Total Pageviews

Friday, 20 November 2009

கனவும் நனவும்(விஞ்ஞானத்தினூடான ஓர் பயணம்) -03
கனவும் நனவும்(விஞ்ஞானத்தினூடான ஓர் பயணம்)
-----------------------------------------------------------------------------------------

கனவுகளை வைத்து எதிர்வு கூறுபவர்களும் இருக்குறார்கள். அந்த வகையில் "ஜோசப் லூடில்" ஒரு முக்கிய பிரபலம்.

16 ஜனவரி 1969 அன்று ஜோஷப் ஒரு ஹோட்டல் பாருக்கு சென்றார்...
-----------------------------------------------------------------------------------------
அங்கிருந்த‌ வெயிர்ர‌ரிட‌ம் "பேப்ப‌ர் கொடுப்பா... ரெயில் விப‌த்தைப்ப‌ற்றி என்ன‌ போட்டிருக்கான் என்று பார்க்க‌னும்" என்றார். வெயிர்ர‌ருக்கு ஒரே குழ‌ப்ப‌ம்,"அப்பிடி ஒன்றும் பேப்ப‌ரில் வ‌ர‌ல‌யே..., என்ன‌ விப‌த்து? எங்கே ந‌ட‌ந்த‌து?" என வினாவினார்.(சுற்றுப்புற‌த்த‌வ‌ரும் ஜோஷ்ப்பை வித்தியாச‌மாக,ஆச்சரியமாக‌ பார்த்தார்க‌ள்)
"இங்கிருந்து தெற்காப்ல‌... ரெண்டு ர‌யில் ப‌னிமூட்டத்தில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கிச்சு... நிறைய‌ப்பேர் செத்துப்போனாங்க‌ப்பா... பேப்ப‌ரில் வ‌ர‌ல‌யா?..." என்றார் ஜோஷப்.

அனைவ‌ருக்கும் குழ‌ப்ப‌ம். இவ‌ன் என்ன‌ சொல்லுறான் போதையில் புலம்புறான் என்றால் அதுவும் இல்லை, இப்ப‌தான் பாருக்கே வந்திருக்கான். தெளிவாவேற‌ பேசுறான்.என்ற‌வாரே ரெடியோவை போட்டார்க‌ள். அப்போது நேர‌ம் ராத்திரி 11 ம‌ணி... விப‌த்தைப்பற்றி எந்த‌ த‌க‌வ‌லும் இல்லை. இர‌ண்டு மணி நேர‌ம் க‌ழிந்த‌து... "ஒரு ம‌ணிக்கு சிக்காகோவுக்கு தெற்கே இர‌ண்டு ரெயில்க‌ள் மோதிக்கொண்ட‌ன‌ 47 படுகாய‌ம், மூன்றுபேர் ச‌ம்ப‌வ இட‌த்திலேயே இற‌ந்தார்கள்!." ரேடியோ ஒலித்த‌து!!!

யார் இந்த ஜோஷப்...
ஒரு சாதாரன முடிதிருத்தும் கலைஞர், எட்டாவதுக்கு மேல படித்ததில்லை. ரிவியிலும், பத்திரிகையிலும் எதிர்வரப்போவதைப்பற்றி நிறையபேசினார். பல பலித்தன.

ஜோஷ்ப்பின் சில சாகாஷ‌ங்களை பார்க்கலாம்......

1967 நவம்பர் 25ம் திகதி "ஒரு பாலம் இடிந்து விழும்" என்றார். 3 வாரம் கழிந்து டிசம்பர் 16 அன்று ஒஹாயோ நதியின் குறுக்கே உள்ள வெள்ளிப்பாலம் இடிந்து விழுந்தது 36 இறந்தார்கள்.

1968 ஜனவரி 8..." நாட்டில் கலவரம் வரும்" என்றார். ஏப்ரல் 16 ல் சிகாகோவில் பெரிய கலவரம் வெடித்தது. 5000 மையப்படையினர் குவிக்கப்பட்டனர்.


டிசம்பர் 15, 1965 "கென்னடி குடும்பத்திற்கு நீர் மூலம் கண்டம் வரும்" என்றார் "ஓர் பெண் நீரில் மூழ்குவதை பார்த்தேன்" என்றார். ஜீலை 18, 1969 மெரிஜோ என்ற பெண் எட்வர்ட் கென்னடியுடன் பயனிக்கும்போது நீரில் மூழ்கி மரனமானார். இச் சம்பவம் கென்னடியின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளிவைத்தது.

காணும் இந்த ஜோஷ்ப்புராணம்! அவரின் எதிர்வு கூறல்களை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தால் எப்ப மற்ற விடையங்களை பார்ப்பது.

(ஜோஷப் எவ்வாறு இப்படிப்பட்ட எதிர்வு கூறத்தக்க கனவுகளை கண்டார் என்பது இன்னும் வியப்பாகவே உள்ளது. நீங்களும் இவ்வாறான கனவுகளை கண்டிருப்பின் எம்முடன் பகிர்ந்து கொள்ளலாம்.)

இவ்வாறு முற்றிலும் மாறுபட்ட கனவுகள் காணப்படுவதனால், ஆராச்சியாளர்களால் ஒரு தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை. ஆராச்சியாளர்களின் கருத்துப்படி...

1) கனவு என்பது நாம் ஆசைப்படும், ஆனால் பொளதீகரீதியாக எம்மால் நிறைவேற்ற முடியாதவற்றை       நிறை வேற்றுவது போன்ற ஒரு திருப்தியை ஏற்படுத்துவதற்காக மூலையால் ஏற்படுத்தப்படும் ஒரு செயற்பாடு என்கிறார்கள்.

2) நாம் தூங்கும் போது எமது ஆத்மாவானது சுயாதீனமாக எமது உடலை விட்டு வெளியேறும் தன்மை கொண்டது, அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆத்மா எப்பரிமானத்திற்கும் உட்பட்டு செயலாற்றாது.( நீளம்,அகலம்,உயரம்....,காலம்?!) ஆத்மா அவ்வாறு உலாவும் போது அது சந்திக்கும் உலகம் தான் எமக்கு கனவாக தோன்றுகிறது என்கிறார்கள்.

3) உங்களின் கனவு அனுபவ்ங்கள் மூலமாக அறிய நினைக்கிறேன்......

இங்கு நான் கனவைப்பற்றி எழுதிக்கொண்டிருப்பினும் குறிப்பிடப்படும் சம்பவங்கள் சில "டெலிபதி" எனும் ஆழ்மனதொடர்பு முறையுடன் சம்மத்தப்பட்டுள்ளது. எனவே இனிவரும் பதிவுகளை "மூலையின் அமானுஷ்யங்கள்" எனும் தலைப்பில் தர என்னியுள்ளேன். எனது தவறுக்கு மன்னிக்கவும்.
(வாசகர் ஒருவர் "பேய்கள் பற்றி எதாவது வித்தியாசமா இருக்கா?" என கேட்டிருந்தார். நிச்சயமாக அவை சம்பந்தமான தகவல்களை விஞ்ஞான ரீதியாக எதிர் வரும் பகுதிகளில் ஆராயவுள்ளேன்)

------------------------முற்றும்(தற்காலிகமான‌து)----------------------------


---இனி---
பேய்களும் மர்மங்களும் 
முற்று முழுதாக ஒரு வித்தியாசமான கண்ணோட்டம்

2 comments:

 1. நண்பர்கள் கவனத்திற்கு

  தமிழர்ஸ் தளத்தில் உங்கள் பதிவை இணைக்கலாம் வாங்க....

  ஆங்கிலம் | தமிழ் | SEO Submit
  காணொளி தேடல் | வலைப்பூக்கள்

  ReplyDelete
 2. நன்றி! நான் தொடர்புகொண்டேன்.

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails