Total Pageviews

Sunday 17 January 2010

பிரபாகரன் ( ஒரு பக்க வரலாறு)

ஒரு பக்க வரலாறு
-----------------------------------------------------------------------------------------

பதினாறே வயது நிரம்பிய சிறுவன் பிரபாகரனுடன் இன்னும் மூன்று இளைஞர்கள் சேர்ந்து, ‘சிலோன் டிரான்ஸ்போர்ட் கார்ப்பேரஷன்’ பேருந்துக்குத் தீ வைப்பது என ‘தமிழ் மாணவர் பேரைவ’யில் முடிவு எடுக்கப்பட்டது. பேருந்தை நேருங்கியபோது, தூரத்தில் ஆட்கள் வருவைதப் பார்த்ததும் பயந்துபோய், உடன் வந்த மூவரும் திரும்பி ஓடினார்கள். ஆனால், எந்தவிதப்
பதற்றமும் பயமும் இல்லாமல் திட்டமிட்டபடி தீவைத்துத்
திரும்பினான் சிறுவன் பிரபாகரன். பேரவை உறுப்பினர்கள் பிரபாகரனைத் தலைக்கு மேல் தூக்கிவைத்துக்
கொண்டாடினார்கள்.
‘‘தம்பி! உனக்குப் பயேம வரவில்லையா?’’ என ஆர்வமுடன் கேட்டார்கள்.
‘‘இந்தியச் சுதந்திர வீர‌ர்கள் நேதாஜி, பகத்சிங், காந்தியின் போராட்டங்களிலிருந்து நான் கற்றுக்கொண்டதயே மந்திரமாகக் கடைப்பிடிக்கிறேன். அதனால், எனக்குப் பயமென்பது கிடையவே கிடையாது’’ என்று நெஞ்சை உயர்த்திச் சொன்னான் பிரபாகரன்.
‘‘அப்படி என்ன மந்திரம்?’’
‘‘செய்து முடி; அல்லது செத்து மடி!’’

1954-ம் வருடம், நவம்பர் 26‍ம் தேதி, இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள
வல்வெட்டித்துறையில் வேலுப்பிள்ளை - பார்வதி தம்பதியின் நான்காவது
மகனாகப் பிறந்தார் பிரபாகரன். சிங்களர்கள், தமிழர்களுக்கு இடையே பெரும்
பூசல்கள் இருந்த காலம் அது. கோயில் பூசாரியாக இருந்த தமிழரை உயிருடன் தீ வைத்து சிங்களர்கள் கொளுத்தியதையும், தமிழ்க் குழந்தைகளைக் கொதிக்கும் தார்டின்களில் உயிருடன் போட்ட கொடூரங்களையும் கேட்ட பிரபாகரனின் ரத்தம்கொதித்தது. பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, தீவிர எதிர்ப்பில் இறங்கினார். 18 வயதில் டி.என்.டி. எனப்படும் ‘தமிழ் புதிய புலிகள்’ எனும் அமைப்பைத் தொடங்கினார். இதுவே பின்னர் ‘விடுதைலப் புலிகள்’ இயக்கமாக மாறியது. வரதராஜப் பெருமாள் கோயிலில் தரிசனம் முடித்து வந்த மேயர் ஆல்பிரட் துரையப்பாவைச் சுட்டுக் கொன்று, அவரது காரிலேயே தப்பியோடியதுதான் (1975) பிரபாகரனின் முதல் அதிரடி நடவடிக்கை.

விடுத‌லைப் புலிகள் அமைப்பைக் கட்டுப்படுத்துவதற்காக சிங்கள அரசு 1983-ம்
வருடம் ராணுவத் தாக்குதைலத் தொடங்கியதில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர்; தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்; வீடுகள் கொளுத்தப்பட்டன. அதுவைர சிறுசிறு தாக்குதல்கைள மட்டுமே செய்து வந்த புலிகள் அமைப்பு, ராணுவத்தை எதிர்த்துப் போரிடத் தொடங்கியது. ‘செய்து முடி; அல்லது செத்து மடி!’ என்பதே புலிகளின் போர்க் குரல் மந்திரமாக ஒலித்தது. இந்திய அரசு சமாதானப் பேச்சில் ஈடுபட்ட 1986-ம் வருடம், சென்னையில் பிரபாகரன் தமிழக பொலீஸாரால் சிறைப்பிடிக்கப்பட்டதும், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். பின்னர், அவர் விடுதைல
செய்யப்பட்ட நேரத்தில் நிருபர்கள் அவரிடம், ‘‘இந்தியாவில் அறப் போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றியும் கண்டிருக்கும் நீங்கள், இலங்கையில் மட்டும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுகிறீர்களே, ஏன்?’’ என்று கேட்டார்கள்.
‘‘அறப் போராட்டத்தால் சுதந்திரம் அடைந்த இந்தியாவுக்குத்தான் அந்தப்
போராட்டத்தின் மதிப்பு தெரியும். நாங்கள் எந்த வகையான ஆயுதம் எடுக்க
வேண்டும் என்பதை எங்கள் எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள். அதனால்தான்,
‘செய்து முடி; அல்லது செத்து மடி!’ என்கிற கொள்கையுடன் ஈழத்தில் உயிர்ப்
போராட்டம் நடத்துகிறோம்’’ என்றார் பிரபாகரன்.

பல்வேறு அரசியல் மாற்றங்களால், விடுதைலப்புலிகள் இயக்கம் இன்று பல
நாடுகளில் தடை செய்யப்பட்ட இயக்கமாக இருக்கிறது. உணவுப் பொருள்
முதற்கொண்டு எரிபொருள் வரை தடை செய்யப்பட்ட காலப்பகுதியிலும்
விடுதைலப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ் ஈழத்தில் கல்வி,
வேளாண்மை, விஞ்ஞானம், இன்டர்னெட் என எல்லாமே நவனீமாக
இருந்தது. இந்த இயக்கத்தினரால் எதுவும் செய்து முடிக்க முடியும் என்று
உலகேம நம்பியதற்கு காரணம், ‘செய்து முடி; அல்லது செத்து மடி!’ என்கிற
புலிகளின் மந்திரம்தான்.

இறுதி கால‌த்தில் துரோகங்களாலும், சில தவறான முடிவுகளாலும் அவ்வமைப்பு சீர்குழைந்தாலும்
தமிழ் மக்களின் உரிமை பிரச்சனைகளை உலகறிய செய்ததே அதன் வெற்றி.

-----------------------------------------------------------------------------------------
நன்றி : எஸ்.கே.முருகன், பா.சீனிவாசன்,பொன்ஸீ

இறுதி பகுதி காலத்துக்கு தக்கவாறு மாற்றப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------------------
Bluetooth , Wifi என்பவற்றின் சரியான தமிழ் சொல் தெரிந்தவர்கள் கூறவும். ( கொலைவெறித்தனமான மொழிபெயர்ப்புகள் வேண்டாம். அதாவது, இலகுவாக உச்சரிக்க கூடிய சொற்கள் எதிர்பார்க்கப்படுகிறது.)





4 comments:

  1. MURUGAN: VERY GOOD POST SIR. KEEP IT UP.

    ReplyDelete
  2. very funny men.. where u found all these lies?

    ReplyDelete
  3. Thanks Murugan and Ha ha ha!
    It's from book!

    ReplyDelete
  4. hey... ha ha ha!
    y did u delete ur comment?

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected