Total Pageviews

Tuesday, 3 May 2011

பல கிரகங்களில் இருந்து "ஏலியன்ஸ்"ஸா? - வெறும் ரோபோதானா? - (ஏலியன்ஸ்)

பரிமாணங்கள் -14
-------------------------------------------------------------------------------------------
ஏலியன்ஸ் பற்றிய நீண்ட நாட்களின் பின்னரான் பதிவு... பல தகவல்கள் திரட்டியுள்ளேன்.
அதன்படி ஊகிக்க கூடிய இன்னொரு விதமான சிந்தனை பற்றி இன்றைய பதிவில் எழுதுகிறேன்.

-------------------------------------------------------------------------------------------

ஏலியன்ஸை பார்த்ததாக உலகும் முழுவதும் பல பகுதிகளில் இருந்து பல கதைகள் வருகின்றன. அவற்றில் சிலது உண்மையாக இருக்கலாம் என "ஹிப்னாடிஸ" முறை மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. (முன்னைய பதிவுகளில் உள்ளது.)

எனினும், ஒவ்வொரு பகுதியினதும் ஏலியன்ஸின் உருவ-அமைப்பு ஒவ்வொரு விதமாக வர்ணிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, ஏஸியாப்பகுதிகளுக்கு வருகைதரும் ஏலியன்ஸ் குள்ளமானவர்களாகவும் வெண்ணிற உடலுடையவர்களாகவும் அவதாணிக்கப்படுகிறார்கள்.
அதேவேளை, அமெரிக்க கண்டங்களில் உயரத்தில் ஏஸியன்ஸ் அவதானித்ததை விட கூடியவர்களாகவும், வெண்ணிற உடல் என்று இல்லாமல்... வெண்ணிற, நீல,சாம்பல் நிற அங்கிகளை அணிந்தவர்களாக அவதானிக்கப்படுகிறார்கள்.
மேலும், சில பகுதிகளில் இரு கொம்புகள் உடையவர்களாகவும், அன்டெனா போன்ற ஒரு உணர்கொம்பு உடையவர்களாகவும் அவதானிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

பலரின் ஏலியன்ஸ் விபரிப்பு சம்பவங்கள் கிட்டத்தட்ட ஒரே போல் இருந்தாலும், உடலமைப்பில் பாரிய வேறுபாடுகளைக்காணக்கூடியதாக உள்ளது.
இவற்றை பார்க்கும் போது,
எமது பூமிக்கு... பல கிரகங்களில் இருந்து வெவ்வேறு வேற்றுக்கிரக-வாசிகள் வருகின்றனரா என்ற எண்ண‌ம் தோன்றுகிறது. அப்படி பார்த்தால்... நாம்தான் தொழின் நுட்ப அறிவில் மிகவும் பிந்தங்கியவர்காக இருக்கின்றோம். எம்மால் எமது சூரிய குடும்பத்தை தாண்டி செயற்கை கோள்களை அனுப்புவது கூட கடினமாணதாக இருக்கையில், வேற்று நட்சத்திர மண்டலங்களில் இருந்து பூமிக்கு இலகுவாக வந்து போகின்றனர் என்றால் அவர்களின் தொழில் நுட்பத்தை கற்பனை செய்ய எம்மிடம் திறனில்லை.
எனினும், அவர்கள் பூமிக்கு விஜயம் செய்வது ஏன்? நோக்கம் என்ன? போன்ற கேள்விகளுக்கு தக்க பதில் இல்லை. (பின்னைய பதிவுகளில் ஊகிப்போம்..:) )

-------------------------------------------------------------------------------------------

இன்னொரு வகையாக ஜோசிக்கும் போது...
ஒரு கிரகத்தில் இருக்கும் ஏலியன்ஸ்-தான்... பூமிக்கு பல விதமான "ரோபோ"க்களை அனுப்பி வைத்து ஆய்வு நடாத்துகின்றனரா என்ற எண்ணமும் தோன்றுகிறது.
அதனால் தான் பல வெவ்வேறு வகையான உருவங்கள் அவதானிக்கப்படுகின்றன.
முக்கியமாக தலையில் என்ரெனா போன்ற அமைப்பு இருத்தல், அவர்களின் முகங்களில் ஒரு வித முக பாவணையும் இருப்பதில்லை* போன்ற பண்புகள் அவை ரோபோக்கள்தானா என்ற எண்ணைத்தை தோற்றுவிக்கும்.
(* - கடத்தி விடுவிக்கப்பட்டவர்கள் கூறியது... பின்னைய பதிவுகளில் பார்ப்போம். :) )

ரோபோக்களாக இருப்பதற்கு காரணம் இருக்கிறது...
ஏலியன்ஸ்காக அவதானிக்கப்பட்ட அனைத்து உருவங்களும்.. மனித உருவத்திற்கு மிக நெருக்க மான அமைப்பிலேயே இருந்துள்ளது. எனினும், வேற்றுக்கிரகத்தில் தோன்றக்கூடிய உருவங்கள் மனிதன் போன்ற இருப்பதற்கான சான்றுக்கள் மிக-மிக குறைவு. ( ஏற்கனவே முன்னைய பதிவுகளில் இது பற்றி தெளிவாக விளக்கி இருந்தேன். )
ஆகவே, பூமியில் உள்ள மனிதர்களை வேவு பார்ப்பதற்காக மட்டும், மனிதனை போன்ற உருவ அமைப்புள்ள ரோபோக்களை அனுப்பி இருக்ககூடும்.
ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வகை ரோபோக்கள் மட்டும் வரக்காரணம்,
நாம் நிலவுக்கு அனுப்பும் செயற்கை கோள்கள் தொடர்ந்து குறிப்பிட்ட ஒரே இடத்திலேயே ஒரு நாட்டினால் இறக்கப்படுகிறது... (ரஷ்யா ஒரு பகுதி, அமெரிக்கா ஒரு பகுதி என்பது போல...)
அதே முறையை அவர்களும் கையாண்டால்... ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வகை ரோபோக்கள் வருவது வியப்பில்லை.

-------------------------------------------------------------------------------------------

பதிவு நீண்டு விட்டது...
அடுத்தகட்ட அவர்களின் நடவடிக்கையின் படி முற்று முழுதாக மனித உருவையே அனுப்ப சாத்தியமுள்ளது...  ஏன் நேரடியாக வராமல் அனுப்புகிறார்கள்...
மேலும்... கடத்தப்பட்டவர்களுக்கு என்ன‌ நடந்தது என்பதையும் வரும் பதிவுகளில் பார்க்கலாம்.
அதற்கு முன்பாக, பிரிதானியா ரோயல் கல்யாணத்தை அவதானித்ததாக சொல்லப்படும் ஏலிய்ன்ஸ் யார் என்பதை பார்க்க வேண்டும் தனிப்பதில்... :)

பதிவு பிடித்திருந்தால் வோட் போடவும்... அல்லது கொம்ன்ட்ஸில் குறைகளை சுட்டிக்காட்டவும்... மாற்றுக்கருத்துக்ளையும்.... :)

-------------------------------------------------------------------------------------------

6 comments:

 1. வளாகம் அவர்களுக்கு....

  மிகவும் தரமான பதிவு...
  அடுத்தடுத்த பதிவுகளையும் மிக விரைவாக இட்டு எம்மவர் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவீர்கள் என எண்ணுகிறேன்...

  ReplyDelete
 2. என்னத்த கண்ணையா சொல்லுற மாதிரி...
  வருவாங்களா..?
  வருவாங்க..ஆனா வரமாட்டாங்க..ஹி ஹி ஹி.
  மாப்பிள்ளை படத்துல வர்ற காமெடி போல..
  Alians ஒரு முடிவோட தான் இறங்கியிருக்கிறாங்க..
  சாதாரணமா எங்களை விரட்டி அடிப்பாங்க...
  இனிமே அடிச்சு விரட்டுவாங்க..! ஹி ஹி ஹி.
  அடுத்த பதிவை ஆவலாக எதிர்பார்க்கிறேன்..!

  ReplyDelete
 3. மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்...
  உங்களைப்போல் சிலர்தான் இந்தப்பதிவுகளை வாசிப்பார்கள்...
  விரைவில் எழுதுகிறேன் அடுத்தடுத்த பதிவுகளை... :)

  ReplyDelete
 4. அருமையான பதிவு

  ReplyDelete
 5. ஐன்ஸ்டீன் இன் கொள்கை படி ஒளியின் வேகத்தை தாண்டினால் பின்னோக்கி போகமுடியுமே தவிர ,, எலியன்ஸ் வெகு தொலைவில் இருந்து நூற்று கணக்கான ஒளி ஆண்டு பயணித்து வருவது ????
  அவர்களின் பயண வேகம்??????

  புரியாத பரிமாணங்கள் தான் ...மனித மூளை பாவனை வீதம் கூடினால தான் அறிவது சாத்தியம்

  ReplyDelete
 6. வாவ் சிக்னல் பற்றிய தகவல்களை தரவும்

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails