Total Pageviews

Saturday, 28 November 2009

மூளையும் அதிசய சக்திகளும் 04

ஆராச்சி முடிவுகளும், ரெலிபதியும்.
----------------------------------------------------------------------------------------
முன்னைய பகுதிக்கு வாசகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தமையை இட்டு மனம் மகிழ்கிறேன்!
சரி பதிவுக்குள் நுழைவோம்...
----------------------------------------------------------------------------------------

1996,97 ம் ஆண்டளவில் மூளையின் வலது பக்கத்திற்கும் இடது பக்கத்திற்கும் நடுவில் ஒரு சுரப்பி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், நரம்பியல் நிபுணர்களாளோ, விஞ்ஞானிகளாளோ அது ஏன் இருக்கிறது? அதன் தொழில் என்ன? என இன்றுவரை சரியாக இனங்கான முடியவில்லை. (இவ்வளவு தொழில் நுட்பம் இருந்தும் என்ன பயன்...? )
ஆனால், சில ஆராச்சியாளர்கள் "அது தான் இப்படிப்பட்ட  சாதாரன மனித சக்திக்கு அப்பாற்பட்ட சில விசித்திரமான சக்திகளை (இஸ்பி) தோற்றுவிக்க காரணமாக இருக்கும்" என் சந்தேகம் கொண்டனர்.  அவர்களில் ஒரு ஆராச்சியாளர் அதனை நிரூபிப்பதற்காண வழிமுறை ஒன்றை முன்வைத்து செயற்படுத்தி காட்டினார்.


அவர் தனது ஆராச்சிக்கு தேர்ந்தெடுத்தது, மனிதனை ஒத்த உடல் உட்கட்டமைப்புடைய மிருகமான எலியை. (என்னென்று மனிதனை போன்ற உடல் உட்கட்டமைப்பை எலி பெற்றிருக்கும்...? ஜோசித்துப்பாருங்கள் ... புராணங்களில் விநாயகரின் வாகனமாக எலி வர்க்கத்தை சேர்ந்த மூஞ்சூறு குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவ் மூஞ்சூறு ஒரு மனித உருக்கொண்ட‌ அசுரனான தாரகாசூரனின் மறு உருவம் என இந்துக்களின் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதற்காக அசுரனின் உருவம்தான் எலி! இந்து மதம் கூறிவிட்டது! என நான் கூறவரவில்லை, மாறாக எமது முன்னோர்கள் எதோ ஒரு வகையில் எலிக்கும், மனிதனுக்கும் இடையிலான தொடர்பை அறிந்துள்ளனர்.  ஆனால், ஏன் அவர்கள் அதை நேரடியாக கூறவில்லை? அது... பிறகு...)

அதாவது, அவர் தனது ஆராச்சிக்காக 12 எலிகளை தேர்ந்தெடுத்தார், அவற்றில் 6 எலிகளின் மூளையிலும் குறிப்பிட்ட அவ் சுரப்பியை தூண்டிவிடக்கூடிய வகையில் மின்னதிர்வுகளை ஏற்படுத்தத்தக்க ஒரு கம்பியை அச்சுரப்பியினுள் செலுத்தினார். மற்ற 6 எலிகளும் சாதாரனமாக விடப்பட்டன. பின்னர், அனைத்து எலிகளும் ஒரு கூட்டினுள் விடப்பட்டு சில பகுதிகளினூடு எலிகள் செல்லும் போது அக் கம்பி மின்னதிர்வை பெறத்தக்க வகையில்  ஒழுங்குபடுத்தப்பட்டது.

ஒரு சில நிமிடங்களின் பின்னர் அவ‌தானிக்கும் போது....

கம்பிகள் பொருத்தப்பட்ட எலிகள் மாத்திரம், மீண்டும் மீண்டும் மின்னதிர்வை ஏற்படுத்ததக்க பகுதியினூடாக 24 மணி நேரமும் ஓய்வின்றி சென்று வந்தன‌. மற்றவை சாதாரணமாக அனைத்து பகுதிகளிலும் உலாவின.

இதிலிருந்து, மூளையில் அச் சுரப்பி தூண்டிவிடப்பட்ட எலிகள் ஏதோ ஒரு வகையான விபரிக்கமுடியாத உணர்வை பெற்றிருக்கின்றன. என்பதை ஊகிக்க முடிகிறது.


எனவே, மனித மூளையிலுள்ள அப் பகுதி இன்னமும் பாவிக்கப்பட முடியாத நிலையில் அல்லது இயங்க முடியாத நிலையில் இருக்கிறது என்பது மட்டும் தெளிவாகிறது. சிலருக்கு ஏதொ ஒரு வகையில் அச்சுரப்பி குறிப்பிட்ட சமயங்களில் தனது சக்தியில் ஒரு சிறு பகுதியை வெளிப்படுத்துகிறது. அவர்களாலேயே சில விசித்திரமான எதிர்வு கூறல்களை கூறமுடிகிறது, காணமுடிகிறது.

இது ஒரு விபத்தினால் ஏற்பட்ட அதிசயம்...


ஜோன் ரைட் ஒரு ஃப்ரான்ஸ் நாட்டு சைக்கிள் பந்தயவீரர். சில காரணங்களுக்காக அவர் அமெரிக்காவில் ஒரு வருடம் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அங்கு, ரைட் ஆங்கிலம் தெரியாததால் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கவேண்டி ஏற்பட்டது. எனவே, அவர் ஆங்கிலம் கற்று வந்தார்.

ஒரு முறை சைக்கிள் பந்தயமொன்றில் கடுமையான விபத்தொன்று நேர்ந்து ரைட்டின் தலையின் பின் பகுதியில் பலத்த அடி ஏற்பட்டது.

குணமடந்த பின்னர், சுமார் 6 மாத காலப்பகுதிக்கு ரைட்டால் சாராலமாக ஆங்கிலம் பேசமுடிந்தது!!!! பின்னர் மறந்துவிட்டது!!!!

விபத்தின் போது ரைட்டின் மூளையிலுள்ள சுரப்பி தூண்டப்பட்டிருக்கலாம். பின்னர், எவ்வாறு மறைந்தது என்பது புதிராகவேயுள்ளது...
 
இது அவுஸ்ரேலியாவில் நடந்த ஒரு வித்தியாசமான சம்பவம்...


வழமை போன்று ஒரு நாள் ஜோஸி தனது மகள் மேரியை பாடசாலைக்கு அனுப்புவதற்கு தயாராகிக்கொண்டிருந்தாள். சாதாரண‌மாக அடம்பிடிக்காமல் பாடசாலைக்குச்செல்லும் மேரி வழமைக்கு மாறாக அன்று "போக மாட்டேன்!" என கடுமையாக அடம்பிடித்தாள். தாய் ஜோஸி அவளை சமாதானப்படுத்தி பாடசாலைக்கு அனுப்பிவைத்தாள். மேரி வேண்டா வெறுப்பாக‌ பாடசாலைக்கு சென்றுகொண்டிருக்கும் போது; திடீரென, அவளின் கண்களின் முன்னே தாய் ஜோஸி சமையலறையில் நெஞ்சைப்பிடித்துக்கொண்டு விழுந்து துடிப்பது போன்ற காட்சி தோன்றியது. அவள் சுதாகரித்து கொள்ளமுதல் அக்காட்சி நீங்கிவிட்டது. இத்தனையும் 1 நிமிட இடைவெளியினுள் நடந்து முடிந்து விட்டது. உடனே மேரி புத்திசாளித்தன‌மாக தனது வீட்டுக்கு அருகாமையில் இருந்த ஒரு உறவுக்கார  டொக்டரை அழைத்துக்கொண்டு விரைவாக வீட்டுக்கு சென்றாள். என்ன ஆச்சரியம்! தாய் ஜோஸி தரையில் நெஞ்சை பிடித்தவாறு விழுந்திருந்தாள். .... அவள் கண்ட அதே காட்சி......
உடனே டொக்டர் விரைந்து செயற்பட்டு ஜோஸியை "மைனர் ஹார்ட் அற்ராக்" இலிருந்து காப்பாற்றினார்...


திடீரென மேரிக்கு அக் காட்சிகள் தோன்ற காரணம் என்ன...?

சுகமடைந்த தாய் ஜோஸியை கேட்டபோது,  நெஞ்சுவலி ஏற்பட்ட அக்கணத்தில் தன்னருகே" ஜோஸி வரமாட்டாளா?" என மனம் ஏங்கியதாக கூறியுள்ளார். எனவே, இங்கு ஜோஸிக்கும் மேரிக்கும் இருந்த அந்த ஆழ்மனத்தொடர்புதான் அவ‌ளின் முன் அவ்வாறான ஒரு உருவெளித்தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என ஊகிக்கலாம். ஆனால், முதலே வ‌ழமைக்கு மாறாக மேரி பாடசாலைக்கு போக அடம்பிடித்ததேன்...?

எதிர்காலம் பற்றி அறிபவர்களாள் அதைமாற்றியமைக்க முடியுமா...?  
----------------------------------------------------------------------------------------
நேற்றைய பதிவு சில காரணங்களால் இடம்பெறாமையால். இப் பதிவு சற்று பெரிதாக இடம்பெற்றுள்ளது.
----------------------------------------------------------------------------------------
தொடரும்...

----இனி--- எமது ESPஐ சோதிக்க வேண்டாமா? சில சம்பவ‌ங்கள்.

1 comment:

LinkWithin

Related Posts with Thumbnails