Total Pageviews

Thursday 5 January 2012

ஒரு பதிவன் இணையம் ஆரம்பிக்கிறான் :P (+ "ஒக்சிஜன்" நகைச்சுவை குறும்படம்.)


--------------------------
மிக மிக நீண்ட இடைவெளிக்குப்பிறகு எனது வலைப்பதுவுப்பக்கம் வந்திருக்கிறேன். தொடர்ப்பதிவுகளை ஆரம்பித்து விட்டு இடையில் விட்டுச்சென்றமைக்கு முதலில் அனைவரிடமும் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்.
--------------------------

பல தடங்களினால் இவ்வளவு காலமாக எனது பதிவுகளை தொடரமுடியவில்லை. நினைப்பது, ஆசைப்படுவது அனைத்துமே தோல்வியில் முடிந்தமையால் ஆய்வுக்கட்டுரைகளை எழுதும் மன நிலையில் நான் இருக்கவில்லை.
இன்று மீண்டும் பதிவெழுதும் மன நிலைக்குத்திரும்பி இருக்கிறேன்.

காரணம் 1 :
19 வயதில், நான் ஒரு தனித்தளம் நடாத்தவேண்டும் என்ற ஆசை என்னுள் எழுந்தது. சுமார் மூன்றரை வருடங்களின் பின்னர் அந்த ஆசை தற்பொழுது நிறைவேறியுள்ளது.
எனது ஆசைப்படி 75% மன நிறைவுடைய தளத்தை உருவாக்கியுள்ளேன்.

பெயர் : தமிழ் குளோன் TAMILCLONE
அர்த்தம் : 1 ) தமிழர்களில் மண்டிப்போன உணர்வுகளை மீட்டெடுத்து அடுத்த தலைமுறையை தலை நிமிரச்செய்வது. (அறிவியல், கல்வி,தொழில் நுட்பம், தமிழ் போன்ற வகைகளினூடு இது சாத்தியம்.)
அர்த்தம் : 2 ) பல தளங்களில் இருந்து செய்திகள் பெறப்படுவதால், ஒரு நகலி (குளோன்) ஆகவும் இதை கருதமுடியும்.

எனது அடிப்படை நோக்கம் எந்த தளத்திலும் இடம் பெறாத செய்திகள் இடம் பெற வேண்டும் என்பதே.
( இதுவரை இந்த வளாகம் வலைப்பதிவில் 212 பதிவுகள் இட்டுள்ளேன் அவற்றில் 1 மட்டுமே கொப்பி செய்யப்பட்ட பதிவு) எனினும் தனியொருவனால் அது சாத்தியமில்லை. எனவே, இணையத்தளத்தில் தற்போதைக்கு பல கொப்பி பதிவுகள் இருக்கும். எனினும் எங்கிருந்து பெறப்பட்டது என்பது கீழே போடப்பட்டிருக்கும்.
( சிறந்த பிரயோசனமான சில பதிவுகளை மட்டுமே கொப்பிசெய்துள்ளேன்.)

தற்செயலாக இந்தப்பதிவை வாசித்துக்கொண்டிருக்கும் வலைப்பதிவர்களின் பதிவுகள் அனுமதி இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கும்/ எடுக்கப்படலாம். எனினும் கீழே ஆக்கத்திற்கு உரியவரின் பெயர் போடப்பட்டிருக்கும்.
அப்படி தங்ளம் பதிவுகளை பாவிப்பது பிடிக்காதவர்கள் உடனே எனக்கு தெரியப்படுத்தவும். அவை நீக்கப்படும் அல்லது மேலதிக கொப்பிகள் தவிக்கப்படும்.

காரணம் 2 :
இந்தப்பதிவும் எனது தளத்திற்கு வலுச்சேர்க்கும் என்ற நம்பிக்கை. ( விளம்பரம் என்று நினைத்தாலும் ஓ.கே, ஒரு முறை வந்து தளத்தை சுற்றிப்பாருங்கள் எதிர்கால நோக்கு புரியலாம். :) )

என்னதான் நான் இணையத்தளம் நடத்த நினைத்தாளும் எனது பதிவுலக அனுபவத்தை மறக்க முடியாது. மேலும் எனது வலைப்பதிவோடு இணைந்திருக்கும் 336 நண்பர்களையும் இடையில் விட விரும்பவில்லை.
எனவே விடுபட்ட ஏலியன்ஸ்பதிவுகள் உட்பட அனைத்து பதிவுகளையும் மிகவிரைவில் வளாகத்தில் தொடர்வேன், வளாகத்தில் இடம்பெற்ற பின்னரே அதன் மாற்று பதிவு தமிழ் குளோனில் இடம்பெரும். தேவையான அளவிற்கு புதிய தகவல்கள் ஏற்கனவே வாசித்து அறிந்துவிட்டேன். தொடர்ந்து ஆதரவுதருவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.


தளத்தின் லிங் : http://www.tamilclone.com/
FACEBOOK லிங் :  https://www.facebook.com/tamilclone
 ( பரிசுப்போட்டிகளும் ஃபேஸ்புக்கூடாக நடைபெறவுள்ளது. இன்னும் 10 நாட்களின் ஆரம்பமாக இருக்கும் இப்போட்டிகளிலும் பங்கு பற்றி வெற்றி பெற வாழ்த்துக்கள்.)


இந்தப்பதிவை நம்பி வந்தவர்களுக்கு. ஒரு நகைச்சுவை அறிவியலாக இந்த குறும்படம் அமையும். :)



இந்தப்பதிவில் சொல்லப்பட்டவை பிடித்திருந்தாள் வோட் போடவும், எனது தளத்திற்கு விஜயம் செய்யவும்.
அல்லது குறைகளைக்கூறவும்.

1 comment:

  1. நீங்கள் எங்களை விட்டாலும் நாங்கள் உங்களை விட மாட்டோம்..! என்றும் எங்கள் ஆதரவை தருவோம் உங்கள் தளத்துக்கு... வாழ்த்துக்கள்... தொடருங்கள்...! தமிழ் தலைமுறையை தலை
    நிமிரச்செய்வது சாத்தியமே..! ஏனெனில் எல்லாமே "ஏழாம் அறிவு" படம் தந்த ஒரு effect தான்...ஹி...ஹி...ஹி.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected