ADOBE FLASH ரியூட்டோரியல் - 03
---------------------------------------------------------------------------------------------------------மூளையும் அதிசய சக்திகளும் 03 க்கு வாசகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தமையையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். (ஆனால், எவருமே அந்த இறுதியாகவுள்ள சவாலை வென்றதாக தெரியவில்லை!)
இன்று இன்னொரு முக்கியமான Flash ரியூட்டோரியலை பார்க்கவுள்ளோம்.....
---------------------------------------------------------------------------------------------------------
உருவங்களை மறையவைத்தல் (ALPHA)
------------------------------------------------------------------------------------------------------உருவங்களை அசைப்பது போன்றே, உருவங்களை மறையவைக்கும் செயன்முறையின் ஆரம்ப படிகளும் அமைவதால் அதனை விரிவாக பார்க்காமல் அதில் செய்யவேண்டிய மாற்றங்கள் மட்டும் தரப்பட்டுள்ளன.
செய்முறை-3
3 வது செய்முறையில், 10 ஆவது Frame ஐ select செய்துவிட்டு stage இல் உள்ள வட்டத்தினை Select செய்யவும். அடுத்து F8 அழுத்தி வரும் Menu Box ல் Type பகுதியில் Graphic ல் Click செய்து Ok பண்னவும். (F8 -> Graphic -> Ok)
( இச்செய்முறைக்கு வேறு பல வழிமுறைகளும் உள்ளது.)
செய்முறை-4
அதேவேளை Color எனும் பகுதியும் காணப்படும். அதற்கு முன்னால் உள்ள None என்பதை Click செய்து வரும் Scroll Box ல் உள்ள Alpha என்பதை Click செய்யவும்.
இப்போது அதன் அருகில் ஒரு box ல் 0 அல்லது 100 என குறிக்கப்பட்டு இருக்கும்.
இப்போது தேவையான அனைத்து செயற்பாடுகளும் முடிவுற்றுவிட்டது. Ctrl + Enter
மூலமாக சோதித்து பார்க்கவும்.
0 இருந்து பெறுமதி கூட கூட மறையும் தன்மை குறைவதை காணமுடியும். அவ் எண் பெறுமதிதான் மறையும் தன்மையை தீர்மானிக்கிறது.
---------------------------------------------------------------------------------------------------------
இயன்றவரை விளக்கியுள்ளேன். எதாவது சந்தேகங்கள் எழுந்தால் தொடர்புகொள்ளவும்.
இப்போது...
இவ் 3 ரியூட்டோரியல்களையும் கொண்டு நீங்கள் முக்கியமான சில அனிமேஷன்களை செய்யலாம். முயற்சித்து பாருங்கள்.
0 comments:
Post a Comment