ஈழப்பெண்களும் ஈனக்கண்களும் |
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது கைதாகி தடுப்பு முகாம்களில் இருந்து தற்போது வெளியே வந்திருக்கும் பெண்களின் நிலைதொடர்பான காணொளியை கிரவுண் வியூவ்ஸ் ஸ்தாபனத்தார் வெளியிட்டுள்ளர். அனைவரும் நிச்சயம் பார்த்துப்பகிரவேண்டிய வீடியோ இது.
யுத்தம் தொடர்பான அரசியல் பேச்சு ஒரு புறம் இருக்க, இவ்வாறு வெளியேறிய பெண்கள் சமூகத்தால் ஒதுக்கப்படுவது எம் சமூகத்தின் சாபக்கேடே. ஈழம் வேண்டி போராட்டத்தில் ஈடுபட்ட இப் பெண்கள் இராணுவ முகாம்களில் இருந்து வந்தார்கள் எனும் ஒரு காரணத்திற்காக சொந்த உறவுகளே அவர்களை ஒதுக்குவது வருந்தத்தக்கதும் கண்டிக்கத்தக்கதுமான ஒரு செயல்.
மேலும், தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் இயங்குபவர்களின் நடவடிக்கைகளையும் இவ் வீடியோப்பதிவில் வரும் பெண் கூறுகின்றார். இப்போது நினைத்துப்பாருங்கள் ஈழத்தமிழரின் இவ் நிலைக்குயார் காரணம்? எங்களுள் இருக்கும் சுய நலம் ஒரு முக்கிய காரணமாக இருப்பது விளங்கும்.
இராணுவத்தின் கண்கள் எப்போதும் இவர்கள் மீதே இருப்பது இவர்களின் அன்றாட வாழ்வை எவ்வளவு பாதித்துள்ளது என்பதையும் உணர முடிகிறது. :/
இப் பெண்கள் எப்போதும் திருமணம் முடிக்கப்போவதில்லை என்று கூறுவது, எமது சமுதாயத்தின் விசம் மிக்க கண்களினாலேயே என்பதை உணரமுடிகிறது. வெளி நாடுகளில் ஈழமக்களின் போராட்டத்தை பணமாக்க முனையும் சிலர் ஈழம் ஈழம் என்று கோசங்கள் எழுப்புவதுண்டு. அவர்கள் நிச்சயம் இப் பெண்களிற்கு உதவி தம் கறைகளைப்போக்கிக்கொள்ள வேண்டும்.
0 comments:
Post a Comment