Total Pageviews

Thursday, 7 January 2010

எங்கே லெமூரியர்/குமரி இனத்தவர்? (லெமூரியா *03*)

லெமூரியா 03
----------------------------------------------------------------------------------------
இது லெமூரியா பற்றிய மூன்றாவது பதிவு. முன்னைய இரு பதிவுகளுக்கும் வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தமையை இட்டு மகிழ்ச்சியாக உள்ளது. போனபதிவில் ஆரம்பிக்கப்பட்ட விடையத்தை (எவ்வாறு அழிந்தது லெமூரியா?) சொல்லாமலே பதிவை நிறுத்த வேண்டியதாகிவிட்டது. ஒரு அனிமேஷ‌னுடன் விளக்குவதாக கூறியிருந்தேன். சில காரணங்களால் இன்னமும் செய்து முடிக்க முடியவில்லை. ஆனால் எப்படியும் இன்று வார்த்தைகளால் விளக்குவது என்டு முடிவெடுத்துள்ளேன். இங்குள்ள படத்தை அவதானிக்கவும் குமரிக்கண்டம் இருந்ததாக நான் கூறும் இடத்தின் மத்தியில் 4 புவித்தட்டுக்கள் ஒன்றுடனொன்று இனைந்திருப்பதை அவதானிக்க முடியும். இந்த நான்கு தட்டுக்களிலும் ஏற்பட்ட எதிர் எதிர் திசைகளிலான அசைவே குமரிக்கண்டம் பிளவு பட்டு நீரினுள் மூள்கிப்போக காரண‌மாக இருக்கும். இங்கு முக்கியமாக நோக்க வேண்டிய இன்னொரு விடையம் என்னவென்றால் இத்தட்டுக்கள் விலகியது என்பதை விட நான்கும் உள்னோக்கி குவிந்தது என்பதே ஏற்றுக்கொள்ளத்தக்கது.

இலங்கை, மடகஸ்கார் போன்ற நாடுகள் உன்மையில் குமரிக்கண்டத்தை சேர்ந்த நாடுகளே! இவை குமரிக்கண்டத்தின் எல்லைப்பகுதிகளில் காண‌ப்பட்ட மலைப்பிரதேச நாடுகளாகும். என‌வேதான் லெமூரியா மூழ்கியபோதும் இவ் நாடுகள் தப்பிபிழைத்துள்ளன. ( இதை, தட்டுக்கள் உள்னோக்கி குவிந்துள்ளன என்பதற்கான ஒரு சான்றாக கொள்ள முடியும்). இங்கு "இந்த நான்கு தட்டுக்களும் திடீரென ஒரே நாளில் தமது மாற்றத்தை வெளிப்படுத்தி இருக்குமா?" எனும் கேள்வி எழுகிறது. அவ்வாறு ஒரே நாளில் நடைபெற்றிருப்பதற்கு புவியியலில் சாத்தியமில்லை. "அப்படியானால் அங்கு வாழ்ந்த உயிரினங்கள் எங்கே? அவை பிறபகுதிகளுக்கு குடிபெயரவில்லையா?" எனும் தொடர் கேள்விகள் எழுகின்றன. முக்கியமாக அங்கிருந்த மனித சமுதாயம் எங்கே? எனும் ஒரு பெரிய கேள்வி எழுகிறது. ( இங்கு, மனித சாமுதாயத்தின் தொட்டிலாக லெமூரியா கருதப்படுவது நினைவுகூறத்தக்கது.) இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் "பொரிக்ஷா" எனும் ரஷ்ஷிய சிறுவன், தான் ஒரு காலத்தில் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்ததாகவும்; அப்போது அடிக்கடி தான் பூமிக்கு வந்து போய் இருப்பதாகவும்; பூமியில் குமரிக்கண்டபகுதியில் அறிவில் மேம்பட்ட 9 அடி உயரம் கொண்ட மனிதர்கள் வாழ்ந்தார்கள் என‌வும் கூறியுள்ளான். சிறுவனின் உண்மைத்தன்மை இன்னும் ஆறியப்படவில்லை. ஆனால், எமது புராணங்களில் 9 அடி மனிதர்களை பற்றி பல பகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. (அரக்கர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்).

அத்துடன் பரிமாண வழர்ச்சி படியை பார்க்கும் போது சிம்பன்சிக்கும் மனிதனுக்கும் இடையில் ஒரு படி காணாமல் போயுள்ளது. ( இது பரிமாண கொள்கையின் தந்தையான சார்ல்ஸ் டாவினால் ஏத்துக்கொள்ளப்பட்ட கருத்து.) இப்போது சமீபத்தில் சீன ஆய்வாளர்களால் இந்தோனேஷிய பகுதியில் ஒரு வித்தியாசமான எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது நியான்டர்தார்ஸ் களினுடையதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. ----------------------------------------------------------------------------------------
யார் இந்த நியான்டர்தார்ஸ்? மேலும் பல உண்மையான வியப்புக்களுடன் அடுத்த பகுதியில் சந்திப்போம். இது ஒரு கலந்துரையாடல் உங்களது கருத்துக்கள் தேவைப்படுகின்றது. தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டவும்.11 comments:

 1. இது அவசரத்தில் எழுதப்பட்டது. தெளிவான விள‌க்கங்கள் அடுத்த பகுதியில் குறிப்பிடப்படும்.

  ReplyDelete
 2. நல்ல இடுகை....மேலும் ஆதாரங்களின் உதவியோடு வெளியிட்டால் இன்னும் நன்று..!
  வாழ்த்துக்கள்..!

  ReplyDelete
 3. நன்றி லெமூரியன்!
  ஆதாரங்கள் இருக்கின்றன. எதை முதலில் எழுதுவது, எதை விடுவது என ஒரு குழப்பம்.
  இயன்றவரை ஆதாரத்துடன் எழுத முயல்கிறேன்.

  ReplyDelete
 4. வளாகம் சார்
  மிகச்சிறந்த பதிவு.அடுத்த பதிவை ஆர்வமுடன் எதிர்பார்கிறேன்.

  ReplyDelete
 5. நன்றி சிந்திப்பவன் சேர்!
  நான் "சேர்" போடுற அளவுக்கு இல்லை.
  அடுத்த பதிவில் புதிய தகவலுடன் சந்திக்கிறேன்.

  ReplyDelete
 6. // நன்றி லெமூரியன்!
  ஆதாரங்கள் இருக்கின்றன. எதை முதலில் எழுதுவது, எதை விடுவது என ஒரு குழப்பம்.
  இயன்றவரை ஆதாரத்துடன் எழுத முயல்கிறேன். //

  நன்று. நண்பா , தங்களின் கட்டுரையில் காலக்கொடு குழப்பம் உள்ளது. லொமூரியாவில் ஆரம்பித்து, ஆதிமனிதனுக்கு போய் விட்டீர்கள். லொமூரியர்கள் கொஞ்சம் நாகரீகம் அடைந்தவர்கள். அவர்கள் கிரேக்க, சுமேரிய தொடர்பு உடையவர்கள். ஆதலால் நீங்கள் ஆதிமனிதனை சொல்லவேண்டும் என்றால் அங்கு போய்ப் பின்னர் லொமூரியாவிற்க்கு வாருங்கள். பண்டைக் காலத்தில் நீங்கள் சொல்லும் நியாண்டர்தாஸ் காலத்தில் நம் நிலப்பரப்பும் ஆப்பிரிக்காவும் ஒன்றாக இருந்தது. டைரிஸ் ஆறு அதில் ஓடிக் கொண்டு இருந்தது. லொமூரியா இருந்தபோது இந்த நிலப்பரப்பு இடையில் கடல் கொண்டு ஆப்பிரிக்கா பிரிந்தது. பின்னாளில் லொமூரியா அழிந்தது. காலவரிசையைக் கண்டுபிடிப்பது சிரமம் என்றாலும், கொஞ்சம் அதன் படி தொடர்ச்சியாக சொல்லுங்கள். உங்கள் சிந்தனைக்கு ஏற்றவாறு முன்னேக்கியும், பின்னேக்கியும் எழுதினால் தொடர் படிப்பவர்களுக்கு ஒரு தொடர்வு (கண்டினுட்டி) இருக்காது. மற்றபடி உங்களின் கட்டுரை மிகவும் பயனும் அருமையாகவும் இருக்கின்றது. தொடர்ந்து எழுதுங்கள். எனது கருத்துக்கள் உங்களின் கட்டுரைகள் மிகவும் பிடித்து இருந்ததால் ஆக்கபூர்வமாக எழுதப்பட்ட ஒன்று.

  ReplyDelete
 7. நன்றி பித்தன்!
  நீங்கள் சொல்வது முற்றிலும் சரியானது. நான் இங்கு நியான்டர்தார்ஸ் பற்றி குரிப்பிட்டிருக்க தேவையில்லை. (ஒரு சிறு காரணம் இருக்கிறது, அடுத்த பதிவில் சொல்கிறேன்.)

  உங்களது கருத்துக்க்ளை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.

  உங்களது வலைப்பூ சுப்பர்.

  ReplyDelete
 8. வணக்கம், பிரபு சந்திரன் அவர்களே, தங்களின் லெமுரியா பற்றிய பதிவுகள் மிகவும் வியக்கதக்க உள்ளது. தொடர்நது எழுத வேண்டுகிறேன். இடுகை இடும் பொழுது கீழ்கண்ட எனது முகவரிக்கு தெரியப்படுத்த வேண்டுகிறேன். நன்றி.

  rajsteadfast@gmail.com

  ReplyDelete
 9. வருகைக்கு நன்றி...
  இன்றுதான் கொமென்ட் படித்தேன்...
  மிகவும் தாமதமாகிவிட்டது... இனி தெரியப்படுத்துவேன்...

  ReplyDelete
 10. Gi,
  9Ft Men would not be an Arakkan.As per my under standing by that time (10,000 yrs b4)normal people also would be at 9-10 Ft.Y because we can see 6-7 Ft normal people nowadays.'porus purushothaman' himself 7 ft 500 yr b4,Beema himself 15 ft 5,500 b4.I red 1 thing abt Bheema that he took an elephant & used as shield to cover himself from Karnas's arrow,just think of his height.
  Beyond this arakkans & all will be minimum 30 ft.

  ReplyDelete
 11. உங்க பதிவை தொடர்ந்து படிச்சுட்டுதான் இருக்கேன் நல்லாயிருக்கு...

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails