Total Pageviews

Monday, 9 May 2011

"கோ" - பார்ட் 2 & 200* (நொட் அவுட்) :D

இருந்து ஜோசித்த போது தோன்றியது... ஏன் திரைப்படங்களின் அடுத்த பகுதிகளை நாங்கள் சிந்தித்து எழுதக்கூடாதென்று....  அப்போது எழுதியது தான் இது...
படித்துப்பிடிதால் வோட் போடவும்...
படம் பார்காதவர்களுக்கு புரியாது.... இந்த லிங்கில் டொரன்ட்ஸ் மூலம் தரவிறக்கம் செய்து பார்க்கலாம்... :)
------------------------------------------------------------------------------------------
முதல்வரின் மரணத்திற்கு 1 வருடங்களுக்கு பின்னர்...

கட்ச்சியை சேர்ந்த ஒரு நபரால் முதல்வரின் மரணம் மீது சந்தேகம் சுமத்தப்பட்டு கேஸ் ஃபைல் பண்ணப்படுகிறது.
இதற்காக விசேட அதிகாரியாக மிஸ்டர் X  நியமிக்கப்படுகிறார்.
முதல்வர் கொள்ளப்பட்ட பதிவுகளை உண்ணிப்பாக அவதானித்த X  இக்கு... இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.
ஏன் முதல்வர் நேரடியாக திடீரென களத்திற்கு விஜயம் செய்தார்... குண்டு வெடிப்பிற்கு முதல் நடந்த துப்பாக்கிச்சூடு எதற்காக நடந்தது போன்ற கேள்விகள் மனதில் எழுகின்றது.

அடுத்த நாள் விடிந்ததும்...
முதல் வேலையாக முதல்வர் அலுவலகத்திற்கு செல்கிறார்... அங்கு சென்று முதல்வர் இறுதியாக பயண்படுத்திய தொலை பேசி நம்பரை பெற்றுக்கொண்டதுடன்... அவரை கடைசியாக சந்தித்த நபர்களின் பதிவுகளையும் பெற்றுக்கொள்கிறார்.
தகவலை பெற்றுக்கொண்டு வெளியேற முற்படுகையில்... இறுதியாக பதிவுகளை மேற்கொண்ட நபர் குறுக்கிட்டு...
" திடீரென ஒருவர் முதல்வரின் நெருங்கிய நண்பர் என சொல்லி... அத்து மீறி உள் நுழைந்து முதல்வரை சந்தித்தார்... பிறகு, முதல்வர் வெளியே சென்றுவிட்டார்... " என்று ஒரு துப்பை கொடுத்தார்.
உடனே அன்றைய நாளுக்கு உரிய வீடியோப்பதிவை பெற்றுக்கொண்டு தனது அலுவலகத்திற்கு சென்றார்.

வீடியோப்பதிவில் பார்த்து அஸ்வின் (ஜீவா) தொடர்பான தகவல்களைத்திரட்டிக்கொண்டு... அஸ்வின் மீது சந்தேக கண்ணோடு தனது விசாரனைகளை ஆரம்பித்தார்.

பத்திரிகையில் "சிறகுகள்" அமைப்பிற்காக அஸ்வின் தம்பதிகளால் எழுதப்பட்ட கட்டுரைகளை எல்லாம் அலசிஆராய்ந்ததில்... அஸ்வினுக்கும் முதல்வருக்கும் ஏதும் தொடர்பு கட்டாயம் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.
மேலதிகமாக தேடிய தகவல்களின் மூலம்... இருவரும் ஒரே கல்லூரியில் கல்வி கற்றார்கள் என்பது மட்டும் தெளிவாகியது.   அஸ்வின் பிரபல பத்திரிகை படப்பிடிப்பாளர் என்பதால்... நேரடியாக அவரின் மீது நடவடிக்கை எடுத்து விசாரனை செய்ய விரும்பவில்லை மிஸ்டர் X.

நக்ஷ்லைட்டுக்கள் இருக்கும் இடம் முதல்வருக்கு எப்படி தெரிந்தது என்ற சந்தேகமும் ஏற்கனவே மனதில் இருந்தது. காரணம், முதல்வர் சொன்ன குறிப்பிட்ட இடத்திலேயே அந்த சுற்றிவளைப்பு நடந்திருந்தது.
சுற்றி வளைப்பின் போது என்ன நடந்தது என்று அறிந்துகொள்வதற்காக நடைபெற்ற சண்டையின் ஒஃபிஸியல் வீடியோவை பார்வையிட்டார்.
அதில்... அஸிவின் ஒரு டொக்டரை குறிப்பிட்ட நக்ஷலைட்டுக்கள் இருந்த இடத்திற்கு அழைத்து செல்வதை அவதானித்து உசாராகினவராக... அந்த டொக்டரின் படத்தை தனியே எடுத்துக்கொண்டார்.

டொக்டரின் படத்தைக்கொண்டு... சுற்றி வளைப்பு நடந்த ஏரியாவிற்கு சென்று சந்தித்தார்.
விசாரித்ததில்...  அஸ்வின் குறிப்பிட்ட அடிபட்ட ஒரு நக்ஷலைட்டுக்கு மருத்துவம் பார்க்க கூறியதுடன்... மூளையை ஜோசித்து இயங்க விடாமல் இருப்பதற்காக மருந்தையும் ஏற்றச்சொன்னதாக கூறினார்.
இந்த சாட்ச்சியத்தை பதிவு செய்துகொண்டு அங்கிருந்து கிளம்பினார் மிஸ்டர் X.

அடுத்த கட்டமாக... பத்திரிகை நிறுவனத்தின் செயற்பாடுகளை வேவு பார்க்கத்தொடங்கினார்.
முன்னைய பதிவுகளை ஆராய்ந்ததில் சம்பவம் நடந்த அன்று... அஸ்வினின் லவ்வர் நீண்ட நேரமாக ஒஃபிஸில் கடமையில் இருந்துள்ளது உறுதியாகியது. அவர் அச்சமையம் பாவித்த தொலைபேசி அட்டையில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் மேற்கொள்ளப்ப‌ட்ட அழைப்புக்கள் சம்பந்தமான தகவல்கள் திரட்டப்பட்டன.
முதல்வர் இறப்பதற்கு முன்னராக... அஸ்வினிடம் இருந்து 3G அழைப்பு வந்துள்ளது. பின்னர் எடிட்டருக்கு கோல் செய்யப்பட்டுள்ளது...  சுமார் ஒரு மணி நேரத்தில் அவர் பத்திரைகை நிறுவந்த்திறு ஆஜராகி உள்ளார்.
இதற்கு பின்னரே... முதல்வர் கொள்ளப்பட்டுள்ளார்...

இந்த தகவல்களை கட்சிதமாக பெற்றுக்கொண்டு அஸ்வினிடம்  விசாரணைக்காக சென்றார்.
தன்னால் பெற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து தகவல்களையும் காட்டி.... கைத்து செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன... என்ன நடந்தது என்ற உண்மையை  சொல்லுமாறு சற்று காட்ட மாக கூறிக்கொண்டிருக்க‌..
3G கோலில் பதியப்பட்ட வீடியோக்காட்சியை அஸ்வினின் மனைவி கொண்டுவந்து காட்டினார்....
வீடியோவை மிஸ்டர் X  பார்த்துக்கொண்டு இருக்கையிலேயே... ஏன் தாங்கள் இதை மறைத்தோம் என்ற உண்மையை கூறினார்கள்.
காட்ச்சியைப்பார்த்த மிஸ்டர் X...
உங்கள் தொடர்பான தகவல்கள் மேலிடத்திற்கு ஏற்கனவே அனுப்பபட்டு விட்டது...
இந்தக்காட்சியை வெளிவிடுவது தான் நல்லது என்றார். அவர்களும் நிலமையை உணர்ந்து சம்மதிக்க அடுத்த நாள் பத்திரிகை, தொலைக்காட்சிகளில் இந்த வாக்கு மூல நியூஸ் முதலிடம் பிடித்தது.

எதிர்கட்சிகள் ஒன்றினைந்து ஆட்ச்சியை கவிழ்த்தார்கள்...

மீண்டும் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது...
சிறகுகள் அமைப்பும் கழத்தில் தைரியமாக போட்டி இட்டது.

தேர்தல் நாள் அன்று... இறுதி அறிவிப்பு...

"மீண்டும்...  பெரும்பாண்மையுடன் சிறகுகள் கட்சி ஆட்சியைப்பிடித்துள்ளது.... போன முறையை விட அதிக படியான விழுக்காடுகளுடன் வெற்றி பெற்றது... இவை அனைத்தும் அந்த கட்சி உறுப்பினர்கள் கடந்த ஒரு வடுடத்தில் மக்களுக்கு ஆற்றிய சேவைக்கு கிடைத்த வெற்றியாகும்..."
------------------------------------------------------------------------------------------
மிஸ்டர் x  இக்கு பொருத்தமானவர்... மேலும் அவருக்கு உரிய லவ் ஸீன்களை... நீங்களே போட்டுக்கொள்ளுங்க.. 
( நான் ஆர்யாவை செட் பண்ணி இருக்கேன்... :P )
------------------------------------------------------------------------------------------
இது எனது 200 ஆவது பதிவு... என்னைப்பற்றி இதுவரை ஒன்றும் கூறவில்லை.. கூறவும் ஒன்றுமில்லை... வித்தியாசமாக இப்படி படங்களின் பகுதி 2 ஐ இனி மாதம் ஒரு முறையாவது எழுதலாம் என்று ஒரு ஐடியா...
"எந்திரன் 2" சுப்பரா எழுதிற ஐடியா இருக்கு.. :)
------------------------------------------------------------------------------------------

10 comments:

 1. எப்படி சார்.. எப்படி சார்... உங்களால யோசிக்க முடியுது,.... சூப்பர் ....சூப்பர்.....சூப்பர்...... ரொம்ப நல்ல இருக்கு... நீங்கள் முயற்சி செய்தால் கண்டிப்பாக ஒரு துப்பறியும் நாவல் எழுதி வெற்றி பெறுவீர்கள்... கண்டிப்பாக நான் உங்களுடைய ரசிகன் சார்..... நன்றி.... பாலா....

  ReplyDelete
 2. இம்மாதிரி படத்தின் தொடர்ச்சியை மற்றொரு படமாக வெளியிடுவதை சீக்குவல் என்பார்கள். ஆனால் அதற்கு முந்திய நிகழ்ச்சியை மற்றொரு படமாக வெளியிடுவதை ப்ரீக்குவல் என்பார்கள்.
  X-Men க்கு பிறகு "X-Men's Origin Wolverine" வந்ததே..? அது போல... இப்ப நம்ம "தல"அஜித் நடித்து வெளிவர இருக்கும் பில்லா-2 வும் ப்ரீக்குவல் தானாம்.அதாவது "சாதாரண பில்லா" எப்படி "சூப்பர் டான் பில்லா"வாக மாறினார் எண்டுற கதை தானாம் அது..! எங்கேயோ Newspaperல வாசிச்ச ஞாபகம்..அதுசரி...நீங்களும் ஒரு நல்ல காதாசிரியராக வரலாமே..? கட்டாயம் முயற்சி செய்யுங்கள்..!

  ReplyDelete
 3. நன்றி... உங்கள் நண்பன் பாலசந்தர் :)
  அவ்... ஹீ ஹீ.. இதெல்லாம் சும்மா இருந்த ஜோசிக்க தோனும்... :)
  சேர்னு எல்லாம் சொல்லாதைங்கப்பா...
  மிக்க நன்று வாசித்து பின்னூட்டமிட்டதற்கு.. :)
  ----------------------------------------------
  நன்றி...D.Gajen :)

  இந்த் இரண்டு சொற்களும் இன்றுதான் அறிந்துகொண்டேன்... :)
  ஹீ ஹீ... கதாசிரியருக்கு மதிப்பு இல்லாமல் போய்விடும் ஐயா... :P
  இலுமினேடி பற்றி உங்களிடம் தகவல்கள் எதிர்பார்க்கிறேன்... :)

  ReplyDelete
 4. தங்கள் பதிவை இணைக்க புதிய தளம்
  இணையவாசிகள் தங்கள் பதிவை இணைத்து பயன் பெறுங்கள்

  http://tamilthirati.corank.com

  ReplyDelete
 5. .naan thangalin, moolaikku velai tharukiraen..

  .Thala in, Billa 2, prequel eh, neengal Yosichu eluthungal nanbarae....

  .naan kaathukondirukkiraen, thangal padillukkaaga...

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. மிகவும் தரமான பதிவு நண்பரே!!!
  தங்களின் வளமான கற்பனைத்திறனும் அதை வெளிக்கொணரும் விதமும் பிரமாதம்....
  இவ்வாறான பதிவுகள் இன்னும் வேண்டப்படுகின்றன...

  ReplyDelete
 8. உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.
  Share

  ReplyDelete
 9. நன்றி...சண்முககுமார் :)
  இணைக்கின்றோம்... :)

  நன்றி... Anonymous :)
  ஹீ ஹீ ட்ரை பண்றன்... :)

  நன்றி...RAVIKARAN GOKULRAJH :)
  மிக்க நன்றி... உங்கள் பதிவுகளின் தரம் இங்கு கிடைத்திருகாது.. எனினும் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.. :)

  நன்றி.. saro :)
  இணைக்கின்றோம்... கொஞ்சம் வித்தியாசமாக செயுங்கள் ஒரே போன்ற திரட்டிகள் போர்...

  ReplyDelete
 10. என்னுடைய பெயருடன் comment இல் போஸ்ட் பண்ணலாம் என்று நினைக்கிறன் ,...

  இல்லாததில் இருந்து எதையும் எவரும் எடுத்ததில்லை ..இருப்பதில் இருந்து புதியவற்றை எடுக்க தெரிந்தது மிகசிலரே......உங்கள் கோ 2 அனைத்தும் கோ படத்தில் உள்ளவை தான்...

  எடுக்க தெரிந்தது மிகசிலரில் நீங்களும் ஒருவர்
  (புரிந்து கொள்ளவது சிரமம் தங்களுக்கு புரியும்)

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails