Total Pageviews

Friday, 18 March 2011

பனி மனிதன்... - வீடியோ - (02) :)

------------------------------------------------------------------------------------------
பனிமனிதன் தொடர்பான இரண்டாவது இடுகை இது...
முதல் பதிவில் குறிப்பிட்டபடி "பனி மனிதன்" என்பது வெறும் கட்டுக்கதை இல்லை... உண்மைதான் என்பதற்கு சான்றாக அமைந்த சம்பவத்தை இன்று எழுதவுள்ளேன். ( முதல் பதிவை இங்கு வாசிக்கலாம்.. :) )
------------------------------------------------------------------------------------------
றொஜர் பீட்டர்ஷன்... ஹொலிவூட் சினிமாவில் பிரசித்தமான சினிமா தயாரிப்பாள‌ர்...
1967 ம் ஆண்டு...அவரின் நண்பருடன் படங்களுக்கான லொக்கேஷன்களை தெரிவு செய்யும் நோக்குடன், கமெரா சகிதம் பல இடங்களுக்கு சென்று வீடியோ எடுத்தார்கள்.
ஒரு காடு சார்ந்த பள்ளத்தாக்கினருகில் வந்த போது... இவர்கள் பயணித்த குதிரை திடீரென திமிறியதால் தடுக்கி விழுந்துவிட்டார்கள்.
எழும்ப்பி பார்த்தவர்களிக்கு ஆச்சரியம்... குறிப்பிட்ட தூர இடைவெளியில் சுமார் 7 அடிக்கும் மேலான உயரமுடைய ஒரு உருவம் காட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தது. உடனே, தனது கமெராவின் உதவியுடன் அந்த உருவத்தை ஃபிலிம் ரோல் தீரும்வரை எடுத்துக்கொண்டார்.

இது தான் அவரால் எடுக்கப்பட்ட வீடியோ...


எனினும், அவரின் அந்த வீடியோ, பலரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை...
காரணம், குறிப்பிட்ட அந்த கால கட்டத்தில் "கொட்சில்லா" போன்ற திரைப்படங்கள் வந்திருந்ததால் ; இது ஒரு குறிப்பிட்ட நபருக்கு வேடமிட்டு திட்ட மிட்டு எடுக்கப்பட்ட காட்சியாகவே இருக்க வேண்டும் என்ற வாதம் வலுவாக இருந்ததால்... அவரின் அந்த வீடியோ சமாச்சாரம் அமுங்கிப்போனது.
------------------------------------------------------------------------------------------
1990 களில், மைக்ரோசொஃப்ட் கொம்பனி பல புதிய மென்பொருட்டளை பாவணைக்கு விட்டது... அந்த தருண‌த்தில்... குறிப்பிட்ட வீடுயோவை ஆராயந்தார்கள்... மொத்தமாக 952 பிரேம்கள் கொண்டதாக அமைந்தது அந்த வீடியோப்பதிவு.
ஒவ்வொரு பிராமாக ஆராந்த விஞ்ஞானிகள் அது மனித அசைவு அல்ல...கொரில்லாவினதும் அல்ல.. இதுவரை இனங்கானப்படாத ஒருவகை புதிய உயிரினமாகவே இருக்க வேண்டும் என உறுதியாக கூறினார்கள்.

அவர்கள் அப்படி கூறியதன் காரணம்...

சாதாரணமாக... ஒவ்வொரு விலங்கினதும் தசை நார்கள் , எலும்புக்கூட்டு அமைப்புக்கள் என்பன வித்தியாசமானவை... அதனால், எந்த ஒரு விலங்கும் இன்னொரு விலங்கின் அசைவுடன் ஒத்துப்போவதில்லை...
உதாரணமாக... மனித உடலுடன் மிக நெருக்கமான தொடர்புகளைக்கொண்ட கொரில்லா-சிம்பன்சிகளின் அசைவுகளுக்கும் மனித அசைவுகளுக்கும் பாரிய வேறுபாடு உள்ளது.
இதனடிப்படையில் குறிப்பிட்ட அந்த வீடியோவை ஆராய்கையில்... அந்த உருவின் அசைவுகள் மனிதனுடனோ அறியப்பட்ட விலங்குகளுடனோ ஒத்துப்போகவில்லை.
எனவே அது ஒரு அறியப்படாத விலங்குதான் என்பதை அடித்துக்கூறினார்கள்.

மேலும், அந்த வீடியோவில் பதிவாகி இருப்பது 7 அடி 4 அங்குளமும் 225 கிலோ கிறாம் நிறையும் கொண்ட ஒரு பெண் விலங்கு என்பதும்.. முன் புறமாக அது தனது குட்டியை காவிச்சென்றுள்ளது என்பதும் அறியப்பட்டது.
அவற்றின் தசை அமைப்புக்கள் கூட பின்னர் செயற்கையாக 3டி மொடலில் உருவாக்கப்பட்டதாம்...
இன்னொரு முறை இப்படியான வீடியோக்கள் வந்தால் ஒப்பிட்டு பார்ப்பதற்காக.

எனினும் பின்னர், இதுவரை அவ்வாறான எந்த வீடியோ பதிவுகளும் வந்திருக்கவில்லை... வந்தவை அனைத்தும் பித்தலாட்டங்கள் தான்.
------------------------------------------------------------------------------------------
அப்படியானால்...  இவர்கள் யார்? எவ்வாறு இந்த விலங்கினங்கள் உருவாகின??  உருவாவது சாத்தியம் தானா??? ஏன் மறைந்து வாழ்கின்றன???? போன்ற கேள்விகளுக்கு அடுத்து வரும் இறுதிப்பதிவில் விடை தர முயற்சிக்கின்றேன்.
இந்த விலங்கினம் சம்பந்தமான வித்தியாசமான சிந்தனை கருத்துக்கள் உள்ளவர்கள்... கொமென்டில் கூறவும்.
------------------------------------------------------------------------------------------
பயணுள்ள பதிவு என்றால்... வோட் போடுங்க... இல்லை என்றால்.. கொமென்டில் தவறுகளை சுட்டிக்காட்டவும்.. :)
------------------------------------------------------------------------------------------

7 comments:

 1. நிறைய காலம் கழித்து ஒரு பதிவு :)
  சுவாரசியமான தகவல் ..திரும்பி லுக்கு வேற விட்டு போகுது ... உயிரோடை விட்டிச்சா இவரை !! மிச்சமும் எழுது அப்புறம் டவுட்டு கேக்கிறன் ..:D

  ஒட்டு போடுறதுக்கு இணைக்கலையா !!!

  ReplyDelete
 2. நன்றாக உள்ளது உங்கள் கட்டுரை

  ReplyDelete
 3. நன்றி... S.Sudharshan :)
  ஹீ ஹீ... றொம்ப பிஸி இல்ல அதான்.. lol
  அடுத்த பதிவிலயே இதை முடிச்சிடனும்... பிறகு கேளு.. :)
  காலைல தான் நாங்கள் இணைப்பம்.. :P
  --------------------------------------------
  Tnx jothi.. :)
  --------------------------------------------
  நன்றி.. reyman :)

  ReplyDelete
 4. viyappaga ulladhu
  adutha padhivirku kaathu kondu irukkiren

  ReplyDelete
 5. Tnx... Anonymous :)
  Poodudeen Pathivu... :)

  ReplyDelete
 6. அருமையான வீடியோ. சீக்கிரம் பனிமனிதன் இருந்ததுக்கான ஆதாரம் கிடைக்கும் என்று நம்புகிறேன்

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails