திரு நங்கைகள் என்பவர்கள் யார் என்பதைப்பற்றிய சிறு அலசலையே இங்கு வாசிக்கப்போகிறீர்கள்.
சமூகத்தில் 9, அலி, அரவாணி என பல பெயர்களால் அழைக்கப்பட்டுக்கொண்டு இருக்கும் இவர்களை ஆணா, பெண்ணா என்று வகைக்குறிப்பது கடினம் அல்லது முடியாது. அவர்காளின் சமூக நடத்தைகளை விடுத்து ஆரம்பத்தில் விஞ்ஞான மருத்துவ ரீதியில் ஆராய்வோம்.
23 ஜோடிகுறோமோசோம்களில் ( தாயிடம் இருந்து 23 தந்தையிடம் இருந்து 23) இருந்து உருவாகும் ஒரு குழைந்தையின் உடலில் பல்வேறு ஹோர்மோன்கள் தொழிற்படுகின்றன.
அவற்றில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் என்பவை ஆண் பெண் தன்மையைத்தீர்மானிக்கும் ஹோர்மோன்களாக இருக்கின்றன.
ஒரு ஆணிற்கு டெஸ்டோஸ்டிரோன் ஹோர்மோன் அதிக அளவில் சுரக்கும் அதேவேளை சிறிய அளவில் ஈஸ்ட்ரோஜனும் இருக்கும்.
பெண்ணாக இருப்பின் ஈஸ்ட்ரோஜன் ஹோர்மோன் அதிகமாகவும் குறைந்த அளவில் டெஸ்டோஸ்டிரோனும் இருக்கும்.
( சிசு உருவாகி 6-7 வாரங்களின் பின்னரே ஆண் பெண் ஹோர்மோன்கள் உற்பத்தியாகின்றன, எனவே ஆணிற்கு பெண்ணின் அடையால உறுப்புக்களும் பெண்ணிற்கு ஆணின் அடையால உறுப்புக்களும் வழர்ச்சியடையாத நிலையில் மைந்திருக்கும். )
குழந்தை பிறந்ததும் பிறப்புறுப்புக்களைக்கொண்டு ஆண்,பெண் என தீர்மானித்துவிடுகிறார்கள். எனினும் 4-5 வயதிலேயே அந்த குழந்தை எந்த வகுப்பை சார்ந்தது என்பதை தீர்மானிக்க முடியும்.
உடல் ரீதியாக ஆணாக இருக்கும் ஒரு குழந்தை மனரீதியாகவும் நடத்தையிலும் பெண்ணாக நடக்கும் பட்சத்திலும் அதற்கு அறிவு எட்டி தான் ஆண் அல்ல பெண் தான் என்பதை உணரும் பட்சத்திலும் அந்த பிள்ளை பெண்ணாகவே கருதப்படவேண்டும் என சமீபத்திய மருத்துவசட்டங்கள் கூறுகின்றன. ( ஆணாக உணரும் பெண் பிள்ளை; ஆணாக கருதப்படவேண்டும் என்பதும் உள்ளடங்குகிறது. )
0 comments:
Post a Comment