Total Pageviews

Sunday, 18 April 2010

ஹொசிமின் - (ஒரு பக்க வரலாறு)

ஹொசிமின் 
---------------------------------------------------------------------------------
பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாட்டுக்கு, 1942-ம் ஆண்டில் அடிமையாக இருந்தது வியட்நாம். வியட்நாமியர்கள் கடும் துன்பம் அடைந்து, ‘‘இதற்கு மேலும் பொறுக்க வேண்டாம். உடனே போரிட்டு இரண்டு நாட்டுப் படைகளையும்
விரட்டுவோம்’’ என்று ‘வியட்நாமின் போராட்டக் குழுத்தலைவர் குயென்அய்கோக்கிடம் முறியிட்டனர்.

‘‘இது சரியான நேரம் அல்ல; இன்னும் கொஞ்சம் பொறுமையாகக் காத்திருப்போம்’’ என்றார். ‘‘பட்டினியாலும், ராணுவ நெருக்கடியாலும் மக்கள் தினம் தினம் செத்துக்கொண்டு இருக்கும்போது போரிடாமல் பொறுமை காப்பது கோழைத்தனம்’’ என்றார்கள்ஜனங்கள். ‘‘நீங்கள் நினைப்பது போல் பொறுமை என்பது பலவனீமல்ல; அதுவும் போராட்டமே! விரைவில் பிரான்ஸ் - ஜப்பான் இடையில் மீண்டும் மோதல் ஏற்படும். அல்லது, ஏற்பட வைப்போம். அதுவரை பொறுமை காப்போம்’’ என்றார் குயென்.

அவர் சொன்னபடியே ஜப்பான் மீண்டும் பிரெஞ்சுப் படைமீது தாக்குதல்
தொடுக்கவே, அவர்கள் ஆயுதங்களை வியட்நாம் போராட்டக் குழுவிடம்
ஒப்படைத்துவிட்டு ஓடினார்கள். ஆயுதங்களைக் கைப்பற்றிய வியட்நாம் போர்ப்படையினர் அதைக்கொண்டு ஜப்பான் படைகளை விரட்டியடித்தனர். 1945-ம்வருடம் சுதந்திர வியட்நாம் அரசின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் குயென் என்கிற ஹொசிமின்.

வியட்நாமில் சிம்லியன் என்னும் ஊரில் 1890-ம் வருடம் பிறந்தார் குயென்-
டாட்தாங். கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தபோதே பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிராக மாணவர்களுடன் போராடத் தொடங்கினார். ஆனால், அந்தப் போராட்டம் கொடூரமாக நசுக்கப்பட்டது. பொறுமையாக இருந்து சரியான நேரத்தில் போராடினால்தான் வெற்றி கிடைக்கும் என்பதைப் புரிந்துகொண்ட குயென், 1911-ம் ஆண்டு முதல் பல்வேறு நாடுகளில் சுற்றி, இறுதியாக பிரான்ஸ் நாட்டில் ‘குயென்அய்கோக்’ என்ற பெயருடன் அங்கிருந்த கம்யூனிஸ்ட் கட்சியில்இணைந்து, வியட்நாம் விடுதலைக்காக உரிமைக்குரல் கொடுத்தார்.

அதனால் பிரான்ஸ் அரசு அவ‌ரை கைதுசெய்து தூக்கிலிட உத்தரவு பிறப்பித்ததும்,மாறுவேடத்தில் ரஷ்யாவுக்குத் தப்பியோடினார். ரஷ்யாவில் இருந்தபடியே குயென் வழிகாட்ட, வியட்நாமில் கம்யூனிஸக் கட்சி தொடங்கப்பட்டு, போரிடத் தயாராக புரட்சிக் குழுவும் உருவானது. 1942-ம் வருடம் தாய்நாடு திரும்பிய குயெனின் பொறுமையான போராட்டத்தின் பரிசாக 1945-ம் வருடம் வியட்நாமுக்கு விடுதலை கிடைத்தது.

அமெரிக்கா, 1960-ம் வருடம் வியட்நாம் மீது போர் தொடுத்தது. ‘‘இந்தப் போர் ஐந்து, பத்து... ஏன், இருபது ஆண்டுகள்கூட நீடிக்கலாம். நாட்டின் மொத்த வளங்களும் அழிய நேரிடலாம். ஆனாலும், இறுதிவரை போராடி வெற்றி
பெறுவோம். அதன் பின், இதனிலும் வலிமை வாய்ந்த நாடாக வியட்நாமை நிர்மாணிப்போம்’’ என்று வானொலியில் முழங்கினார் ஹொசிமின். கடைசி நிமிடம்வரை போர் ஆலோசனையில் இருந்த ஹொசிமின், உடல்நலம் குன்றி 79 ம் வயதில் மரணமடைந்தார். ஆனாலும் அவர் வழிகாட்டியபடி, பொறுமையாகக் காத்திருந்து எதிர்பாராத தாக்குதல் நடத்தி உலகப் பேரரசு என மார்தட்டிய அமெரிக்கப் படைகளை 1975-ம் வருடம் விரட்டியடித்து, வரலாற்றில் இடம் பிடித்தது வியட்நாம்.

---------------------------------------------------------------------------------

7 comments:

  1. ஹொசிமின் போன்றே தலைவரும் சாதனை படைப்பார?

    ReplyDelete
  2. வணக்கம்
    நண்பர்களே
    உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
    உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
    நன்றி
    தலைவன் குழுமம்
    www.thalaivan.com

    ReplyDelete
  3. Tnx...முத்துவேல் & thalaivan...

    ReplyDelete
  4. ஹலோ மிஸ்டர் முத்துவேல்!!ஒசிமின் படித்துள்ளார் உங்கள் தலைவர் ஹி..ஹி..ஹீ..8ம் க்ளாஸ் கூட தாண்டவில்லை!!!!

    ReplyDelete
  5. intha virumana valaakaththil irunthu thookkungkal

    ReplyDelete
  6. அடடா...உண்மை எழுதினால் தூக்க நிக்கிறார்களே!இது தான் சொல்லுவது"சொறி பிடிச்சவன் கை சும்மா இருக்காது"என்டு தூக்க ஆள் இல்லாமல் தவிக்கிறீர்களோ?

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected