Total Pageviews

Sunday, 13 December 2009

உருவை மறைத்து திரையினூடு பார்க்கும் விளைவு.(MASK) -(ADOBE FLASH ரியூட்டோரியல் 09)

உருவை மறைத்து திரையினூடு பார்க்கும் விளைவு.(MASK) 
--------------------------------------------------------------------------------------


இன்று ஒரு மிக நீண்ட ரியூட்டோரியல்...


Flash இல் ஒரு உருவை எவ்வாறு இன்னொரு உருவின் துனையுடன் மறைத்து பார்க்கும் விளைவி னை உருவாக்குவது என்பதை கற்போம். நான் இப் பகுதியில் ஒரு வட்டத்தினூடு எவ்வாறு படத்தினை மறைத்து அவதானிப்பது என்பதனை கூறியுள்ளேன்.
இங்கு வட்டத்திற்கு பதிலாக எழுத்துருக்களையும், வேறு வடிவங்களையும் பயன்படுத்தி தேவையான சிறந்த காட்சி அமைப்புக்களை உருவாக்க முடியும்.

செய்முறை-1

தேவையான அளவில் Movie உருவக்கிகொள்ளவும். இதற்கு பின்வரும் படிகளை பின்பற்றவும்.
File -> New (Ctrl+N) -> Properties -> Size தேவையான அளவுகளை அமைக்கவும். இங்குFrame rate என்பது Movie இன் வேகத்தை குறிப்பதாகும். 

செய்முறை-2
Layer 1 : Frame ல் Ctrl + R மூலமாக  JPEG,PNG… போன்ற ஒரு படத்தினை  Stage ற்கு கொண்டு வரவும்.  (Ctrl + R ற்கு பதிலாக‌ File -> Import -> Import to stage இனையும் பயன்படுத்தலாம்.)



படம் Stage ல் கச்சிதமாக பொருந்தாவிடின் Ctrl + K இனை அழுத்துவதன் மூலமாக பெறப்படும் Menu Box ல் உள்ள தெரிவுகளை பயன்படுத்தி  Stage ல் கச்சிதமாக பொருத்தவும்.
(Ctrl + K ற்கு பதிலாகWindow -> Align இனையும் பயன்படுத்தலாம்.)








செய்முறை-3

இன்னொரு Layer ஐ Layer1 ற்கு மேலாக உருவாக்கவும். (Insert Layer ஐ பயன்படுத்தவும்)

அது Layer 2 ஆக இருக்கும்.  இப்போது Layer 2 : Frame 1 இல் Ovel tool (O)    மூலமாக stage இல்  ஒரு வட்டத்தை வரையவும்










செய்முறை-4

பின்னர், Layer 1 மற்றும் Layer 2 இன்  10 ஆவது Frame இல் அல்லது தேவையன இடத்தில் F6 இனை அழுத்தி (அல்லது Right Click செய்து 5 ஆவதாக காணப்படும் Insert KeyFrame இனை Select ‌செய்து) KeyFrame இனை உருவக்கவும்.
Layer 2 இன் 10 ஆவது Frame ஐ select செய்துவிட்டு stage இல் உள்ள வட்டத்தினை நகர்த்தி வேறு இடத்தில் வைக்கவும்.









செய்முறை-5


Layer2 ஐ Click செய்யவும். இப்போது அனைத்தும் Select (Highlight) ஆகி இருப்பதை காண‌முடியும். பின்னர் Highlight ஆன பகுதியில் Right Click செய்து முதலாவதாக காண‌ப்படும் Creat Motion Tween ஐ Click பன்னவும்.


பின்னர், Layer 2 ஐ Right Click செய்யவும். வரும் Box ல் 8 ஆவதாக உள்ள Mask  என்பதை Click செய்யவும்



பின்வருமாறு காட்சிதரவேண்டும்





இப்போது தேவையான அனைத்து செயற்பாடுகளும் முடிவுற்றுவிட்டது. Ctrl + Enter
மூலமாக சோதித்து பார்க்கவும்.
-------------------------------------------------------------------------------------
விளக்கம் தேவைப்படின் தொடர்புகொள்ளவும்.


வருபவர்கள் வலைப்பூவின் வலது மேல் மூலையிலுள்ள கருத்துகணிப்பிற்கு வோட் பண்ணவும். எதாவது கருத்துக்கள் இருப்பின் இப்பதிவின் கீழேயே கொமன்ட்ஸ் அடிக்கவும்.




0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected