Total Pageviews

Monday 4 January 2010

லிங்கன்,கெனடி ஏன் இப்படி? (ஒரு மண்ணும் விளங்கல)

லிங்கன்,கெனடி ஏன் இப்படி?
-------------------------------------------------------------------------------------------

இன்றைக்கு கொஞ்சம் வித்தியாசமாக எம‌து மூளைக்கு அப்பாற்பட்ட சில விடையங்களை பார்ப்போம். சாதாரணமாக மனிதனின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் தலைமை பீடமாக மூளை கருதப்படுகிறது. ஆனாலும் அந்த மூளைக்கே தண்ணிகாட்டும் பல சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இவற்றை பார்க்கும் போது நாமெல்லாம் கணனியில் ஷொஃப்ட் வெயார் இயங்குவது போல் ஏற்கனவே புறோகிறாம் பண்ணப்பட்டு இயங்குகிறோமா? என எண்ணத்தோன்றுகிறது. (யார் அந்த புறோகிறாமை செய்திருப்பார்கள்??? இயற்கையா? இறைவனா?) இதை பற்றி கதைக்க முதல் அமெரிக்காவின் புகழ் பெற்ற ஜனாதிபதிகளான ஆபிரஹாம் லிங்கன், ஜோன் கென்னடி இருவரினதும் வாழ்க்கைடயில் நடந்த ஒற்றுமையை பார்ப்போம்....


-------------------------------------------------------------------------------------------



லிங்கன் 1860 இலும் கென்னடி 1960 இலும் அமெரிக்க ஜனாதிபதியானார்கள். சரியாக 100 வருட வித்தியாசம்.


இருவரும் ஆபிரிக்க இனத்தவர்களின்(கறுப்பினத்தவர்)  உரிமைகளில் தீவிரமாக ஆழ்ந்திருந்தனர்.

இருவரும் வெள்ளிக்கிழமை தத்தம் மனைவியரின் அருகிலிருக்கும் போது சுட்டுக்கொள்ளப்பட்டனர்.

இரு மனைவியரும் வெள்ளை மாளிகையில் வாழும் போது குழந்தை பெற்று, பிறந்ததும் குழந்தை இறந்தது.

லிங்கன், கென்னடி இருவரும் தலையின் பின் பகுதியில் குண்டு பட்டு இறந்தார்கள்.




லிங்கன் இறந்தது ஃபோர்ட் அரங்கில், கென்னடி இறந்தது லிங்கன் என பெயர்கொண்ட காரில். அக் கார் ஃபோர்ட் கொம்பனியால் செய்யப்பட்டது.

இருவரும் இறந்ததும் ஜன்ஸன் எனும் பெயர்கொண்டவர்கள் உடனே ஜனாதிபதியாக பதவியேற்றார்கள்.
அன்று ஜன்ஸன், லின்டன் ஜன்ஸன்.

அன்று ஜன்ஸன் பிறந்தது 1808, லின்டன் ஜன்ஸன் பிறந்தது 1908. அதே 100 வருட இடைவெளி.

லிங்கனின் செயலரின் முன்பெயர் ஜான்!, அதே வேளை கென்னடியின் செயலரின் பின் பெயர் லிங்கன்!!!

இருவரையும் கொண்டவர்கள் பிறந்த ஆண்டுகள், ஜோன் வில்க்ஸ் 1839. ஹர்வி 1939. அதே 100!!!

கொண்டவர்கள் இருவரும் தென்மாநில தீவிர வாதிகள்.

இருவரும் பிடிபட்டு வழக்கு தொடர முன் சுட்டுக்கொள்ளப்பட்டனர்.

லிங்கனை கொண்டவன் அர‌ங்கத்தில் கொண்டுவிட்டு ஒரு கிடங்குக்குள் ஓடினான். கென்னடியை கொண்டவன் கிடங்கிலிருந்து கொண்டுவிட்டு தியேட்டரை நோக்கி ஓடினான்.

லிங்கன், கென்னடி இருவரினதும் ஆங்கில எழுத்துக்கள் 7. தற்காலிகமாக பதவியேற்றவர்களினது ஆங்கில எழுத்துக்கள் 13!

கொன்றவர்களின் பெயர்களின் எழுத்துக்களும் 15!!!

-------------------------------------------------------------------------------------------

சாதாரணமாக ஒவ்வொருவரினது வாழ்க்கையை ஒப்பிட்டாளும் ஒற்றுமைகள் இருக்கத்தான் செய்யும். ஆனா இப்படி இருக்குமா? என்ப‌து சந்தேகமே! இது போன்ற இதைவிட சுவாரஷ்யமான சம்பவங்களை தொடர்ந்து பார்ப்போம்! என்னால இதை புரிந்து கொள்ளவே முடியல, உங்களுக்கு எதாவது????


இன்னும் இருக்கு...



5 comments:

  1. wrong information. Please verify.

    ReplyDelete
  2. இருக்கலாம், ஒரு ஆங்கில புத்தகத்தில் வாசிச்சு தான் எழுதினேன்!
    என்ன பிழை என்று சுட்டிக்காட்டினால் வரவேற்பேன்.

    ReplyDelete
  3. நான் பார்த்தவரை பிழைகள் தெரியவில்லை.

    ReplyDelete
  4. வணக்கம் பிரபு.......

    வளாகம் வலைப் பூவை உருவாக்கி எழுதுவதற்கு முதற்கண் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. நிற்க.
    தாங்கள் எழுதும் ஆக்கங்களுக்கிடையில் ஓர் தொடர்பைப் பேணுவது நன்று. அத்துடன் ஒரு சில இடங்களில் ஆங்கில மொழிக் கலப்பும் சில எழுத்துப் பிழைகளையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இனி வரும் ஆக்கங்களில் அந்த குறைகளை நிவர்த்தி செய்து, முழு நிறைவடைய முயற்சிப்பது மிக்க நன்று.

    ----இது ஒரு விமர்சனம் அல்ல, கருத்து மட்டுமே....----

    அன்பன்.....
    நடா.சேந்தன்
    நீர்கொழும்பு.

    ReplyDelete
  5. வணக்கம் பிரபு !
    உங்களது வலைசரம் சுற்றி வந்தேன்.மிக மிக பயனுள்ளதாகவும் , சுவாரசியமாகவும் இருக்கிறது. நல்ல அருமையான விடயங்களை பகிர்ந்துகொள்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். எம் ஆதரவும், வாழ்த்துக்களும் என்றும் இருக்கும்.

    நட்புடன்
    கிஷோர்
    கொழும்பு
    இலங்கை.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected