நான் பார்த்தேன்!
----------------------------------------------------------------------------------------இவ்வளவு நாளாக சீரியசான விடையங்களை மட்டும் பார்த்து வந்த நாம். இன்று ஒரு மாறுதலுக்காக உரு வெளித்தோற்றம் சம்பந்தப்பட்ட ஒரு பிரபல எழுத்தாளரின் (ஜேம்ஸ் தர்பர்) நகைச்சுவையுடன் ஜோசிக்கவும் வைக்கும் கதையைப்பார்ப்போம்....
ஒரு கணவன் அதிகாலை எழுந்து, ஜன்னலை திறந்து பார்த்துவிட்டு "யூனிகார்கன்...! யூனிகார்கன்...!" என கத்தினான். (யூனிகார்கன் என்பது தலையில் கொம்புமுளைத்த அதிசயமான ஒரு மிருகம்.) உடனே கணவன் சமையல் கட்டில் உள்ள மனைவியை அழைத்து " பாரு.. பாரு ... தோட்டத்தில் யூனிகார்கன் மேயுது..." என கூறினான். மனைவி ஓடிவந்து பார்த்துவிட்டு. " யூனிகாகனாவது ஒண்ணாவது.... இப்போ எல்லாம் காலையிலேயே தண்ணிபோட ஆரம்பித்திட்டீங்களா?" என முறாய்த்தாள்.
"சேச்சே... நிஜமாகவே பார்த்தேன்!"
"அது ஒரு புராணக்கற்பனை. அப்படி ஒரு மிருகம் உலகத்தில் நிஜமாகவே இருக்காது! நீங்கள் பார்த்திருக்கவே முடியாது!"
"இல்லை நான் பார்த்தேனே!"
"எப்படி பார்த்திருக்க முடியும்? உங்களுக்கு மண்டையில் மூளையே இல்லையா?"
இப்படியே, வாக்குவாதம் தொடர்ந்தது.
அடுத்த வாரம் முழுவதும், கணவன் இதை பற்றியே வரும் போகும் நண்பர்களிடமெல்லாம் பேசத்தொடங்கினான். போதாதற்கு அயளவர்களிடமும் பேசத்தொடங்கினான். மனைவிக்கு கெட்ட கோபம் வந்தது.
" நீங்க யூனிகாகன் புராணத்தை நிப்பாட்ட போறிங்களா இல்லையா? கடைசி முறையாக கேட்கிறேன்!"
"இல்லை நான் பார்த்தேனே எப்படி பொய் சொல்ல முடியும்?"
" அது... ஒரு...கற்பனை மிருகம்ம்ம்ம்ம்..........."
" நான் பார்த்தே.........!" சொல்லி முடிப்பதற்குள் தலையை அகப்பைபிடி பதம் பார்த்தது.
நேரடியாக மனோத்துவ டொக்டரிடம் சென்ற மனைவி " என் கணவன் யூனிகார்கனை பர்த்தேன் என்கிறார்..."
" மெடம், யூனிகார்கன் ஒரு கற்பனை மிருகம்" இது டொக்டர்.
"அந்த கருமத்தை தான் நானும் சொன்னேன். அனா அவர் "நான் பார்த்தேன்" என்று போற வாறரவர்களிடம் எல்லாம் சொல்கிறார். அண்டைக்கு ஒரு சின்னப்பையனிடம் சொல்லி இருக்கிறார். அவன் என்னட்ட வந்து " ஐயாவ கூட்டிடு போய் எதுக்கும் கோயிலில வீபூதி அடிச்சிடுங்க" என்கிறான்.
டொக்டர் ஜோசித்தார்.
" இந்தா பாருங்கம்மா உங்க கணவருக்கு சித்தப்பிரமை. இப்படியே விட்டா முத்தி போயிடும். நாளைக்கு பொலிசோட வாறன்" எனக்கூறிவிட்டு, ஒரு தடிமமான மருத்துவ புத்தகத்தை புரட்டி. எங்கேயாவது யாராவது "யூனிகார்கனை பார்த்தேன்..." என்று சொல்லியிருக்கிறார்களா என தேடினார். யாரும் இல்லை.
மறு நாள் காலை, பொலிஸ் ஜீப் வெளியே நிக்க. டொக்டர் வீட்டினுள் நுழைந்து கணவனிடம் பேச்சுக்கொடுத்தார்.
" என்ன சார், இப்படி இருக்கீங்க"
"எனக்கென்ன எனக்கென்ன குறைச்சல்... நல்லாத்தானே இருக்கேன்..."
" நீங்க யூனிகார்கனை பார்த்தீர்கள் என்று சொல்கிறீங்களாமே...? உங்க மனைவி சொன்னா..."
"யூனிகார்கனா... நானா... பார்த்தேனா... என்ன சொல்லுறிங்க.. டொக்டர்!"
"ஓம்.. ஓம்.. உங்க மனைவி அப்படித்தான் சொன்னா.."
"டொக்டர்! யூனிகார்கன் என்பது ஒரு கற்பனை மிருகம். அதை எப்படி பார்க்கமுடியும்?!!"
"அப்ப நீங்கள் பார்த்தா இவங்க சொன்னது...?"
"அவ இப்படித்தான். கொஞ்சம் கிறுக்கு..." என்றவாறே ஒரு விரலால் தலையில் சுற்றிக்காட்டினார்.
சொன்னது தான் தாமதம் " என்னையா சொன்னா...?" என்றவாறே பால் காய்ச்சும் பானையை கணவனுக்கு நேரே வீசி எறிந்தாள் மனைவி.
"இது தான் டொக்டர் தினமும்"
தொடர்ச்சியாக மனைவி தனது ஆத்திரத்தை அடக்கமுடியாமல் பொருட்களை வீசிக்கொண்டிருந்தாள்.
இனி சொல்ல வேண்டுமா...
"பேஷன்ட் கட்டுப்பாட்டை மீறீட்டார். உடனே எடுத்துச்செல்லுங்கள்." இது டொக்டரின் கட்டளை.
மனைவி கை,கால்களுக்கு கட்டுப்போடப்பட்ட நிலையில் வானில் ஏற்றப்பட்டாள்.
இதிலிருந்து "ஜேம்ஸ் தார்பர்" சொல்லவருவது என்னவென்றால். ஒரு சம்பவத்தை இருவராவது பார்த்திருந்தாள் தான் அது உண்மை என தீர்மானிகப்படும். எமக்கு ஆபத்தென்றால் உண்மையாவது ஒண்ணாவது விட்டுப்போட வேண்டியதுதான்.
சரி இன்றைக்கு ஒரு மாறுதலுக்காக இந்த கதை. அடுத்த பதிவிலிருந்து எமது ESP ஐ தீர்மானிப்பது எப்படி என பார்ப்போம்.
தொடரும்...
---இனி---
எமது ESP ஐஆறிவது எப்படி?
really super
ReplyDelete\\ஒரு சம்பவத்தை இருவராவது பார்த்திருந்தாள் தான் அது உண்மை என தீர்மானிகப்படும். எமக்கு ஆபத்தென்றால் உண்மையாவது ஒண்ணாவது விட்டுப்போட வேண்டியதுதான்.\\
ReplyDeleteநடைமுறை யதார்த்தம்
வாழ்த்துகள்
tnx... lishanthmithrau .. :)
ReplyDeleteநன்றி... நிகழ்காலத்தில்... :)
ஆம்.. அது உண்மைதானே...