Total Pageviews

Sunday 10 January 2010

நாய்க்கு கூட ஒரே பெயரா...??? (ஒரு மண்ணும் விளங்கல)

நாய்க்கு கூட ஒரே பெயரா...???
----------------------------------------------------------------------------------------

போன "ஒரு மண்ணும் விளங்கல" பதிவுக்கும் சொல்லிக்கொள்ளும்படி வாசகர்களிடமிருந்து ஆதரவு கிடைத்தது.
அதனால், அது தொடர்பான இப்பதிவினை எழுதியுள்ளேன்.

உண்மையிலேயே இவ்வாறான சம்பவங்களை நாம் பார்க்கும் போது, எமக்கு மேலே ஒரு சக்தி இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது.
அப்படியானால், நாமெல்லாம் ஏற்கனவே "இப்படி இப்படி தான் நீ வாழவேண்டும்" என கோட் செய்யப்பட்டு இயங்கிக்கொண்டிருக்குறோமா???  அப்ப ஜோதிடம் சொல்வது...???

சரி நான் குழம்ப விரும்பவில்லை.... சம்பவம் ஒன்றை பார்ப்போம்....
----------------------------------------------------------------------------------------


 இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் இரட்டையர்கள், பிறந்து சிறிது நேரத்தில் வெவ்வேறு நபர்களிடம் வளர்ப்பதற்காக கொடுக்கப்பட்டு விட்டனர். ( என்னதிது...? தமிழ் படம் மாதிரி இருக்கா?)
39 வருடங்கள் கழித்து 1979 ம் ஆண்டு இருவரும் ஒரே இடத்தில் சந்தித்துக்கொள்ள சந்தர்ப்பம் ஏற்பட்டது. வழமைமாதிரி கட்டித்தழுவி விட்டு ஒரு ஓரமாக இருந்து தமது வாழ்க்கை சம்பவங்களை ஒப்பிட தொடங்கினார்கள்.

முதல் ஒப்பீட்டிலேயே ஆச்சரியம் தொடங்கியது. இருவரினதும் பெயர்கள் ஜேம்ஸ். இருவரும் சட்டமீறல் தடுப்பு உத்தியோகத்தர்களாக கடமையாற்றிக்கொண்டிருந்தார்கள். இருவரும் நன்றாக சித்திரம் வரைய வல்லவர்கள்.
இருவரினதும் மனைவியரின் பெயர்கள் லின்டா!! இருவருக்கும் ஒரே ஒரு மகன். பெயர் ஜேம்ஸ் அலன். ( 2 வது அலனின் எழுத்தில் ஒரு "எல்" அதிகமாம். அதுதான் வித்தியாசம்.) இருவருமே விவாகரத்தாகி மறுமணம் முடித்தவர்கள். முன்னைய மனைவியின் பெயர் பெட்டி. இருவரும் நாய் வளர்த்தார்கள் பெயர் டைனி!!!
(மூலம் "றீடர்ஸ் டஜன்")

நம்பமுடிகிறதா???

இன்னொரு சம்பவம்....


ஜேம்ஸ் ஃபைசட் 1787 ம் ஆண்டு யுத்தத்தில் சுட்டுக்கொள்ளப்பட்டார். அவர் அப்போது அணிந்திருந்தது அவரின் அண்ணனுடைய கோட். அவருடைய அண்ணனும் அதே கோட்டை அணிந்திருந்த போது தான் சுட்டுக்கொள்ளப்பட்டார்.
கோட் மட்டுமில்லை... அண்ணனுடைய மார்பில் குண்டு பாய்ந்து இறந்த அதே துளையினூடாக குண்டு பாய்ந்துதான் தம்பியும் இறந்திருந்தார்!!!
----------------------------------------------------------------------------------------

உங்களுக்கு எதாவது விளங்குதா???   விளங்கினா சொல்லுங்கப்பா...
எதாச்சும் இப்படி சம்பவங்கள் தெரிஞ்சாலும் பின்குறிப்பிடுங்க...

இன்னும் இருக்கு அடுத்ததில் பார்ப்போம்!!!

1 comment:

  1. my name is rajan, iam Doing share trading as my profession , and recently i met a one person his name is also rajan doing share trading as profession. both in same city around 20km difference. after read u r article suddenly i remember this and shared u.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected