Total Pageviews

Friday, 25 December 2009

எங்கே லெமூரியா/ குமரிக்கண்டம் ? (லெமூரியா 01)

இன்று முதல் லெமூரியா தொடர்பான கலந்துரையாடலை பார்க்க ஆரம்பிப்போம்... ஆரம்பத்தில் லெமூரியா தொடர்பான தகவல்களை ஒரு ஆராச்சிக்கட்டுரை போன்று எழுதலாம் என்று எண்ணி இருந்தேன். ஆனால், லெமூரியா பற்றி முரண்பாடு மிக்க பல தகவல்கள் காணப்படுகின்றமையால் ஓர் சிறந்த உண்மைத்தன்மை மிக்க ஆராச்சிக்கட்டுரையாக என்னால் அதைகொண்டுசெல்வது கடினமான காரியம். அதேவேளை இப் பதிவினை வாசிக்க வந்திருக்கும் அனைவருக்கும் எதோ ஒரு வகையில் லெமூரியா கண்டம் பற்றி தெரிந்திருக்கும். எனவே அவர்களும் தமக்கு தெரிந்த தகவல்களை பின்னூட்டாக வழங்கும் பட்சத்தில் இத்தொடரானது பயன் மிக்கதாக அமையும் என்பதில் ஐயமில்லை. 
--------------------------------------------------------------------------------------------


"லெமூரியா" என கூகிலில் தேட ஆரம்பித்ததுமே லெமூரியாவின் இருப்பிடம்( இருந்த இடம்) தொடர்பான முரண்பாடுமிக்க தகவல்கள் வர ஆரம்பிக்கின்றன. அதாவது "மூ" எனும் பெயருடன் பசுபிக் சமுத்திரத்தில் காணப்பட்ட கண்டமே லெமூரியா என பொருள்படும் வகையில் தகவல்கள் காணப்படுகின்றன. அதே வேளை சில படங்கள் இந்து சமுத்திரத்தில் இருந்த கண்டம்தான் "லெமூரியா" என கூறுகின்றன. இங்கு நானும் இந்து சமுத்திரத்தை மையப்படுத்திய கண்டம் பற்றியே எழுதவுள்ளேன். காரணம், உலக வரைபடத்தில் காணப்படும் வடஅமெரிக்க தென்னமெரிக்க கண்டங்கள் இலகுவாக அப்பிரிக்க ஐரொப்பிய கண்டங்களுடன் இனைக்க கூடிய வாறு காணப்படுகின்றன. (கற்பனை செய்து பாருங்கள், தென் அமெரிக்காவின் வலப்பக்கத்திலுள்ள கூர்ப்பகுதி ஆபிரிக்காவின் இடப்பக்கத்திலுள்ள குழிந்த பகுதியுடன் பொருந்தக்கூடியதாக இருக்கும். அதே வேளை ஆபிரிக்காவின் இடப்பக்க முனைப்பகுதி வட தென் அமெரிக்க கண்டங்களுக்கு இடைப்பட்ட பகுதியுடன் பொருந்தக்கூடியதாக இருக்கும்.) ஆகவே, என்னை பொறுத்த வரையில் இவ் இடைப்பட்ட பகுதியில் கண்டம் இருந்திருக்க சாத்தியமில்லை. ( அவுஸ்ரேலியாக்கண்டத்தை ஆபிரிக்கா அல்லது ஆசியா கண்டத்துடன் பொருத்தி பார்ப்பது கச்சிதமானதாக இல்லை)


இன்னொரு காரணமாக, பூமியுடன் ஒரு பாரிய விண்கல் மோதிய போது பசுபிக் சமுத்திரத்தில் இருந்து பிளவுபட்டு போன ஒரு பகுதியே காலப்போக்கில் ஈர்ப்பு விசையின் காரண‌மாக சந்திரனாக உரு மாறியதாக விஞ்ஞானிகள் மத்தியில் ஒரு கருத்து நிலவிவருகிறது. சந்திரனின் மேற்பரப்பில் காணப்படும் சில கணிமங்கள் பசுபிக் சமுத்திரத்திலும் உள்ளனவாம். ( இது பூமியில் உயிரினம் தோன்ற முன்னர் ஏற்பட்டதாக கருதப்படுகிறது. இன்னொரு சாரார் இவ் மோதலே டைனோசரின் அழிவுக்கு காரணமாக இருக்கலாம் எனவும் கூறுகின்றனர். எது எவ்வாறாயினும் மனித சமுதாயம் அப்போது தோன்றி இருக்கவில்லை என்பது தெளிவு.) பதிவு நீளமாகுகிறது மற்றைய ஆச்சரிய தகவல்களை பின்னர் பார்க்கலாம்.... இது ஒரு கலந்துரையாடல்.... உங்களது கருத்துக்கள் எதிர் பார்க்கப்படுகின்றன!
--------------------------------------------------------------------------------------------
இனி எவ்வாறு மறைந்தது லெமூரியா?

16 comments:

  1. கண்ணன்25 December 2009 at 15:30

    அருமையான பதிவு நண்பரே. தொடர்ந்து எழுதுங்கள். இணைய குப்பைகளுக்கு மத்தியில் இந்த பதிவு உருப்படியாக தெரிகிறது.

    ReplyDelete
  2. நல்ல பதிவு,
    கூடிய விரைவில் அடுத்த பதிவை இடவும்.

    ReplyDelete
  3. லெமூரியா கண்டம் என்பது இல்லை என்பது இப்போது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது தமிழகத்தில் தான் இன்னமும் அதை விட மாட்டேன் என்கிறார்கள். நீங்கள் கொடுத்துள்ள படத்தில் மேரு மலை என்று ஒன்று இருக்கும் பாருங்கள், அது சுத்த அபத்தம் ஏனென்றால் மேரு மலை என்பது ஒரு கற்பனை மலையே தவிர வேறு ஒன்றுமில்லை. இன்று நாம் பூமத்திய ரேகை என்று கூறுவது போல அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு கற்பனைக் கோடு, அவ்வளவே. மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் - Mount Meru, Lemuria

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. நன்றி கண்ணன்!
    நன்றி சகா!
    Shaan நீங்கள் சொல்வது போன்று அறிவியலால் அனைத்தையும் நிரூபிக்கமுடியாது. ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள்ளேயே அறிவியல் இன்றும் இயங்குகிறது. நிரூபிக்க முடியாத்தெல்லாம் பொய்யல்ல.
    உதாரணமாக, இப் பரந்த பிரபஞ்சத்தில் இன்னமும் "புவியில் மட்டும் தான் உயிரினங்கள் இருக்கின்றன" எனும் ஒரு குறுகிய வட்ட்த்தினுள்ளேயே நாம் இருக்கின்றோம். உன்மையில் இன்னமும் எம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே உண்மை.

    25 December 2009 08:59

    ReplyDelete
  6. An interesting topic. A nice beginning. Go ahead Brother. Good Luck.

    ReplyDelete
  7. Write about something useful. talking about lemuria is useless.

    ReplyDelete
  8. which are useful? cinema or ...

    ReplyDelete
  9. gud explanation

    ram
    www.hayyram.blogspot.com

    ReplyDelete
  10. நன்றி!
    R.Baanugopanஅண்ணா!
    hayyram உங்களுடைய வலைபதிவு நல்லா இருக்கு!

    ReplyDelete
  11. Sooper Pathivu sir. Ungal adutha pathivirkaaga kaathu kondirukiren.

    rajsteadfast@gmail.com

    ReplyDelete
  12. நன்றி ராஜேஸ்!
    பதிவு 1ம் திகதி வந்துடும்.

    ReplyDelete
  13. நல்ல பதிவு. அருமையான விசயங்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
    ஆஸ்த்திரேலியா இந்தியாவின் ஒரு பகுதிதான் அன்பரே. அந்த படத்திலேயே நீள் வட்டுப் பாகத்தில் ஒட்டிப் பாருங்கள். கச்சிதமாகப் பொருந்தும். நன்றி.

    ReplyDelete
  14. சுப்பர்! பொருந்துகிறது.
    நன்றி.

    ReplyDelete
  15. aaraicheyalarkal kumari kandam enbathu oneru undu enbathi nerubithuvitanar bothers.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected