Total Pageviews

Friday, 2 September 2011

மங்காத்தா! (விமர்சனம்)

மங்காத்தா!

படத்தின் "ட்ரெய்லர்" ஆலேயே பார்க்கத்தோன்றிய படம். ( ஏற்கனவே, அஜித்தின் "ஆழ்வார்" படத்தின் ரெய்லரை பார்த்துவிட்டு ஏமாந்து அனுபவம் உண்டு :P )
மிகுந்த எதிர்பார்ப்பில் பார்க்கத்தொடங்கினேன்... இனி என்ன பார்த்தேன் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
-------------------------------------------------------------------------------------------
ஒரு நபரை சுடுவதற்காக நிறுத்தி வைத்துள்ளார்கள். அந்த நேரத்தில் தல அஜித் பொலிஸ் உடையில் ஜீப்பில் இருந்து இறங்கி அவரைக்காப்பாற்றுகிறார். இது தான் என்ட்ரன்ஸ்... நரைத்த முடியுடனும் சற்று சதைப்பிடிபான உடலுடனும்  இருக்கிறார் அஜித், என்றாலும் ஒரு கம்பீரம், அழகு... ஆரம்ப அறிமுகத்திற்கு கச்சிதமான எடிட்டிங். பின்னி இசை ரசிகர்களை கவரும் விதத்தில் கச்சிதமாக அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்து எதிர்பார்த்தது போன்றே... மங்காத்தா பாடல் இடம் பெறுகிறது.  காட்சி அமைப்பில் புதுமைகள் இல்லை.

ஹீரோயின் திரிஷாவின் அறிமுகம்...
வழமை போன்ற கமெரா அசைவுகளுடனேயே இடம்பெறுகிறது. மிக அழகாகத்தெரிகிறார்.
திரிஷா, அஜித்திற்கு இடையலான காதல்... எப்படி ,ஏன் உருவானது என்பதைக்காட்டாமல்... நேரடியாகவே நெருங்கிய காதலர்களாக  கதைக்கு ஏற்றபோல் காட்டப்படுகிறார்கள்.
திரிஷா, சூதாட்ட முகவர்களிற்கு ஊடகமாக விளங்கும் பிரபல முகவரின் மகள்.
அஜித், அவருடன் திரிஷாவின் காதலராக அறிமுகம் ஆகி நம்பிக்கை மிக்கவராகிறார்.

இதற்கிடையில், ஐ.பி.எல் மட்ச் சூதாட்ட நபர்களையும் கறுப்பு பணத்தையும் தண்டிப்பதற்காக சிறப்பு அதிகாரியாக "அர்ஜுன்" நியமிக்கப்படுகிறார். அர்ஜுனின் "அக்ஷன் கிங்" அடை மொழிக்கி ஏற்றவாறு ஒரு அறிமுக காட்ச்சியை வைத்துள்ளார் இயக்குனர். பின்னைய காட்சிகளில் அவரின் மனைவியாக "அன்ட்ரியா" வந்துபோகிறார்.

Vaibhav Reddy இற்கும் ஒரு முக்கியமான பாத்திரம்.
திரிஷாவின் அப்பாவுடைய நம்பிக்கைகுரிய ஆளாக இருக்கிறார்.
பட முடிவில் மனதில் நிற்கும் கதாப்பாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவரின் மனைவியாக அஞ்சலி நடித்துள்ளார். நடிப்பதற்கு அவ்வளவாக சந்தர்ப்பம் தரப்படவில்லை.

பிரேம் ஜி, ஒரு காமெடி டெக்னீஷியனாக படத்தை கலகலப்பாக்குகிறார்.
-------------------------------------------------------------------------------------------
இனி படத்தின் முக்கிய பகுதி....

ஐ.பி.எல் போட்டியில் கைமாற்றப்பட வேண்டிய பணம், திரிஷாவின் அப்பாவினூடாக அனுப்பப்பட இருக்கிறது. அதை கொள்ளையடிக்க "வைபவ்", பொலிஸ் அதிகாரி, பிரேம், பிரேமின் நண்பன் திட்டமிடுகிறார்கள்.
இதனிடையே அஜித்திடம் இதை உளறி விடுகிறார் பிரேம்.
அதே பணத்தை கொள்ளையிடவே திட்டமிடிகிறார். பின்னர், அஜித்தின் சில தந்திரங்களால் ஐவரும் சேந்து கொள்ளையிடுகிறார்கள்.
எனினும், முழுவதையும்  தானே கொள்ளையடிக்க திட்டமிடுகிறார் அஜித்.
( கொள்ளை அடித்த பணத்தை, மற்றவர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு... அஜித் செஸ் போட்டுடன் இருந்து போடும் பிலான், ரசிக்கத்தக்க அறுவை ஐடியா.)

இறுதியில் கொள்ளை அடித்தாரா, என்பதை பல சுவாரஷ்ய திருப்பங்களுக்கு மத்தியில்... இறுதியில் ஒரு பெரிய திருப்பத்துடன் தரமான திரைக்கதையுடன் கூறியுள்ளார் இயக்குனர்.

படம் முழுவதுமே அஜித்தை நெக்கடிவ் கரக்டரில் காட்டி இருப்பது நன்று. இறுதி நேரத்தில் நல்லவராக காட்டி சென்டிமென்ட் சொதப்பல்கள் இல்லை.
-------------------------------------------------------------------------------------------
படத்தின் + :
ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றாற்போல் அமைந்த அஜித்தின் நடிப்பு, ஸ்டைல்.
விறுவிறுப்பான திரைக்கதை.
எடிட்டிங். ( திரிஷாவுடனான பாடல்கள், மற்றும் அஜித்தின் திட்டமிடல்களின் போதான எடிட்டிங் தமிழிற்கு புதியது.
படத்திற்கு ஏற்ற பின்னனி இசை.
ஃப்லாஸ் பக்கில்... அனைத்திற்கும் விளக்கம் கொடுப்பது அருமை. கதையில் ஓட்டை இல்லாமல்  காட்டியுள்ளார்கள்.
நகைச்சுவைகள் படத்துடன் ஒன்றி இருப்பது அருமை.
நகைச்சுவைக்காக மட்டும் இல்லாமல், ஒரு டெக்னீஷியனாக பிரேம்ஜி காட்டப்பட்டது. அவர் கதைக்கு தேவை என்பதை காட்டுகிறது. வீண் செருகல் இல்லை.

படத்தின் - :
ஆங்கில படங்களில் அடிக்கடி பார்த்த காட்சிகள்.
4 ஹீரோயின்கள் வேஸ்டாக்கப்படது. (எனினும் திரைக்கதைக்கு போதும். )
காதல் தோல்வியின் பின் திரிஷாவை காட்டவில்லை. ஒரு ஃபோன் கோல் ஆவது போட்டு,; அஜித்துடன் சண்டை போடுவது போன்று காட்டி இருக்கலாம்.
சூட்டிங் ஃபைட்டின் போது, ஒரு புள்ளட் கூட அஜித்தை தாக்கவில்லை... ஆனால், நேராக நின்று சண்டை போடுகிறார்... அது லொஜிக் இல்லை.

அஜித்தின் 50 ஆவது படம் இது... நிச்சயம் வெற்றி பெறக்கூடிய படமாக அமைந்துள்ளது.
2h 38 நிமிடங்கள் விறுவிறுப்பாக பார்க்கலாம்.

அஜித் ரசிகன் :
வாவ் தலட படம்னா சும்மாவா... சுப்பரா இருக்கு.
அஜித் வெறியன் :
தலைவா, நீதான் ஒரே ஒரு நடிகன்... சேர்ட்ட மாத்திட்டு நடிக்றவன்ட 50 படமெல்லாம் ஒரு படமா.


விஜய் ரசிகன் :
நல்லாத்தான் இருக்கு.
விஜய் வெறியன் :
சா தூ.... நரைச்ச முடியும் தொந்திவயிறுமா இருக்கான்... ஆடுராராமாம் இதுக்கு பாக்கியராஜ்ட ஆட்டமே பெட்டர்.


திரைப்பட ரசிகன். :
அருமையான என்டர்டைன்மென்ட் மூவி... படமுடிவில் மனம் ரெலாக்ஷாகவே இருக்கிறது... எந்த விதப்பாதிப்பும் இல்லை. அஜித்திற்காகவும் அக்ஷன்காகவும் பார்க்கவேண்டிய படம்.
தரமான இயக்கம்.
-------------------------------------------------------------------------------------------

7 comments:

 1. Thapichitta inime link post pannuna setha hits venuna vera ethavathu elthalaame?Thapichitta inime link post pannuna setha hits venuna vera ethavathu elthalaame?

  ReplyDelete
 2. hi...கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் )
  ha ha Loosa nee?
  torrent file ku rights keeka? site da name odavee podu share panraangalaam... ivar padam kaada vanthidaaru...

  Remove ku kaaranam cinema la paakrathuku thadaya irukka kuuda endu thaan... ungada film aala illa.

  ReplyDelete
 3. அஜித் ரசிகன் ,விஜய் ரசிகன் ,திரைப்பட ரசிகன் comments super...

  ReplyDelete
 4. தல உங்க விமர்சனம் சூப்பர்.....................

  ReplyDelete
 5. தலயின் 'மங்காத்தா' படத்தின் விமர்சனம் அருமை. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 6. உங்கள் விமர்சனத்துக்கு நன்றி....தல ஜெயிச்சிட்டார்...

  ReplyDelete
 7. நானும் தல ரசிகன் (மன்னிக்கவும்...தல வெறியன்!)தான். ஆனால் ஏன் அநியாயமாக "வைபவ்"வை அஜித் கொல்லச்சொல்கிறார்..?(பொண்டாட்டியோட சந்தோஷமா வாழவேண்டிய "வைபவ்"வை..!)என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. கேட்டால் அதான் NEGATIVE HERO எண்டுறாங்க. அந்தவகையில் தல ஜெயிச்சுட்டார். ஏனென்டால்...அவரின் ஒரு ரசிகனே அவரை வெறுக்குமளவுக்கு negative ஆக நடித்துள்ளார்.. கடைசியில் அர்ஜூன் யார் அஜித் யார் எண்டு தெரியவரும் போது, அர்ஜூனும் ஒருவகையில் NEGATIVE HEROதான் என்று எண்ணத்தோன்றுகிறது. Anyhow உங்கள் விமர்சனம் சூப்பர்..!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails