புகைப்பழக்கமுள்ள ஒரு தாயாரின் கவனயீனத்தால் ஒரு குழந்தையின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றத்தையே இங்கு காணப்போகிறீர்கள்.
தெர்ரி (Terri) தற்போது 16 வயதாகும் இந்த சிறிமியின் இரண்டாவது வயதில்...
தெரியின் தாயார் சிகரெட் புகைத்துவிட்டு அடித்துண்டை கவனயீனமா கீழே போட்டுள்ளார், அது அவரின் "கோட்" ( மேலங்கி) யில் பட்டு தீப்பற்ற ஆரம்பித்து வீடு முழுவதும் பற்றிக்கொண்டது.
ஹோலில் இருந்த தாயார் வெளியேறிவிட்டார். பிள்ளை படுக்கையறையினுள் மாட்டிக்கொண்டது. தீயணைப்பு வீரர்களின் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைக்கப்பட்ட போது.
ஒரு வீரர் கருகிப்போன் அசாம்பலின் மத்தியில், தெர்ரி அசைவதைக்கண்டார் . முதலில் பிளாஸ்டிக் பொம்மை என்று நினைத்தவர் அசைவைக்கண்டு பிள்ளையை வெளியெடுத்தார்.
90% உடல் பகுதி எரிந்த நிலையில் இருந்த தெர்ரி வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர முயற்சியின் பின்னர் தெர்ரியின் உடல் தகுதி மீட்கப்பட்டது.
மூக்கு, லிப்ஸ் உட்பட உடலின் பல பாகங்கள் செயற்கை தோலினால் மூடப்பட்டன.
தற்போது 16 வயதாகும் தெர்ரிக்கு... விரல்கள் அற்ற கைகள், ஒரு கால்களே வாழ்க்கையை கொண்டு நடத்த உதவுகின்றது. முடிதொடக்கம் உடற்பாகங்கள் பல செயற்கையாகவே உள்ளன. பாடசாலையில் கல்வி பயின்றுவரும் தெர்ரிக்கு ஆசிரியர்கள், நண்பர்கள் உட்பட அனைவரும் உறுதுனையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
(* இச் சம்பவத்தினால் ஏற்பட்ட கோபம் காரணமாக, தெர்ரியின் தந்தை மறுமணம் செய்துள்ளார், எனினும் தெர்ரி தற்போது தன்னைப்பெற்ற தாயையும் சந்திக்க அனுமதிக்கப்பட்டுள்ளார். "தனக்கு இரண்டு மிகச்சிறந்த அம்மாக்கள் இருக்கின்றார்கள்" என்று தனது வாழ்வை மாற்றியமைத்த தாயிலும் எவ்வித வெறுப்பு, கோவம் இல்லாமல் கூறியுள்ளார். )
0 comments:
Post a Comment