----------------------------------------------------------------------------------------
நான் ஆரம்பிக்கவிருக்கும் இவ் ஆய்வுக்கட்டுரைத்தொடரானது, என்னால் முழுவதுமாக ஆராயப்பட்டு எழுதப்படுவதல்ல. ஆனால் விஞ்ஞானரீதியாக ஆராயப்பட்டு எழுதப்பட்ட கட்டுரைகளை வாசித்ததன் மூலமாக எழுதப்படுகின்றது. கனவுகள் பற்றி நான் வாசித்த அனைத்து தகவல்களும் எனக்கு நினைவிருப்பதற்கு நான் ஒன்றும் அவளவு ஞாபகசக்தி கொண்டவனல்ல.பலரைப்போன்ற ஓர் சாமானியன். அதனால் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட சம்பவங்களில் சம்பவம் தொடர்பானவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படாமல் இருக்கும்.இவ் வரவிருக்கும் ஆய்வுத்தொடரில் சில சில குறைகள் காணப்படக்கூடும். ஆனால் இவை அனைத்தையும்தான்டி மிகவும் சுவாரக்ஷ்யமாகவும் உண்மைத்தன்மையுடனும் தொடர் பயணிக்கும் என்பதில் ஐயமில்லை.
----------------------------------------------------------------------------------------
இவுளகில் கனவுகானாத மனிதர்கள் இருக்கமுடியாது. "இல்லை நாம் கனவேகாண்பதில்லையே!எப்படி இவ்வாறு கூறமுடியும்? நாமெல்லாம் இவ்வுளகில் வசிக்கவில்லையா?" எனக்கேட்பவர்களும் இருப்பார்கள் இவர்களுக்கு நான் கூற விரும்புவது என்னவனால், சில நாட்களில் காலையில் ஒரு கனவைக்கண்டு திடீர் என எழும்போது நாம் கனவில் கண்டகாட்சிகள் நினைவுக்குவருவதில்லை. அவ்வாறன ஓர் நிலைப்பாடு வழ்க்கை முழுவதும் தொடரும் போதே "நான் கனவேகாண்பதில்லை" என கூறக்கூடியனிலை ஏற்படுகிறது. (ஞாபக சக்தியை கூட்டிக்கொள்ளத்தக்க பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் இவர்களும் கனவுகானலாம்)
எமது பண்டய புராணக்கதைகளில்கூட கனவுகளைப்பற்றிய கதைகளை/சம்பவங்களை காணக்கூடியதாக இருக்கும். (கடவுள் கனவில் வந்து சொன்னவுடன் மறுனால் சம்பந்தப்பட்ட நபர் கனவில் சொன்னபடி சில நற்காரியங்களை செய்வார்)
"ப்பிறாய்ட்டு" எனும் விஞ்ஞானி கனவுகள் பற்றி அக்குவேறு ஆனிவேறாக அலசி அராய்ந்த்துள்ளார். அவரின் கருத்துப்படி கனவு என்பது உள்மன/ஆழ்மன இச்சைகள் என்கிறார்... அவை இன்று நேற்று ஏற்பட்ட இச்சைகள் மட்டும் என்றல்ல; எப்போதாவது ஒருனால் ஒருகணம் ஏற்பட்டதாயும் இருக்கலாம்.
அது சரி ஏன் இந்தக்கனவுகள் தோன்றுகின்றன...
தொடரும்...
---இனி ---
விஞ்ஞானரீதியான ஆய்வுகள் என்ன சொல்கினறன?
விசித்திரமான கனவுகள்.
kanavukaludan thotarai patikka kaaththirukirom. vaalththukkal. nanraaka aarambiththuleerkal.
ReplyDelete