Total Pageviews

Sunday, 20 March 2011

சொந்தமாக ஒரு ஐஃபோன் அப்லிகேஷன்... :) -டியூட்டோரியல்

--------------------------------------------------------------------------------------------
ஐ ஃபோனில் (iPhone)... இலவசமாகவும் சிறு கட்டணம் செலுத்தியும் பல அப்லிகேஷன்களை (Apple apps ) பாவிக்கின்றோம்...
பலருக்கு நாமாகவே அவ்வாறான ஒரு அப்லிகேஷனை எமக்கென செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
எனக்கும் இருந்தது...
நான் அதிகமாக பயண்படுத்தும் ஃபிலாஸ் (Adobe flash ) மென்பொருளிலேயே... இதை செய்யக்கூடியதாக இருக்கிறது...
எவ்வாறு செய்வது என்பதை இனிப்பார்ப்போம்...
--------------------------------------------------------------------------------------------
முதலில்...
நீங்கள் ஃப்லாஸிக்கு பயண்படுத்தப் போகும் அனைத்து ஃபைல்களையும் ஒரே ஃபோல்டரில் ( Folder) போட்டுக்கொள்ளவும்.
முக்கியமாக இந்த மென் பொருளை (Fake cert) தரவிறக்கம் செய்து... அதே ஃபோல்டரில் போட்டு "அன் ஹிப் ( UnZip)" பண்ணவும்.




அடுத்து ஃபிலாஸை இயக்கவும்... ( நான் Adobe flash CS5 பயண்படுத்தி இருகிறேன்.. )
வேர்க் ஏரியாவை திறக்கும் போது... iPhone OS என்பதை தெரிவு செய்யவும்.
( Create new -> iPhone OS )











இப்போது.. உங்களுக்கு தேவையான அனிமேஷனை உருவாக்கி கொள்ளவும்...
அனிமேஷன் உருவாக்கிய பின்னர்...
File போய் iPhone OS Settings ஐ கிளிக் பண்ணவும்..















அடுத்து ஐ ஃபோன் செட்டிங் மெனு ( iPhone settings ) திறக்கும்...
முதலில் Deployment  ஐ கிளிக் பண்ணி விட்டு..
அதில் Certificate என்பதற்கு பக்கத்தில் உள்ள Browse ஐ கிளிக் பண்ணவும்...
அடுத்து நாங்கள் ஏற்கனவே டவுண்லோட் பண்ணி அன்ஷிப் பண்ணிய ஃபோல்டருக்கு போகவும்...
அங்கு, *.p12 என்ற file மட்டும் காட்டப்படும்... அதை தெரிவு செய்து open பண்ணவும்.
அடுத்து... Password இக்கு ஒன்றைக்கொடுத்து விட்டு.. "Remember password for this session" இக்கு டிக் பண்ணவும். ( படத்தில் காட்டப்படவாறு. )



Provisioning profile என்பதற்கு பக்கத்தில் உள்ள Browse ஐ கிளிக் பண்ணவும்...
அடுத்து நாங்கள் ஏற்கனவே டவுண்லோட் பண்ணி அன்ஷிப் பண்ணிய ஃபோல்டருக்கு போகவும்...
அங்கு ஒரு file மட்டும் காட்டப்படும்... அதை தெரிவு செய்து open பண்ணவும்.

iPhone deployment type இல் உங்களுக்கு தேவையான Type ஐ தெரிவு செய்து கொள்ளவும்...


அடுத்து General  என்ற பகுதியை கிளிக் பண்ணி சேவ் பண்ண வேண்டிய இடத்தை தெரிவு செய்யவும்... அதே ஃபோல்டரில்...


பின்னர்.. Publish ஐ கிளிக் பண்ணவும்.

சிறுது நேரத்தின் பின்னர்... உங்களது அப்லிகேஷன் தயாராகிவிடும்.



அடுத்து அதை ஐ டியூனின் உதவியுடன் உங்கள் ஃபோனுக்கு போட வேண்டியதுதான்... :)

நேரடியாக ஏற்ற நினைப்பவர்கள் ஜெயில் பிறேக் பண்ணி இருப்பது அவசியம். :)


--------------------------------------------------------------------------------------------

பயணுள்ள தகவல் என்றால் வோட் போடவும்...
அல்லது.. தெளிவில்லை என்றால் கொமென்டில் கேட்கவும்.. :)

--------------------------------------------------------------------------------------------

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected