---------------------------------------------------------------------------------------
இன்டைக்கு நான் உங்களுக்கு கதை சொல்லப்போறேன்... ஒழுங்கா ஃபுல்லா கேக்கனும் ஓ.கே வா?ஓ.கே ... :D
---------------------------------------------------------------------------------------
ஒரு தொப்பி வியாபாரி...
ஊரெல்லாம் தொப்பி வித்திட்டு வந்தார்... நீண்ட நேரமா வெயில் இல்லாத நேரத்தில கூவி...கூவி... தொப்பி வித்ததால கழைப்படைந்துவிட்டார்... இளைப்பாறுவதற்காக ஒரு இடம் தேடினார்... வழமை மாதிரியே வயல் வெளியில தூரத்தில ஒரு பெரீரீரீய மரம்... உடனே இளைப்பாறுவதற்காக அந்த மரத்தை நோக்கி சென்றார்... தூரத்திலிருந்து பார்க்கும் போதே... அந்த மரத்தில கனக்க குரங்கு தாவி... தாவி... விளையாடிட்டு இருக்கிறதை கண்டார்...
ஹீ...ஹீ... இவருக்கு தன்ர தாத்தா சொன்னது நினைவுக்கு வந்துட்டுது... அதை நினைத்து சிரிச்சுக்கொண்டே மரத்தடியை அடைந்தார்.
அங்கு எதுக்கும் அலேர்ட்டா இருக்கனும் என்கிறதுக்காக... தான் கொண்டுவந்த தொப்பி மூட்டைகளை அடுக்கி விட்டு அதுக்கு மேலே ஏறிப்படுத்துக்கொண்டார்.
அதுவரைக்கும் கணக்கெடுகாம இருந்த குரங்குகளுக்கு இப்படி இவர் செய்தது செம கடுப்பு...
உடனே ஒரு குரங்கு எங்கேயோ ஓடிப்போச்சு....
இவர் நல்லா தூங்கிட்டு இருந்தார்... அதுக்குள்ள மனைவிகூட கனவுவேற...
இப்போது... " மாமோய்... நீங்க எங்க இருக்கீங்க.... மாமோய்... நீங்க எங்க இருக்கீங்க...." என்று ஒரு சத்தம்...
"இங்கதான்டி இருக்கன் தங்கம்... நீ எங்கம்மா இருக்க??? " என்றுகிட்டே எழும்பிவயலை நோக்கி போனார்...
எங்க தங்கத்தை காணமே என்று ஜோசிச்சப்பதான்... தான் தொப்பி மூட்டையை விட்டுட்டு வந்தது நினைவுக்கு வந்தது...
திரும்பி பார்க்க கப்ல எல்லா தொப்பிகளையும் குரங்குகள் ஆட்டையை போட்டுட்டுதுகள்...
இவருக்கு அதிர்ச்சி... ஆனால், இது ஏற்கனவே தாத்தாக்கு நடந்த ஸீன்தானே... சோ... தன்ர தொப்பியை கழட்டி குரங்குகளை நோக்கி எறிந்தார்...
உடனே ஒரு குட்டி குரங்கு இறங்கி வந்து... தொப்பியை எடுத்துக்கொண்டு வியாபாரிட தோள்ள பாஞ்சு ஏறி... காதை பிடித்து... "எங்களுக்கும் தாத்தா இருக்கு... :) " என்று சொல்லிட்டு... "பாவமா இருக்கு... இந்த தொப்பியை வச்சுக்கோ..." என்று சொல்லிட்டு...
இறங்கி டீக்கடையை நோக்கி போச்சு... ஏற்கனவே, அங்க ஆட்டையப்போட்ட டெலிஃபோன்னை கொண்டுபோய் வைக்க...
போகும் போது..." மாமோய்... நீங்க எங்க இருக்கிங்க..." என்ற ரிங்டோன் வேற...
---------------------------------------------------------------------------------------
Anonymous : டேய் இந்த கதை ஏற்கனவே வந்துட்டுது... :@
வளாகம் : இன்னொன்று இருக்குங்க ஐயா... :P
---------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------
காட்டுல...
முயலுக்கும் ஆமைக்கும் கேமாகி... முடிவா... ரேஸ்ல ஜெயிக்கிறவன் தான் வெற்றியாளர் என்கிற முடிவுக்கு வந்துதுகள்...
போட்டி ஆரம்பமாச்சு...
போட்டி மத்தியஸ்தர் நெட்டி முறத்தார்...
முயல் பாஞ்சடித்துக்கொண்டு ஓடிச்சு... ஆமையால முடியல மெல்லமா ஊர்ந்து...ஊர்ந்து... போச்சு... மனதுக்குள்ள தன்ர தாத்தா சொன்ன ஃபிலாஸ்பாக்கை நினைத்துக்கொண்டு....
கன நேரமா ஆமையும் நிமிர்ந்து பார்க்கிது... முயல காணவே இல்லை...
நீண்ட நேரத்துக்கு பின்னுக்கு... முயல் மரத்தடில படுத்துக்கிடக்கிற மாதிரி தெரிந்துது ஆமைக்கு...
உடனே... புத்துயிர் வந்த மாதிரி..." இந்த கேன முயல் கூட்டம் இன்னுமா மாறல... " என்று சொல்லிக்கொண்டு மரத்துக்கு கிட்ட வந்திச்சு...
முயலை நைஸா முந்திக்கொண்டு திரும்பி பார்த்தது... முயல், அடக்க முடியாத சிரிப்போட...
"அட கேனயனே... கழுத வயசாகியும்... இதெல்லாம் ஒரு கதைனு மினக்கட்டு வாசிச்சிட்டு இருக்காங்களே... அதை நினைக்கவே எனக்கு சிப்பு சிப்பா வருது.... எப்பிடிடா தூக்கம் வரும்..." :P என்று சொல்லிக்கொண்டே ஓடிப்போய் எல்லையைத்தொட்டு வெற்றி பெற்றது.
ஆமை : பார்த்திங்களா... இந்த முயல்கிட்ட நான் உங்களாலதான் தோத்தேன்... எனக்காக ஒரு வோட்டு போட்டுட்டு போங்க... என்ன... :D
---------------------------------------------------------------------------------------
ஏன்னா வில்லத்தனம்...
ReplyDeleteஹி...ஹி...ஹி...நீங்க சினிமாவுல கதை எழுதப் போகலாம்...
ReplyDeleteகொஞ்சம் ஆன்மீகமா தின்க் பண்ணனும்னா இந்த வலைப்பூவுக்கு சென்று பாருங்கள்...
உங்கள் வலைப்பூவிலேயே தமிழ் தட்டச்சு செய்ய இந்த Gadget ஐ இணைத்துக் கொள்ளுங்கள்...
நன்றி...Mohamed Faaique
ReplyDeleteவிடுங்கப்பா... நா அப்டி இப்டித்தான் இருக்கும்...
------------------------------------------
நன்றி... நன்றி... நன்றி... D.Gajen,,,
உங்கள் உதவிக்கு மிக்க நன்றி...
பார்தேன் 2ம் சுப்பர் லிங்ஸ்...
ஹீ...ஹீ... இப்பவே கேவலமான கதைய எல்லாம் படமாக்குறாங்கள்... நான் வந்து இன்னமும் நாத்தனுமா....
(இது உங்கட ஐடியாதானே... :) )