அம்ஸ்ரடாம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஒரு விமானத்தில் இருந்து தற்செயலாக எடுக்கப்பட்ட வீடியோவே இங்கு நீங்கள் பார்க்கப்போகும் வீடியோவாகும்.
ஐபோனில் எடுக்கப்பட்டுள்ள இவ் வீடியோவில் எவ்வித கிராபிக்ஸ் வேலைகளும் இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அக் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் வானில் வேறு எந்தவித வானிலை அறிகருவிகளும் ஏவப்படவில்லை என்பதையும் விமான நிலையமும் அவ்வூர் விஞ்ஞான ஆய்வு மையமும் உறுதிப்படுத்தியுள்ளது.
இது ஐஃபோன் கமெராவில் இருக்கக்கூடிய புள்ளி அல்லது விமான கண்ணாடியில் இருக்கக்கூடிய புள்ளி என்று கூறமுடியாது. ( காட்சிகளைப்பாருங்கள் புரியும். )
இங்கு பதிவாகியுள்ள உருவைப்பார்க்கும் போது, பரவலாக வேற்றுக்கிரக வாசிகள் வருவதாகக்கருதப்படும் பறக்கும் தட்டுக்களின் உருவிலேயே உள்ளது. எனவே இது ஒரு பறக்கும் தட்டாக இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.
இங்கு வீடியோப்பதிவில் பறக்கும் தட்டு அசையவில்லை, எனினும்... அசையாது வானில் ஒரு இடத்தில் நின்றுவிட்டு திடீரென பறக்கும் பறக்கும் தட்டுக்கள் பற்றி கேள்விப்பட்டுள்ளோம்.
அப்படியானால், வேற்றுக்கிரக வாசிகள் எமது வானெல்லையில் தங்கியிருந்து எம்மை வேவு பார்க்கிறார்களா? ஏன்?
இதை வளாகம் வலைத்தளத்தில் விரிவாக பார்த்துள்ளோம்.
VIDEO LINK :
ராடார்லேயே பதிவு செய்ய முடியாத பறக்கும் தட்டை ஐபோன் பதிவு செய்திருக்கிறது என்பதை நம்ப முடியவில்லை.
ReplyDeleteஇந்த வீடியோ ஆய்வு செய்யபட்டு அது ஹோக்ஸ்ச்(போலியானது) என்று நிருபிக்க பட்ட ஒன்று..
ReplyDeleteபறக்கும் தட்டுகள் குறித்த அதிக தகவல்களுக்கு..
http://parakkumthattu.blogspot.com/