Total Pageviews

Thursday, 28 January 2010

இவர்கள் லெமூரிய(குமரி) குடிகளா? (லெமூரியா 05)

லெமூரியா
-----------------------------------------------------------------------------------------
"லெமூரியா" தொடர்பான பதிவினை போன கிழமை போட முடியவில்லை மன்னிக்கவும். கொஞ்சம் அரசியல் பக்கம் (???) சாய்ந்ததால் ஏற்பட்ட நெருக்கடி.
போனபதிவில் லெமூரியாவுக்கும் இராமாயணத்திற்கும் இடையிலான தொடர்பை பார்த்திருந்தோம்.  பல எதிர்ப்பு, வழமை போலவே ஃபெஸ் புக் நண்பர்கள் மூலம் தான் கடும் எதிர்ப்பு. ஒரே வட்டத்துக்குள்ள இருந்துட்டு வெளில வர மாட்டாங்க என்கிறாங்க.
-----------------------------------------------------------------------------------------

சரி நாங்க தொடருக்குள் போவோம்.

போனபதிவில் லெமூரியாவையும் இராமாயணத்தையும் ஒப்பிட்டு பார்த்திருந்தோம். அங்கு ஒரு சிக்கல் எழுகிறது...
அதாவது, இராமாயணத்தில் தற்போதைய பாக்கு நீரினையை கடந்தே இராமர் இலங்கை சென்றதாக கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில் பார்க்கும் போது, லெமூரியா கண்டத்தில் இராமாயணம் நடந்தது என்பது பொய்யாகிறது. எனினும், இன்றைய மதுரையல்ல உண்மையான மதுரை. கடல் கோல்கள்,கடலரிப்புக்கள் காரணமாக மாற்றமடைந்த 3வது மதுரையே இன்றைய மதுரை. ( நிரூபிக்கபட்டது). அதே போல், இந்தியாவிலிருக்கும் "திருநெல்வேலி" எனும் நகர் பெயர் இலங்கையிலும் ஒரு பிரதேசத்துக்குண்டு.
(சற்று திரிபடைந்து, மொழி நடைக்கேற்ப‌ "தின்ன வேலி" என கூறப்படுகிறது.) அதா போல் தான் வத்தளங்குன்று போன்ற பிரதேசங்களும்.

இவ்வாறு தாம் வாழ்ந்த இடங்களின் பெயர்களை புதிதாக வாழப்போகும் இடங்களுக்கு வைப்பது, அக்காலத்தில் உலக மரபு, சம்பிரதாயமாக இருந்துள்ளது. (பல நாடுகளில் இப்படி ஒரே பெயர்கள் இருக்கின்றனவாம்.)


ஆகவே, என்னை பொறுத்த வரையில் இப்போதிருக்கும் இலங்கையல்ல இராமாயணத்தில் கூறப்பட்டது. இப்போது இருப்பது பண்டைய இலங்கையின் மலைப்பகுதி பிரதேசமாகும். ( தற்போதைய இலங்கையின் புவியியல் அமைப்பை பார்த்தாலே தெரியும். இலங்கை ஒரு மலை பிரதேசத்திலிருந்த நாடு என்பது.)
நிரூபிப்பதற்கு சான்றுகள் குறைவாயினும் தொலமியின் 1 வது உலக வரைபடத்தை இதற்கு ஒரு சான்றாக கொள்ளலாம்.

தொலமியின் உலக வரைபடத்தை பார்த்தோமானால், இலங்கை தீவானது 14 மடங்கு பெரிதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பல நாடுகளை சரியாக கணிப்பிட்ட தொலமி இலங்கையை தவறுதலாக குறிப்பிட்டிருக்க சந்தர்ப்பமில்லை.
( தொலமியின் வரைபடம் தொடர்பாக பெரிய சர்ச்சையே உள்ளது. 1) தொலமி தாம் கீறியதாக சொல்லும் வரைபடம் உண்மையில் அவர் கீறியதல்ல; அது ஒரு பலங்குடி மக்களிடையே புலக்கத்திலிருந்தது. 2) அது வெளியுலகத்தவரால் வரையப்பட்டது. 3) நாம் தொலமியினது எனக்கூறுவது தொலமியினதே இல்லை. ...)


எது எப்படியோ இலங்கை லெமூரியா கண்டத்திலிருந்த ஒரு முக்கிய நாடு.
ஏற்கனவே கூறியிருந்தேன் "லெமூரியா கண்ட‌த்தின் மத்தியில் பாரிய மலைத்தொடர் இருந்தது" என. அதன் கிழக்கு பகுதியிலேயே இலங்கை இருந்துள்ளது. ராமர் முதலானோர் வாழ்ந்தது மேற்கு பகுதியில். மலைத்தொடர்களுக்கிடையே நீரோடைகள் காணப்படுவது சகஜம், அப்படி பட்ட நீரோடையை தாண்டி கிழக்கை நோக்கி படையெடுத்ததே, பாக்கு நீரினை யை கடந்ததாக கொள்ளப்படுகிறது.

பண்டைய அறிவு என்பது. தற்போதைய அறிவியல் விஞ்ஞானத்திற்கு நிகரான ஆனால் முற்று முழுதாக வேறுபட்ட தொழில் நுட்ப ஆறிவாகும். உதாரணமாக நாம் இன்று பயன்படுத்தும் கணித குறியீடான "ஃபை"(22/7) என்பது 16 ம் நூற்றாண்டில்(??) அறியப்பட்ட ஒன்று. (வட்டம் தொடர்பான பாவனைகளுக்கு பாவிக்கப்படுகிறது.)
ஆனால், கி.மு 10000 5000 இடைப்பட்ட எகிப்திய பிரமிட்டுகளில் இத்தொழில் நுட்பம் கச்சிதமாக பாவிக்கப்பட்டுள்ளது!!!

அவர்கள் எவ்வாறு அவ் அறிவை பெற்றனர்? மேலும் வியத்தகு சம்பவங்களுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்...
-----------------------------------------------------------------------------------------
இது ஒரு கலந்துரையாடல்... உங்களது கருத்துக்கள் எதிர்பார்க்க படுகின்றன...

மேல உள்ள கேள்விக்கு வோட் போடுங்கோ....

-----------------------------------------------------------------------------------------

19 comments:

 1. Super post! keep it up!

  ReplyDelete
 2. வித்தியாசமான பதிவு!
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. Nalla pathivu! aduththa pathivai aavaludan ethir paarkkeroom.

  ReplyDelete
 4. //*கணித குறியீடான "ஃபை"(22/7) என்பது 16 ம் நூற்றாண்டில்(??) அறியப்பட்ட ஒன்று. (வட்டம் தொடர்பான பாவனைகளுக்கு பாவிக்கப்படுகிறது.)
  ஆனால், கி.மு 10000 5000 இடைப்பட்ட எகிப்திய பிரமிட்டுகளில் இத்தொழில் நுட்பம் கச்சிதமாக பாவிக்கப்பட்டுள்ளது!!!*//

  unmai super.

  ReplyDelete
 5. Kathaiku kakku eathu ???

  any way nice Kid story write more

  C.R.Devaraj Phd (History)
  HOD V.K.C
  Chennai.

  ReplyDelete
 6. Ippadi irukkalaam endu thaan eluthuran.
  neenka History la Phd eduththaninka eluthalaame!!!

  ReplyDelete
 7. விடுங்க தம்பி
  புத்தக பூச்சிங்க இப்படி தான்.
  யோசிக்க மாட்டாங்க. யோசிச்சாலும் பிடிக்காது.
  இவங்கல எழுத சொல்லுறிங்கலா?
  ஹி.. ஹி..
  நீங்க தொடந்து எழுதுங்க.

  ReplyDelete
 8. C.R.Davaraji Phd (History)
  Sir!
  "ஃபை" க்கு காரணம் சொல்லுங்க!
  எனக்கு விளங்கல பிளீஸ்.
  நக்கலுக்கு கேக்கல உண்மைக்கும் விளங்கல.

  ReplyDelete
 9. நல்ல பகிர்வு மற்றும் புதிய முயற்சி வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. http://ta.wikipedia.org/wiki/பை_(கணித_மாறிலி)

  மேற்கண்ட இணைப்பில் சென்று பாருங்கள்.. உங்களுடைய கேள்விக்கு விடை கிடைக்கிறதா என்ற..
  சூத்திரங்கள் கண்டுபிடிப்பதர்க்கு முன்பு, கணித மாறிலிகள்,பட்டறிவின் மூலமே பெறப்பட்டன. அதாவது trial and error method என்று கூட சொல்லலாம். இந்த "பை"யும் அப்படி கண்டுபிடிக்கப் பட்டதே ஆகும்.உதாரணமாக, ஒரு சதுர அடிக்கு ஒரு சதுரம் வரைந்து, அதற்கு உள் பொருந்துமாறு வட்டம் வரைந்து, இரண்டின் பரப்பையும் அளந்து கணக்கிட்டுக் கூட, பை மதிப்பை வரவழைக்க இயலும். பின்பு, இதனை உபயோகப் படுத்தி, வேறு வட்டங்களின் பரப்புகளைக் கணக்கிடலாம். ஒரு அடி விட்டம் அமையுமாறு ஒரு கயிரைச் சுருட்டினால், அந்த கயிறின் நீளம் 3.14 = 22/7. அதே போல இரண்டு அடி விட்டம் உள்ள கயிறின் நீளம் = 2x22/7. எகிப்தியர்கள் எப்படி அளந்தார்கள் என்பது எனக்குத்த் தெரியாது, ஆனால் அவர்கள் கணக்கீடுகள் போடாமல் அளந்தே பல சூத்திரங்களைச் செயல்படுத்திய அதி புத்தி சாலிகள்..
  அருமையான படைப்பு வளாகம்..
  நேற்று நடந்த விஷயங்களையே முழுமையாக நம்மால் துல்லியமாக சொல்ல முடியாது எனும்போது, வரலாற்றை அப்படியே சொல்லுவது எளிதல்ல.. அனுமானங்களே கண்டுபிடிப்பின் முதல் படி.. உங்கள் எழுத்தில் எங்களுக்கு சந்தேகம் வராத வரை உங்கள் ஊகங்கள் சரியே.. தொடர்ந்து எழுதுங்கள்.. ஒருவேளை நீங்கள் எழுதியதில் ஏதேனும் பிசகு இருந்தால், எங்களுக்குள் யாருக்காவது தெரிந்தால் சரிபடுத்திக் கொள்ளலாம்.. அதுவரை, கதை, கிதை என்று வரும் கருத்துகளுக்கு முக்கியத்துவம் தேவை இல்லை.. கதை என்று எவரேனும் சொல்பவர்கள், உண்மையை உரைப்பாராயின், எம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..

  நன்றி...

  ReplyDelete
 11. நன்றி சிங்ககுட்டி!
  நன்றி பிரகாஷ்!
  அருமையான பதில், இதை தான் நான் எதிர்பார்த்தேன்.
  நீங்கள் சொல்வது போல் எப்போது நான் எழுதுவதில் லொஜிக் மிஸ் ஆகுதோ அப்போதே இதை நிறுத்திடுவேன்.
  உங்களை போன்றவர்கள் இத்தொடரில் இருக்கும் குறைகளை போக்குவார்கள் என நம்புகிறேன்!!!

  ReplyDelete
 12. அருமையான பதிவு. தொடருங்கள்.

  ReplyDelete
 13. Hi,

  I like your posts, continue with interesting posts like this.

  I've subscribed to your blog in google reader, but I am not able to see any of your new posts getting updated in google reader. this makes it difficult for us to follow this topic, check if there is any issue with the account or template.

  Thanks

  ReplyDelete
 14. yes james,
  i can't subscribe my post.
  i dnt kw wts the prob!!!

  ReplyDelete
 15. உங்கள் பதிவுகளை இன்றுதான் படிக்க ஆரம்பித்தேன். நிறைய ரசனையான விஷயங்கள்.
  ராமாயணம் என்பது உண்மையில் இரு மன்னர்களுக்கும் நிகழ்ந்து போராக இருக்கவேண்டும். இலங்கையை பற்றி சொல்லும் போது
  இரண்டு இலங்கைகள் இருப்பது தெரியும் லங்கா என்று ஒரு நாடுளுமன்ற தொகுதி இந்தியாவின் ஒரிசாவில் உள்ளது.
  அப்புறம் இலங்கைக்கும் அதே பெயர்.

  பாடலிபுத்திரம் போல திர்பாபளிபுத்தூர் என்று ரா பி சேதுராமன் பதிவு செய்கிறார். காசி, தென் காசி என்று உள்ளது. எனவே ஒரே ஊர் பெயர் பல இடங்களில் உண்டு.

  நீங்கள் சொல்லும் ஒரு கருத்து - புதிதாக ஒரு நிலத்தில் குடி ஏறுபவன் தான் பழைய நிலத்தின் பெயரை சூட்டுகிறான் - அமெரிக்காவில் நியூ யார்க், ஹோல்லாந்து ( holland ), ஷம்புர்க் ( Schaumburg ), வேலி ( Valli ) என்று பெயர்கள் உண்டு.

  தொடர்ந்து கலக்குங்கள்.

  ReplyDelete
 16. நன்றி...Karthick Chidambaram
  நல்ல விடையங்களை அறியத்தந்திருக்கிறீர்கள்...
  கொஞ்சம் கொலிஞ் பிசி என்கிறதால விரைவாக பதிவுகளை போட முடியவில்லை...
  வரும் கிழமை அடுத்த லெமூரியா பதிவை போடனும்...
  வருகைக்கு நன்றி...

  ReplyDelete
 17. அருமை நீண்ட நாள் தேடிய விசயங்கள் சிலதை இன்று கண்டறிந்தேன்...

  ReplyDelete
 18. தொலமியின் 1 வது உலக வரைபடத்தை pagirndhukollavum.....

  ReplyDelete
 19. எனக்கு தெரிந்த ஒரு வட இந்திய நண்பரும் , ராமரின் தீவிர பக்தரும் , சிறந்த சிந்தனையாளரும் , நீங்கள் சொல்வதைப்போலவே இராமாயணம் இந்தியாவின் கீழ்ப்பகுதியில் நடந்திருக்கும் என்று கூறினார் .... எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை ... ஆனால் லெமூரியா என்னும் இடம் தமிழகம் இலங்கையுடன் ஒன்று சேர்ந்த பகுதி என்று இந்த உலகிற்கு புரியவைக்க இராமாயணம் பயன்பட்டால் எனக்கு மகிழ்ச்சியே ....

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails