Total Pageviews

405,436

Sunday, 29 January 2012

மது செய்தவினை (13+ வீடியோ பதிவு)


மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது எவ்வளவு கொடூரமான ஆபத்துக்களை உண்டாக்கும் என்பதையே இந்த வீடியோவில் பார்க்கப்போகிறீர்கள்.
 
இந்த வீடியோவில் பாதிப்புக்குள்ளாகியுள்ள பெண்ணின் பெயர் ஜக்கி (Jacqui).
கடந்த 99 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் திகதி இவரின் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைந்தது. 
தனது நண்பர்/ நண்பிகளுடன் பிறந்த நாள் விழாவொன்றில் கலந்துகொண்டு சற்று அதிகமாக மது அருந்தியிருந்தார். விழா முடிந்த பின்னர் இரவு நேரத்தில் தனதுவாகனத்தை செலுத்திக்கொண்டு வீட்டிற்குச்சென்றார்.
அதே நேரம் 17 வயது ( 1999 இல்)  நிரம்பிய பாடசாலை மாணவன் ஒருவனும் குடித்துவிட்டு காரில் வீட்டிற்குச்சென்றுகொண்டிருந்தான்.  
ஒரே வீதியில் சென்றுகொண்டிருந்த அவ் மாணவனின் காரின் மீது  ஜக்கியின் கார் மோதிக்கொண்டது. ஜக்கியின் கார் எரியத்தொடங்கிய வேளை உள்ளே மாட்டிக்கொண்டார் ஜக்கி.
 
பின்னர் நடந்தவற்றை வீடியோவைப்பார்க்கவே விளங்கும். ( வீடியோவில் அனைத்து தகவல்களும் சொல்லப்பட்டுள்ளது. )

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected