உலகத்தில் எத்தனையோ வித்தியாசங்கள் இருந்தாலும்... முக்கியமான வித்தியாசம் ஆண்-பெண் வித்தியாசம்தான்.
( இத தான் கவுண்டர் சொல்லி இருகார்... "உலகத்தில ரெண்டே ரெண்டு ஜாதிதான்.. ஒன்று ஆண்ஜாதி இன்னொன்று பெண்ஜாதி... " என்று.. :P )
உண்மையிலேயே... உடல் அளவிலும், மன உணர்வளவிலும், நடத்தையிலும் பாரிய வித்தியாசங்கள் இருக்கின்றன ஆண்கள் பெண்களிடையே.
இது தெரியாமல்... சில வீடுகளில், ஆண் பிள்ளைகளை பெண் பிள்ளைகளின் உணர்வுகளுடன் ஒப்பிட்டு குறை சொல்வதும்... பெண் பிள்ளைகளை ஆண் பிள்ளைகளின் செயற்திறன்களுடன் ஒப்பிட்டு குறை சொல்வதும் சகஜமாக இருக்கிறது.
இந்தப்பதிவில்... அந்த வித்தியாசங்கள்பற்றி கொஞ்சம் பார்ப்போம்...
------------------------------------------------------------------------------------------
மனித மூளையானது முக்கியமாக வெள்ளைத்திசு (white tissue), சாப்பல் திசு (gray tissue) என இரு வேறுபட்ட பதார்த்ததால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திசுக்களில் ஆண்கள் கிறே திசுக்களை பயண்படுத்தியே அதிகமாக சிந்திக்கிறார்கள்-கருமமாற்றுகிறார்கள். எனினும் பெண்கள் வெள்ளைத்திசுக்களையே அதிகம் பயண்படுத்துகின்றனர். இது தான் அடிப்படையில் இந்த வேறுபாடுகளுக்கு எல்லாம் காரணமாக திகழ்கிறது.
( கிட்டத்தட்ட 6.5 மடங்கு அதிகபடியான கிறே திசுக்களை ஆண்கள் பயண்படுத்துகின்றனர். அதேவேளை பெண்கள் கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகமான வெள்ளைத்திசுக்களை பயண்படுத்துகின்றனர். )
கிறே திசுக்கள், சிந்தித்து செயலாற்றுவதற்கு துணை புரியும் அதேவேளை... வெள்ளைத்திசுக்கள் அவற்றிற்கு இடையிலான தொடர்பாடலுக்கு முக்கியமானதாக திகழ்கிறது.
இந்த வேறுபாடுகளின் அடிப்படையில்...
பெண்கள் சமூகத்தொடர்பாடல்களில் ஆண்களை விட முன்னிலையில் இருப்பார்கள். அவர்களால், இலகுவாக உணர்ச்சிகளை புரிந்துகொள்ள முடிவதுடன்... தாமும் இலகுவாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தி பேசக்கூடியவர்கள். ஆண்களால் இது முடியாது. பேச்சுத்திறன் ஒப்பீட்டளவில் பெண்களை விடக்குறைவு.... பொறுமையாக கேட்கும் தன்மையும் குறைவு.
( இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ளாமல்... தம்மை கணக்கெடுப்பதில்லை, அல்லது பேசுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் ஆண்கள் மீது சுமத்தப்படுகிறது :P )
ஒரு பிரச்சனையை எதிர் நோக்கும் போது... ஆண்கள் உடனடியாக தீர்ப்பதில் வல்லவர்களாக இருபார்கள். பெண்கள் நேரம் எடுத்து தீர்க்க நினைபார்கள்.
காரணம், இந்த சந்தர்ப்பத்தில்... ஆண்கள், இடது பக்க மூளையை அதிகம் பயண்படுத்தி உடன் முடிவுக்கு வந்து விடுவார்கள். பெண்கள் இரு பகுதி மூளையையும் சரி சமமாக பயண்படுத்தி ஜோசிப்பதால் முடிவு லேட் ஆகும்... ஆனால், எமோஷனலானதாக இருக்கும்.
கணிதத்திறனில் ஆண்கள் பெண்களை விட திறமையானவர்களாக இருபார்கள்.
காரணம், கணித சிந்தனைகளுக்கு பொறுப்பான "IPL - inferior-parietal lobule"பகுதி ஆண்களிடம் பெரியது எனவே இடது மூளை பெரியதாக இருக்கும்... இதனால் இலகுவாக கணித ரீதியான தீர்மாணங்களை எடுக்க முடியும்.
இது தான்.. பொறியியல்,கணக்கியல் துறைகளில் பெண்கள் குறைவாக இருக்க காரணம்.
அதே வேளை..
பெண்களின் வலது மூளை பெரியது... அது தான் பெண்களால் உண்னிப்பாக ஒரு விசயத்தை அவதானிக்க (ஆராய ) முடிகிறது. உதாரணமாக, இரவில் பிள்ளை அழுவது பல ஆண்களுக்கு தெரிவதில்லையாம்... பெண்கள் உணர்ந்து கொள்வார்கள்.
( இது தான் சந்தேகம் என்று வந்தால் அலசி ஆராய்வதற்கும் காரணமாக இருக்குமோ... :O :P )
------------------------------------------------------------------------------------------
பதிவு நீண்டு விட்டது...
இன்னும் பல சுவார்ஷ்யமான தகவல்கள் இருக்கின்றன... அடுத்த இறுதிப்பதிவில் முழுமையாக பார்ப்போம். :)
------------------------------------------------------------------------------------------
நன்று நன்று..மொத்தத்தில ஆண்களும் பெண்களும் சமம் என்று முடித்திருக்கிறீர்கள்...!
ReplyDeleteஅப்படியே ஒரு மிமிக்ரி காமெடியை கேட்க வாருங்கள் இங்கே..!
பழகலாம் வாங்க..!
நன்றி உங்கள் மீள் வருகைக்கு.. :)
ReplyDeleteபோய்ப்பார்திட்டம்ல... :D