Total Pageviews

Wednesday, 9 December 2009

ESP ஐ அறியும் முறைகள்/ முட்டாள் என்றழை... - (மூளையும் அதிசய சக்திகளும் 07)

ESP ஐ அறியும் முறைகள்/ முட்டாள் என்றழைக்கப்பட்ட அதிசய சிறுமி.
----------------------------------------------------------------------------------------
சில பிரச்சனைகள் காரணமாக ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பதிவுகளை இட முடியவில்லை. ஆனால், ஒரு கிழமையில் எப்படியும் 4 அல்லது 5 பதிவுகள் கட்டாயம் இடப்படும் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். அத்தோடு மிகவிரைவில் "லெமூரியா கண்டம்..." பற்றிய வரலாற்றினூடானதும் விஞ்ஞானத்தினூடானதுமான தொடர் ஆரம்பமாகும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இனி தொடருக்குள் நுழைவோம்....

இன்று மேலும் சில ESP ஐ ஆறியும் முறைகளை பார்ப்போம்.

முதலில் நாம் பரவலாக பாவிக்கும் தொலைபேசியைக்கொண்டு எமது ESP ஐ அறியும் முறையை பார்ப்போம்.

மிக இலகுவான முறையிது. (தொலைபேசி இல்லாதவர்கள் மன்னிக்கவும்) உங்களது தொலைபேசிக்கு அழைப்பொன்று வரும் போது உடனே தொலைபேசியை பார்க்காது யார் அழைத்திருப்பார் என் ஊகித்து ஒரு தாளில் குறித்துக்கொள்ளுங்கள், பின்னர் தொலைபேசி  அழைப்பிற்கு பதில் அளியுங்கள். ( உடனே தாளில் எழுதுவது சிரமமான காரியம், எனவே நினைவில் நிறுத்திக்கொண்டு நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள்.  அதுவும் ஒரு வகையில் ஞாபக சக்தியை கூட்டிக்கொள்ளத்தக்க செயற்பாடு தானே!)

பதில் அளித்த பின் நீங்கள் நினைத்த பெயரும், அழைப்பை ஏற்படுத்தியவரின் பெயரும் சரியாக பொருந்துகிறதா இல்லையா என பாருங்கள். பொருந்தி வரின் உங்களது தாளில் அப் பெயருக்கு அருகில் சரி அடையாளமிடுங்கள். இல்லை எனின் பிழை அடையாளமிடுங்கள்.


இவ்வாறே தொடர்ந்து குறைந்தது 50 முறை செய்த பின்னர் உங்களது சரி அடையாளங்களின் எண்ணிக்கையை எண்ணி இரண்டால் பெருக்குங்கள். வரும் பெறுமானத்தை முந்தய பதிவிலுள்ள புள்ளி முறையுடன் ஒப்பிட்டு பாருங்கள்...

புள்ளி குறைவாக இருந்தால் கவளைப்பட வேண்டாம். (எனக்கும் குறைவாகத்தான் வருகிறது). தொடர்ந்து செய்ய சரியாகிவிடுமாம்.
-----------------------------------------------                            


ஜேர்மனியின் கிழக்கு பகுதியில் ஒரு பாடசாலையில் அனா என்றொரு சிறுமி படித்து வந்தாள்.  வகுப்பறையில் ஆசிரியை பாடம் நடாத்தும் போது அச்சிறுமியாள் எதையுமே விழங்கிகொள்ள முடியவில்லை. அது அவ் ஆசிரியைக்கும் தெரியும்.
அதனால், பல முறை அனா ஆசிரியையினாள் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டாள். பெற்றோரிடமும் "உங்கள் மகளுக்கு போதிய மூளைவளர்ச்சி இல்லை... அதனால் மகளை பாடசாளைக்கு அனுப்புவதை நிறுத்தி விடுங்கள்" என ஆசிரியை முறையிடுவதுமுண்டு. அனாலும் மகளை படிக்கவைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அவளை தொடர்ந்து பாடசாலைக்கு அனுப்பி வைத்தனர் அவளது பெற்றோர்கள்.


ஒரு நாள் வழமை போலவே ஆசிரியை அனாவிடம்  படித்த பாடத்தில் கேள்வி கேட்டாள். அதற்கு வழமை மாதிரியே அவளும் பதில் தெரியாது அசடு வழிந்தாள். அனா வை கோபத்துடன் தன்னருகே அழைத்து அவளை திட்டிக்கொண்டிருந்தாள் ஆசிரியை. திடீரென அனா அக் கேள்விக்குரிய பதிலை மிக தெளிவாகவும் சரியாகவும் சொல்லத்தொடங்கினாள்!!!.
"இவ்வளவு நாளாக முட்டாளாக இருந்த அனா என்னென்று திடீரென புத்தகத்திலிருக்கிற மாதிரியே விடையை சொல்கிறாளே????"  வகுப்பறை முழுவதும் ஒரே ஆச்சரியம்....!!!

ஆசிரியையாள் நம்பமுடியவில்லை. உடனே அடுத்த கேள்வியை கேட்டார். அனாவாள் விடைசொல்லமுடியவில்லை.
"அவள் ஏதோ பாடமாக்கி சொல்லி இருப்பாள்" வகுப்பில் சலசலப்பு ஏற்பட்டது. சில நிமிடங்களின் பின்னர் மறுபடியும் மிகச்சரியான பதிலை அனா கூறினாள்.

இச் சம்பவம் ஊரெங்கும் பரவியது.... ஒரு ஆராச்சியாளரின் காதிலும் விழுந்தது....
தொடரும்....
-------------------------------------------------------------------------------------------------
---இனி--- திடீரென அனாவால் பதில் சொல்ல முடிந்தது எவ்வாறு? ESP ஐ அறியும் இலகு முறை(கள்).

5 comments:

 1. ஒருவருமே போன் செய்யவில்லை நான் என்ன செய்வது

  ReplyDelete
 2. பக்கது வீட்டில் யாராவது டெலிபோன் வைத்திருந்தால் அங்கு போய் கண்டுபிடிடும். ( அல்லது உம்மிடம் போன் இருந்தும் யாரும் கோல் பண்ணவில்லை எனின், உம்மட நம்பறை, இன்ரர்னெட்டில் ஏதாச்சும் சில நிறுவனங்களின் தளத்தில் கொடும். யார் பண்ணாட்டியும் அவர்கள் பண்ணுவார்கள்.

  ReplyDelete
 3. /ஒருவருமே போன் செய்யவில்லை நான் என்ன செய்வது/
  HA HA HA MUDIYALLA

  ReplyDelete
 4. Tnx ALAGAR & ஆட்காட்டி...

  Een intha kolaiveri thanamaana thaakkuthal... :P

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails