Total Pageviews

Tuesday, 10 May 2011

இல்லுமினேடி - உலகின் புதிய கட்டளைகள் 01 ( அறிமுகம் )

------------------------------------------------------------------------------------------
எம்மை சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும் நாம் அறிந்திருக்க வேண்டும்... அல்லது அடிமைகளாக வேண்டிய நிலை ஏற்படலாம்.
எம்மில் பலருக்கு ஏற்கனவே தெரியும்... பல வகையில் சிந்திக்க விடாமல் அடிமைகளாக்கப்பட்டுவிட்டோம் என...
எம்மை சூழ நடக்கும் சில செயற்பாடுகளை சுயமாக சிந்திங்கும் பொருட்டு இந்த பதிவை எழுதுகிறேன்...
முதலில் அறியப்படாத ஒரு மிகப்பெரும் சக்தி வாய்ந்த குழுமத்தைப்பற்றி பார்ப்போம்...

------------------------------------------------------------------------------------------

இலுமினேடி (Illuminati)...
பலரால் அறியப்படாததும்.. ஆனால், சுய சிந்தனைவாதிகளால் அறியப்பட எத்தனிக்கும் ஒரு குழுமத்தின் அடையாளம் என்றே இந்த illuminati ஐக்கூற வேண்டும்.
"உலகின் புதிய கட்டளை (New world order)" எனவும் இந்த குழுவின் செயற்பாடுகள் அறியப்படுகிறது. எனினும் இவை புதிய கட்டளைகள் அல்ல... மிக நீண்ட காலமாகவே நடைமுறைப்படுத்த திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு தந்திரமாகும்.  20 ஆம், நூற்றாண்டுகளில் இதன் வளர்ச்சி தொழில் நுட்ப வளர்ச்சியுடன் அதிகரித்திருக்கின்றது.

தற்சமையம் நடந்து கொண்டிருக்கும் யுத்தங்கள், கலவரங்கள், அரசியல் மாற்றங்கள் எல்லாமே குறிப்பிட்ட ஒரு சில மனிதர்களால்த்தான் நடாத்தப்படுகின்றது. அவர்கள் தான் உலகின் "கிங் மேக்கர்"களாக இருகிறார்கள். ( நம்புவதற்கு கடினமாக இருக்கலாம்... லொஜிக் இல்லாதது போன்று தோன்றும்... ஆனால், உண்மையாக இருப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன... பின்னரான பதிவுகளில் பார்க்கலாம்...)

யார் இவர்கள்...
நான் அறிந்து கொண்டதன் படி உலகில் 13 குடும்பங்களை சேர்ந்த நபர்களாலேயே இந்த திட்ட மிடல்கள் நடாத்தப்படுகின்றன. 13 குடும்பங்கள் என்பது... ஆயிரம் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டது... இப்போது அதன் அங்கத்தவர்கள் கணிசமாக உலகெங்கும் வாழ்கிறார்கள். இவர்கள் வேற்று குடும்பங்களுடன் உறவுகளைப்பேணுவதில்லை... காரணம், தமது Illuminati தன்மைக்குரிய மரபணுக்களைப்பேணுவதற்காகத்தான்.
மேலும் இவர்கள் தங்களை வெளிப்படுத்துவதும் இல்லை.

இவர்களின் நோக்கம்தான் என்ன...

சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால்...
"ஒரு உலகம்.. ஒரு அரசு" என்பது தான் இவர்களின் நீண்டகாலத்திட்டம். இந்த திட்டம் நடை பெற வேண்டுமானால்... சுய சிந்தனைவாதிகள் ஒதுக்கப்பட வேண்டும். இவர்களுக்கு எதிரானவர்கள்... அல்லது நோக்கத்துக்கு இடையூறாக இருப்பவர்கள் இல்லாமல் போக வேண்டும்...
இதைத்தான் பல்வேறு முறைகளில் நடைமுறப்படுத்திவருகின்றனர்... அதில் பலதில் வெற்றியும் கண்டுள்ளார்கள்.
உதரணமாக...
சில வகை "இசை" வெளியீடுகளை ஊக்குவித்து இளம் சமுதாயத்தை அதனுள் கட்டுப்படுத்த வைப்பது இவர்களின் ஒரு திட்டம்.... அது கணிசமான அளவு வெற்றியளித்துள்ளது.
மேலும், பல வகை சினிமாக்களின் மாய உலகத்தினுள் அடக்கி வைப்பதும் வெற்றியளித்துள்ளது.
(என்ன என்ன முறைகளில் இது நடை முறைப்படுத்தப்படுகிறது என்பது வரும் பதிவுகளில் தெளிவாக பார்க்கலாம்... )

முடிவில்... இவர்கள் நினைத்தால், எங்கோ இருக்கும் ஒருவரின் நடவடிக்கைகளை ஒரு நிமிடத்தில் கட்டுப்படுத்த வைக்க வேண்டும் என்பதே இறுதி இலக்கு. அதாவது... அடிமைப்படுத்த வேண்டும் என்பது.. எனினும் அவர்களுக்கு உரிய தேவைகள் நிறைவேற்றிக்கொடுக்கப்படும்... மேலதிகமாக சிந்திக்கவோ.. கிளர்ச்சி ஏற்படுத்தவோ முனைபவர்கள் உலகிற்குத்தேவை இல்லாதவர்களாக கணிக்கப்பட்டு... நீக்கப்படுவார்கள்-ஒழிக்கப்படுவார்கள்.
ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாட்டுக்கு அடங்கி வாழ்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

இவர்களின் மிகப்பெரிய தலையிடி...
ஏஸியாப்பகுதியை சேர்ந்தவர்களும்.... இப்படியான பதிவுகளை வாசிப்பவர்களும் தான்... இவர்களின் மிகப்பெரிய தலையிடியாக இருக்கிறார்கள். அது ஏன் என்பதை வரும் பதிவுகளில் பார்ப்போம்.

------------------------------------------------------------------------------------------

இந்த தலைப்பை எடுத்தால்... பல்வேறு விதமாக எழுத வேண்டி இருக்கும்...
ஆரம்பத்தில் மிக சிம்பிளாக... எமது சினிமாவில் இருந்து ஆரம்பிப்போம்... நாம் எப்படி "கேனயர்கள்" ஆக்கப்படுகிறோம் என்பது விளங்கும். அடுத்த பகுதியில் அதைப்பார்ப்போம்.

நிச்சயம் இந்தப்பதிவிற்கு நான் மட்டும் போதாது... illuminati தொடர்பான எதிர் சுய கருத்துக்கள் உடையவர்கள் தங்கள் கருத்துக்களை கட்டாயம் சொல்ல வேண்டும்... பதிவராக இருந்தால்... தொடர்பதிவு எழுத வேண்டும்... :)

------------------------------------------------------------------------------------------

இந்த பதிவு பலரிடம் சென்றடைய வேண்டும் என கருதினால் வோட் போடவும்... :)
அல்லது ஏதோ, ஒரு களகத்துக்காக மூளைச்சலவை செய்வதற்காக எழுதப்படுகிறது என கருதினால் கொமென்டில் கூறவும்...

------------------------------------------------------------------------------------------

15 comments:

 1. Super Topic.....
  I need more information

  ReplyDelete
 2. அடுத்த பதிவில் இன்னும் தெளிவக சொல்லுங்க நன்பறே நல்ல பதிவு.

  ReplyDelete
 3. த்ரில்லிங்கா இருக்கு ....தொடருங்கள்

  ReplyDelete
 4. I am not clear in this topic give more information vel

  ReplyDelete
 5. இல்லுமினேடி பற்றி அறிந்துகொள்ள எனக்கும் ஆர்வம் அதிகம்,நல்லா அழகாக எழுதி உள்ளீர்கள்,நானும் எனது நண்பரும் இதனைப் பற்றி எழுதி உள்ளோம்,படித்துவிட்டு தங்கள் கருத்தைக் கூறவும்

  http://denimmohan.blogspot.com/2010/10/illuminati.html

  ReplyDelete
 6. I know about this.. waiting for someone to write ..

  Proceed plz... Best wishes..

  ReplyDelete
 7. I too beleive illuminati and 9 wise mens etc, please write more about this, i will also provide u some information

  ReplyDelete
 8. I have one doubt!!!!!!
  சுய சிந்தனைவாதிகள் ஒதுக்கப்பட வேண்டும்
  i think they always welcome சுய சிந்தனைவாதிகள் that's why they include light in the top of the pyramid logo.They trying to separate, who are those people are not சுய சிந்தனைவாதிகள்.
  PLEASE verify your post!!!!!!
  or please give me reference!!!!!!!

  ReplyDelete
 9. "Davinci Code" என்ற படம் கிறிஸ்தவர்கள் மத்தியில் கிளப்பிய சர்ச்சையை மறந்திருக்க மாட்டீர்கள். அந்தப் படத்தின் சீக்குவல் ஆக (Second Part) வெளிவந்த படம் தான் "Angels & Demons". இந்தப் படத்தில் தான் இல்லுமினாட்டிகள் பற்றி அறிந்தேன். அந்தக்காலத்தில் எல்லா மதங்களையும் போலவே கிறிஸ்தவ மதமும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளை வெறுத்ததையும் நியூட்டன் கலிலியோ நாஸ்டர்டாம்ஸ் கொப்பநிக்கஸ் முதலியோரை ஒதுக்கியதும் யாவரும் அறிந்த உண்மை. ஒரு படி மேலே சென்று விஞ்ஞானத்துக்கு
  ஆதரவானோருக்கு மரணதண்டனையும் அளிக்கப்பட்டது. அதனால் கோபமடைந்த விஞ்ஞானிகளும் அவர்களின் வழித்தோன்றல்களும் வத்திக்கானுக்கு எதிரானோராக மாறி தங்களுக்குள்ளே ஓர் ரகசிய சமூகத்தை உருவாக்கி வத்திக்கானுக்கு எதிராக போராடத்துவங்கிய இயக்கம் தான் இந்த இல்லுமினாட்டிகள் என்று அந்தப் படம் கூறுகிறது. அதில் இல்லுமினாட்டிகள் விஞ்ஞானத்தின் துணைகொண்டு வத்திக்கானை அழிக்க முயல்வதையும் அதனை எவ்வாறு அந்த பேராசிரியர் (Hero) முறியடிக்கிறார் என்பதையும் அந்தப் படம் கூறுகிறது. பாருங்கள்..பார்த்திருப்பீர்கள் என்றும் நம்புகின்றேன்..! தொடர்ந்து எழுதுங்கள்..நானும் கேட்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன்.

  ReplyDelete
 10. இப்படி ஒரு விஷயத்தை இப்பதான் அறிகிறேன், மிக ஆவலுடன் உள்ளேன் தொடருங்கள்.

  ReplyDelete
 11. @ giruba , koodal bala , vel7win , எண்ணங்கள் 13189034291840215795 , chandru2110 & Anonymous ...

  மிக்க நன்றி.... நிச்சயம் தொடர்ந்து பல தகவல்களைத்திரட்டி எழுதுவேன்...
  உங்கள் ஆதரவிற்கு நன்றி... :)

  ReplyDelete
 12. நன்றி...டெனிம் :)
  உங்கள் பதிவு பார்த்தேன் அருமை... இன்னமும் எழுதினீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.. :)

  நன்றி மகரன்...
  நீங்கள் சொன்ன அதே படத்தை.. "கஜன்" ம் சொன்னார்.. பார்த்து விட்டேன்.. எனினும் இதில் நாம் சுயமாக சிந்திக்க வேண்டிய விடையம் இருக்கிறது... நொஸ்டர்டாம்ஸின் ஹிடின் புக் தொடர்பாக மிகப்பெரிதாக சிந்தக்க வேண்டும்... அடுத்த பதிவுகளில் எனது சிந்தனையை எழுதுகிறேன். :)

  நன்றி...Anonymous
  ஆம்... நான் பொதுவாக அப்படி குறிப்பிட்டது தவறுதான்...
  தமது கருத்திற்கு முரணான சுயசிந்தனைவாதிகள் ஆர்ப்பாட்ட காரர்களாக கருதப்படுவார்கள்.. :) மேலதிக தகவகல்களை அடுத்த பதிவுகளில் பார்ப்போம்.. :)

  நன்றி... Thirumurugan MPK
  உங்கள் தகவல்களை எதிர்பார்த்திருக்கின்றேன்.. :)

  ReplyDelete
 13. நான் தேடிகிட்டு இருந்த ஆள் நீதான்யா ....
  என்ன மாதிரி different ah ஜோசிகிரவன்களும் நிறைய பேர் இருகான்கள் ....
  சிறந்த பதிவுகள்...full support தாரம்.

  ReplyDelete
 14. காத்திருக்க முடியவில்லை. தயவு செய்து தொடருங்கள் ஐயா..

  Sheloobeen.

  ReplyDelete
 15. @மகரன் In the movie davinci code, they include Newton @ and Davinci as a illuminaties...

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails