிறு வயதாக இருக்கும் போது... இந்த பனிமனிதர்கள் சம்பந்தமாக கேட்டு இருக்கிறேன்... இமைய மலைப்பகுதிகளில் வாழ்ந்து வருவதாகவும், சுமார் 9 அடி உயரமுள்ள இரண்டு கால்களில் நடக்கும் உருவங்கள் என அறிந்திருந்தேன்.
இவர்களை பெரிதாக எவரும் காணவில்லை எனவும். ஆனால், இந்த உருவங்களின் காலடையாலங்களை பலர் பார்த்திருப்பதாகவும் கூறினார்கள்.
அதேவேளை, காலடையாலங்கள் பெரிதாக இருப்பதற்கான காரணமாக நான் கருதியது, பனிப்படிவில் காலடையாலத்தை வைத்து செல்லும் போது... பனி உருகலால் பெரிதாகி இருக்கும் என பின்னர் நினத்தேன்.

இனி மேலதிகமா உறுதியாக அறிந்துகொண்ட தகவல்களையும் சம்பவங்களையும் பகிர்ந்துகொள்கிறேன்...

இந்த உருவங்கள் கட்டுக்கதையாக இருக்க முடியாது என்பதற்கு காரணம், இவை சம்பந்தமான தகவல்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து மட்டும் வரவில்லை. உலகின் பல பாகங்களில் இருந்தும் அந்த உருவங்களைப்பார்த்ததாக தகவல்கள் உள்ளனன்.
அந்த வகையில், இமையமலைப்பகுதியில் இந்த உருவங்களை எட்டி (yeti) அல்லது பனிமனிதன் என்றும் அடையாள‌ப்படுத்துகிறார்கள். கனடாவில் ஷஸ்குவாட்ச் (Sasquatchi) என்றும் அமேசன் பகுதிகளில் மெப்பிங்குவாரி (Mapinguari) என்றும் கூறுகிறார்கள்.

1900 ஆண்டுகளிலேயே இந்த உருவங்கள் தொடர்பான முதலாவது அதிகார பூர்வமான பத்திரிகை வெளியீடு இடம் பெற்றது. கொலம்பியா விக்டோரியா நகரப்பத்திரிகை ஒன்று "குரங்கு மனிதன்" என்ற தலைப்பில்...
நேரடியாக அந்த உருவங்க‌ளைக்கண்டவர்கள் என கூறியவர்களிடம் இருந்து தகவல்களைப்பெற்று வெளியிட்டது.
அதன் படி சுமார் 8 அடிக்கு மேலான உயர்முள்ளதாகவும்... 225 KG நிறை இருக்குமெனவும்... உடல் முழுவதும் முடி உடையதாகவும் அந்த உருவம் வர்ணிக்கப்பட்டது.

1951 ஆம் ஆண்டு இமயமலையில் மலையேற சென்றிருந்த எரிக்ஹிப்டன் உறை பனியில் மிகப்பெரிய கால்த்தடங்களை அவதானித்து புகைப்படமெடுத்தார். அது "மர்மமான பனிமனிதனின் கால்த்தடங்கள்" என்ற பெயரில் உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

-----------------------------------------------------------------------------------------

எனினும் சில விஞ்ஞான உலகமும், அறிவியளாலர்களும்... இதை மறுக்கின்றனர்... அதற்கு அவர்கள் கூறும் காரணம்...

ஒரு உயிரினம் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் அவைகள் குடும்பமாக வாழ வேண்டும்... அப்படி வாழ்ந்தால்த்தான் நிலைக்க முடியும். எனினும், இதுவரை எவருமே.. பனிமனிதர்களின் குட்டிகளை கண்டதாக கூறியிருக்கவில்லை என்பது ஒரு வாதம்.
( எனினும் இதற்கு எனது கருத்துப்படி, அவ்வாறு சிறு பனிமனித குட்டிகளை கண்டிருப்பின்... காண்பவர்கள் மனிதக்குரங்கு அல்லது குரங்கினம் என அலட்சியம் செய்திருக்கக்கூடும்... காரணம், உடலமைப்பு ஒரே போன்றதாகவே வர்ணிக்கப்பட்டது கண்டவர்களால். :) )

அடுத்தது... எந்த உயிரினமும் ஒரு நாள் மரணத்தை சந்திக்கும்... அப்படி பனி மனிதர்களில் உடல்கள் இது வரை கிடைத்ததில்லை... எலும்புக்கூடுகள் கூட கிடைத்ததில்லை.
( சில வேளைகளில்... மனிதர்களைப்போல் புதைக்கும் அல்லது எரிக்கும் முறைகள் இருக்கலாம்.... ஆனால், அந்த உருவங்கள் அந்தளவுக்கு அறிவுள்ளதாக அறியப்படவில்லை.  மேலும், பனிப்பகுதிகளில் இந்த உயிரினங்களைத்தேடும் பணிகள் பெரிய அளவில் இடம் பெறவில்லை... அதனாலும்... எலும்புகள் கிடைக்காமல் போய் இருக்கலாம்.:) )

அடுத்ததாக... எந்த உயிரினமும் தாம் நடமாடும் இடத்தில், கேசங்களையும் இறந்த செல்களையும் விட்டுச்செல்லும்... ஆனால், பனி மனிதர்களின் எந்த அடையாளங்களும் கிடைக்கவில்லை.

இக்காரணங்கள் அனைத்தும் நிராகரிக்க நியாயமானதுதான்... எனினும்... இந்த அனைத்து வாதங்களையும் முறியடிக்கும் முகமாக ஒரு ஆதாரம் சிக்கியது... அது என்ன என்பதை அடுத்த பதிவில் எழுதுகிறேன். :)

-----------------------------------------------------------------------------------------

4 comments:

 1. நல்ல தகவல் ..இவங்களை தானே Bigfoot எண்டு சொல்றது ?1!!..

  ReplyDelete
 2. பனிமனிதனின் கண்ணாடி "யாரையோ" ஞாபகப்படுத்துகிறதே,,,நண்பா...பதிவு தொடங்கிய விதம் அருமை...தொடர்ந்து வாசிப்பேன்...! நன்றி..

  ReplyDelete
 3. >>> முதல் படத்தில் இருப்பவரை அடிக்கடி பார்த்த ஞாபகம். யாரையோ நக்கல் செய்கிறீர்களா??

  ReplyDelete
 4. நன்றி...S.Sudharshan :)
  ஓம்... இவர்களைதான்... இன்னும் இருக்கு எழுத.. :D

  நன்றி...சின்னப்பயல் :)
  ஹீ ஹீ... நல்ல காலம்... மாண்பு மிகு முதலமைச்சர் கருநாதியை நினைவு படுத்துதென்று சொல்லாமல் விட்டீர்கள்... :D
  இன்னும் பல சுவாரஷ்யங்கள் இருக்கு..; எழுதுவேன்... :)

  நன்றி...! சிவகுமார் ! :)
  சா... அப்படி நக்கல் எல்லாம் செய்ய மாட்டார்... நம்புங்க... :P

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails